in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
மனதை உடைத்த சிறுகதை...!
*மற்றவங்களை பிரமிக்க வைப்பதாப்பா வாழ்க்கை?* 🤔🤔
யார் மீது தவறு?
காட்சி - 1
அமெரிக்காவில் வசிக்கும் தீபக், விடுமுறையில் பெற்றோரை பார்க்க, குடும்பத்துடன் இந்தியா வந்தான்.
விமான நிலையத்திலிருந்து அப்பாவை கைபேசியில் தொடர்பு கொண்ட போது, அது ஒலித்தபடி இருந்ததே தவிர, அவர் எடுக்கவில்லை.
'சரி... இன்னும் ஒரு மணி நேரத்தில், வீட்டுக்கு தானே போகப் போகிறோம்...' என எண்ணியவன், கால் டாக்சியில் கிளம்பினான்.
15 நிமிடங்களில் கிழக்கு தாம்பரத்தில் இருந்த நவீன அபார்ட்மென்ட்டை அடைந்தது, கால் டாக்சி.
அபார்ட்மென்ட்டை அடைந்து, இரண்டு மூன்று முறை காலிங்பெல்லை அடித்தும், கதவு திறக்கவில்லை.
ஒருவேளை வீடு பூட்டியிருக்கிறதோ என நினைத்து, மறுபடியும், தன் அப்பாவை மொபைல் போனில் கூப்பிட்டான்.
'ரிங்' போனதே தவிர, போனை எடுக்கவில்லை. வேறு வழியில்லாமல், எதிர்வீட்டு காலிங்பெல்லை அடிக்க, இரண்டு நிமிடம் கழித்து வெளியே வந்தார், அவ்வீட்டுக்காரர்.
''மாமா... அப்பா, அம்மா வெளியே போயிருக்காங்களா... போன் பண்ணா, எடுக்கமாட்டேங்கிறாங்க,'' என்றான்.
''உனக்கு விஷயமே தெரியாதா... உங்க அப்பா, உன்கிட்ட சொல்லலயா...''
''இல்லயே மாமா... என்ன விஷயம்?''
''உனக்கு தெரியாதது ஆச்சரியமாக இருக்கு. உங்க அப்பாவும், அம்மாவும், முதியோர் இல்லத்துல இருக்காங்க; யாராவது வந்தா கொடுக்கச் சொல்லி அட்ரஸ் கொடுத்திருக்காரு உங்கப்பா; இரு எடுத்துட்டு வர்றேன்,'' என்று சொல்லியபடியே உள்ளே சென்று எடுத்து வந்து கொடுத்தார்.
'இவங்களுக்கு என்னாச்சு... எல்லா வசதிகளும் நிறைஞ்ச அபார்ட்மென்ட் இருக்கயில ஏன் முதியோர் இல்லத்தில போய் தங்கணும்...' என்று குழம்பிப் போனான்.
''தேங்க்ஸ் மாமா... நான் வரேன்,'' என்று சொல்லி கிளம்பினான்.
அதுவரை மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்த அவன் மனைவி ப்ரீதி, ''என்னாச்சு தீபக்?'' என்று கேட்டாள்.
''என்னத்த சொல்ல... முதியோர் இல்லத்துல தங்கி இருக்காங்களாம்...'' என்றான் கோபத்துடன்!
''முதியோர் இல்லமா... ஏன் வீட்டை விட்டுட்டு...'' என்றாள், ஆச்சரியத்துடன்!
அப்பார்ட்மென்ட் வளாகத்தை விட்டு வெளியே வந்து, கால்டாக்சியில் ஏறியதும், ''முடிச்சூர் போப்பா,''என்று சொன்ன தீபக், மீண்டும், தன் அப்பாவை மொபைலில் தொடர்பு கொள்ள முயன்றான்.
அவர் எடுக்கவில்லை என்றதும், கோபத்தில் அவன் முகம் சூடானது.
''எங்கே போறோம்?'' என்று கேட்டாள் ப்ரீதி.
''அமைதி இல்லம்,'' சொன்னவனின் குரல் அதிர்ந்தது.
காரில் இருந்து இறங்கியவர்களின் கண்களில் பட்டது,
'அமைதி ஹோம்' போர்டு!
மகனையும், மனைவியையும் அழைத்துக் கொண்டு, இல்லத்தின் உள்ளே சென்றான், தீபக். வரவேற்பறையில் அமர்ந்திருந்தவர், ''யார் நீங்க, என்ன வேணும்...'' என்று கேட்டார்.
''ராமச்சந்திரன், மாலதி அம்மாளை பாக்கணும்,'' வியர்வையை துடைத்தபடியே சொன்னான்.
ப்ரீதியும், மகனும் மொபைலை நோண்டியபடி இருந்தனர்.
''நீங்க?''
''அவங்களோட பையன்,'' என்றான் தயக்கத்துடன்!
அவனை உட்கார சொன்னவர், ''சின்ன நிகழ்ச்சி நடக்குது சார்... பெரியவங்களோட நேரம் செலவழிக்கிறதுக்காக, ஒரு கம்பெனியிலிருந்து வந்திருக்காங்க, கொஞ்சம் வெய்ட் செய்யுங்க,'' என்று சொல்லி, உள்ளே சென்றார்.
சிறிது நேரத்தில், மகிழ்ச்சியுடன் அங்கு வந்தனர், தீபக்கின் பெற்றோர்.
வெறுப்பு, கோபம் இரண்டும் சேர்ந்து, அவர்களை வெறித்தவன்,
''என்னப்பா இதெல்லாம்... என்ன நினைச்சுட்டு இங்க வந்தீங்க...'' என்றான்.
''தீபக்...' அம்மாவின் குரல்.
சாப்பிட்ட உடனே மூச்சு வாங்குதுப்பா... இப்ப எல்லாம் ஒண்ணும் முடியல,'' என்றபடி, அவனருகில் அவன் அம்மா அமர, ''அம்மா... முதல்ல இங்கயிருந்து கிளம்புங்க என்ன மடத்தனம் இது...'' என்று கர்ஜித்தான்.
அங்கு வந்த தீபக்கின் அப்பாவிடம், ''ஏன் மாமா... உங்களுக்காகத் தானே எல்லா வசதியும் இருக்கிற மாதிரி அபார்ட்மென்ட் வாங்கி கொடுத்திருக்கோம். சொல்லாம கொள்ளாம நீங்க பாட்டுக்கு முதியோர் இல்லத்துல வந்து தங்கிட்டீங்களே... உங்க மகன் எவ்வளவு, 'ஷாக்' ஆயிட்டார் தெரியுமா...'' என்றாள், ப்ரீதி.
''என் மானத்த வாங்கணும்ன்னே, இங்க வந்து தங்கி இருக்கீங்க... ரிசப்ஷன்ல இருந்தவர்கிட்ட, நான் அவங்க பையன்னு சொல்றப்ப, எப்படி கூனி, குறுகிப் போயிட்டேன் தெரியுமா...
''உங்களுக்கு அபார்ட்மென்ட்ல வசதி குறைவுன்னா என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருந்தா, எவ்வளவு செலவானாலும் பரவாயில்லன்னு வேற வசதியான ப்ளாட் வாங்கி, அதுல உங்கள ராஜா மாதிரி தங்க வைச்சிருக்க மாட்டேனா...'' என்றவன்,
அம்மாவைப் பார்த்து, ''அப்பா தான் மடத்தனமா ஏதோ சொன்னார்ன்னா உனக்கு மூளை வேணாமா... சே, எதிர் ப்ளாட்டில் குடியிருக்கிற மாமா, 'உனக்கு விஷயமே தெரியாதா'ன்னு கேட்ட போது, அந்த இடத்துல என்னால நிக்கவே முடியல.
''உன் கோபம் புரியுதுப்பா. ஆனா...''
''என்னப்பா ஆனா...'' கோபமாக ஆரம்பித்த வனை, அமைதியாக இருக்கும்படி சைகையினால் கட்டளையிட்டவர்,
''உன்கிட்ட சொல்லாம நாங்க இந்த முடிவ எடுத்திருக்க கூடாது தான்; ஆனா, முதல்ல ஒண்ணு புரிஞ்சுக்க... நாங்க இங்க வந்தது, மாற்ற முடியாத முடிவுன்னே சொல்லலாம்,'' என்றதும், அதிர்ச்சியுடன் அப்பாவை பார்த்தான்.
''ஆமாம் தீபக்... உன்கிட்ட முதல்ல ஏன் சொல்லலன்னு கேட்ட இல்லயா... சொன்னா உனக்கு புரியாது. ஒத்துக்க மாட்டே; தர்க்கம் செய்வே...
நீ சொன்னியே, அந்த அபார்ட்மென்ட்டுல எங்களுக்கு என்ன குறைன்னு... வசதியில எந்தவொரு குறையும் இல்ல;
ஆனா, எங்களால எதிர் வீட்டுக்காரரைக் கூட சந்தித்துப் பேச முடியிறதில்லங்கிறது தான் பெரிய குறை.
''மாசத்துக்கு ரெண்டு, மூணு முறை, 'ஹலோ சார்... சவுக்கியமா...' அவ்வளவுதான் பேச்சு;
எதிர் பிளாட்காரர் தான் இப்படின்னா, மத்த ப்ளாட்ல எல்லாம், யார் இருக்காங்கன்னே தெரியாது. நாங்க கூட, சில பேர் கூட பழக முயற்சி செய்தோம். யாரும் ஈடுபாடு காட்டினா தானே... நாள் முழுக்க, நாங்க ரெண்டு பேரும், எங்களுக்குள்ளேயே என்னத்தப்பா பேசிக்கிறது...
''இங்க ஏன் வந்தோம்ன்னு கேட்டியே... இங்க எல்லாரும் எங்க வயசுக்காரங்க; மனம் விட்டு பேசுறோம்... சண்டை சச்சரவுகளும் வரத் தான் செய்யும்; அதுவும் வாழ்க்கைக்கு தேவை தானே... பேசிப் பழக, மனுஷங்க இல்லாதது என்ன வாழ்க்கை...
''நீ, வேலை கிடைச்சதுன்னு அமெரிக்கா போயிட்ட... உன்னை போகாதேன்னு சொல்ல, எங்களுக்கு உரிமை இருக்கான்னு தெரியல. ஏன்னா, அது உன் விருப்பம்; உன் வாழ்க்கை. எங்க கதி... வெறும் கட்டடம் மட்டும் வாழ்கையாகிடுமா? ''இங்க எங்களோட பேசிப் பழக நிறைய பேர் இருக்காங்க. எங்க மனசுக்கு நிறைவு இருக்கு... நீ மறுபடியும் ஊரில் வந்து செட்டில் ஆகறேன்னு சொல்லு. நம்ம எல்லாரும் ஒண்ணா இருக்கறதா இருந்தா, மறுபடியும் வீட்டுக்கு வர்றோம். அதுக்கு சாத்திய மில்லன்னா நாங்க இங்கேயே இருந்துடுறோம். வெறும் சுவர்கள் மத்தியில் இருக்கறது கொடுமை; அது, எங்களால முடியாதுப்பா,'' என்றவரின் கண்கள், கலங்கி இருந்தது.
''தீபக்... இந்த முடிவை எடுத்ததுல, எனக்கு தான் பெரிய பங்கு இருக்கு,'' என்ற அம்மா, ''இங்கே, எல்லாரும் கிட்டத்தட்ட எங்க வயசுக்காரங்கிறதால சிரிச்சு, பேசி, கலகலன்னு பொழுது போகுது. செங்கல், சிமென்ட், கதவு, ஜன்னல், மாடுலர் கிச்சன், 'ஏசி' இதெல்லாம் மட்டும் வீடு இல்லப்பா, வீடுன்னா அதுல மனுஷங்க இருக்கணும்; இனிமே இது தான் எங்க வீடு"
*காட்சி - 2*
கண்ணீரோடு நிமிர்ந்த மகன் தீபக் பேச ஆரம்பித்தான்
ஏப்பா நீங்கள் திருமணத்திற்கு முன்பே நல்ல உத்தியோகத்தில் கைநிறைய சம்பளம் வாங்கிய அரசு வேலையில் தானே இருந்தீங்க.தாத்தா சொத்தான விவசாய நிலங்கள் வேறு நிறைய இருந்திருக்கு இவ்வளவு பணத்தையும் வைத்துக்கொண்டு பின் ஏன்ப்பா ஒரே பிள்ளை போதும்னு நிருத்துனீங்க?
என்னோடு இன்னும் ஒரிரு குழந்தைகளை பெற்று வளர்த்து படிக்கவைக்க வசதியிருந்தும் தாங்கள் ஏன் செய்யவில்லை?
உங்கள் வசதியை வைத்துக்கொண்டு என்னால் இனி அண்ணன், தம்பி, அக்காள் தங்கைகளை பெறமுடியுமா?
யாரும் இல்லாதவனா என்னை நீங்கள் ஆக்கிவிட்டீர்களே அப்பா? தாத்தா வசதி குறைவாயிருந்தும் ஐந்தாறு குழந்தைகளை பெற்று உங்களை எல்லாம் நல்லா வளர்க்கவில்லையா?படிக்கவைக்கவில்லையா?
நீங்கள் எல்லாம் அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என எப்படி சந்தோஷமா இத்தனை வருஷமும் இருந்தீர்கள்.
உங்கள் அண்ணன் தம்பி எல்லாம் நிறைய குழந்தை குட்டிகளோடு சந்தோஷமா தானேப்பா ஊரில் இருக்காங்க? மற்றவங்க பெரிசா நினைக்கனும்னு என்னையும் ஹாஸ்டல தங்க வைத்து படிக்க வைத்து படிப்பு படிப்பு என்று என் இளமையில் எனக்கு கிடைக்க வேண்டிய அத்தனை சந்தோஷமும் இல்லாமல் செய்தீங்களேப்பா. உங்களுக்கு பிறகு எனக்கு யாருப்பா இருக்கா?
எனக்கு நல்ல வேலைக் கிடைத்தும் அங்கே போனால் உங்களுக்கு துரோகம் செய்கின்றோமோ என்று என்னை என் மனசாட்சி தினம் தினம் கொல்றது உங்களுக்கு தெரியாதுப்பா.
அங்கேயும் வந்து தங்கமாட்டேன் என்கின்றீங்க.
என் மனைவி, அவள் வீட்டில் அவளும் ஒரே பெண். அவள் அப்பா அம்மாவுக்கும் உங்களை போன்ற நிலைதான். என்னைப் போன்றே அவளும் அவுங்க அப்பா அம்மாவை வயதான காலத்தில் பக்கத்தில் வைத்து பாதுகாக்க முடியவில்லையே என்ற கவலை. இது எல்லாம் எங்கள் தவறாப்பா?
ஒரே பிள்ளையான என்னையும் நல்லா படிச்சாதான் பெரிய வேலைக்கு போய் நிறைய சம்பாதிக்கலாம் என, என்னை ஹாஸ்டல்ல தங்கவைக்கும் போது நீங்கள் சொன்னது உங்களுக்கு ஞாபகம் இருக்காப்பா?
நீங்க, அம்மா, எவ்வளவு பெரிய வீடு,சித்தப்பா பையன், பெரியப்பா புள்ளைங்கயென அவ்வளவு பேர் இருந்தும், என்ன சின்ன வயதில் இருந்தே ஹாஸ்டலில் தங்கி படிக்க வைத்தப்ப நான் எவ்வளவு கஷ்டபட்டேன் என்பது உங்களுக்கு தெரியாதுப்பா? அப்பயும் இதே போல பெரிய வீட்டில் நீங்களும் அம்மாவும் மட்டும்தானேப்பா இருந்தீங்க?
அப்ப தோனலையாப்பா நம் பிள்ளை நம்மோடு தங்கியிருந்து படிக்கவைக்க வேண்டும் என்று?
நம்ம சொந்த ஊரான தஞ்சாவூரிலேயே நம் நிலங்களில் விவசாயத்தையும் பார்த்துக் கொண்டு, படிப்புக்கு ஏத்த ஒரு வேலையையும் அங்கேயே தேடிக்கிட்டு சித்தப்பா பிள்ளை, பெரியப்பா பிள்ளை என நம்ம சொந்த பந்தத்தோட நானும் நிம்மதியா இருந்திருப்பேன்.
நீங்களும் கடைசி காலத்தில் நிம்மதியா இருந்திருக்கலாமேப்பா? நம்ம சித்தப்பா பெரியப்பா பிள்ளை எல்லாம் வசதி குறைவா இருந்தாலும் கூட்டுக் குடும்பமா நிம்மதியாதானப்பா ஊர்ல இருக்காங்க.
என் புள்ளைய நல்லா படிக்கவைத்து அமெரிக்காவில் வேலைக்கு அனுப்ப போறேன்னு நம் சொந்த பந்தத்திலும், ஊர் முழுவதும் நீங்கள் சொல்லிகிட்டு இருந்ததை நான் என் சின்ன வயசுல பல முறை கேட்டதால்தான் நான் உங்கள் எண்ணத்தை நிறைவேத்த வேண்டும் என்ற வைராக்கியத்தோடு படித்து அமெரிக்காவும் போனேன். சென்னையிலும் வீடு வாங்கினேன்.
இப்ப என்னை குறை சொல்றீங்களே...
இது சரியாப்பா?
ஊர்ல நாலு பேர் பெருசா நினைக்கனும்னு வாழ ஆரம்பித்ததால் இப்ப நம் சந்தோஷத்தையெல்லாம் இழந்தும் வெளில காட்டிக்க முடியாம இருக்கோமேப்பா.
மற்றவங்களை பிரமிக்க வைப்பதாப்பா வாழ்க்கை?
அருமையான சிறுகதை.
யார் மீது தவறு?
#tamil #tamilstory #tamilquotes #tamilmotivation #tamilinspirationalquotes #tamilstatus #tamilmotivationalquotes #sirukathaigal #kuttistory
2 - 2
நீதிபதி : "உங்க மனைவியை விவாகரத்து செய்ய காரணம் என்ன?"அப்பாவி கணவர்: "அய்யா! நான்
ஏற்கனவே ரொம்ப நொந்து போயிருக்கேன். நீங்களும் வெந்த புண்ணில் வேல பாய்ச்சாதீங்க. எந்த கேள்வியா இருந்தாலும் முதலில் வக்கீலை என் மனைவியிடம் கேக்க சொல்லுங்க.அப்புரம் நீங்களே விவாகரத்துக்கான காரணத்த புருஞ்சுப்பீங்க.
சரி என்று நீதிபதி கூற,அரசாங்க வக்கீல் குறுக்கு விசாரணையை அந்த பெண்ணிடம் ஆரம்பித்தார்.
வக்கீல் : அடிப்படையில் உங்களுக்குள் என்ன பிரச்சினை?
பெண் : அடுப்படியில பிரச்சினை எதுவும் இல்லைங்க.
வக்கீல் : அது இல்ல மேடம், உங்களுக்கிடையில் என்ன தகராறு?"
பெண் : எங்க கடையில தகராறு எதுவுமில்லையே, நல்லாத்தானே ஓடுது?
வக்கீல் : அடடா… உங்க தாம்பத்ய உறவில் என்ன சங்கடம் என்று அறிய கோர்ட் விரும்புகிறது.
பெண் : தாம்பரத்தில எங்களுக்கு உறவுக்காரங்க யாருமில்லைங்க. இருந்தாத்தானே சங்கடம்.
வக்கீல் : உங்கள் கணவர் மீது கருத்து வேறுபாடு ஏதாவது இருக்கா?
பெண் : அவரு கருப்புதாங்க.நானும் கறுப்புதான்.அதனால வேறுபாடு ஏதும் இல்லைங்க.
வக்கீல் : உங்க வீட்டுக்காரரோட என்ன சண்டை?
பெண் : வீட்டுக்காரரோட எதுக்குங்க சண்டை? மாசம் ஒன்னாம் தேதி வாடகையை வாங்கிட்டு அவரு பாட்டுக்கு போயிடறாரு.
வக்கீல் : (கோபத்துடன்) இதோ பாருமா,உனக்கு விவாகரத்து வேணுமா?
பெண் : அய்யோ வேணாங்க.எங்கிட்ட ஏற்கனவே மூனு "விவாஹா பட்டு" இருக்குங்க.நீங்க வேற வாங்கி தந்தா என் கணவர் சந்தேக படுவாருங்க.
இதற்கு மேல் வக்கீலால் தாங்க முடியவில்லை. (மிகவும் சத்தமாக கோவத்துடன்) “உங்க வீட்டுக்காரர் எதுக்காக விவாகரத்து கேட்கிறார்?"
பெண் : ஓ..அதுவா? என்னோட பேசறப்ப எல்லாம் மாரடைப்பு வந்துடுதாம்.நீங்க இப்ப எங்கூட நல்லாத்தான பேசிகிட்டு இருக்கீங்க.உங்களுக்கென்ன மாரடைப்பா வந்தது இதுக்கு போயி விவாகரத்து கேக்குறாருங்க.
கடைசியில் அந்த வக்கீல் நெஞ்சில் கை வைத்தபடி மாரடைப்பால் கீழே விழுந்தார்...🤪🤪🤪
#tamil #tamilcomedy #tamiljokes #tamilmotivation #inspirationalquotes #inspirationalquotesintamil #motivationalquotes #motivationalquotesintamil
4 - 1
#"முப்பத்தியாரு வயதினிலே" என்ற படத்தில் ஜோதிகா தன் மகளிடம் சொல்லும் ஒரு வசனம்.
உனக்காக நான் என்னல்லாம் தியாகம் செஞ்சிருக்கேன்னு தெரியுமா?
அதுக்கு அந்த பெண் உன்னை யார் செய்ய சொன்னா. நான் உன்கிட்ட கேட்டனா. நீ வாழ்க்கையில சாதிக்காததுக்கு என்னை ஒரு காரணம் காட்டாதன்னு சொல்லுவாள்.
பெண்களோட அடிமை தனம் திருமணத்துக்கு பிறகு ஆரம்பிக்கிறது. அதை அவர்கள் விரும்பியே செய்கின்றனர். கல்யாணத்துக்கு அப்பறம் நான் வேலைக்கு போக போறதில்லை. என் குடும்பத்தை பாத்துக்குறது தான் எனக்கு முக்கியம்ன்னு சொல்லுவாங்க. சின்ன சின்ன விஷயத்துக்கு கூட அட்ஜெஸ் பண்ணிப்பாங்க. இப்படி மற்றவர்களுக்காக வாழ்ந்துட்டு அவங்களுக்கான வாழ்க்கையை அதிலே தேடுனா ஒன்னுமிருக்காது.
ஒரு கட்டத்திலே அந்த குடும்பமே அவர்களை ஏளனம் செய்யும் போது தான் தெரியும் தன்னுடைய தியாகத்துக்கு மதிப்பில்லைன்னு. அந்த தியாகத்துக்கு இன்னொரு பெயர் அடிமைத்தனம்.
அப்படி குடும்பத்துக்காக உழைக்குற பெண்கள் தன் கணவனிடம் பணம் வேணும்னு போய் நிக்கும் போதோ இல்லை நீ என்ன வீட்டுல சும்மா தானாயிருக்கன்னு கேட்க்கும் போது தான் அந்த அடிமை தனத்தோட உண்மை முகம் வெளிப்படும்.
பெண்கள் ஒரு மனைவியாகவோ இல்லை தாயாவோ ஆகறாங்கங்குறதுக்காக அவங்களுடைய வாழ்க்கையை தூக்கிப்போட்டுடணும்னு ஏதாவது இருக்கா?
அதுக்கு தான் கையில எப்பவுமே பிளான் பி இருக்கணும். உங்களுக்கான வாழ்க்கை. உங்கள் தனித்துவத்தை மற்றவங்களுக்கு காட்டும் வாழ்க்கை. அப்படி நீங்க வாழுறதுல எந்த தப்புமேயில்லை.
கல்யாணம் ஆயிடுச்சி. கணவர், குழந்தைன்னு ஆயிடுச்சி. இனி நமக்காக வாழ்ந்து என்ன பண்ண போறோம். குடும்பத்துக்காக வாழுவோம்னு பெண் நினைக்குறாயில்லையா அது தான் அவள் அடிமை தனத்தின் ஆரம்ப புள்ளி. உங்களுக்காக நீங்க வாழலாம். அதுக்கு காரணம் தேவையில்லை.
நான் ஒரு மனைவி, அம்மான்னு பெருமையா சொல்வதை தவிர்த்து. இது தான் நான்னு ஒரு பெண் தன்னை அடையாள படுத்திக்குறதுல தான் அவளுடைய இந்த அடிமை தன்மை ஒழியும்ன்னு நினைக்குறேன். அது அவளுக்கு மதிப்பையும் தேடித்தரும்..
#tamilmotivation #tamil #tamilquotes #inspirationalquotes #inspirationalquotesintamil #successstoryintamil #tamilarticle
10 - 2
உங்கள் மனைவியின் உணர்வுகளைப் புண்படுத்தாமல் அவளைத் திருத்த 13 வழிகள்...✍🏾
1: உங்கள் குரலைக் குறைக்கவும்
அவளைப் பார்த்து கத்தாதே, அவள் உன் குழந்தை இல்லை. நீங்கள் சரி செய்யலாம், ஆம், ஆனால் ஏன் கத்துகிறீர்கள்?
2: காதலில் செய்யுங்கள்
காதலில் திருத்தம் செய்ய வேண்டும். வேறு வழியில் செய்தால், அது விமர்சனமாகவும் கண்டனமாகவும் மாறும்.
3a: விமர்சிக்க வேண்டாம்
அவளை விமர்சிப்பதை நிறுத்துங்கள், மாறாக காதலில் சரியானது. ஆக்கபூர்வமான விமர்சனம் என்று பெரும்பாலானோர் கூறுவார்கள். ஆனால் உண்மையில், இது பிழைகள் மற்றும் தவறுகளை சுட்டிக்காட்டுவதன் மூலம் மறுப்பு என்று பொருள்.
திருத்தம் என்பது தவறுகளுக்கு சிறந்த விருப்பங்களை வழங்கும் செயலாகும்
திருத்தமும் விமர்சனமும் எப்போதும் ஒன்றல்ல
3b: கணவர் A கூறுகிறார்
இது என்ன வகையான உணவு?
இது பாப்கார்னா அல்லது வறுத்த அரிசியா?
சிறந்த வீட்டுப் பயிற்சியுடன், சிறப்பாக சமைக்கக் கூடிய, விவேகமான மனைவியை நான் எப்படி மணந்து கொள்ள விரும்புகிறேன்.
கணவர் பி கூறுகிறார்
அன்பே இந்த அரிசியில் நேற்று நீங்கள் செய்ததைப் போலல்லாமல் இது மிகவும் காரம் மற்றும் உலர்ந்தது. நமது ஆரோக்கியம் காரணமாக உப்பை வேறு எந்த நேரத்திலும் குறைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
கணவன் ஏ விமர்சித்த போது கணவன் பி தன் மனைவியை காதலில் திருத்தினார்
உங்கள் மனைவியை விமர்சிப்பதை நிறுத்துங்கள்
4 எது சரியானது என்பதற்காக அவளைப் பாராட்டுங்கள்
நன்றாக செய்யாத போது திருத்துவது தவறாகும் நல்ல செயல்களுக்காக உங்கள் மனைவியைப் பாராட்டி பாராட்டும் பழக்கத்தை உருவாக்குங்கள்.
5 உங்கள் பிள்ளைகளுக்கு முன் அதைச் செய்யாதீர்கள்
உங்கள் பிள்ளைகள் முன்னிலையில் உங்கள் மனைவியைத் திருத்துவதைத் தவிர்க்கவும். உங்கள் பிள்ளைகளுக்கு முன்பாக உங்கள் மனைவியை இடைவிடாமல் திருத்துவது அவர்கள் அவளை அவமதிக்கச் செய்யும்.
6 பொதுவில் அவளைத் திருத்த வேண்டாம்
உங்கள் மனைவியை பொதுவில் திருத்துவதைத் தவிர்க்கவும், அது உங்களை ஒரு நல்ல மனிதராகக் காட்டாது, மேலும் அவரது சுயமரியாதையை பாதிக்கும்.
7 கோபத்தில் திருத்தம் செய்வதைத் தவிர்க்கவும்
கோபத்தில் உங்கள் மனைவியைத் திருத்துவதையும், கூச்சலிடுவதையும், திட்டுவதையும், அடிப்பதையும், பிரச்சனை செய்வதையும் நிறுத்துங்கள். உண்மையான ஆண்கள் அப்படிச் செய்வதில்லை.
8 அவளை வேறு எந்தப் பெண்ணுடனும் ஒப்பிட வேண்டாம்
அவளைத் திருத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அவளை மற்ற பெண்களுடன் ஒப்பிட்டுப் பார்த்திருக்கலாம்.
"உன் நண்பன் என்ன செய்கிறான் என்று பார்க்கவில்லையா?" எங்கள் பக்கத்து வீட்டு மனைவியிடமிருந்து உங்களால் கற்றுக்கொள்ள முடியவில்லையா?" "அப்படியா?"
9 பழைய பிரச்சினைகளைக் குறிப்பிடுவதைத் தவிர்க்கவும்
விவாதிக்கப்பட்ட மற்றும் தீர்க்கப்பட்ட பிரச்சினைகளைக் குறிப்பிடுவதைத் தவிர்க்கவும். தற்போதைய பிரச்சினையில் ஒட்டிக்கொண்டு, பெரியவர்களைப் போல விவாதித்து, தொடரவும்.
10 அவள் பெண்ணைத் தாக்காதே
"மற்றும் நீ உன்னை ஒரு பெண் என்று சொல்கிறாயா?, நல்லொழுக்கமுள்ள பெண்கள் இப்படி நடந்து கொள்ள மாட்டார்கள், நான் உன்னை மாற்றுவதற்கு முன் நீ மாறுவது நல்லது!" இது மிகவும் தவறு, செய்யாதீர்கள்
11 அவளுடைய கண்ணியத்தைத் தாக்காதே
நீங்கள் உணர்வுள்ள ஒருவரைப் போல நடந்து கொள்ளவில்லை, நீங்கள் நினைக்கிறீர்களா? நீங்கள் பள்ளிக்குச் சென்றதாகச் சொன்னீர்கள், அது எனக்கு சந்தேகம்."
நீங்களும் கல்லூரியை கடந்து செல்பவர் போல் பேசாமல் இருப்பது மிகவும் தவறு.
12 அமைதியான நேரத்தில் அதைச் செய்யுங்கள்
பெரும்பாலான கணவர்கள் கோபத்தின் உஷ்ணத்தில், தவறான புரிதலின் உச்சக்கட்டத்தில், கோபம் ஏற்கனவே கூரையைத் தாக்கியபோது, சரிசெய்ய விரும்புகிறார்கள். சரி செய்ய இது சிறந்த நேரம் அல்ல, அது சிறிதளவு அல்லது பலனைத் தரும்.
13 உதவி கரம் கொடுங்கள்
சரிசெய்வதற்கான சிறந்த வழி, உதாரணத்திற்கு வழிநடத்துவது, உதவிக் கரம் கொடுக்க சமையலறைக்குள் நுழைந்து, சமையலறையில் நடப்பதைத் திருத்திக் கொண்டு தொலைக்காட்சியின் முன் அமர்ந்து விடாதீர்கள்.
மனைவிகள் ஒரு சிறந்த வேலையைச் செய்கிறார்கள், உங்களுடையதைப் பாராட்டவும், சிறந்த மனைவியாகவும் தாயாகவும் இருக்க அவளுக்கு ஆதரவளிக்கவும்.
உங்கள் வாழ்க்கையில் உங்கள் மனைவி ஒரு தேவதையாக இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்றால், நீங்கள் முதலில் அவளுக்காக ஒரு சொர்க்கத்தை உருவாக்க வேண்டும்.
2 - 0
உங்கள் மனைவி உயிருடன் இருக்கும் போதே இதை உணர்த்துவிடுங்கள். படித்ததில் ரசித்தது #tamilstories #tamil
https://youtu.be/2gzW0FxeWsA
7 - 0
வாழ்க்கையை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தத்துவங்கள் #shorts #youtubeshorts #shortsfeed #shortsintamil #whatsappstatus #tamilshorts #tamil #tamilmotivation #tamilmotivationalquotes #motivationalquotesintamil
youtube.com/shorts/VNSvUWp5q1...
1 - 0
படித்ததில் சுட்டது....
"யார் நல்ல புருஷன்?"
என்று தெரியுமா எந்த நிலையிலும், எந்த நேரத்திலும், எது வந்தாலும், மனைவிக்கு அருகேயிருந்து நானிருக்கிறேன் என்று தைரியம் சொல்லி பிரச்சினையிலிருந்து யார்
காப்பாற்றுகிறானோ அவனே ஒரு நல்ல புருஷன்.
"யார் நல்ல மனைவி?"
என்று தெரியுமா? எந்த நிலையிலும், எந்த நேரத்திலும், எவர் துன்புறுத்த முயன்றாலும், யார் ஆசை வார்த்தைக் காட்டினாலும் மயங்காது, யார் பேச்சையும் நம்மாமல் உலகத்தில் எல்லோரைவிட என் புருஷனே
எனக்கு உயர்ந்தவன் என்று உண்மையாக இருப்பவளே நல்ல மனைவி.
youtube.com/shorts/58-os89N2w...
3 - 0
யாருக்காவும் உன்னை மாற்றிக் கொள்ளாதே... ஒருவேளை நீ மாற நினைத்தால். ஒவ்வொரு மனிதர்களுக்காகவும் நீ மாற வேண்டிவரும்...
- கவியரசு கண்ணதாசன்
youtube.com/shorts/1KFXmfPFo6...
0 - 0
அர்த்தமுள்ள பாடல் வரிகள்.
சில வேளைகளில் நாம் கவலையாக இருக்கும் போதோ, ஏதோ ஒரு மனக்கஷ்டத்தில் இருக்கும் போதோ கேட்டுக்கும் பாடல்கள் நமக்கு பெரிய ஆறுதலாக இருக்கும். அப்படி உங்களுக்கு ஆறுதல் அல்லது சந்தோசம் தரும் பாடல்கள் இருந்தால் கமெண்ட் பண்ணுங்கள்.
கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுவதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு
கருணை பொங்கும் உள்ளங்கள் உண்டு
கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு
என்றும் வாழணும் நூறு ஆண்டு
எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்
அழகே பூமியின் வாழ்க்கையை அன்பில்
வாழ்ந்து விடை பெறுவோம்
கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுவதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு
பூமியில் பூமியில் இன்பங்கள் என்றும் குறையாது
வாழ்க்கையில் வாழ்க்கையில் எனக்கொன்றும் குறைகள் கிடையாது
எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ……. ம்..ம்ம்..
எதுவரை வாழ்க்கை அழைகிறதோ
அதுவரை நாமும் சென்றிடுவோம்
விடை பெறும் நேரம் வரும்போதும்
சிரிப்பினில் நன்றி சொல்லிடுவோம்
பரவசம் இந்த பரவசம்
என்னாளும் நெஞ்சில் தீராமல் இங்கே வாழுமே
……….கடவுள் தந்த அழகிய…………….
நாமெல்லாம் சுவாசிக்க தனி தனி காற்று கிடையாது
மேகங்கள் மேகங்கள் இடங்களை பார்த்து பொழியாது
கோடையில் இன்று இலை உதிரும்
வசந்தங்கள் நாளை திரும்பி வரும்
வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால்
குயில்களின் பாட்டு காற்றில் வரும்
முடிவதும் பின்பு தொடர்வதும்
இந்த வாழ்க்கை சொல்லும் பாடங்கள் தான் நீ கேளடீ…
9 - 3
இனிய காலை வணக்கங்கள். இந்த நாள் இனிய நாளாக அமைய என்னுடைய வாழ்த்துக்கள்.
youtube.com/@motivationalhubtamil?si=RSLsKlTFmorpL…
6 - 0
Welcome to Inspire - Tamil Youtube channel Motivational and Inspirational Stories
Discover a world of motivation and inspiration with our heartfelt Tamil quotes and stories. Our channel is dedicated to bringing you uplifting content that encourages, motivates, and inspires. From life lessons and success stories to quotes about love, struggles, and victories, we provide valuable insights to help you navigate life's challenges.
What You'll Find Here
Motivational Quotes in Tamil
Inspirational Stories and Life Lessons
Success Stories and Overcoming Adversities
Real-Life Experiences and Struggles
Daily Motivation and Positive Thinking
Join Our Community
Subscribe to our channel and turn on notifications to stay updated with our latest videos. Engage with us in the comments, share your thoughts, and be part of a supportive and positive community.Don't miss out on daily doses of motivation and inspiration. Subscribe now and start your journey towards a more positive and empowered life.