தமக்கான உணவையும் உணவுப் பொருட்களையும் தாமே தயாரித்து தற்சார்புடன் வாழ்வதற்காக ஒருவன் (நான்) எந்த மாதிரியான முயற்சிகள் எல்லாம் எடுக்கிறேன் அப்படின்னு என்னோட அனுபவங்களை உங்ககிட்ட பகிர்ந்துக்க விரும்புறேன். ஒரு விவசாயி என்பவன் யாரென்று பார்த்தீர்களானால் தன்னுடைய வாழ்வியலையும் தன்னைச் சுற்றியுள்ள உயிரினங்களின் (அதாவது ஆடு மாடு கோழி செடி கொடி மரம் தாவரங்கள்)வாழ்வியலையும் புரிந்துகொண்டு அவற்றிலிருந்து கிடைக்கும் நன்மை மற்றும் தீமை மருத்துவ பயன்களை முழுமையாக அறிந்து பயன்படுத்தி கொள்வது மட்டுமல்லாமல் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பவனே ஒரு முழுமையான விவசாயி
நான் விவசாயியாக உருவெடுக்க ஒரு பெரிய முயற்சி இது
நமக்கு நாமே மிகப்பெரிய மருத்துவர்
நம்மைச் சுற்றியுள்ள பொருட்களை முழுமையாக பயன்படுத்த
தெரிந்து கொண்டால் அவையே மருந்துகள்
நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்....