வணக்கம், நாங்கள் வாசிப்பில் ஆர்வமுள்ள சென்னை வாழ் நண்பர்கள் ஒன்றிணைந்து ‘வாசகசாலை’ என்ற பெயரில் இலக்கிய அமைப்பு ஒன்றை, முழுக்க முழுக்க தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமேயான ஓர் அமைப்பாக கடந்த ஏழு வருடங்களுக்கும் மேலாக நடத்தி வருகிறோம். எங்கள் அமைப்பு சார்பாக மாதாந்திர இலக்கிய நிகழ்வுகள், முழுநாள் இலக்கிய அரங்குகள், திரைப்பட கலந்தாய்வு அரங்குகள் மற்றும் பல்வேறு வகையான கூட்டங்களை டிசம்பர் – 2014-ல் இருந்து சென்னையில் தொடர்ச்சியாக நடத்தி வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்படும் படைப்புகளுக்கும் , எழுத்தாளர்களுக்கும் வாசகசாலை முப்பெரும் விழாவில் விருது வழங்கி சிறப்பிக்கிறோம். அதோடு வாசகசாலை பதிப்பகமாக செயல்படுகிறது. பிரபலமான எழுத்தாளர்களின் படைப்புகளோடு புதிய படைப்பாளிகளின் நூல்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறோம்.