Channel Avatar

Ungal Anban Hemanth @UCx-_4-5HqTcGE2-UUYRt5oQ@youtube.com

717K subscribers

History. Heritage. Tamil. All about the 3000+ year history H


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

Ungal Anban Hemanth
Posted 2 days ago

தமிழில் புவியியல் (Geography) சொற்கள் எத்தனை தெரியும்? 😍

நம்மைச் சுற்றி காணப்படும் மலை, ஆறு, கடல், காடு — இவை ஒவ்வொன்றும் தனித்த பெயர்கள் தமிழில் உண்டு!

Mountains, Ice & Water forms: 🗻
Mountain – மலை
Volcano – எரிமலை
Glacier – பனிமலை
Iceberg – பனிப்பாறை
Waterfall – அருவி
Stream – ஓடை
River – ஆறு
Pond – பொய்கை
Lake – ஏரி
Ocean – பெருங்கடல்
Sea – கடல்
Gulf – வளைகுடா
Lagoon – காயல்
Delta – கிழிமுகம்
Canal – கால்வாய்
Geyser – ஊற்று
Strait – நீரிணை

Landforms & Elevations 🌆
Hill – குன்று
Plateau – மேட்டுநிலம்
Valley – பள்ளத்தாக்கு
Cliff – ஓங்கல்
Mesa – மேடு
Canyon – ஆற்றுக்குடைவு
Dune – மணற்குன்று
Plain – சமவெளி
Prairie – புல்வெளி

Coastal & Island Features 🌊
Beach – கடற்கரை
Peninsula – தீபகற்பம்
Island – தீவு
Archipelago – தொகுதித் தீவுகள்
Cape – முனை
Cove – சிறு வளைகுடா
Isthmus – நிலவிணை

Ecosystems & Terrains 🌴
Forest – காடு
Jungle – அடவி
Swamp – சதுப்பு
Marsh – சதுக்கல்
Tundra – பனிவெளி
Oasis – பாலைச்சோலை

நம் பூமியின் அழகை, தமிழ்ச்சொற்கள் இன்னும் மெருகூட்டுகின்றதல்லவா?❤️
இவற்றச் தமிழில் சொல்லத் தொடங்குங்கள்!
- Ungal Anban Hemanth


#GeographyInTamil #தமிழில்இயற்கை #TamilLearning #NatureLovers #GeographyFacts #UngalAnban #UngalAnbanHemanth #LearnTamil #LearnTamilWords #TamilHistory #TamilHeritage

375 - 20

Ungal Anban Hemanth
Posted 2 weeks ago

முதல் ஆட்டோகிராப்.

நேற்று சென்னையில் ஒரு இசை நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். அங்கே பள்ளி மாணவர்கள் சிலரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு “96”, “மெய்யழகன்” மியூசிக் டைரக்டர் - கோவிந்த் வசந்தாவும் கலந்துகொள்வதாய் இருந்தார். அவர் sound testing செய்துவிட்டு stage-இற்குப் பக்கத்தில் வந்தவுடனே, அவரிடம் autograph வாங்குவதற்கு அவ்வளவு பெரிய கூட்டம் - அத்தனையும் 8-10 வயதுகொண்ட பள்ளிக் குழந்தைகள்!

இதை ஒரு பக்கம் நான் கவனித்துக் கொண்டிருக்கையில், இரு சிறுவர்கள் என்னையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தை உணர்ந்தேன். அவர்கள் இருவரில் ஒருவன், “அடேய் வாடா போய்ப் பேசலாம்!” என்று மற்றொருவனிடம் சொல்ல, தயக்கத்துடன் மற்ற சிறுவனும் பின்னாடியே நடக்க, மெதுவாய் என்னிடம் வந்தார்கள்.

அவர்களில் ஒருவன் தயக்கத்துடன், “நீங்க தான ராஜராஜ சோழன் வீடியோ எல்லாம் போடுவீங்க..? உங்க வீடியோஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும்..” என்று சொன்னான். உடனே மற்றோருவன், தனது சட்டைப் பாக்கெட்டுக்குள் கையைவிட்டு எதையோ எடுக்க முயன்றான். என்னவென்று பார்த்தால், ஒரு சின்ன paper slip. அதை என்னிடம் தயங்கியபடியே நீட்டி, “உங்க autograph வேணும்..” என்று கேட்டான்.

ஒரு பக்கம்- வெகுவான சிறுவர்கள் ஒரு சினிமா நட்சத்திரத்தின் பின் செல்ல, இரு சிறுவர்கள் மட்டும் தமிழர் வரலாற்றை நாடி வந்தனர். என் ஆனந்தத்தை என்னவென்று சொல்ல! அவர்களைக் கட்டியணைத்து ஆட்டோகிராப் இட்டுக் கொடுத்தேன்.

வாழிய நாளைய தமிழகம்! வாழிய அச்சிறுவர்கள்! ❤️

#Tamil #TamilHistory #TamilHeritage #UngalAnban

1.2K - 52

Ungal Anban Hemanth
Posted 1 month ago

இன்று என் கைகளில் வந்து சேர்ந்தது என்னவென்று பாருங்கள்! 😍

வீர சோழம்! வீர சோழம்!! 🔥
____________________________
#RajendraCholaCoin #CommemorativeCoins #SilverCoin #TamilHistory #tamilvaralaru #UngalAnbanHemanth #RajendraCholan #Thanjavur #RajaRajaCholan #KadaramKondan

1.1K - 57

Ungal Anban Hemanth
Posted 1 month ago

நான் எங்கே இருக்கிறேன் சொல்லுங்கள் பார்க்கலாம்? 🤩

(Clue: இந்தியா இல்லை. சோழர்கள் வணிகம் செய்த ஒரு நாடு!)



#Heritage #Tamilar #tamilhistory #tamilheritage #chola #Ships #Kadaram #UngalAnban #ungalanbanhemanth #RajaRajaCholan #RajendraCholan

244 - 49

Ungal Anban Hemanth
Posted 1 month ago

நமது வரலாற்றுப் படைப்புகள் பலரையும் சென்றடைய ஒரு வாய்ப்பு.😊
Vote for "Ungal Anban Hemanth": awards.vikatan.com/digital-awards
3 Steps:
1) Click on: "Click here to start". Enter your phone number and OTP.
2) On the 7th page, vote for "Ungal Anban Hemanth". Quickly vote for any random channel on the first 6 pages and do it until the 20th page.
3) Enter slogan: "Empower all" and don't forget to click Submit. ❤️

706 - 71

Ungal Anban Hemanth
Posted 1 month ago

இந்தோனேஷியாவில் பிரம்மாண்ட "கீர்த்தி முகம்" 😍. இதுபோன்று அழகிய கீர்த்திமுக சிற்பம் தமிழ்நாட்டில் நீங்கள் எந்தக் கோவிலில் பார்த்திருக்கிறீர்கள் சொல்லுங்கள்?

A bright, big and shining Kirtimukha at a temple in Indonesia. Influence of the #Pallavas across the oceans. ♥️

#keertimukha #Indonesia #Bali #templearchitecture #Dravidian #dravidianarchitecture #southindianarchitecture #Tamil #Hindu #IndianTemples #TamilHistory #TamilHeritage #yali #IndianHeritage

929 - 31

Ungal Anban Hemanth
Posted 1 month ago

நான் எங்கே நின்று கொண்டிருக்கிறேன் சொல்லுங்கள் பார்க்கலாம்? 😍

#Heritage #Indonesia #tamilhistory #tamilheritage #chola #Ships #Kadaram #UngalAnban #ungalanbanhemanth #RajaRajaCholan #RajendraCholan

438 - 40

Ungal Anban Hemanth
Posted 2 months ago

மலேஷியா அன்பர்களே! உங்கள் ஊருக்கு வருகிறேன்! 😍😍
12 Aug (Tuesday) கோலாலம்பூருக்கு வருகிறேன்! உங்கள் எல்லோரையும் எங்கே சந்திக்கலாம்? ❤️
சந்திக்க விருப்பமிருப்போர், இங்கே பதிவு செய்யவும்: forms.gle/ynoiAr83AUi5ssjy5

Dear Malaysian friends! I'm coming to your town! 😍😍
I'll be in Kuala Lumpur on 12 Aug (Tuesday) ! Where can I meet you all? ❤️
Those who are interested in joining me, register here: forms.gle/ynoiAr83AUi5ssjy5

106 - 9

Ungal Anban Hemanth
Posted 2 months ago

என்னுடன் நேரடியாக "சோழர்களின் ஆனைமங்கலம் செப்பேடு" பற்றிய Google Meet session-இற்கு பதிவு செய்துவிட்டீர்களா? 😊❤️
Registration form 👉🏽 docs.google.com/forms/d/e/1FAIpQLSeuk0RQ5CDDiAgwqd…

118 - 5

Ungal Anban Hemanth
Posted 2 months ago

என்னுடன் நேரடியாக உரையாட வாருங்கள்! ❤️
Register Here 👉🏽 docs.google.com/forms/d/e/1FAIpQLSeuk0RQ5CDDiAgwqd…

சோழர்களைப் பற்றி பொதுவாக அறிந்ததைத் தாண்டி, ஆழமாகக் காண ஆசைப்படுகிறீர்களா?
இதோ ஒரு 2-மணி-நேர இணையவழி ஆராய்ச்சி கருத்தரங்கு:


சோழர்களின் ஆனைமங்கலம் செப்பேடு - கருத்தரங்கு
சோழ வரலாற்றுக்குள் ஒரு ஆழமான பயணம். பதிவு செய்யுங்கள் — இடங்கள் குறைவாகவே உள்ளன.

பேச்சாளர்: உங்கள் அன்பன் ஹேமந்த்
தேதி: ஆகஸ்ட் 9 (சனிக்கிழமை)
நேரம்: இரவு 7:30 முதல் 9:30 வரை (2 மணி நேரம்)
முறை: ஆன்லைன் நேரலையாக (Google Meet)


என்ன எதிர்பார்க்கலாம்?
⭐ ஆனைமங்கலம் செப்பேட்டின் வரலாற்றுப் பின்னணி, வரலாறுக்கு செப்பேடுகள் எவ்வளவு முக்கியமானவை என்பதைப் புரிந்து கொள்வீர்கள்
⭐ பழைய எழுத்துருக்களையும் மறக்கப்பட்ட தகவல்களையும் அறிந்து கொள்வீர்கள்
⭐ சோழர்களின் மறக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள் குறித்த தகவல்கள்
⭐ ஆனைமங்கலம் சோழ முத்திரையின் 3D மாதிரியை ஒரு சிறந்த முறையில் காண வாய்ப்பு
⭐ உங்கள் அன்பன் ஹேமந்த் அவர்களுடன் நேரடியாக உரையாடும் வாய்ப்பும், உங்கள் கேள்விகளுக்குப் பதில்கள் பெறும் சந்தர்ப்பமும்!

349 - 12