in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
உங்கள் ஆரோக்கியம் மற்றும் நோய், உங்கள் மகிழ்ச்சி மற்றும் துயரம், அனைத்துமே உங்களுக்கு உள்ளே இருந்து வருகின்றன. நீங்கள் நல்வாழ்வை விரும்பினால், உள்நோக்கி திரும்ப வேண்டிய நேரம் இது.
#SadhguruQuotes #குருவாசகம் #sickness #sorrow #happiness #health #SadhguruTamil
288 - 0
நம் பேச்சு எப்படி இருக்க வேண்டும்? (How to Talk to Anyone)
குறிப்பிட்ட விதமாகப் பேசினால் நன்மை இருக்கும் என்ற நோக்கில், பலரும் பயிற்சி எடுத்துக்கொண்டு பேசுவதைப் பார்க்கிறோம். சிலர் எந்த சூழலில் எப்படி பேசுவது எனத் தெரியாமல் பிரச்சனையில் சிக்கிக்கொள்கிறார்கள். உண்மையில், நாம் பேசும் பேச்சை சரிசெய்ய நாம் என்ன செய்ய வேண்டும்? சத்குருவின் விளக்கத்தை தொடர்ந்து படித்தறியுங்கள்.
மேலும் படிக்க : isha.sadhguru.org/ta/wisdom/article/how-to-talk-to…
#Communication #Interaction #Sadhguru #SadhguruTamil
134 - 0
வாழ்க்கையில் மகத்தான நிறைவைத் தருவது உங்களை விட மிகப்பெரிய ஒன்றைச் செய்வது தான்.
#SadhguruQuotes #குருவாசகம் #fulfillment #great #life #SadhguruTamil
916 - 5
கர்மா என்பது உங்கள் செயலில் இல்லை - அது உங்கள் நோக்கத்தில் இருக்கிறது. கர்மவினையை உருவாக்குவது உங்கள் நோக்கம் தானே தவிர உங்கள் வாழ்க்கையின் உள்ளடக்கம் இல்லை.
#SadhguruQuotes #குருவாசகம் #karma #intentions #life #SadhguruTamil
1.4K - 6
சமைக்காத இயற்கை உணவின் அற்புதம்! (Iyarkai Unavu in Tamil)
அறிவியல் அடிப்படையிலும், யோக வழிமுறையிலும் சமைக்காத இயற்கை உணவை நம் உணவில் சேர்த்துக்கொள்வதன் அவசியம் என்ன என்பதை சத்குரு விளக்குகிறார்.
மேலும் படிக்க : isha.sadhguru.org/ta/wisdom/article/iyarkai-unavu
#NaturalFood #UncookedFood #Sadhguru #SadhguruTamil
431 - 4
உங்கள் உள்நிலையில் உயிர்த்தன்மையின் இன்பங்களை நீங்கள் அனுபவித்துவிட்டால், வெளியே உள்ள இன்பங்கள் அற்பமாகத் தோன்றும்.
#SadhguruQuotes #குருவாசகம் #pleasure #yourself #yoga #SadhguruTamil
1.5K - 8
நாளை ஏகாதசி – அக்டோபர் 27
ஒரு மாதத்தில், நம் உடலானது உணவை வேண்டாத நாட்களில் ஒருநாளாக ஏகாதசி அமைகிறது. இந்நாளில் உண்ணாவிரதம் இருப்பது, நமது உடல் மண்டலத்தை தூய்மைப்படுத்த உதவுவதோடு, நமது விழிப்புணர்வை உள்நிலை நோக்கித் திருப்புகிறது. இன்றிரவு உங்களது இரவு உணவை உட்கொண்ட பிறகு, அடுத்த இரவு உணவுவரை நீங்கள் விரதம் இருக்கலாம். முழுநாளும் உணவின்றி இருக்க முடியாதவர்கள் ஒரு லேசான பழ உணவை எடுத்துக்கொள்வதும் நன்மை பயப்பதாக இருக்கும்.
#Ekadashi #fasting #diet #food #health #Sadhguru #SadhguruTamil
749 - 2
கிராமோத்சவம் என்பது கிராமப்புற விளையாட்டுகள், கலை, நாடகம், நடனம், இசை மற்றும் உணவுகளின் தனிச்சிறப்புகளை காட்சிப்படுத்துவதன் மூலம் கிராமப்புற பாரதத்தின் சாரத்தை பறைசாற்றும் ஒரு கிராமிய வாழ்க்கைக் கொண்டாட்டமாகும்.
கிராமங்களுக்கு இடையிலான ஒரு மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியின் இறுதிச் சுற்றுகளை அரங்கேற்றுவதன் மூலம், கிராமப்புற வாழ்க்கையில் விளையாட்டின் முக்கியத்துவத்தை இந்நிகழ்ச்சி எடுத்துக்காட்டுகிறது. கான்சியஸ் ப்ளானட் இயக்கத்தின் ஓர் அங்கமான ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கத்தின் (ARR) சார்பில் இந்த திருவிழா நடைபெறுகிறது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அணிகளுக்கான பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
பதிவு செய்ய: isha.co/grm-regs-tam
#Gramotsavam2024 #Sadhguru #SadhguruTamil
364 - 5
உங்களைச் சுற்றியுள்ள அனைத்துடனும் ஆழமாகவும் விழிப்புணர்வாகவும் ஈடுபட்டால், அதில் சிக்கிப்போவது இருக்காது, ஆனந்தம் மட்டுமே இருக்கும்.
#SadhguruQuotes #குருவாசகம் #deeply #entanglement #bliss #SadhguruTamil
1.4K - 11
நீங்கள் உங்கள் உடலையும் மனதையும் உயிர்சக்தியையும் உணர்ச்சிகளையும் ஒரு குறிப்பிட்ட பக்குவத்திற்குப் பண்படுத்தினால், தியானம் என்பது தானாகவே மலரும்.
#SadhguruQuotes #குருவாசகம் #Meditation #body #blossom #SadhguruTamil
1.5K - 12