🌹 ஓம் சாய் ராம் 🌹
எல்லாம் தந்த அந்த பிரம்மானந்த சாய்க்கு அவரின் அருளால், அவரால் துவங்கப்பட்டது தான் இந்த சாய் சரித்திரம் என்ற சேனல். இது நம்மால் செய்ய முடியுமா? என்ற கேள்விக்கு, நான் அல்லவா செய்கிறேன் என்பதே அவரின் பதில். தொடங்கினேன், தொடங்கியது மட்டுமே தெரியும். முடித்தது அவரால் மட்டுமே. ஒவ்வொரு எழுத்து படிக்கும் போதும் வான் முட்டிய வெள்ளம் போல என் கண்கள் முட்டி கண்ணீர் வந்தது சத்தியம். அத்தியாயம் படிக்கும் போது எழுத்துக்களை மறைய செய்த எனது கண்ணீர் அதற்கு சாட்சி. பல இடங்களில் அழுது எனது குரலே மாறிப் போய் உள்ளது. அது சில அத்தியாயங்களில் வெளிப்படவும் செய்துள்ளது. வேற என்ன சொல்ல ? அந்த பரமானந்த பரம்பொருள் தந்த இந்தக் குரல், அவருடைய சாய்ச்சரிதத்தை படிக்கும் நல்ல வாய்ப்பை பெற்றது, பல ஜென்மங்களில் செய்த புண்ணியம் என்று நம்புகிறேன். உங்களது முழுமையான ஆதரவை கோறும் அடியேன் ஜோதி சுரேஷ்.
வேறொரு பக்தி சேனலும் உண்டு. 👇
youtube.com/@JyothiSuresh-gf5hb
SUBSCRIBE
SUPPORT 🙏
உங்களது அனைத்து விருப்பங்களும் நிறைவேற அந்த எல்லாம் வல்ல பரம்பொருள் சாயி ஆசிர்வதிக்கட்டும்.
மிக்க நன்றி 🙏