மதுரையால் இணைவோம் !!
" மதுரையர்| MADURAIYAR"
மதுரையர் இயக்கம் "#மதுரைக்குவருக, #Welcome2Madurai" என்ற முழக்கத்துடன் மதுரை மற்றும் சுற்று மாவட்டங்களில் "சுற்றுலா" மேம்பாட்டை முதன்மை நோக்கமாக கொண்டுள்ளது. இதன்மூலம் பல்வேறுவிதமான சுற்றுலாக்களை ஊக்குவிக்கவும், அதற்கான சூழலை உருவாக்கவும், அதுசார்ந்த கட்டமைப்புகளை மேம்படுத்தும் விதத்தில் செயல்படுகிறது.
மதுரையால் ! மதுரைக்காக இணைவோம் என்ற அடிப்படையில்
ஜாதி, மதம், கட்சி மற்றும் சித்தாந்தத்திற்கு அப்பாற்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்களை கொண்டு இந்த இயக்கம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
மதுரையர் இயக்கத்தின் ஆலோசனைக்குழுவில் மதுரையை சார்ந்த மாபெரும் தொழிலதிபர்கள், ஓய்வு பெற்ற அரசு உயரதிகாரிகள், திரைப்பட நடிகர், நடிகை, இயக்குனர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் இடம்பெற்றுள்ளனர்.
உலகெங்கும் வாழும் மதுரையர்களை இணைத்து அதன் மூலம் உலகமுழுவதுமிருந்து சுற்றுலா வாசிகளை ஈர்க்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.