Channel Avatar

Temple Vibes @UCm-QAGkQePrcecZyNknXL8Q@youtube.com

7.4K subscribers - no pronouns :c

#templevibes ஆலயம் இல்லாத ஊரில் குடியிருக்கவேண்டாம் என்பது


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

Temple Vibes
Posted 4 months ago

You can now find us on Instagram. Click the Link to follow our latest updates and connect with us.

www.instagram.com/templevibess

0 - 0

Temple Vibes
Posted 6 months ago

வரலட்சுமி விரதம் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத பெளர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமை தினத்தில் கொண்டாடப்படுகின்றது.

எந்த வீட்டில் பெண்கள் வரலட்சுமி நோன்பிருந்து முறைப்படி பூஜை செய்கிறார்களே, அந்த வீட்டிற்கு அன்னை மகாலட்சுமி வருவதாகவும்,அருள் ஆசி வழங்குவார் என்பதும் ஐதீகம். வரலட்சுமி விரத பூஜை நடத்தப்படும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள். லட்சுமி வழிபாட்டால் நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல் நலம் உண்டாகும். வரலட்சுமி பூஜை செய்யும் போது, நம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை நாம் எப்படி உற்சாகமாக வரவேற்போமோ, அதே மாதிரி வாசலில் நின்று லட்சுமியை பாவனை செய்து அழைக்க வேண்டும்.

வரலட்சுமி விரத வழிபாட்டினை இரண்டு முறையாக கடைபிடிக்கலாம். ஒன்று படம் வைத்தும் வழிபடுவது, மற்றொன்று கலசம் வைத்து வழிபடுவது. இந்த ஆண்டு மட்டும் வரலட்சுமி விரதம் கடைபிடிக்க வேண்டும் என நினைப்பவர்கள் படம் வைத்து வழிபடலாம். தொடர்ந்து அனைத்து வருடங்களும் வரலட்சுமி விரதம் இருக்க முடியும் என்கிறவர்கள் கலவசம் வைத்து வழிபடலாம். முதல் முறையாக வரலட்சுமி விரதம் இருப்பவர்கள் படம் வைத்து வழிபடலாம். வரலட்சுமி விரதம் என்பது மூன்று நாட்கள் கடைபிடிக்க வேண்டிய விரதம் ஆகும். மகாலட்சுமியை வியாழக்கிழமையே அழைத்து, வெள்ளிக்கிழமை வரலட்சுமி பூஜை செய்து, சனிக்கிழமை புனர்பூஜை செய்து வழிபடலாம். அப்படி முடியாதவர்கள் வெள்ளிக்கிழமை காலையே அழைத்து, அன்றே பூஜை செய்து, ஞாயிற்றுக்கிழமை புனர்பூஜை செய்தும் வழிபடலாம். படம் மட்டும் வைத்து வழிபடுபவர்கள் வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் வழிபட்டால் போதும். எவர்சில்வர் தவிர மற்ற எந்த உலோகத்தால் ஆன கலசத்தையும் பயன்படுத்தலாம். பொதுவாக இரண்டு வகையாக கலசம் அமைப்பார்கள். ஒன்று தண்ணீர் நிரப்பி வழிபடுவது, மற்றொன்று அரிசி நிரப்பி வழிபடுவது. பெரும்பாலானவர்கள் அரிசியை நிரப்பி வழிபடுவதே வழக்கம். கலசத்தை நன்கு சுத்தம் செய்து, மஞ்சள், குங்குமம், சந்தனம் வைத்து அலங்கரித்து அதன் கழுத்து பகுதியில் மஞ்சள் நூல் ஒன்றை சுற்ற வேண்டும். கலசத்திற்குள் பச்சரிசி, எலுமிச்சம் பழம், மஞ்சள், நாணயம், ஜாதிக்காய், மாசிக்காய், ஏலக்காய், கிராம்பு, ஒரு காதோல கருகமணி ஆகியவற்றால் நிரப்பி, அதன் மீது தேங்காய் வைத்து மூடி விட வேண்டும். இப்போது மஞ்சள் அல்லது கடைசியில் விற்கும் அம்மனின் முகத்தை வாங்கி வைத்தோ, உங்களின் விருப்பம் போல் புடவை, நகைகள், மாலைகள் ஆகியவற்றால் அம்மன் உருவம் அமைத்து அலங்காரம் செய்யலாம். கலசம் வைத்து வழிபட்டாலோ, படமாக வைத்து வழிபட்டாலோ அதை ஒரு மனப்பலகை எழுந்தருள செய்து, வீட்டிற்கு வெளியில் கொண்டு போய் வைத்து தீப, தூப ஆராதனை காட்டி, மகாலட்சுமி தேவியை மகிழ்ச்சியாக நமது வீட்டில் எழுந்தருளுமாறு மனதார வேண்டிக் கொண்டு, வீட்டில் உள்ள மூத்த சுமங்கலி பெண்கள், மகாலட்சுமிக்கு உரிய பாடல்களை பாடி வீட்டிற்குள் அழைத்து வர வேண்டும். வீட்டில் பூஜை செய்யும் இடத்தில் அம்மனை எழுந்தருள செய்ய வேண்டும். இரு புறமும் வாழை மரங்களால் தோரணம் அமைத்து, அழகாக அலங்காரம் செய்யலாம்.

மகாலட்சுமியை முதல் நாள் வீட்டிற்கு அழைத்தாலும், வரலட்சுமி பூஜை அன்று அழைத்தாலும், வீட்டிற்கு அழைத்த உடன் எளிமையாக ஏதாவது ஒரு நைவேத்தியம் படைத்து வழிபட்டு, பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம். வரலட்சுமி பூஜையன்று நல்ல வாசனை மலர்களால் அம்மனை அலங்கரித்து, சர்க்கரை பொங்கல், பருப்பு பாயசம், பால் பாயாசம், புளியோதரை என எது முடியுமோ அதை நைவேத்தியமாக படைத்தும், கனகதாரா ஸ்தோத்திரம், லலிதா சகஸ்ரநாமம், மகால்டசுமி அஷ்டம் என எது தெரியமோ அவற்றை படிக்கலாம். புனர்பூஜை என்பது, மகாலட்சுமியை எழுந்தருள செய்துள்ள கலசத்தை அப்படியே எடுத்துச் சென்று வீட்டின் சமையலறையில் அரிசி வைக்கும் பாத்திரத்திற்கும் இந்த கலசத்தை வைத்து, "மகாலட்சுமி தாயே, என்றென்றும் எங்கள் வீட்டில் நீ அஷ்டலட்சுமியின் வடிவமாகவும் எழுந்தருளி அருள் செய்ய வேண்டும்" என வேண்டிக் கொள்ள வேண்டும்.

பிறகு கலசத்தை களைத்து, அதில் பயன்படுத்திய தேங்காயை சமையலுக்கு இனிப்பு வகைகள் செய்வதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். காரமான உணவுகள் செய்ய பயன்படுத்தக் கூடாது. அரிசியை அம்மனுக்கு பொங்கல் உள்ளிட்ட நைவேத்தியம் செய்ய பயன்படுத்தலாம். அதிகமாக இருந்தால் கிருஷ்ண ஜெயந்தி பட்சனங்கள் செய்வதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏலக்காய், ஜாதிக்காய் போன்றவற்றை சமையலுக்கு பயன்படுத்திக் கொண்டு, எலுமிச்சை, காதோல கருகமணி ஆகியவற்றை பூஜை அறை குப்பையில் சேர்த்து விடலாம்.

பதினாறு வகை செல்வத்தையும் வழங்கக்கூடிய மகாலட்சுமி தேவியை நினைத்து இருப்பது வரலட்சுமி விரதம். திருமணமான பெண்கள் பூஜை முடியும் வரை சாப்பிடாமல் விரதத்தை கடைப்பிடிப்பார்கள்.மங்களத்தையும், மாங்கல்ய பலத்தையும் அளிக்கக்கூடிய இந்த விரதத்தை கன்னிப் பெண்களும், திருமணமான சுமங்கலி பெண்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

வரலட்சுமி பூஜை செய்வதற்கு முன்பாக விநாயகர் வழிபாடு அவசியம் செய்ய வேண்டும். வரலட்சுமி பூஜையை மனநிறைவோடு செய்ய வேண்டும். ஒன்பது முடிச்சு இருக்கும் நோன்புக்கயிறு அவசியம். அம்மன் அலங்காரம் செய்த உடன் முடிக்கயிறு தயாரிக்கும் போது 9 முடிச்சுகள் போட்டிருக்க வேண்டும். வெள்ளிக்கிழமை காலையில் நல்ல நேரத்தில்தான் இந்த முடிச்சி போடவேண்டும். அஷ்ட லட்சுமிகளுடன் வரலட்சுமியை சேர்த்து 9 லட்சுமிகள் என்பதை குறிக்கும் வகையில் 9 முடிச்சு கொண்ட நோன்பு கயிறு கட்டிக்கொள்கின்றனர். வயது மூத்த சுமங்கலிகள் கையால் நோன்புக்கயிறு கட்டிக்கெள்ள வேண்டும்.

ஒன்பது முடிச்சுகளிட்ட கயிற்றை, 'நவதந்து ஸமாயுக்தம் நவக்ரந்தி ஸமன்விதம் பத்னீயாம் தட்சிணே ஹஸ்தே தோரகம் ஹரிவல்லபே' என்ற மந்திரத்தை உச்சரித்து வலது கையில் கட்டிக்கொள்ள வேண்டும். இந்த மந்திரத்தின் அர்த்தம் நாராயணின் மனைவியான மகாலட்சுமியே ஒன்பது இழைகளும் ஒன்பது முடிச்சும் கொண்ட இந்த மஞ்சள் கயிற்றினை பிரசாதமாக ஏற்று வலது கையில் கட்டிக்கொள்கிறேன். எனக்கு நீ அருள்புரிய வேண்டும் என்று சொல்லி வணங்க வேண்டும்.

வரலட்சுமியை நினைத்து மனதில் பக்தியுடன் சந்தோஷத்துடன் பூஜை செய்ய வேண்டும். வரலட்சுமி விரதத்தை காலை தொடங்கினாலும் மாலையில் பூஜை செய்யலாம். மாலை நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி பூஜையை தொடங்குவது நல்லது. வரலட்சுமி விரதத்தை ஒவ்வொரு ஆண்டும் தவறாது அனுஷ்டித்து வந்தால், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணமும், திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய பலமும் கிடைக்கும் என்பது ஐதீகம். நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் உண்டாகும் என்பது நம்பிக்கையாகும். மகாலட்சுமியை வீட்டிற்கு அழைக்க உகந்த நேரம்: 15 ஆகஸ்ட் 2024 - மாலை 6 மணி முதல் 8 மணி வரை . 16 ஆகஸ்ட் 2024 - காலை 6 மணி முதல் 7:20 வரை ஆகும்.
பூஜைக்கான உகந்த நேரம்: 16 ஆகஸ்ட் 2024 - காலை 9 மணி முதல் 10:20 மணி வரை. அது போல மாலை 6 மணிக்கு மேல்.

இதுபோன்ற மேலும் பல ஆன்மிக தகவல்களை பெற எங்கள் சேனலுடன் இணைந்திருங்கள். youtube.com/@TempleVibesnew

6 - 0

Temple Vibes
Posted 6 months ago

நவ திருப்பதியில் முதலாம் திருப்பதி. 108 திவ்ய தேச கோவில்
சூரிய பகவானுக்குரிய கோவில் என பல சிறப்புகளை பெற்ற ஸ்ரீ வைகுண்டம் ஆலய வரலாறு. விரைவில்.

5 - 0

Temple Vibes
Posted 10 months ago

பட்டுக்கோட்டை அருள்மிகு நாடியம்மன் ஆலய திருத்தேர்

https://youtu.be/9gwrXayO7kM?si=0YHyT...

5 - 0

Temple Vibes
Posted 10 months ago

மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் பங்குனி உற்சவ தேர்.

13 - 0

Temple Vibes
Posted 1 year ago

மயிலாப்பூர் அருள்மிகு மரகதாம்பாள் சமேத மல்லீஸ்வரர் ஆலய கும்பாபிசேக அழைப்பிதழ்.

14 - 0