Channel Avatar

sivaya nama @UCgpmtQTJ5REXJOlLw3AhDoA@youtube.com

172K subscribers - no pronouns :c

சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்ல


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

sivaya nama
Posted 4 days ago

சுக்கிரன் லக்னதில் இருந்தாலோ அல்லது ரிஷபம் துலாதில் ராசி / லக்னதில் நீங்கள் பிறந்தாலும் இந்த பொது பலன் உங்களுக்கு 90% பொருந்தும்.

1. கலையான முகம் தன்னை அழகாகவும் எதிலும் முதன்மை படுத்தி காமித்து கொள்ள கூடியவர்கள். நல்ல ரசனையாளர்கள்.

2. இயல் இசை நாடகம் இதில் ஏதாவது ஒன்றில் ஆர்வம் இருக்கும் சுக்கிரன் வலு ஏற்ப. அல்லது இசை கேட்பதிலோ அல்லது சினிமா பார்மதிலோ ஆர்வம் அதிகம் இருக்கும்
மீடியா மீது ஆர்வம் இருக்கும்.

3. ஆசை அதிகம் கொண்டவர்கள். ஆடம்பர செலவு பிரியர்கள் ( 12 ஆம் வீடு மற்றும் அதன் அதிபதி பார்க்க வேண்டும்) .

4. அனைவரையும் சமமாக பார்க்கும் குணம் மற்றும் பாத்திரம் அறிந்து பிச்சை இடு இது இவர்களுக்கு பொருந்தும்.
பெண்களால் ஏற்றம் உண்டு. நல்ல சுகவாசி இவர்கள். உட்கார்ந்து இடத்தில் இருந்தே எல்லா காரியத்தையும் சாதிப் பவர்கள்.

5. எளிதில் அனைவரிடமும் பழகும் இயல்பு கொண்டவர்கள்

6. குடும்பதிற்கு முக்கியதுவம் தருபவர்கள், அம்மா மீது அதீத பாசத்தை கொண்டிருப்பார்கள்.

7. இவர்களிடம் பணம் எப்போதும் தங்கும்

8. எதிலும் வித்தியாசமான எண்ணங்கள் வித்தியாசமாக யோசிக்க கூடியவர்கள் இவர்கள்.

9. உண்மையான அன்புக்கும் பாசதிற்கும் இவர்கள் அடிமை

10. காதல் காமம் இரண்டும் கலந்தவர்கள். காதல் வசபடும் நபர்களும் கூட.

இதில் உங்களுக்கு எத்தனை பொருந்தி வருகிறது என Comment செய்யுங்கள் நன்றி

இப்படிக்கு உங்கள்
ஓம் பிரகாஷ் (பாரம்பரிய ஜோதிடன்)

#jothidam #astrology #destiny #starsaligning #futureinsight #astrologypredictions #divineguidance #astrologer #horoscope #zodiacsigns #Hereditaryastrologer #omprakashg_astrology7 #Numerology #onlinejathagam #Marriagecompatibility #counseling #lovemarriage #doubt

9 - 0

sivaya nama
Posted 6 days ago

வேற்று மதம் ,சாதி, மொழி சார்ந்த கலப்பு திருமணம் யாருக்கு நடக்கும்

முதலில் ஒரு ஜாதகதில் திருமணம் அதாவது களத்திர பாவம் 7 ஆம் பாவம்.

சனி ராகு கேது மற்றும் இவர்களின் தொடர்பு பெற்ற சுக்கிரன் இவர்கள் தன் இனத்தைச் சாராத வேற்று மதம் மொழி சாதி சார்ந்த திருமணம் செய்ய வைக்கும் கிரகங்கள்.

நீங்கள் பிறந்த லக்னதில் இருந்து 7 ஆம் இடத்திலோ அல்லது 7 ஆம் அதிபதிக்கோ சனி ,ராகு ,கேது இவர்களில் யாராவது அமரும் போதோ அல்லது சுக்கிரன் இவர்களுடன் சேர்ந்தோ அல்லது ஏதோ ஒரு வருகையில் பார்வை மூலமாகவோ அல்லது சேர்க்கை மூலமாகவோ தொடர்பு கொள்ளும் போது வேற்று மதம் , சாதி மொழி போன்ற கலப்பு திருமணம் நடக்கும்.

அடுத்து இந்த கிரகங்களின் தசா குறிப்பாக பருவ வயதான 18 வயதிற்கு மேல் வர வேண்டும்.
7 ஆம் வீட்டோடு அல்லது 7 ஆம் அதிபதி யுடனோ அல்லது சுக்கிரன் உடன் தொடர்பு பெற்று இவர்களின் தசா பருவ வயதில் வரும் போது அவர்கள் இந்த வகையில் நிச்சயம் திருமணம் செய்து கொள்வார்கள்.

எனக்கு 7 ல் ராகு நான் இப்படி திருமணம் செய்து கொள்ள வில்லையே என்று சிலர் யோசிக்கலாம் காரணம் உங்களுக்கு காதல் திருமணம் அமைப்பு இல்லாமல் இருக்கும் மேலும் இந்த கிரகங்களின் தசா வராமல் வேறு கிரகங்களின் தசா பருவ வயதில் நடந்து இருக்கும் அதனால் திருமணம் கலப்பு திருமணம் நடந்து இருக்காது. முறையான திருமணம் நடந்து இருக்கும்.

நான் எப்போதும் கூறுவது இது தான் ஒரு ஜாதகதில் எந்த ஒரு யோக அமைப்பு அல்லது தோஷ அமைப்பு இருந்தாலும் தசா வர வேண்டும் அதனால் தான் நான் கூறுகிறேன் பருவ வயதில் இந்த கிரகங்களின் தசா வந்தால் மட்டுமே இப்படி பட்ட காதல் திருமணம் நடக்கும்.

ஜோதிடம் என்பது கடல் இதில் ஒரு விதி இருந்தால் அதற்கு மாற்று விதி இன்னொன்று இருக்கும்.பொத்தம் பொதுவாக உனக்கு 7 ல் ராகு நீ வேறு மதம் அல்லது இனம் சார்ந்த ஆண்/ பெண் திருமணம் செய்வாய் என்று கூற கூடாது. ராகுவிற்கு வீடு கொடுத்தவர் நன்றாக இருந்து குரு பார்க்க அல்லது ராகுவே குரு பார்வையில் இருக்கும் போது இங்கே முறையான திருமணம் நடக்கும்.

இதே ராகு விற்கு வீடு கொடுத்தவர் பலம் இழந்து அவருக்கு சனி கேது தொடர்பு பெற்றோ அல்லது ராகுவே சுக்கிரனின் தொடர்பு பெற்றோ இருக்க இவர்கள் வேற்று இனம் மதம் சாதி சார்ந்த திருமணம் செய்து கொள்வார்கள்

அடுத்து ஏழரை அல்லது அஷ்டம சனி நடக்கும் காலகட்டத்தில் இந்த பலன் சற்று தூக்கலாக வேலை செய்யும். ஏனெனில் மனம் தெளிவாக இருக்காது மன தடுமாற்றம் ஏற்பட்டு காதலில் விழ வைத்து இப்படி பட்ட திருமணம் அமைப்பு கிரகங்கள் தருகின்றன.

நன்றி!

இப்படிக்கு உங்கள்

ஓம் பிரகாஷ் ( பாரம்பரிய ஜோதிடன்)

#jothidam #astrology #destiny #starsaligning #futureinsight #astrologypredictions #divineguidance #astrologer #horoscope #zodiacsigns #Hereditaryastrologer #omprakashg_astrology7 #sivayanam #Numerology #onlinejathagam #Marriagecompatibility #counseling #lovemarriage #doubt #trending #viral #Yt #viralmemes

6 - 1

sivaya nama
Posted 1 week ago

தசா புக்தி தரும் திருமணம் தடை
45 வயது ஆகியும் திருமணம் ஆகாத நிலை

ஆண் ஜாதகம்
21.10.1979
4.29 Pm
Madurai

இந்த ஜாதகரிடம் நல்ல படிப்பு நல்ல உத்யோகம் உள்ளது ஆனால் திருமணம் இன்னும் ஆகவில்லை பல இடங்களில் பெண் பார்த்தும் கடைசி நேரத்தில் பெண் வீட்டார் வேண்டாம் என்று விலகி விடுகின்றனர் ஏன் என்று பார்ப்போம் வாருங்கள்


பதில் :


மீன லக்னம் துலாம் ராசி - சுவாதி நட்சத்திரம் பிறக்கும் போதே ராகு தசா இவருக்கு.

இந்த ஜாதகத்தில் நன்றாக பார்த்தால் லக்னாதிபதி 5 மற்றும் 9 ஆம் அதிபதிகள் அனைவரும் பலம் இழந்து 6,8 ல் மறைவு பெற்று உள்ளனர். முதலில் 2 ஆம் அதிபதி செவ்வாய் 5 ல் நீசம் பெற வீடு கொடுத்த 5 ஆம் அதிபதி சந்திரன் 8 ல் மறைந்து அமாவாசை நிலையில் இந்த லக்னத்திற்கு 6 மற்றும் 8 ஆம் அதிபதியான சுக்கிரன் மற்றும் சூரியன் உடன் இணைந்து உள்ளார் மேலும் 7 ஆம் அதிபதி புதன் 8 ல் மறைய ( லக்னத்திற்கு 2 ஆம் அதிபதி நீசம், 7 உடையவர் 8 ல் மறைவு அதேபோல் ராசிக்கு 2,7 ஆம் அதிபதி செவ்வாய் நீசம் )


அடுத்து களத்திர காரகன் சுக்கிரன் 8 ல் மறந்து சனி செவ்வாய் இருவரின் பார்வையில் 7 ஆம் அதிபதி புதன் மற்றும் 5 ஆம் அதிபதி சந்திரன் உள்ளது சிறப்பு இல்லை இவருக்கு திருமணம் ஆக வாய்ப்பு மிக குறைவு. இப்படி பட்ட ஜாதக அமைப்பு உள்ள போது திருமணம் ஆகாமல் இருப்பதே நல்லது இல்லை யென்றால் திருமணம் வாழ்க்கை கொடுத்து பிரிவு பிரச்சினை போராட்டம் கொடுத்து இருக்கும்.

மேலும் லக்னாதிபதி 6 ல் மறைவு பெற்று பிறந்ததில் இருந்தே ராகு குரு சனி தசைகள் வந்ததால் திருமணம் வாழகையே தரவில்லை

இவருக்கு செவ்வாய் அல்லது புதன் தசா நடுத்தர வயதில் வந்து இருந்தால் திருமணம் வாழ்க்கை கொடுத்து பிரவு கொடுத்து இருக்கும்

அதனால் தசா புக்தி யும் முக்கியமான ஒன்று.
நான் எப்போதும் கூறுவது இது தான் ஒரு ஜாதகதில் எல்லா கிரகங்களும் பலம் பெறவேண்டும் என்ற அவசியம் இல்லை. 2 அல்லது 3 கிரகம் நன்றாக இருந்து அதன் தசா சரியான வயதில் வந்தால் அந்த ஜாதகனுக்கு அனைத்தும் கிடைக்கும்

நன்றி!

இப்படிக்கு உங்கள்,

ஓம் பிரகாஷ் ( பாரம்பரிய ஜோதிடன்)

#jothidam #astrology #destiny #starsaligning #futureinsight #astrologypredictions #divineguidance #astrologer #horoscope #zodiacsigns #Hereditaryastrologer #omprakashg_astrology7 #Numerology #onlinejathagam #Marriagecompatibility #counseling #lovemarriage #doubt

6 - 0

sivaya nama
Posted 2 weeks ago

தனுசு குரு - மீன குரு

இந்த பதிவில் தனுவில் குரு இருப்பதற்கும் மீனதில் குரு தனித்து இருப்பதற்கு என்ன வித்தியாசம் என பார்க்க போகிறோம்

தனுசு குரு - தனுசு வீடு கால புருஷனுக்கு 9 ஆம் ராசி தர்ம ராசி என்று கூறுவோம். கோவிலை குறிக்கும் இடம் கடவுள் சார்ந்த அனைத்தும் இங்கு உள்ளது. இந்த பலன்கள் குரு தனித்து இருந்தால் மட்டுமே பொருந்தும்
மேலும் தனுசு குருவிற்கு ஆட்சி மற்றும் மூல திரிகோண
வீடு இங்கே குரு இருந்தால் ஜாதகன்
தர்ம வான், நீதி நெறி தவறாத தன்மை தரும். எதையும் நேர்மையான வழியில் பெற வைக்கும். ஜாதகர் வாழ்க்கையில் தனக்கென்று வழிமுறை வகுத்து செயல்படுவார். நல்ல ஆசான் நல்ல வழிகாட்டியாக இருப்பார்கள் இவர்கள் மேலும் Rules and regulations மீறாதவர்கள். நல்ல மனிதர் என்ற பெயர் சமுதாயத்தில் உயர்ந்த மனிதர் என்ற தன்மை. ஒழுக்கம் கட்டுபாட்டு சாஸ்திரம் இவற்றிற்கு முக்கியதுவம் தருவார்கள்

மீன குரு - மீனம் கால புருஷனுக்கு 12 ஆம் ராசி இங்கே குரு ஆட்சி பலத்தை மட்டுமே பெருவார் இங்கே குரு இருந்தால் ஜாதகருக்கு
பருத்த உடல் உணவு பிரியர்கள் சுகவாசி நல்ல சாப்டனும் நல்ல தூங்கனும் சந்தோஷமா இருக்கனும் இந்த சிந்தனை இவர்களுக்கு மேலோங்கி இருக்கும். இவர்கள் கழுவற மீனில் நழுவிற மீன் போன்றவர்கள் ஏனெனில் இது பெண் ராசி இங்கே இருக்கும் குரு தைரியமாக எதிர்க்க மாட்டார் இடத்திற்கு ஏற்ப வலைந்து கொடுத்து போவார்கள் இவர்கள். இரட்டை மனோபாவம் கொண்டவர்கள். நிறைய பேருக்கு இவர்கள் ஆலோசனை சொல்வார்கள் ஆனால் இவர்கள் பின்பற்ற மாட்டார்கள் மீன குரு சோம்பல் தன்மை சற்று அதிகம் தரும். தன் சுக விரும்பி . இங்கே உள்ள குரு தனுசு குரு போல இல்லாமல் மாறுபட்டு செயல்படுவார்.

உங்களுக்கு எந்த பதிவு பற்றி பேச வேண்டும் என்று Comments செய்யுங்கள் அதை பற்றியும் பேசுகிறேன்
நன்றி

இப்படிக்கு உங்கள்
ஓம் பிரகாஷ்( பாரம்பரிய ஜோதிடன்)

#jothidam #astrology #destiny #starsaligning #futureinsight #astrologypredictions #divineguidance #astrologer #horoscope #zodiacsigns #Hereditaryastrologer #omprakashg_astrology7 #sriNandi #Numerology #onlinejathagam #Marriagecompatibility #counseling #lovemarriage #doubt

19 - 1

sivaya nama
Posted 2 weeks ago

ராகு குரு சேர்க்கை

ஆறில் குரு ஊரில் பகை என்று சொல்லுவார்கள் இதோ இந்த ஜாதகம் உதாரணம் ஆண் ஜாதகம் தற்போது வயது 30 இவருக்கு திருமணம் ஆகி விட்டது. தற்போது 2019ஆம் ஆண்டு முதல் குரு தசா நடக்கின்றது. குரு தசா ஆரம்பத்தில் இருந்தே ஜாதகருக்கு பிரச்சனை ஆரம்பித்து விட்டது. முதலில் குரு தசா குரு புக்தியில் பெரிய விபத்து ஏற்பட்டு உயிர் பிழைப்பாதார மாட்டாரா என்ற நிலைக்கு சென்று பின்னர் தப்பித்து வெளியே வந்தார் அடுத்து குரு தசா சனி புக்தியில் திருமணம் நடந்தது ஆனால் அதே சமயம் இவரின் உறவினர் பேச்சை கேட்டு புதிதாக வீடும் வாங்கியதால் பெரிய கடனில் சிக்கினார் ஜாதகம் மாதம் ஒன்றரை லட்சம் கடனுக்கு செல்கிறது. மேலும் இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை.

ஏன் இந்த நிலை இவருக்கு
காரணம் :

முதலில் இவர் மகர ராசி ரிஷப லக்னம் ராசி லக்னம் இரண்டிற்கும் குரு கெட்டவர் மேலும் லக்ன திற்கு 6ல் ராகு குரு சுக்கிரன் சேர்க்கை சிறப்பு இல்லாத சேர்க்கை

இங்கே சுக்கிரன் ஆறாம் அதிபதியாக தான் முதலில் வேலை செய்வார் அந்த வகையில் குரு 6ல் ஆறாம் அதிபதி உடன் சேர்த்தால் உடன் ராகு இருப்பதால் குரு தசா ஆரம்பித்து உடனே வாகன விபத்து கொடுத்தார்( சுக்கிரன் வாகன காரகன்)

ஆனாலும் சுக்கிரன் லக்னாதிபதி அவர் ஆட்சி ஆக இருந்தால் விபத்தில் இருந்து கஷ்டபட்டு உயிர் தப்பினார் ஒரு ஜாதகதில் லக்னம் லக்னாதிபதி வலுவாக இருந்தால் விபத்தோ கடனோ எது வந்தாலும் அதை எதிர்த்து ஜாதகர் ஜெயித்து காட்டுவார்.

அடுத்து இந்த லக்ன திற்கு சனி முழு யோகாதிபதி அவர் 10ல் வக்ரம் ஆனாலும் குரு பார்க்க ராசிக்கு 2ல் இருப்பதால் திருமணம் கொடுத்தார் அதே சமயம் வீடு வாங்கவும் வைத்தார் வக்ரம் பெற்றதால் தற்போது புதன் புக்தியில் இருந்து கடனில் சிக்கி உள்ளார்

புதன் 5 ல் உச்சம் ஆனால் குரு 6 ல் ஆறாம் அதிபதி மற்றும் ராகு உடன் சேர்ந்து கெட்டு உள்ளார் வர கூடிய சம்பாதிக்க கூடிய பணம் எல்லாம் கடனுக்கே விரையம் ஆகிறது. இந்த குரு தசா முடியும் வரை இவரால் கடனில் இருந்து வெளி வர இயலாது. ஆனால் குழந்தை பாக்கியம் இவருக்கு இந்த புதன் புக்தியில் நிச்சயமாக கிடைக்கும்.
.

நன்றி இப்படிக்கு உங்கள்
ஓம் பிரகாஷ் ( பாரம்பரிய ஜோதிடன் )

#jothidam #astrology #destiny #starsaligning #futureinsight #astrologypredictions #divineguidance #astrologer #horoscope #zodiacsigns #Hereditaryastrologer #omprakashg_astrology7 #sriNandi #Numerology #onlinejathagam #Marriagecompatibility #counseling #lovemarriage #doubt

8 - 1

sivaya nama
Posted 2 weeks ago

அதிஷ்டத்தால் உயர்ந்த ஜாதகர்

ஆண் ஜாதகம் வயது 49 தற்போது இருவருக்கு குரு தசா நடக்கின்றது. இந்த ஜாதகர் சாதாரண குடும்பத்தில் பிறந்தார் இன்று பல கோடிக்கு அதிபதி எப்படி என்று பார்ப்போம் வாருங்கள்

பதில்:

மேஷம் ராசி கும்ப லக்னம் இந்த ஜாதகர் தற்போது மிக பெரிய கல்வி நிறுவனத்தின் உரிமையாளர் அதேபோல் இவர் பெயரில் கோடி கணக்கில் சொத்து உள்ளது. ஆரம்ப காலத்தில் இவர் ஒரு கல்லூரியில் பேராசியராக( Professor) பணிக்கு சேர்ந்தார் பின்னாலே இவரின் திறமை மற்றும் இவரின் குணம் காரணமாக அந்த கல்லூரியின் உரிமையாளருக்கு இவரை மிகவும் பிடித்துவிட்டது பிறகு அந்த கல்லூரியை இவருக்கு தானமாக கொடுத்து விட்டார் ஆனால் இந்த ஜாதகர் தானமாக பெற விரும்பவில்லை அதனால் அப்போது இவரிடம் இருந்த தொகையை கொடுத்து பிறகு கல்லூரியில் வரும் பணத்தை வைத்து 3 ஆண்டுகளில் கடுமையாக இவரும் இவரது மனைவியும் உழைத்து பாதி பணத்தை அடைத்தனர் கல்லூரியை நல்ல நிலமைக்கு கொண்டு வந்தனர்.

இவரின் உழைப்பை பார்த்த அந்த உரிமையாளர் இவர் கட்டிய தொகையோடு கூடுதலாக 10 கோடி கொடுத்து அந்த கல்லூரியை நன்றாக நடத்து அனைவருக்கும் கல்வியை கொடு என்று கூறி இவரது பெயரில் எழுதி கொடுத்து விட்டார் அந்த உரிமையாளர் இப்படியாக கல்லூரி இவர் பெயருக்கு வந்தது இன்று அந்த கல்லூரி இந்தியாவில் புகழ் பெற்ற கல்லூரியாக உள்ளது.

இந்த ஜாதகதில் கும்ப லக்னம் லக்னாதிபதியும், 5 ஆம் அதிபதியும் பரிவர்த்தனை மேலும் அதிஷ்டம் 5 ஆம் இடம் மற்றும் அதன் அதிபதி

அவர் இங்கே புதன் லக்னதில் திக் பலம் பெற்று அமர்ந்து உள்ளார்.

அடுத்து குரு தசா (2 மற்றும் 11ஆம் அதிபதி) கும்ப லக்ன திற்கு நல்ல இடத்தில் இருந்தால் மிக பெரிய பொருளாதார வளர்ச்சி தரும்

இங்கே குரு 2 ல் ஆட்சி பெற்று 7 ஆம் அதிபதி உடன் இணைந்து உள்ளார் மேலும் குரு 2 மற்றும் 10 ஆம் இட தொடர்பு பேராசிரியராக உள்ளார்
அதோடு லக்ன திற்கு 10 ல் ராகு மற்றும் ராசிக்கு 10 ல் செவ்வாய்( உச்சம்) அமர நல்ல நிர்வாக திறன் மற்றும் கல்லூரி உரிமையாளராக மாற்றியது. இந்த குரு தசா கணக்கே இல்லாமல் பணத்தை தரும்.

ஒரு ஜாதகதில் 1,5 அல்லது 9 அதிபதி வலுத்து 2 மற்றும் 10, 11 இடம் மற்றும் அதிபதி பலம் பெற்றால் அவர் குடிசையில் பிறந்தாலும் பிற்காலத்தில் சுய உழைப்பால் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வருவார்.

இப்படிக்கு உங்கள்
ஓம் பிரகாஷ் ( பாரம்பரிய ஜோதிடன்)

#jothidam #astrology #destiny #starsaligning #futureinsight #astrologypredictions #divineguidance #astrologer #horoscope #zodiacsigns #Hereditaryastrologer #omprakashg_astrology7 #sriNandi #Numerology #online

12 - 1

sivaya nama
Posted 3 weeks ago

எட்டாமிடத்து ராகு தரும் வளர்ச்சியும் வீழ்ச்சியும்

ஆண் ஜாதகம் வயது 36 திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர் இவர் மரம் சார்ந்த Furniture தொழில் செய்து வந்தார் ராகு தசா 21 வயதில் ஆரம்பம் இவர் 23 வயதில் வேற்று மத பெண்ணை திருமணம் செய்து கொண்டார் தற்போது அனைத்தும் இழந்து விட்டார். மனைவியும் இவரை விட்டு சென்று விட்டார்.மேலும் ராகு தசா முதல் 9 ஆண்டுகள் நல்ல வளர்ச்சி கொடுத்தது பிறகு இரண்டாம் பகுதியில் தற்போது அனைத்தையும் பிடுங்கி விட்டது ஏன் என்று பார்ப்போம்

பதில் :

கடக லக்னம் மகர ராசியில் பிறந்து உள்ளார்.
முதலில் வேற்று மத திருமணம் காரணம் ராகு தான் 20 அல்லது 25 வயதுகளில் ராகு தசா 2, 7அல்லது 8 ஆம் இடத்துடன் தொடர்பு கொண்டு சனி, செவ்வாய் அல்லது சுக்கிரன் தொடர்பு பெற்று தசா வரும் போது இப்படி பட்ட வேற்று மொழி மதம் சார்ந்த திருமணம் வாழ்க்கையை தரும். இவருக்கு 8 ல் சுக்கிர சனி தொடர்பு பெற்ற ராகு தசா

அடுத்த ராகு தசா முதல் 9 ஆண்டுகளில் குடும்ப வாழ்க்கையை தந்தது பொருளாதார ரீதியாக வளர்ச்சி தந்தது காரணம் ( ராகு தான் இருக்கும் வீட்டின் அதிபதி மற்றும் தன்னோடு சேர்ந்த அல்லது தன்னை பார்த்த அதோடு தனக்கு கேந்திர திரிகோணதில் இருக்கும் கிரகத்தின் பலனை ராகு செய்வார்)

இங்கே ராகுவிற்கு வீடு கொடுத்த சனி 6 ல் மறைந்து உள்ளார் 8 உடையவர் 6 ல் மறைவது சிறப்பு அதோடு சுக்கிரன் கடக லக்ன திற்கு 11 & 4 ஆம் வீட்டின் அதிபதி ( சுகாதிபதி ) அவர் 2 அமர்ந்து ராகுவை பார்க்க மிக சிறப்பு அதோடு ராகுவிற்கு கேந்திரதில் குரு சுக்கிரன் உள்ளனர் உன்னதமான அமைப்பு அடுத்து சனி 7,மற்றும் 8 ஆம் அதிபதியாகி அவர் 8ல் உள்ள ராகுவை பார்க்க வேற்று மத திருமணம் மற்றும் முதல் பகுதியில் நல்ல ஏற்றம் வளர்ச்சி தந்தது இரண்டாம் பகுதியில் 8 ஆம் இடத்து வேலையை அவர் செய்தார் அதோடு ராகு தசா இரண்டாம் பகுதியில் இவருக்கு ஏழரை சனி நடக்கின்றது குறிப்பாக ராகு தசா சூரிய புக்தியில் மனைவி பிரிந்து சென்று விட்டார் அதனால் தொழிலில் கவனம் செலுத்த முடியாமல் தொழில் நஷ்டம் கடன் ஏற்பட்டு தொழிலை மூடிவிட்டு சொந்த ஊரை விட்டு வேறு ஊருக்கு சென்று விட்டார் ஜாதகர் ( 8 ஆம் இடத்தில் சனி செவ்வாய் பார்வை வாங்கிய ராகு அசிங்கம் அவமானத்தையும் தருவார் ) இங்கே 8 இல் அமர்ந்து சனி பார்வை வாங்கியதாலும் அந்த சனி அவரே 7 ஆம் அதிபதியாக வருவதால் மனைவி வழியாக அனைத்தும் கொடுத்து கெடுத்தது. மேலும் ( 7 ஆம் அதிபதி சனி 6 ல் மறைவது சிறப்பு இல்லை குடும்பாதிபதி சூரியன் 2 ல் நீசம் பெறுவது சிறப்பு இல்லை. இப்படிப்பட்ட ஜாதகருக்கு திருமணம் வாழ்க்கை காலதாமதமாக அமைவது நல்லது இல்லை என்றால் இப்படி பட்ட திருமணம் வாழ்க்கை கொடுத்து பிரிவும் அதனால் வீழ்ச்சியும் கிரகங்கள் தரும். ஆனால் இவருக்கு அடுத்து வரும் குரு தசா நல்ல வளர்ச்சி ஏற்றமும் தரும்.

இப்படிக்கு உங்கள்
ஓம் பிரகாஷ் ( பாரம்பரிய ஜோதிடன்)

#jothidam #astrology #destiny #starsaligning #futureinsight #astrologypredictions #divineguidance #astrologer #horoscope #zodiacsigns #Hereditaryastrologer #omprakashg_astrology7 #sriNandi #Numerology #onlinejathagam #Marriagecompatibility #counseling #lovemarriage #doubt

16 - 4

sivaya nama
Posted 1 month ago

யோகம் தரும் ராகு தசா

ஆண் ஜாதகம் வயது 40 தற்போது இவருக்கு ராகு தசா செவ்வாய் புக்தி நடக்கின்றது.

ராகு தசா இவருக்கு நல்ல வளர்ச்சி கொடுத்தது இந்த ஜாதகத்தை நீங்கள் பார்த்தால் லக்ன திற்கு 7ல் சனி சூரியன் 5 ஆம் அதிபதி 8 வ் மறைவு புத்திரகாரகன் குரு ராகு உடன் உள்ளார் திருமணம் வாழ்க்கை பிரச்சனை மற்றும் குழந்தை அமைப்பு காலதாமதம் போல் தெரியும் ஆனால் இவருக்கு திருமணம் வாழ்க்கை நன்றாக உள்ளது 2 ஆண் குழந்தை உண்டு.

காரணம் என்ன என்று பார்ப்போம் வாருங்கள் ஜோதிடம் மிக நுணுக்கமான ஒன்று

பதில்:

மிதுன லக்னம் ரிஷப ராசி
இவருக்கு 22 வயதில் ராகு தசா ஆரம்பித்தது

அதாவது ராகு ஒரு வித்தியாசமான கிரகம் எப்படி பலன் தருவார் என்றால் தன்னுடன் இணைத்த அல்லது பார்த்த அல்லது வீடு கொடுத்தவனை அப்படியே ராகு பிரதிபலிப்பார்.

இங்கே ராகு லக்ன திற்கு 10 ல் குரு உடன் ( 7 ஆம் அதிபதி குரு உடன் இணைந்து உள்ளார்)
ராகு தசா ஆரம்பித்த உடன் திருமணம் நடந்தது .

அடுத்து 2 ஆண் குழந்தை பிறந்தது அடுத்து சுய தொழில் ஆரம்பித்து அதில் இன்று வரை நல்ல வளர்ச்சி பார்த்து கொண்டு உள்ளார் இந்த ஜாதகர்.

ஆண் வாரிசு எப்படி கிடைத்தது என்றால் குரு புத்திரகாரகன் அவருடன் இணைந்த ராகு ஆண் வாரிசு தருவார் மேலும் சிறப்பான ஏற்றம் ராகு தந்தார்

இங்கே ராகு குருவின் பலன்களை முழுவதும் கவர்ந்து கொடுப்பார். ( ஆனால் குரு தசா இவருக்கு சிறப்பு இல்லை ஏனெனில் குரு கெட்டு ராகு நன்மை தரும் ஜாதகம் இது) மேலும் ஒரு ஜாதகதில் 7 ஆம் இடம் கெட்டாலும் 5 ஆம் இடம் கெட்டாலும் 20 முதல் 40 வயதிற்குள் ஒன்று அல்லது இரண்டு கிரகம் வலுவாகி அதன் தசா சரியான வயதில் வந்தால் அவருக்கு அந்த வயதில் கிடைக்க வேண்டிய எல்லாம் கிடைக்கும் நண்பர்களே

தசா புக்தி யே ஒரு மனிதனின் வாழ்க்கையை தீர்மானம் செய்யும். நான் எப்போதும் கூறுவது இதுவே 9 கிரகங்களும் வலிமையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை 1 அல்லது 2 கிரகம் இது போல வலு பெற்று அதன் தசா சரியான வயதில் வந்தால் அந்த ஜாதகர் கொடுத்து வைத்தவரே

இப்படிக்கு உங்கள்
ஓம் பிரகாஷ் ( பாரம்பரிய ஜோதிடன் )

16 - 0

sivaya nama
Posted 1 month ago

மது மற்றும் புகை பழக்கம் எப்போது நீங்கும் ;

ஆண் ஜாதகம் வயது 36 இவர் தன்னுடைய 21 வது வயதில் இருந்து புகைபழக்கதிற்கும் மதுவிற்கும் அடிமை ஆகி விட்டார் இன்று வரை தொடர்ந்து கொண்டு உள்ளார் ஏன் இந்த நிலை எப்போது இதில் இருந்து வெளியே வருவார் என்று பார்ப்போம் வாருங்கள்

பதில் :

கன்னி லக்னம் மிதுனம் ராசி 2009 முதல் 20 வயதில் இருந்து சனி தசா இவருக்கு

ஏன் புகைபழக்கம் மற்றும் மது பழக்கம் வந்தது முதலில் லக்னம் மற்றும் லக்ன திற்கு 2 ஆம் இடம் மற்றும் அதன் அதிபதி மற்றும் 4 ஆம் இடம் கெட்டு இரண்டாம் வீட்டிற்கு அல்லது அதன் அதிபதிக்கோ செவ்வாய் சூரியன் சனி தொடர்பு கிடைக்கும் போது அவர்கள் இது போன்ற பழத்திற்கு அடிமை ஆகின்றனர்.

(இதில் 4 ஆம் இடம் சுக ஸ்தானம் நாம் எத்தகைய சுகத்தை விரும்புவோம் எத்த என்பதை கூறும் இடம். 2 ஆம் இடம் உணவு ஸ்தானம்)

இங்கே கன்னி லக்னம் லக்ன திற்கு 2 ஆம் அதிபதி சுக்கிரன் 10 ல் சந்திரன் உடன் இணைந்து சனி செவ்வாய் இருவருடைய தொடர்பும் பெற லக்ன த்தையும் சனி செவ்வாய் இருவரும் தொடர்பு கொள்ள 2 ஆம் வீட்டை செவ்வாய் தன் 8 ஆம் பார்வையால் பார்க்க

சனி லக்ன திற்கு 4 ல் அமர்ந்து அவரின் தசா நடப்பில் உள்ளது மேலும் மனோகரன் சந்திரன் கெட்டு உள்ளார் அதனால் மன கட்டுப்பாடு இருக்காது .

அதோடு இந்த சனி தசா முடியும் வரை இவர் இந்த பழக்கதில் இருந்து வெளியே வர மாட்டார் 2028 வரை சனி தசா உள்ளது அதன் பிறகே இவர் இந்த பழக்கதில் இருந்து வெளியே வருவார்.

நன்றி இப்படிக்கு உங்கள்
ஓம் பிரகாஷ் ( பாரம்பரிய ஜோதிடன்)

7 - 0

sivaya nama
Posted 1 month ago

42 வயதில் திருமணம் 44 வயதில் தந்தை ஆகும் அமைப்பு :

ஆண் ஜாதகம் வயது 45 இவருக்கு காலதாமதமான திருமணம் மற்றும் குழந்தை அமைப்பு கிடைத்தது என்ன காரணம் என்று பார்ப்போம் வாருங்கள்

பதில் :

கன்னி ராசி துலாம் லக்னம் தற்போது இவருக்கு சனி தசா நடக்கின்றது. ஏன் இவருக்கு 42 வயதில் காலதாமதமாக திருமணம் நடந்தது என்று முதலில் பார்ப்போம்

ஜாதகதில் காலதாமதமாக திருமணம் ஆக வேண்டும் என்றால் லக்னம் மற்றும் ராசிக்கு 2 மற்றும் 7 ல் பாபர்கள் தொடர்பு அல்லது 2 அல்லது 7 ஆம் அதிபதிகள் பலம் இழந்து இருப்பார்கள் மேலும் சுக்கிரனும் பாதிக்கப்பட்டு இருப்பார்

அதோடு திருமணம் வயது என்று சொல்ல கூடிய 22 முதல் 35 இந்த காலகட்டத்தில் சாதகமற்ற தசா புக்தி நடக்கும் .

இவருக்கு துலாம் லக்னம் லக்னதிலே சுக்கிரன் சூரியன் மற்றும் சனி பார்க்க சுக்கிரன் கெட்டு உ உள்ளார் அடுத்து துலாம் லக்னதிற்கு 2 மற்றும் 7 ஆம் வீட்டிற்கு அதிபதி செவ்வாய் அவர் நீசம் ஆனால் திக் பலம் மேலும் சந்திரனுக்கு 7 ல் கேது அதோடு 20 வயது முதல் 40 வயது வரை ராகு மற்றும் குரு தசா நடந்து உள்ளது இது தான் காலதாமதம் திருமணம் நடக்க காரணம்.

அடுத்து 41 வயதில் இருந்து இவருக்கு சனி தசா ஆரம்பம் சனி இந்த லக்ன திற்கு முதல் தர யோகாதிபதி 5 ஆம் அதிபதி தன் வீட்டை பார்த்து பல படுத்துகிறார்.

அதனால் 42 வயதில் சனி தசா சுய புக்தியில் திருமணம் நடந்தது. 44 வயதில் சனி தசா புதன் புக்தியில் குழந்தை பாக்கியம் கிடைத்தது.

மேலும் ஒரு ஜாதகதில் குழந்தை எப்போது பிறக்கும் என்று நீங்கள் கணித்து விட்டால் திருமணம் காலகட்டம் எளிதாக கூறி விட முடியும்

இப்படிக்கு உங்கள்
ஓம் பிரகாஷ் ( பாரம்பரிய ஜோதிடன்)

#jothidam #astrology #destiny #starsaligning #futureinsight #astrologypredictions #divineguidance #astrologer #horoscope #zodiacsigns #Hereditaryastrologer #omprakashg_astrology7 #sriNandi #Numerology #onlinejathagam
#Marriagecompatibility #counseling #lovemarriage #doubt

8 - 0