Channel Avatar

Archives of Hindustan @UCqfwuKbFVS-sypE4EFfqX1A@youtube.com

1.1M subscribers - no pronouns :c

Mobile : +91 7200578823


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

Archives of Hindustan
Posted 4 days ago

2025 ஆங்கில புத்தாண்டு : உலக அளவில் என்னென்ன மாற்றங்களை எதிர்பார்க்கலாம்: -

ஜோதிட ரீதியாக 2025-ம் ஆண்டு மிக முக்கியமான ஆண்டாக இருக்கும். காரணம் சனிப்பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சி என அடுத்தடுத்து மூன்று முக்கிய கிரகங்கள் பெயர்ச்சியாகின்றன. ஆண்டு கிரகங்களின் பெயர்ச்சி வரிசையாக நடைபெற உள்ளதால் பல அதிரடி மாற்றங்கள் 2025-ல் நிகழ உள்ளன.

2025 மார்ச் 29-ம் தேதி இரவு 9.44 மணியளவில் சனிபகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

2025 மே மாதம் 14-ம் தேதி இரவு 10.37 மணிக்கு குருபகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

2025 மே மாதம் 18 - ம் தேதி இரவு 7.45 மணிக்கு ராகு பகவான் மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கும் பெயர்ச்சியாகின்றனர்.

*பொதுப் பலன்:*

*2025-ல் உலகில் என்ன நடக்கும்?*

கனமழை, வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை சீற்றங்கள் அதிகளவில் நிகழும். கடலில் புயல் சின்னங்கள் அடிக்கடி உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தும். சரக்கு கப்பல்கள் மூழ்கி கச்சா எண்ணெய் கடலில் கலந்து கடல் வளம் பாதிக்கப்படும்.

உலக அரசியலில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும். முக்கியமான அரசியல் தலைவர் மரணமடைவார்.
மத தலைவர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே மோதல் போக்கு ஏற்படும். கண் நோய் பரவும். குழந்தைகளின் பிறப்பு விகிதம் பாதிக்கப்படும்.

புதிய கண்டுபிடிப்புகள் நிகழும். விஞ்ஞானமும், விண்வெளி துறையும் அசுர வளர்ச்சி அடையும். ஏஐ போன்ற தொழில்நுட்பங்கள் கல்வித்துறையில் புகுத்தப்படும். நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு தகவல் தொழில்நுட்பம் முன்னேற்றத்தை சந்திக்கும். அறிவியல் வளர்ச்சியில் எந்த அளவிற்கு சாதகமான விஷயங்கள் உள்ளதோ அதே அளவிற்கு பாதகங்கள் ஏற்படும். மனித குலத்திற்கு அழிவை தரும் ஆயுதங்கள் உருவாக்கப்படும். அணுகுண்டு சோதனைகள் அதிகளவில் நடத்தப்படும்.

*இந்தியாவுக்கு எப்படி?*

இந்தியாவை பொறுத்தவரை 2025-ல் தகவல் தொழில்நுட்பம், கல்வித்துறையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சுற்றுலா துறை வளர்ச்சியை சந்திக்கும். புயல், சூறாவளி காற்று, மழை, வெள்ளம் அடிக்கடி ஏற்படும். யாத்திரை செல்பவர்கள் பாதிப்பை சந்திக்க நேரிடும்.

அரசியல்வாதிகள் பலர் வழக்கில் சிக்குவார்கள். அரசியல் கட்சிகளிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். கூட்டணி கட்சிகளிடையே பிளவு ஏற்படும். பழமையான கட்சிகளின் பலம் குறைந்து புதிய கட்சிகளுக்கு பலம் கூடும். அரசு ஊழியர்கள் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

(தொடரும்)
*ஜோதிட சிரோன்மணி ஆர்.கே.வெங்கடேஸ்வர்*
astrovenkataeswar@gmail.com
Phone : +91 98405 93118

40 - 2

Archives of Hindustan
Posted 1 week ago

Wanted: Visual Editors

For more details contact: 7200578823

12 - 4