தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான பழைமையான பாரம்பரிய தொடர்ச்சியைக் கொண்டுள்ளது. ஒரு காலத்தில் செய்யுள், குறள், பழமொழி, காப்பியம், சிற்றிலக்கியம், கூத்து என வளர்ந்து, நவீன காலத்தில் அது சிறுகதை, புதினம், புதுக்கவிதை, நவீன நாடகம் என ஆலவிருட்சமாய் கிளைவிரித்து நிற்கிறது.
இலக்கியம் என்பது சமகால சமூக வாழ்வின் பிரதிபலிப்பாக அமைகிறது. ஒரு சமூகத்தின் நாகரிகம், பண்பாடு, அரசியல், வாழ்க்கைச் சூழல், சமய நிலை, குடும்ப உறவுகள், நம்பிக்கைகள் உள்ளிட்ட கூறுகளை உணர்த்தி நிற்பதாகவும் மக்களின் உணர்வுக்கு உவகை அளிப்பதாகவும் இலக்கியம் படைக்கப்படுகிறது.
இன்றைய நவீன தமிழ் இலக்கியத்தின் செழுமையையும், சமகாலக் கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள், சிற்பிகள், இலக்கிய உரையாளர்கள், விமர்சகர்கள் உள்ளிட்ட படைப்புக் கலைஞர்களின் பேட்டிகள், பேச்சுகள் மற்றும் இலக்கிய நிகழ்வுகளின் தொகுப்புகளையும் வழங்க விரும்புகிறது OH LITERATURE.