அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள்.South Indian Folklore தளத்தின் மூலமாக சுற்றுலா (Tourism) மற்றும் பயண தகவல்களை ( Travel Information)பரிமாறிக்கொள்வதில் பெரு மகிழ்ச்சி. தமிழர்கள் அன்றைய காலத்திலே பயணங்கள் மேற்கொள்வதிலும் விருந்தோம்பலிலும் (Hospitality) சிறந்து விளங்கினர்.தமிழ்நாடு வேகமாக வளர்ச்சியடைந்து வரும் தென்னிந்திய மாநிலமாகும். நீண்ட வரலாற்றையும் தனித்துவ பண்பாட்டையும் அழகிய நிலப்பகுதிகளையும் தமிழ்நாடு கொண்டுள்ளது.பண்டைத் தமிழர் தமிழ்நாட்டின் இட அழகை முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என வகுத்து விபரித்தனர் தமிழ்நாடு பாரம்பரியச் சின்னங்கள் நிறைந்த இடமாகும். திராவிட கட்டிடக் கலை பாணியைப் பிரதிபலிக்கும் கோயில்களுக்குப் புகழ் பெற்றது. இக்கோயில்களுக்கு வியக்க வைக்கும் கோபுரங்களும் ரதங்களும் அழகு சேர்க்கின்றன. சோழர் கால தஞ்சைப் பெரிய கோவிலும் பல்லவர் கால மாமல்லபுரம் சிற்பங்களும் கோவில்களும் உலகப் பாரம்பரியச் சின்னங்களாக அங்கீகரிக்கப் பட்டுள்ளன.இத்தனை வளங்கள் கொண்ட தமிழ் நாட்டில் சுற்றுலா துறை தொடர்பான தகவல்களை வழங்குவதில் பெருமை கொள்கிறேன் நன்றி