எல்லையற்ற ஆசைகளைப்
பட்டியலிட தயாரானேன்.
தாளினை தயார் செய்து
எழுதுகோலை எடுத்தேன்.
எழுத ஆரம்பித்தேன்
எதுவுமே தோன்றவில்லை
சிந்தனையில் வந்த
ஒன்றிரண்டும் அற்பமானது.
ஒருசில ஆசைகள்
எண்ணிட மட்டுமே
பிரமாண்டமானதாக இருந்தது.
எழுத ஆரம்பித்தால்
அதுவும் வெட்கப்பட்டு
எழுத்தில் வரவில்லை.
முக்கி, முரண்டு பிடித்து
ஆறு ஆசைகளை
எழுதிப்பார்த்தேன்.
படித்துப் பார்க்கையில்
அவையும் கூட அபத்தமாகப்பட்டது
தாளினைச் சுக்கு நூறாக்கிவிட்டு வெளியே வந்து வானம் பார்த்தேன்.
அங்கே நிலா மேகக் கூட்டம் புகுந்து கண்ணாமூச்சி ஆடிக் கொண்டு இருந்தது. மீண்டும் அறைக்குள் நுழைத்தேன்
எல்லையற்ற ஆசைகள்
மீண்டும் மனதில் நுழைந்தது.
நான் கண்டு கொள்ளவில்லை.
பாலா
9/11/2024
0 - 0
போடுகின்ற திட்டங்கள்
போகும் போக்கை யாரறிவார்?
நாடுகின்ற ஆசைகள்
நடக்கும் விதம் யாரறிவார்?
தேடுகின்ற வழித்தடங்கள்
தானாக அமைந்திடவே
ஆடுகின்ற நாதனவன்
ஆணையொன்றே போதுமே.
மு.பாலசுப்ரமணி..
20.1.2022
5 - 0