பூங்காற்று சார்பில் நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
"இனிமையான முதுமை அனைவருக்கும் சாத்தியம்”
என்று சொன்னதோடு நிற்காமல்
அதனை சாத்தியப்படுத்த
அயராது உழைத்துக் கொண்டிருக்கும்
சாதனை மனிதர்
முதியோர் நல மருத்துவத்தின் தந்தை
பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ்.நடராஜன்
அவர்களை வாழ்த்துவோம்.
465 - 110
100 வயதை தொட்ட லட்சுமிகாந்தன் பாரதி (முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி)
பூங்காற்று வாழ்த்துகிறது.
திரு. லட்சுமிகாந்தன் பாரதி அவர்கள், இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்குபெற்று, பின்னர் சுதந்திர இந்தியாவின் நிர்வாகப் பொறுப்புகளில் பணியாற்றியவர்.
இந்தி எதிர்ப்புப் போராளி, தமிழறிஞர் நாவலர் சோமசுந்தர பாரதியின் பேரன்.
இந்திய சுதந்திரப் போராட்டங்களில் பங்குபெற்று பலமுறை சிறைசென்ற வழக்கறிஞர் கிருஷ்ணசாமி பாரதி - லட்சுமி பாரதி தம்பதியரின் புதல்வர்.
சிறு வயதிலேயே இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டு பலமுறை சிறை சென்றவர்.
மாவட்ட ஆட்சித்தலைவர். கருணாநிதி முதல்வராக இருந்தபோது அவரின் தனிச் செயலாளர். மாநிலத் திட்டக்குழு உறுப்பினர். சித்த மருத்துவ ஆணையர்... இப்படி எண்ணற்ற அரசுப் பொறுப்புகளை வகித்தவர்.
இவர், 1942-ல் ஒரு போராட்டத்தில் ஈடுபட்டதற்காக ஆரப்பாளையம் சிறைச்சாலையிலிருந்து மதுரை கலெக்டர் அலுவலகம் வரை கையில் விலங்கிட்டு சாலையில் அழைத்து சென்றார்கள். சரியாக 25 வருடம் கழித்து அதே கலெக்டர் அலுவலகத்துக்குக் கலெக்டராகப் போய் அமர்ந்தவர்.
டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளையைத் தொடங்கி வைத்தவர். அறக்கட்டளையின் நிர்வாகியாக இருக்கும் இவர், அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தவறாமல் கலந்து கொண்டு தனது பங்களிப்பை இன்றுவரை அளித்து வருகிறார்.
தினமும் காலையில் 5 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவார். அரை மணிநேரம் வாக்கிங். சிறிது நேரம் தியானம்.
காலையில் இரண்டு இட்லி. பண்ணிரண்டு மணிக்கு ஒரு காபி. மதியம் சிறிதளவு சாதம், காய்கறிகள், இரவில் இரண்டு சப்பாத்தி, ஒரு காபி.
மாலையில் நேரம் இருந்தால் மீண்டும் வாக்கிங். அவ்வளவுதான் உடல் ஆரோக்கியத்துக்காக எனத் தனியாக எந்தப் பயிற்சியும் செய்வதில்லை.
நேரம் கிடைக்கும்போதெல்லாம் நண்பர்களுடன் உரையாடுவார். அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு கூட்டங்களில் கலந்துகொள்வார்.
மது, புகை, பழக்கம் இல்லை.
சிறுவதில் இருந்தே அசைவ உணவுகளைச் சாப்பிட்டதில்லை.
சுகர், பிரஷர் போன்ற எந்த உடல்நலப் பாதிப்பும் இல்லை.
மருத்துவர்களிடம் செக்- அப்புக்கும் செல்வதில்லை.
எப்போதும் உழைத்துக்கொண்டு மனதையும், உடலையும் சுறுசுறுப்பாக வைத்துக் கொண்டாலே நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழமுடியும். என்று நம்பிக்கை ஊட்டுகிறார் இந்த 100 வயது இளைஞன்.
இவர் பற்பல ஆண்டுகள் நீடுழி வாழ வாழ்த்துவோம்.
726 - 114
மூத்த குடிமக்கள் ஓய்வு (Retirement) பெற்ற பிறகும் தங்களது அன்றாட செலவுகளை சமாளிக்க வேலைக்கு போக வேண்டுமா?
32 - 17
தினமும் காலையில் இரண்டு முட்டை சாப்பிடுங்கள்...
#egg #healthtips #eyehealth #drvsnatarajan #poongaatru
48 - 3
கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்து இருக்கிறீர்களா?
#seniorcitizens #Family #SeniorWellness #drvsnatarajan #poongaatru
42 - 6
Welcome to Poongaatru – your go-to destination for senior health, wellness, and happiness tips!
Our mission is Happy Elderhood for all - to empower adults with the knowledge and inspiration to live a healthy, happy, and independent life
🌿 What We Offer:
✅ Expert-backed healthy aging tips
✅ Senior-friendly exercises to stay strong and active
✅ Nutrition advice for energy and longevity
✅ Mental health & wellness guidance
✅ Inspiring stories and interviews with seniors thriving in their golden years
Aging is a journey, and we’re here to help you make it vibrant and fulfilling!
Subscribe and 🔔 Stay connected, stay inspired, and age gracefully with us!
A media division by Dr. V.S. Natarajan Geriatric Foundation
பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
For Support Contact
Geriatric Resource Centre
No.14, 2nd floor, 29/2, Saena Circle,
Duraisamy Road, T.nagar,
Chennai – 600017
Landline : 044-48615866 | Mobile : +918122002173
28 July 2021