in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
Kavignar Ilampirai Interview | பொய்யாக நான் எழுதுவதில்லை... | கவிஞர் இளம்பிறை | OH Literature
#KavignarIlampiraiInterview #KavignarIlampirai #interview #ohliterature #literature #kavignar
2 - 0
'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட சீனு ராமசாமியின் 'நினைவில் ஒளிரும் ஜிமிக்கி கம்மல்'
திரைப்பட இயக்குநரும், நடிகரும், எழுத்தாளருமான சீனு. ராமசாமி எழுதிய 'நினைவில் ஒளிரும் ஜிமிக்கி கம்மல்' எனும் கவிதை நூலினை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்டார்.
தேசிய விருதினை பெற்ற திரைப்பட படைப்புகளை உருவாக்கிய இயக்குநர் சீனு. ராமசாமி இலக்கிய உலகிலும் தன்னுடைய தடத்தினை பதித்திருக்கிறார். இவர் 'நினைவில் ஒளிரும் ஜிமிக்கி கம்மல்' எனும் கவிதை நூலை எழுதியிருக்கிறார். இந்த நூல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வரவேற்புரையை பாரதி புத்தகாலயம் பதிப்பக உரிமையாளர் க. நாகராஜன் நிகழ்த்தினார். கவிஞர் நந்தலாலா இந்த நூலுக்கான ஆய்வுரை அளிக்க..' மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக எழுத்தாளரும், இயக்குநருமான சீனு. ராமசாமி நன்றி உரையாற்றினார்.
இந்நிகழ்வில் ஏராளமான வளரும் கவிஞர்களும் புத்தக வாசிப்பாளர்களும் இலக்கிய ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.
0 - 0
தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான பழைமையான பாரம்பரிய தொடர்ச்சியைக் கொண்டுள்ளது. ஒரு காலத்தில் செய்யுள், குறள், பழமொழி, காப்பியம், சிற்றிலக்கியம், கூத்து என வளர்ந்து, நவீன காலத்தில் அது சிறுகதை, புதினம், புதுக்கவிதை, நவீன நாடகம் என ஆலவிருட்சமாய் கிளைவிரித்து நிற்கிறது.
இலக்கியம் என்பது சமகால சமூக வாழ்வின் பிரதிபலிப்பாக அமைகிறது. ஒரு சமூகத்தின் நாகரிகம், பண்பாடு, அரசியல், வாழ்க்கைச் சூழல், சமய நிலை, குடும்ப உறவுகள், நம்பிக்கைகள் உள்ளிட்ட கூறுகளை உணர்த்தி நிற்பதாகவும் மக்களின் உணர்வுக்கு உவகை அளிப்பதாகவும் இலக்கியம் படைக்கப்படுகிறது.
இன்றைய நவீன தமிழ் இலக்கியத்தின் செழுமையையும், சமகாலக் கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள், சிற்பிகள், இலக்கிய உரையாளர்கள், விமர்சகர்கள் உள்ளிட்ட படைப்புக் கலைஞர்களின் பேட்டிகள், பேச்சுகள் மற்றும் இலக்கிய நிகழ்வுகளின் தொகுப்புகளையும் வழங்க விரும்புகிறது OH LITERATURE.