Channel Avatar

Rameswaram Agamudaiyar @UClPaq7x7u1cBHuLHGt5N67w@youtube.com

1.6K subscribers - no pronouns :c

Raja kula Agamudaiyar


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

Rameswaram Agamudaiyar
Posted 1 year ago

உனக்கான சரி ??

நீ சரியில்லை என்பதே..
ஆதலால்
சரியாக பிறந்து சரியாகி கொண்டு இருப்பதை அனுபவிப்பதே..

இதில் ஏதோ சரியில்லை என்பது
தான் சரியாக வந்திருப்பதை உணராதது மட்டுமே..

நீ அப்படியா??

2 - 0

Rameswaram Agamudaiyar
Posted 1 year ago

#அமுதநிலை_3

சென்ற பதிவில் 12அடையாளங்களை தெரிந்துகொண்டோம்
இந்த பதிவில்
தொடர்ந்து 13வது அடையாளம் பெண்ணின் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் ரேகைகள் ஆணின் ரேகைகளைக் காட்டிலும் அதிக ஆழத்துடன் இருக்கும்
பெண்ணின் தோல், வெப்பமாற்றங்களுக்குத் தோதாக இலகுவாக அமையப்பெற்றிருப்பதால் இந்த ரேகை ஆழம் சற்று அதிகமாக இருக்கும்.

ஆக, (சூரியனோட) ஆதித்தனது சாயலாக தனக்குள் தானே அக்கினி வளர்த்து அதனை தனக்குள் செறிவு செய்துவைத்துக் கொள்ளும் இயல்பான சக்தி பெண்ணுக்கு இருக்கிறது.

சூரியனின் சாயலாக,
பெண்ணுள் நடக்கும் இன்னொரு விந்தை என்றால் அவளது உடல் வெப்பத்தில் ஏற்படும் இரவு-பகல் மாற்றங்கள்
இரவில் குறைந்தும் பகலில் கூடியும் இருக்கும்
அதாவது ஒரு பெண்ணின் உடல் வெப்ப நிலை பகல் பனிரெண்டு மணியில் உச்சத்தில் இருக்கும் இரவின் நடுநிசியில் வெகு தாழ இருக்கும்.
அதே நேரத்தில் பெண்ணின் மூலாதார வெப்பமும் அதன் பதின்மூன்று அடையாளங்களும் அவளுடலில் ஏற்படும் மாதவிடாய்ச் சுழற்சியோடு இணைக்கப்பட்டிருக்கின்றன.

என்ன ஒரே ஆச்சரியமாக இருக்கிறதா...?
சிருஷ்டிப் பணிக்காக,
பெண்ணின் உடலில் உருவாகும் பெண் ஹார்மோன் செய்யும் மாயமிது. பெண்ணின் கரு முட்டை நிலையின் தன்மையை திரவமாய் அறிவிக்கும் சுரோணிதம் "அமுது"எனும் சொல்லுக்குப் பொருளாய்க் கொள்ளமுடிவதாக உள்ளது.
ஏனெனில், அமுது என்பதற்கு உயிரின் வேர் உயிரின் முதற்புள்ளி என்று பொருள் அமுது என்பதை, சிசு என்றும் சொல்லுவர்.

ஒரு பசு கன்று ஈன்றதும் முதலில் சுரக்கும் "பாலை" சீம்பால் என்றும் கூறுவர்.
அதாவது கிராமப்புறங்களில், பிரசவமான பசுவின் உடலிலிருந்து சிசுவைப் பிரிக்கும்போது வெளித்தள்ளப்படும் தொப்புள்கொடி மற்றும் நஞ்சின் தொகுப்பை "அமுது" என்று அழைப்பதே வழக்கம்.

பிரசவமான பசுவின் அமுதை மிகுந்த பயபக்தியடன் சேகரித்து அதனை சில பொருட்கள் சேர்த்துப் பதனப் படுத்தி சுத்தமான துணியில் கட்டி, அதனை உரிய சம்பிரதாயங்களோடு ஆலமரத்தில் கட்டித் தொங்கவிட்டு,
சூரியனைப் பிரார்த்திப்பது என்ற வழக்கம் வெகு காலமாக தமிழர்களிடம் இருந்திருக்கிறது.

வீட்டில் பிரசவம் நடந்த கால கட்டங்களில் தமிழகக் கலாச்சாரத்தில்,
மனிதப் பெண்ணின் பிரசவ நஞ்சும் கூட இவ்வாறு சில சடங்குகளுடன் சூரியனுக்குப் படைக்கப்பட்டதாய் எனக்கு தெரிந்த 103 வயதாகும் தமிழ் மூதாட்டி ஒருவரிடம் அறிந்து கொண்டேன்.

இந்தச் சடங்கில் குல ஒழுக்கங்களில் வித்தியாசம் இருந்தாலும்,
பொதுவாகப் பெண்ணின் உடலிலிருந்து வெளியேறிய நஞ்சு
நாய்,நரி,பாம்பு,பறவைகள் ஆகிய உயிரினங்களின் கண்ணில் படாமலும்
நீர் நிலைகளில் எறியப்படாமலும் பூமியில் புதைக்கப்படாமலும் பார்த்துக்கொள்ளப்பட்டது
இன்றும் பல குலத்தார் அதனை அக்கினியில் வார்த்தனர் என்றும் சிலர் அதனை தீபமாக்கினர் என்றும் கூறப்படுகின்றது

இன்று பெண்ணின் 28 நாள் மாதவிடாய்ச் சுழற்சியில் அவளின் உடலின் வெப்ப ஏற்றத்தாழ்வுகளை மருத்துவ உலகம் ஆய்ந்திருக்கிறது. இன்றும் கூட கருத்தரிப்பு
மருத்துவ வல்லுநர்கள் பெண்ணின் பெரினிய வெப்பத்தைத் தொடர்ச்சியாக அளவிட்டு அந்த வெப்பநிலையைக் கணக்கில் கொண்டு அவள் உடலில் முட்டை உண்டாகி இருக்கிறதா இல்லையா எனச் சட்டென அறிந்து கொண்டு அதற்கேற்றபடி சிகிச்சை அளிக்கிறார்கள்.

முன்னொரு பதிவில் விநாயகர் அகவலில் அமுதநிலையை சூரியன் எவ்வாறு இயக்கும் என்று
மேலோட்டமாக குறிப்பிட்டிருந்தேன்
அது பெண்ணின் உடல் உஷ்ணம் பற்றியே என்பதும் பெண்ணின் உடல் உஷ்ணதத்திற்கும் அவள் உடலில் கருமுட்டை தோன்றும் விலகும் சுழற்சிக்கும் தொடர்பு உள்ளது என அவள் நம்மை உணரவைப்பதும் உங்களுக்கு இப்போது புரிகிறதா....?

இந்நிலையில் ஒரு பெண், ஒரு தாய், மருத்துவ அறிவியலில் மூழ்கி இருப்பவர் என்கிற வகையில் அவ்வையின் உயிரோட்டமான இந்த அமுதநிலை சூரிய இயக்கம் என்கிற வாசத்தை நான் எண்ணி எண்ணிப் பரவசப் படுவதுண்டு.

பகவத் கீதையில்
13றாம் அத்தியாயம் ஷேத்திரம் எனும் உடலியலை விளக்குகின்ற
இந்த அத்தியாயத்தில் அமுது என்பதன் சூட்சமங்களைக் கண்ட அமுதம் உடம்பிலிருந்தபடி எது உயிர் உருவாகும் வண்ணம் உடலை மேற்பார்வை பார்க்கின்றதோ;எது உயிர் உருவாக அனுமதி தருகிறதோ;எது உயிர் உருவாகத் தான் உண்ணுகிறதோ, அதுவே பரமாத்மா என்கிறது கீதை.

அவ்வையார் குறிப்பிட்ட அமுதமும் பகவத் கீதை சொல்லும் பரமாத்மாவும் மருத்துவ அறிவியல் பார்வையில் பெண்ணின் கரு முட்டையே என நாம் புரிந்துகொள்கிறோம் அல்லவ...?
ஆகவே,
பெண்ணின் மூலாதாரத்தின் மூண்டெழும் கனல் அங்கேயே தங்கிவிட்டதென்றால் பல எதிர் விளைவுகள் நிகழும்
அதனை அங்கு தங்காமல் எழுப்பியே ஆகவேண்டும் என்கிறாள் அவ்வை பாட்டி இன்று மருத்துவ உலகம் பெரும்பாடுபட்டு ஏதோ கொஞ்சம் அறிந்து கொண்டு;

அறிந்துகொண்ட அந்த கொஞ்சத்தையும் கூட சொல்லத்தெரியாமல் தத்துபித்தென்று உளறிக்கொண்டிருக்க வெகு அனாயசமாக அமுத நிலையம் ஆதித்தன் எனும் சூரிய இயக்கமும் என்று சொல்லிப்போன அவ்வையையும் இதுபோன்றே பல மருத்துவ உடலியல் ஷரத்துக்களை வெகு யதார்த்தமாக இயம்பிச்சென்றிருக்கிற திருமூலர் மற்றும் எண்ணிறந்த சித்தர்களையும் வாழ்த்தி வணங்க நமக்கெல்லாம் இந்த வாழ்நாள் போதாது.

இன்னும் தொடர்ந்து தெரிந்துகொள்வோம்

0 - 0

Rameswaram Agamudaiyar
Posted 1 year ago

🪷🍀🛞பிரபஞ்ச சக்தியின் சத்தியமான வாழ்வியல் கோட்பாடுகள் வாழ்க்கை நெறி முறைகள் 🪷🍀🛞

*🪷🍀நிறுத்தவும் முடியாமல் தொடரவும் முடியாமல் சில தேடல்கள்...*

*🪷🍀விலகவும் முடியாமல் நெருங்கவும் முடியாமல் சில உறவுகள்...*

*🪷🍀சொல்லவும் முடியாமல் கொல்லவும் முடியாமல் சில ஆசைகள்...*

*🪷🍀மறக்கவும் முடியாமல் வெறுக்கவும் முடியாமல் சில நினைவுகள்...*

*🪷🛞இது தான் வாழ்க்கை!!!*

*🪷🍀சாகும் வரை மகிழ்ச்சியாக இருக்க பணம் தேவை இல்லை.... நல்லதொரு துணை போதும்.... வாழும் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்......*

*🪷🍀மனைவியை மறக்க வைக்கும் தாயின் பாசத்தையும் தாயை நினைக்க வைக்கும் மனைவியின் அன்பையும் பெற்றவன் அதிர்ஷ்டசாலி.*

*🪷🍀சுயநல உலகம் இது... தேவை முடிந்த பின் செருப்பை போல் கழட்டி விடுவார்கள்....*

*🪷🍀நீங்கள் யாருக்காக வேண்டுமானாலும் வாழ்ந்து விட்டு போங்கள். ஆனால் உங்களுக்காகவும் கொஞ்சம் வாழக் கற்றுக் கொள்ளுங்கள்......*
*இல்லையென்றால் உங்களுக்கான உலகை உங்களால் காண முடியாது....*

*🪷🍀மற்றவர்களிடம் பேசும் போது குறைவாக பேசுங்கள். ஆனால் மற்றவர்களின் குறைகளை பேசாதீர்கள்.*

*🪷🍀நம்முடைய குறைகளை நேருக்கு நேராக சொல்பவர்கள் ஒரு போதும் நமக்கு துரோகியாக இருக்க மாட்டார்கள்.*

*🪷🍀தவறுகளில் இருந்து திருத்தி கொள்வீர். திருத்தி கொள்வதில் இருந்து கற்று கொள்வீர். கற்றலில் இருந்து அனுபவம் பெறுவீர்.*

🪷🍀கொடுப்பவன் இறைவன் என்பதை உணர்ந்து கொண்டால், கிடைப்பது எதுவும் தாழ்வாகத் தெரியாது.

*🪷🍀எல்லாம் சரியாகி விடும் என்பது நம்பிக்கை. எல்லாவற்றையும் சரி செய்து விடலாம் என்பது தன்னம்பிக்கை. எல்லாம் சரி செய்து தான் ஆக வேண்டும் என்பது வாழ்க்கை.*

🪷🍀இன்பம் வரும்போது எவ்வித சமரசமுமின்றி ஏற்றுக்கொள்ளும் நாம், துன்பம் வரும் போது ஒருசில சமரசங்களுடனாவது ஏற்றுக் கொள்ள பழகிக் கொள்ள வேண்டும்.

🪷🍀துன்பங்களை வெளியில் காட்டிக் கொள்ளாமல், மகிழ்ச்சியாக வாழ்வது போல உலகிற்கு காட்டுவதே சாதனை தான்.

🪷🍀ஜெயிக்கும் வரையில் தன்னம்பிக்கை அவசியம். ஜெயித்த பிறகு தன்னடக்கம் அவசியம்

*நல்லதே நினை.*
*நல்லதே நடக்கும்.*

*வாழ்க வளமுடன்*
*வாழ்க நலமுடன்

0 - 0

Rameswaram Agamudaiyar
Posted 1 year ago

நீ
உன் உடம்பை
பலப்படுத்திக்
கொண்டிருக்கிறாய்..

ஆனால்,

உன் சுவாசம்
நலிவடைவதை
நீ
கவனிப்பதில்லை..

0 - 0

Rameswaram Agamudaiyar
Posted 2 years ago

வட இந்திய வியாபாரிகள் பின்பற்றும் ஒரு ரகசிய முறை .படித்துப் பயன்பெறுங்கள்.

தொழில்,வியாபார ஸ்தாபனங்களில் தினமும் விளக்கேற்றி இம்மந்திரம் ஜெபித்து வர தொழில் மற்றும் வியாபார விருத்தி ஏற்படும்.மேலும் பணத்தைப் பெருக்கும் புத்திசாலித்தனம் உண்டாகும்.

வெள்ளிக்கிழமை மற்றும் பௌர்ணமி அன்று பச்சைக்கற்பூரம் ஏலக்காய் கலந்து காய்ச்சிய பால்,வெற்றிலை,பாக்கு,பாயசம்,கற்கண்டு,பழங்கள் வைத்து வழிபட விரைவான முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.விளக்கேற்றி "ஓம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மித் தாயே உன் முழு உருவோடும் சர்வ ஆபரணங்கள் பூண்ட கோலத்தோடும் இத்தீபத்தில் எழுந்தருளி எனக்கு வறுமை கடன் அற்ற வளமான வாழ்வு தந்தருள வேண்டும்" என்று வேண்டி தீபத்தை வணங்கித் தலை மற்றும் கண்களில் ஒற்றிக்கொள்ளவும்.
தீபம் அணைந்ததும் தீபத்திரியில் உள்ள கருக்கை நெற்றியில் இட்டுக் கொள்ளவும்.இது உயர்வான பலன்களைத் தரும்.

மற்ற நாட்களில் முடிந்ததை நைவேத்யம் செய்து வழிபட்டு வாருங்கள். அல்லது கல்கண்டு மட்டும் படைக்கலாம்.

மந்திரம் :-

ஸ்ரீ சுக்ல மகாசுக்லே நவாங்கே ஸ்ரீ மஹாலக்ஷ்மி நமோ நமஹ

இம்மந்திரம் கடை மற்றும் வியாபார ஸ்தலத்திற்கு நாலா திசைகளில் இருந்தும் அதிகமான ஜனங்களை ஈர்த்து வரச்செய்யும்.தன வசீகரமும் ஜன வசீகரமும் பெருகும்.
________________

கடையில் வியாபாரமே இல்லாமல் கஷ்டப்படுபவர்கள் மற்றும் தொழில் செய்யும் யாவரும் இம்மந்திரத்தைக் கடை மற்றும் தொழில் ஸ்தாபனத்தில் அமர்ந்திருக்கும் பொழுது மனதிற்குள் ஜெபித்து வர அதிகமான மக்கள் வரத்துவங்கி தொழில் சிறப்பாக நடைபெறும்.இதை என் நண்பர்கள் பலரும் அனுபவித்துப் பலனடைந்திருக்கின்றனர்.காலையில் கடை திறந்ததும் இம்மந்திரம் ஜெபித்த நீரை கடையில் தெளிக்க நல்ல பலன்கள் ஏற்படும்.அல்லது மாலை 6:15 முதல் 6:45 க்குள் இம்மந்திரம் ஜெபித்து நீரை கடை,தொழிற்சாலை மற்றும் வியாபார ஸ்தலங்களில் தெளித்து வர லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும்.

மந்திரம் :-

ஓம் நமோ பகவதி பத்மா பத்மாவதி |ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் பூர்வாய தக்ஷிணாய பஸ்சிமாய உத்தராய ஆனுபூரக சர்வே ஜன வஸ்யம் குரு ஸ்வாஹா ||

1. யாரிடம் இருந்து பணம் வாங்கினாலும் வலது கையால் கொடுக்க சொல்லி வலது கையால் வாங்கிக்கொள்ள வேண்டும்.நீங்கள் பிறருக்குக் கொடுத்தாலும் அப்படியே செய்யவும்.

2. பணம் எண்ணும்போதும் ,புத்தகம் அல்லது தொழில் சம்பந்தமான பைல், புத்தகம், நோட்டுகளைப் புரட்டும் போதும் எச்சில் தொட்டு என்னவோ புரட்டவோ கூடாது. குறிப்பாக ஆன்மீக நூல்களை படிக்கும் பொழுது இதைச் செய்யவே கூடாது.இது தரித்திரத்தை உண்டாக்கும்.

3.தொழில் சார்ந்த கணக்குப் புத்தகங்களில் (EX.CASH BOOK,EXPENSES BOOK) எழுதத் துவங்கும் முன் நோட்டு / புத்தகத்தின் முதல் பக்கத்தின் மேல் அஷ்டகந்தம் கொண்டு ஸ்ரீ அல்லது சுபலாபம் என்று எழுதுங்கள் .

4. வெளியில் கிளம்பும் போது பர்ஸ் அல்லது சட்டைப்பையில் பணம் இல்லாமல் செல்லக்கூடாது.ஏன் என்றால் பணம் தான் பணத்தை ஈர்க்கும்.

5.கடை அல்லது அலுவலகத்தின் பணப்பெட்டி வைத்திருக்கும் அறைச் சுவர் மஞ்சள் அல்லது மஞ்சள் ஷேடு நிறத்தில் இருப்பது பணவரவை அதிகப் படுத்தும்.கருப்பு,சிகப்பு,நீல நிறங்கள் பணவரவைக் குறைக்கும்.

6.பணப்பெட்டியில் பணம் வைக்கும் பொழுதும்,வங்கியில் பணம் செலுத்தும் பொழுதும் ஸ்ரீ மகாலட்சுமியை மனதார வணங்குவது பணவரவை அதிகரிக்கும்.

7.பணப்பெட்டி அழுக்கு அடையாமல் சுத்தமாகப் பராமரிக்கப்படவேண்டும்.

8.கடை அல்லது அலுவலகத்திற்கு "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் லக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச மம மந்திரே திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா ||" என்ற மந்திரம் ஜெபித்தபடியே தினம் ஊதுவத்தி அல்லது சாம்பிராணி தூபம் காண்பிக்க வேண்டும்.இல்லை என்றால் பணப்பெட்டிக்காவது தினமும் ஊதுவத்தி அல்லது சாம்பிராணி தூபம் காண்பிக்க வேண்டும்.

9.வெள்ளிக்கிழமை அன்று மாலை 5:30 முதல் 7:00 மணிக்குள் ஒரு செம்பில் கொஞ்சம் தண்ணீர் வைத்து சிறிது மஞ்சள் பொடி போட்டு வடக்கு முகம் நோக்கி அமர்ந்து "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் லக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச மம மந்திரே திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா ||" என்ற மந்திரம் ஜெபித்து அந்த நீரை கல்லா,பணப்பெட்டி,கடை அல்லது அலுவலக முகப்பு இவற்றில் தெளிக்கவும். வீட்டில் பணம் வைக்கும் பெட்டி,வீட்டின் முகப்பு இவற்றில் தெளிக்கவும்.

3 - 0

Rameswaram Agamudaiyar
Posted 2 years ago

அர்த்தநாரீஸ்வரரை வணங்கினால் கோடி புண்ணியம் கிட்டும்

திருவண்ணாமலை சென்று அர்த்தநாரீஸ்வரரை தரிசிக்க இயலாதவர்கள் மனதால் அர்த்தநாரீஸ்வரரை வணங்கினாலும் கோடி புண்ணியம் கிட்டும்.

சிவபெருமானின் வடிவங்களில் அர்த்தநாரீஸ்வர வடிவமும் முக்கியமான ஒன்றாகும். சிறந்த சிவபக்தரான பிருங்கி முனிவர் சக்திதேவியை வணங்காமல் சிவபெருமானை மட்டும் வணங்கி வந்தார். இதனால் கோபம் கொண்ட பராசக்தி பிருங்கிமுனிவரின் சக்தியை பறித்து விடுகிறார்.

உடலில் சக்தி இல்லாமல் பிருங்கி முனிவர் துவண்டு போனார். இதை கண்ட சிவபெருமான் சிவனும் சக்தியும் ஒன்றே என்பதை இவர்கள் மூலமாக உணர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் சக்திதேவியை விட்டு பிரிந்தார் ஈசன்.

சிவபக்தரை சோதித்துவிட்டோமே என வருந்திய சக்திதேவி தன் தவறை உணர்ந்து சிவலிங்கமே மலையாக இருக்கும் திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் சென்று தவம் செய்தார். தவத்தை ஏற்ற சிவபெருமான் சக்திதேவிக்கு காட்சி தந்து தனது இடதுபாகத்தில் ஏற்று அர்த்தநாரீஸ்வரராக காட்சி கொடுத்தார்.

ஆகவே கார்த்திகை தீபத்தன்று சிவபெருமான் அர்த்தநாரீஸ்வராக வலம் வருவார். இந்த நாளில் அர்த்தநாரீஸ்வரரின் தரிசனத்தை கண்டால் கோடி புண்ணியம் கிட்டும். திருவண்ணாமலை சென்று அர்த்தநாரீஸ்வரரை தரிசிக்க இயலாதவர்கள் மனதால் அர்த்தநாரீஸ்வரரை வணங்கினாலும் கோடி புண்ணியம் கிட்டும்.

திருச்சிற்றம்பலம்.

3 - 0

Rameswaram Agamudaiyar
Posted 2 years ago

சிவமயம் சிவாய நம 🙏🌺🙏

நமக்கு இரண்டு வகையான பிரச்சினைகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும் ஒன்று நம்மால் தீர்க்கக்கூடிய பிரச்சனை இரண்டாவது நம்மால் தீர்க்கவே முடியாத பிரச்சனை.

பெரும்பாலானோர் நம்மால் தீர்க்கவே முடியாத பிரச்சினையை இறைவனிடம் ஒப்படைக்கின்றனர் அவ்விதமாக ஒப்படைக்கப்படும் பொழுது சில நேரங்களில் அந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்டு விடும் கர்மவினை ஆனது மிகவும் வலிமையாக இருந்தால் தீர்க்கமுடியாத பிரச்சினையை இறைவனாலும் தீர்க்க முடியாது.

அதற்காக இறைவனை குறை கூறிவிட முடியாது நாம் முற்பிறவியில் செய்ததற்குத்தான் இப்பிறவியில் அனுபவிக்கும் துயர் என்பதை புரிந்து கொண்டாலே போதுமானதாகும் ஆண்டவனால் பொருளையும் சரி, உயிரையும் சரி மிகவும் துல்லியமாகத் திட்டமிட்டு படைத்த ஒன்று. அவ்வாறு இருக்கும் போது நாம் எதற்கும் கவலைப்பட்டு பிரயோஜனம் இல்லை தீர்க்கவே முடியாத பிரச்சனையை இறைவனிடமும் காலத்திடமும் ஒப்படைத்து விட்டு மீதி வேலையை பார்ப்பது தான் நலம் பயக்கும்.

தீர்க்கவே முடியாத பிரச்சனைகளால் நாம் துன்பத்தை அனுபவிக்கிறோம் என்றால் நம்முடைய கர்ம வினை பெரும்பகுதியாக அழிந்து வருகிறது என்றே பொருளாகும் நம் கர்மா அழிவது நம் நன்மைக்கு தானே தவிர தீமையானது ஒன்றும் இல்லை அல்லவா? ஆகையால் நமக்கு பிரச்சினை என்று எதுவும் இல்லை என்பதை புரிந்து கொள்வோம் எல்லாம் வல்ல இறைவன் அளித்த வாழ்க்கையில் அவன் திருவடியே நம் எண்ணம் என்று வாழ்வோம்.

திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

சிவ ஓம் நமசிவாய 🙏🌺🙏

1 - 0

Rameswaram Agamudaiyar
Posted 2 years ago

786 எண்ணின் பண ஈர்ப்பு ரகசியம்

7- கேது- தடைகள்
8-சனி - பிரார்ப்த கர்மம்
6-சுக்கிரன் - செல்வ வளம்

786=கேது+சனி+சுக்கிரன்= பிரார்ப்த பலனாக செல்வ வளத்தை தங்கு தடையின்றி அனுபவித்தல்.

இந்த எண்ணை பயன்படுத்துவதால் வாழ்க்கையில் உள்ள அனைத்து தடைகளும் நீங்கி செல்வ வளம் பெற்று சிறப்பான வாழ்வு அமையும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

நமக்கு கிடைக்கக்கூடிய ரூபாய் தாளில்,மேல் பக்கமாக உள்ள 6 இலக்க எண்ணில் முதல் மூன்று எண்கள் 786ஆகவோ அல்லது கடைசி மூன்று எண்கள் 786 ஆகவோ இருந்தால், அந்த ரூபாய் தாள் மிகவும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

எந்த ருபாய் தாள் கையில் கிடைத்தாலும்,அதில் 786 என்ற எண் கண்டறியப்பட்டால்,அந்த தாளில் நான்கு பக்கமும்,புனுகு கொண்டு தடவி,நடுவில் ஓம் என சிம்பல் போடுங்க.....

நாட்டு மருந்துக்கடையில் புனுகு கிடைக்கும்....(வசியம் மிக்கது )

மேலும், இந்த தாளை நம் வீட்டில் பணம் வைக்கும் இடத்திலோ அல்லது மணி பர்சிலோ வைத்துக்கொள்ளலாம்.

இவ்வாறு செய்தால்,என்றுமே உங்களிடம் செல்வம் பெருகி கொண்டே செல்லுமே தவிர, குறையவே குறையாது.

அதுமட்டுமில்லாமல்,786 என்பது கேது சனி சுக்கிரன் கலந்த கலவையாகும்.எனவே எப்போதும் மேலோங்கிதான் வைத்திருக்கும்

கார் வாகனம்,பணம் எதுவாக இருந்தாலும், 786 வந்தால் பெரிய அதிர்ஷ்டம் தான்.

லக்ஷ லக்ஷ பிரேத லட்சோய வயஸ்து...

லக்க பிரிய லாஸ் பிரிய ...லாஸ் ஷபதோர்.

லாபருல விருஸ்தா......

என்ற மந்திரத்தை,வடக்கு பார்த்து உட்கார்ந்து, 108 முறை வியாழக்கிழமை அன்று சொல்லி 786 எண்ணுள்ள பணத்தை பூஜித்து வர,பணம் கொட்டோ கொட்டோனு கொட்டும் என பணவளக்கலை தெரிவித்து உள்ளது

மந்திரம் சொல்லும் போது, கையில் 786 எண்ணுள்ள அதிர்ஷ்ட ரூபாய் தாளை வைத்துக் கொள்ள வேண்டும்.

அந்த தாளின் நடுவில் மல்லிகை பூவை வைத்து மடித்து உள்ளங்கையில் வைத்தவாறே
மேற்கண்ட மந்திரத்தை சொல்லி
வர வேண்டும் என்பது
குறிப்பிடத்தக்கது.

786 எண் கொண்ட ரூபாய்தாளை நீங்கள் வேறு யாரிடம் இருந்தும் இலவசமாகவோ,பணம் கொடுத்து பெறக்கூடாது.

உங்கள் கையில் கிடைக்கக்கூடிய பணத்தில் 786 நம்பர் இருந்தால் தான் அந்த அதிர்ஷ்டம் உங்களை தேடி வந்ததாக கருதப்படும்.

எனவே உங்கள் கையில் உள்ள ரூபாய் தாளில் 786 என்ற எண் உள்ளதா என்பதை கிடைக்கும்
வரை ஆவலாக தேடுங்கள்.

இந்த விவரத்தை பணவள கலை சொல்கிறது.

1 - 0

Rameswaram Agamudaiyar
Posted 2 years ago

🔥🔥🔥🔰🔰🔰

6 - 0