Channel Avatar

Rosary Prayers Tamil @UCrpdIR2uSr58c-KWSFGjpQw@youtube.com

2.7K subscribers

🙏 Welcome to Rosary Prayers Tamil – Your Daily Source for R


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

Rosary Prayers Tamil
Posted 1 week ago

Childrens day wishes and prayers from  ‪@RosaryPrayersTamil‬ 

அன்பு தந்தையே இறைவா,
இன்றைய நாளில், நீர் எங்களுக்கு அருளியுள்ள குழந்தைச் செல்வங்களுக்காக உமக்கு நன்றி கூறுகிறோம்.

ஆண்டவரே, இந்த பிள்ளைகளுக்கு நல்ல ஞானத்தையும், அறிவையும், தெளிவான புத்தியையும் கொடுத்தருளும். அவர்கள் உமக்கு பிரியமானவர்களாக வளர ஆசி புரியும்.

தீமை நிறைந்த இந்த உலகத்தில், உமது கரம் அவர்களை எல்லாவிதமான தீங்கு, விபத்து மற்றும் பொல்லாதக் கண்களில் இருந்தும் பாதுகாப்பதாக. உமது தூய ஆவியானவர் அவர்களுக்கு எப்போதும் காவலாக இருக்கட்டும்.

அவர்களுடைய சிறு வயது சந்தோஷமாகவும், மகிழ்ச்சியாகவும், எந்தவித கவலையுமின்றி கழிக்க உமது ஆசீர்வாதத்தை அளித்தருளும்.

ஆண்டவரே, சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள் அவர்களை தடுக்காதீர்கள் ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கு உரியது (மாற்கு 10:14) என்றுரைத்தவரே, உமது வார்த்தையின்படி இந்த எல்லாப் பிள்ளைகளையும் உமது திருக்கரத்தில் ஒப்புவிக்கிறோம். நீர் அவர்களை ஆசீர்வதித்து, வழிநடத்த வேண்டுமென்று, எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் வேண்டிக்கொள்கிறோம்.

ஆமென்.

21 - 1