தேவனுடைய வருகை மிகவும் சமீபம். ஆகவே அதற்கென்று ஜனங்களுக்கு தேவனுடைய சத்தியத்தை அறிவித்து. அவர்களை நித்தியத்திற்குச் சேர்க்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். ஒவ்வொரு நாளும் தேவன் என்ன சத்தியம் கொடுக்கிறாரோ, அதை மட்டுமே பதிவு செய்வோம். நீங்கள் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பாருங்கள். தேவனுடைய வசனங்களைக் கைக்கொள்ளுங்கள். இயேசுவின் வருகைக்கு ஆயத்தமாகுங்கள்.
எங்களை ஊக்கப்படுத்த விரும்பினால், Subscribe - பண்ணுங்கள், Like - பண்ணுங்க, Comments - பண்ணுங்கள். அப்பொழுது எங்களுக்கு மேன்மேலும் சத்தியத்தை அறிவிக்க ஊக்கப்படுத்தும்.
தேவனிடத்தில் பரலோகத்தை கேளுங்கள். அதுவே நிலையானது. பாவத்தை வெறுத்து தள்ளுங்கள். பாவிகளுடனே சேராதீர்கள். ஒவ்வொரு நாளும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஜெபியுங்கள். மற்றவர்களுக்கு சத்தியத்தை இயேசுவின் அன்பை அறிவியுங்கள். அப்பொழுது இயேசுவின் சீஷர்களாக இருப்பீர்கள். நம் இயேசப்பாவும் மிகவும் சந்தோஷப்படுவார்.
நீங்கள் தேவனோடு சேருங்கள். அப்பொழுது தேவன் உங்களோடு சேருவார். பாவத்தை வெறுத்து தள்ளுங்கள். இடைவிடாமல் ஜெபியுங்கள். இயேசு உங்களோடு பேசுவார். அவரை உங்களுக்கு காண்பிப்பார். ஆமென்