Channel Avatar

Nedumananji நெடுமான்அஞ்சி @UCdD-DHIxxelM2dMtoEBxxwA@youtube.com

1.5K subscribers - no pronouns :c

Naamtamilarkatchi Naamthamizharkatchi Seemanlatestspeech See


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

Nedumananji நெடுமான்அஞ்சி
Posted 12 hours ago

அரசியல் மாற்றமெனும் பெருங்கனவோடு ஆருயிர் இளவல் விஜய் அவர்களின் தலைமையில் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு சிறக்க என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!

தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பேரறிவிப்பு தமிழ்நாட்டு மண்ணுக்கும், மக்களுக்கும் நலன் பயக்கட்டும்!

தம்பி விஜய் அவர்களின் நம்பிக்கையும், நல்நோக்கமும் ஈடேறட்டும்!

https://x.com/Seeman4TN/status/1850139104270590375

- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

73 - 0

Nedumananji நெடுமான்அஞ்சி
Posted 5 days ago

கரூர் மாவட்டம், வெண்ணைய்மலை பகுதியில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகின்ற பூர்வகுடி மக்களின் குடியிருப்புகளை அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலம் என்று கூறி திமுக அரசு வலுக்கட்டாயமாக அகற்ற முனைகிறது. தங்கள் குடியிருப்புகளைக் காப்பாற்ற அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை இன்று 21-10-2024 காலை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி கோரிக்கைகளைக் கேட்டறிவதற்காகச் செல்லவிருந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களை கரூரில் அவர் தங்கியிருந்த விடுதியில் இருந்து வெண்ணெய்மலை செல்ல முடியாத வகையில் விடுதியைச் சுற்றி காவலர்கள் குவிக்கப்பட்டும், அனைத்து சாலைகளும் தடுப்பு வைத்து வாகனங்கள் உள்ளே வெளியே செல்ல முடியாதவாறு தடுக்கப்பட்டும் இருந்தது. இதனையறிந்த வெண்ணெய்மலை மக்கள் காவல்துறையின் தடுப்புகளை மீறி சீமான் அவர்கள் தங்கியிருந்த விடுதிக்கே திரண்டு வந்து, அரசின் அடக்குமுறைக்கு எதிராகத் துணைநிற்குமாறு தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களைச் சந்தித்து கண்ணீருடன் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

குடியிருப்புகள் அகற்றப்படாமல் இருக்க உரிய சட்டப் போராட்டமும், மக்கள் திரள் போராட்டங்களையும் முன்னெடுக்க நாம் தமிழர் கட்சி வெண்ணெய்மலை மக்களுடன் உறுதியாகத் துணை நிற்கும் என சீமான் அவர்கள் உறுதியளித்தார். காவல்துறையின் வலியுறுத்தலின் பேரில் மக்கள் கலைந்து சென்றனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலும் வெண்ணெய்மலை மக்களின் கோரிக்கைகளைச் செவிமடுக்க தமிழ்நாடு அரசுக்கு சீமான் அவர்கள் வலியுறுத்தினார்

188 - 1

Nedumananji நெடுமான்அஞ்சி
Posted 1 week ago

தமிழர் நல் திருநாடு

175 - 0

Nedumananji நெடுமான்அஞ்சி
Posted 1 week ago

எல்லைச்சாமி ❤🔥🔥🔥💛

176 - 1

Nedumananji நெடுமான்அஞ்சி
Posted 1 week ago

எல்லைக்காத்த மாவீரன் #வீரப்பனார் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!..

161 - 2

Nedumananji நெடுமான்அஞ்சி
Posted 1 week ago

“இசைப்பாடலிலே என் உயிர் துடிப்பு!
நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு!
காவியத்தாயின் இளையமகன்!
காதல் பெண்களின் பெருந்தலைவன்!
மானிட சாதியில் தனி மனிதன்!
நான் படைப்பதனால் என் பேர் இறைவன்!”

கவிஞன் இவன் ஒரு காலக் கணிதம்!
இறந்தும் இறவா இலக்கியம்!
ஈடுஇணையற்ற இசைப்பாக்களின் அரசு!
இசையோடு தமிழமுது கலந்து தத்துவப்பால் ஊட்டிய தாய்!
அவர் பாட்டில், அவர் தாலாட்டில் மயங்காத தமிழர் எவருமில்லை!
அந்த மாபெரும் கவிக்கு நன்றியுணர்வோடு வணக்கம் செலுத்துவது நம் கடமை!
தமிழினத்தின் பெருமைமிகு இலக்கிய அடையாளம்!

நமது ஐயா கவியரசர் கண்ணதாசன் அவர்களுக்குப் பெருமையோடு
நம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்!

நாம் தமிழர்!

https://x.com/Seeman4TN/status/1846811867663986863?s=19

105 - 0

Nedumananji நெடுமான்அஞ்சி
Posted 1 week ago

முருகா ❤💛

98 - 0

Nedumananji நெடுமான்அஞ்சி
Posted 2 weeks ago

கலை மகள் வழிபாடுநாள் வாழ்த்துகள்!.

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர். (குறள் 393)

121 - 0

Nedumananji நெடுமான்அஞ்சி
Posted 2 weeks ago

பேரழைப்பு...! 🔴

வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலின் களம் குறித்து நாம் அனைவரும் அறிந்தவையே. இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கவும் நமது தகவல் தொழில்நுட்பப் பாசறைக்கு மேலும் வலு சேர்க்கவும் தன்னார்வமிக்க உறவுகளை இணைந்து பயணிக்க அழைக்கின்றோம்.

தகவல் தொழில்நுட்பப் பாசறையுடன் இணைந்து பயணிக்க விருப்பம் உள்ள உறவுகள் தங்களது விருப்பத்தை கொடுக்கப்பட்டுள்ள Google Sheet - ல் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம் 👇🏽

https://forms.gle/9fg4fW1LVm4LUx4a6

2026 ஐ இலக்காக்குவோம்.. நாட்டை வென்று நமதாக்குவோம்!

-தகவல் தொழில்நுட்பப் பாசறை,
நாம் தமிழர் கட்சி

https://x.com/_ITWingNTK/status/1844650420616257580?t=JZ4BKHP_Q9XHSsszU-hzIw&s=19

65 - 0