வாழ்க்கை ஓட்டத்தில் காலத்தால் அடித்துச் செல்லப்படும் எத்தனையோ நிகழ்வுகள் நன்மை, தீமை,
இன்ப| துன்பம் , இரவு, பகல்
நேற்று, இன்று என்று மாறிக்கொண்டிருந்தாலும் நாம் என்றும் நாளையை எதிர்பார் த்து நம்பிக்கை கொண்டிருப்போம். அப்படிப்பட்ட நாளை வீணாய் கடத்தாமல் சிறுதுளி மணியும் விரையம் செய்யாமல் மனதுக்கினிய செயல்களைச் செய்து இவ்வுலக வாழ்வில் சிறப்புடனும் மானுடப் பயனுடனும் வாழ்ந்து நிறைவடையவும் எண்ண ஓட்டமும் சிந்தனையும் சீர்பெற்று நடைபோடவும் ஏதுவான பல வகையான கருத்துக்களை விதைகளாகக் கொண்ட கதைகளையும் நிகழ்வுகளையும் கோர்த்தும் வார்த்தும் சமுதாயத்தில் இயங்கும் எதார்த்த நடைமுறைத் தமிழில் வழங்க எடுக்கப்பட்டுள்ள சிறு முயற்சியே இந்த சானல். "முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் " - என்பதை நினைவில் கொண்டு இயங்கிக்கொண்டிருக்கும் இதயங்களுக்கெல்லாம் அர்ப்பணிக்கப்படுகிறது.
ஊக்குவிப்போம்'!
பாராட்டுவோம் |
பண்படுவோம்'!
பண்.பாடுவோம்'!