in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
நான் எப்பொழுதும் காரில் பயணம் செய்யும் பொழுது இதுபோன்று 10 ரூபாய் Coins ஒரு சிறிய டப்பாவில் வைத்துக் கொள்வேன்..
ஏனென்றால் நாம் சிக்னல், பார்க்கிங் மற்றும் டோல்கேட்டில் நிற்கும் பொழுது நாம் காசு தருவோம் என்ற நம்பிக்கையில் தான் வயதானவர்கள், பெண்கள் மற்றும் சில நேரங்களில் சிறுவர்கள் நம்மிடம் யாசகம் கேட்பார்கள்..
அவர்களின் நம்பிக்கையை ஒருபோதும் வீணாக்க கூடாது என்பதற்காக தான் இது போன்று சில்லறையை நான் எப்பொழுதும் வைத்திருப்பேன்..அவர்களுக்காக..
இனி நீங்களும் இது போன்ற முயற்சித்துப் பாருங்கள்.. தயவுசெய்து..
#car #helpothers #money
6 - 6
அது டாட்டாவின் அலுவலகம்.
டாட்டா எதேச்சையாக கேமரா வில் ஒரு நபரை பார்க்கிறார்.
உதவியாளரை அழைத்து... யார் இந்த பையன் ஏன் உட்கார்ந்திருக்கிறார்? என கேட்கிறார்.
அவர் உங்கள் அப்பாயிண்மெண்ட்
கேட்டு ஒரு மாதமாக தினமும் வந்து கொண்டிருக்கிறார், என்றார் உதவியாளர்.
அப்படியா அடுத்த வாரம் திங்கள் காலை 9-9.15 வரை. கால்மணி நேரம் அப்பாயிண்ட்மெண்ட் கூறி விடுங்கள் என்கிறார்.
டாட்டா வுக்கு ஒவ்வொரு நொடியும் பணம். நேரத்தை வீணாக்க மாட்டார். அந்த இளைஞனுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் தெரிவிக்கப்பட்டது.
கொடுத்தது கால் மணி நேரம். அதை சரியாக பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதுவே எனக்கு அதிகமான நேரம் என்ற இளைஞனை ஆச்சர்யமாக பார்த்தனர்.
குறிப்பிட்ட அந்த நாளும் வந்தது.
காலை 8.30 க்கு அந்த இளைஞன்
உள்ளே இருந்தான். 9 மணிக்கு அனுமதிக்கப்படுகிறான்.
இளைஞன்: குட் & க்ரேட் மார்னிங் சார்.
டாட்டா: மார்னிங். என்ன விசயமாக என்னை பார்க்க வந்தாய்...?
உடனே சொல் எனக்கு நேரமில்லை.
இளைஞன்: ஒரு Business விசயமாக உங்களிடம் பேச வேண்டும்.
டாட்டா: என்ன Business ?
இளைஞன்: நீங்கள் உப்பு விற்க வேண்டும்.
டாட்டா: தம்பி என்னை பார்த்தால் உனக்கு எப்படி இருக்கிறது.... எவ்வளவு பெரிய தொழில்களை செய்து கொண்டு உள்ளேன் என்னை உப்ப விற்க சொல்லும் அளவு அது பெரிய பொருளா...?
இளைஞன்: சார். உப்பு சிறிய பொருள் தான். ஆனால் தினமும் பயன்படக்கூடியது. அது இல்லாமல் நீங்களோ நானோ உண்ணவே முடியாது. தினமும் பயன். அடிக்கடி வாங்கப்படக்கூடியது. நமக்கு இவ்வளவுக்கு உப்பு கிடைக்கிறது. நாம் இவ்வளவுக்கு விற்கலாம். உங்கள் டாட்டா ப்ராண்டு என்றால் மக்கள் நம்பிக்கையோடு வாங்குவார்கள். அதனால்தான் வேறு எங்கும் போகாமல் இங்கு வந்தேன்.
டாட்டா இரண்டு நிமிடம் யோசிக்கிறார். பின் இளைஞனிடம்... சரி வெளியே போ. காண்ட்ராகட்டில் சைன் பண்ணி விட்டு, அட்வான்ஸ் பெற்றுக்கொள். நாளை மறுநாள் முதல் நம் உப்பு வெளிவர வேண்டும்.
ஒரு மிகப்பெரிய ஒப்பந்தம் எப்படி கால் மணி நேரத்தில் முடிந்தது பாருங்கள்.
இரண்டு மணி நேரத்தில் ஒரு மிகப்பெரிய ப்ராஜக்ட்டை அதன் லாபத்தை டாட்டாவால் யூகிக்க முடிந்திருக்கறது. அதுதான் வெற்றியின் ரகசியம்.
எந்த ஒரு முடிவையும் உடனே காலம் தாழ்த்தாமல் எடுப்பது. ஒரு வேளை
அந்த இளைஞனின் வார்த்தையை நிராகரித்திருந்தால் அவன் வேறு நிறுவனத்தை நாடியிருப்பான்.
வாய்ப்பு ஒரு முறை நம்மை தேடிவரும் அதை நாம் எப்படி பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதில்தான்
நம் வெற்றி அடங்கியிருக்கிறது.
புரிந்தவர்களுக்கு இது பாடம்.... புரியாதவர்களுக்கு இது வெறும் கதை.....
புரிந்தவர்கள் வெற்றி பெறுங்கள்.
படித்ததில் பிடித்தது...
5 - 1
சோகத்தின் சொந்தக்காரி
அவளுக்கென்று பல முகங்களுண்டு
ஆனால் அத்தனைக்குள்ளும்
அவள் முழு மனதோடு
பொருந்தி இருப்பதே இல்லை...
ஏன் இப்படி என
அவளிடம் காரணத்தை
மட்டும் கேட்டு விடாதீர்கள்
அதெற்கெனவே அவள் பல
பொய்யான வார்த்தைகளை
வர்ணம் தீட்டி வைத்திருக்கிறாள்...
அவளுக்கு உண்மை சொல்ல
பிடிக்காது என்றில்லை
அவளைப் பற்றிய உண்மைகளை
நீங்கள் அறிந்து கொண்டு
ஆறுதலெனும் வார்த்தையாலே
அவளின் வலிகளை நீங்கள்
மீண்டும் மீண்டும் பதம் பார்ப்பது
அவளுக்கு பிடிப்பதே இல்லை...
அதற்காகவே அவள்
பல முகங்களை
வைத்திருக்கிறாள் நீங்கள்
எந்த முகத்தை கொண்டு அவளிடம்
பேசிக் கொண்டு இருக்கிறீர்களோ
அதே முகத்தை அவளும்
அந்த நேரத்தில்
அணிந்து கொள்கிறாள்...!!
இவ்வுலகமே ஒரு நாடக மேடை தானே
இதில் யார் சிறந்த நடிகரென்று
அவரவர்களின் வாழ்க்கை
கதா பாத்திரத்தை ஏற்று
நடிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும். ..
அந்த சிரிப்பு நிறைந்த
முகத்துக்கு பின்புறம்
சிதைந்து கிடக்கும் இதயத்தின்
துண்டுகள் ஒவ்வொன்றும்
எவ்வளவு ரணத்தை
சுமந்து கிடக்கிறது என்று...
அவளுக்கு சொந்தமான மிகவும்
பொருத்தமான முகமொன்று உள்ளது
அதுதான் கவலைகளை
சுமந்து நிற்கும் சோகத்தின்
சொந்தக் காரி .... 🖤🖤🖤
தற்செயலாக அந்த முகத்தை
உங்களால் பார்க்க நேர்ந்தால் .....
ஆறுதலெனும் பெயரில்
அவளை நெருங்கி விடாதீர்கள்
அவள் மொத்தமும்
உடைந்து அழுது விடுவாள் ..!!
காற்றின் மொழி 📖✍️
2 - 0
வழிதவறிய பசுக்கன்று ஒன்று வழி எங்கும் தன் தாயை தேடி அலைந்து களைப்புற்று சோர்ந்து வீதி எங்கும் சுற்றித் திரிகிறது.
அந்த வழியாக வந்த அனைத்து மாடுகளிடம் தனது சோகத்தை சொல்லி கதறி அழுகிறது அனைத்து மாடுகளும் அந்த கன்றுக்கு ஆறுதல் சொல்லி கண்டிப்பாக உன் தாய்ப் பசுவும் வந்துவிடும் கவலை கொள்ளாதே என்று தன் நாக்கால் வருடிக்கொடுத்து மற்ற மாடுகள் அரவணைத்தது.
தன் கன்றைப் பிரிந்த தாய்ப்பசு தன் பிள்ளையை தேடி பரிதவித்து நிற்கிறது. கடைசியாக அந்த பசுவின் உரிமையாளர் அந்த பசு கன்று குட்டியை தேடி கண்டுபிடித்து தாயிடம் சேர்த்து வைத்தார்
தாயைக் கண்ட சந்தோசத்தில் அந்த பசு கன்று துள்ளி குதித்து ஆட்டம் போட்டு தன் தாயிடம் வந்து செல்லமாக முட்டி விட்டு ஓடிப் பிடித்து விளையாடியது.
அந்தப் பசுவும் தன் மடி நிறைய பாலைச் சுரந்து தன் கன்றுக்கு நாக்கால் வருடி பசியை போக்கியது.
இந்த நிகழ்வை நான் சொல்லும் பொழுதே உங்கள் கண் முன்னால் அந்த காட்சி தோன்றும் அல்லவா.
நாம் வழிதவறிச் சென்று இருந்தாலும் பல தெய்வங்களிடம் நம் குறைகளை முறையிட்டாலும் அவர்களிடமிருந்து ஆறுதலை பெற்றாலும் கடைசியாக நம் பசியை ஆற்றும் தாயாகவும் நமக்கு மகிழ்ச்சியைத் தரும் தெய்வமாக நிற்பது நம் குலதெய்வம் மட்டுமே.
நாம் என்னதான் புலம்பித் திரிந்தாலும் அடிக்கிற கைதான் அணைக்கும் என்பதைப்போல நம் தெய்வம் தான் நமக்கு அருளாசியை அள்ளித்தரும்.
மடி நிறைய பாலை சுரந்து எப்படி அந்த பசு தன் பிள்ளைக்காக காத்துக் கொண்டிருக்கின்றதோ அதுபோலவே நம் குலதெய்வம் நமக்கு அருள் ஆசைகளை அள்ளித்தர காத்துக்கொண்டிருக்கிறது.
நாம் அந்த கன்றுக் குட்டியைப் போல நாம் தெய்வத்திடம் விளையாடலாம் கோபித்துக் கொள்ளலாம் உரிமையோடு அனைத்தையும் கேட்டுப்பெறலாம் நம் தெய்வமும் நமக்கான தை வைத்துக்கொண்டு பிள்ளைகளிடம் சற்று நேரம் விளையாடிவிட்டு பிள்ளைக்கு தேவையானதை கொடுத்து அழகு பார்க்கும்.
அந்தக் கன்றுக்கு தாய்பசு தான் உலகம் அதை விட்டால் அதற்கு ஒன்றும் தெரியாது அந்த கன்று குட்டியை போலவே நம் தெய்வத்திடம் நீ தான் என் உலகம் என்று சரணடைய வேண்டும்.
அந்தப் பசுவும் கன்றுக்குட்டியும் இணைவதற்கு உறுதுணையாக இருந்த அந்த உரிமையாளர் தான் மற்ற தெய்வங்களும் குருமார்களும் வழிதவறிய பாதையை இதுதான் உன் பாதை இதில் பயணம் செய் என்று சொல்லுவது தான் ஒரு குருவின் தலையாய கடமை.
இன்றைய காலகட்டத்தில் நமக்கான பாதையை தேடியே பாதி காலங்கள் தொலைந்து விடுகிறது அது நம்முடைய தவறு இல்லை என்றாலும் நமக்கான தெய்வத்தின் அருமையை சொல்லாமல் சென்றது ஒரு தவறு தான்.
நமது குலத்தின் தலைவர் நமது குலதெய்வம் முடிந்த அளவு நமது தெய்வத்தின் பெயரை அடிக்கடி நம் குடும்பங்களுக்குள் உச்சரிக்க வேண்டும்.அவர் மனது வைத்தால் மட்டும் தான் நம் குலம் தழைக்கும்.
நம் பிள்ளைகள் மனதில் நாம் தெய்வத்தை நிலைநிறுத்த வேண்டும் அதை செய்து விட்டாள் போதும் நம் பிள்ளைக்காக சொத்துபத்து சேர்த்து வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர்கள் நிம்மதியாக வாழ நம் தெய்வம் வழிவகை செய்யும்.
நமது அடுத்த தலைமுறைக்கு நம் தெய்வத்தை பற்றி எடுத்து உரைக்க வேண்டும் அவர்களாவது முதலில் இருந்து பாதை தேடி அலையாமல் சரியான பாதையில் பயணிக்க அது உதவும். 🌹🙏🌹
3 - 6
❤️ஒரு கணவன் தன் பொறுப்பற்ற மனைவிக்கு எழுதிய அழகான கடிதம்...
🥰🥰
அன்புள்ள மனைவியே நான் உன்னை உயிருக்கு உயிராக நேசிக்கிறேன் அதற்கு சாட்சியாக நமக்கு இரண்டு அழகான குழந்தைகள் அரசால ஆண் ஒன்றும் வீட்டிற்கு மகாலட்சுமி ஒன்றும் என நம் இரண்டு குழந்தைகள் உள்ளனர்...
நான் காலையில் சென்றால் மாலையில் திரும்புகிறேன் வெளியில் சென்றாலும் நீ மற்றும் நம் குழந்தைகளுடைய நினைவுகளுடன் தான் நான் வாழ்கிறேன்... நீ வீட்டில் தனியாக இருக்கிறாய் என்பதற்காக உனக்கு என் தகுதிக்கு மீறி அழகிய விலை உயர்ந்த ஆண்ட்ராய்டு போன் வாங்கிக் கொடுத்துள்ளேன்....
அதேபோல நீ தேவைப்படுவதையும் உடனடியாகவும் வாங்கிக் கொடுக்கிறேன்... உன்னை ராணியாக பார்த்துக் கொள்கிறேன் ... ஆனால் உன் மனம் ஏனோ என்னை தேடி வருவதில்லை ... எப்பொழுதும் உன் நினைவுகளில் சிந்தனைகளில் வேறு ஏதோ ஓடிக்கொண்டிருக்கிறது என்னவென்று என்னால் அறிய முடியவில்லை....
நீ எனக்காக செய்யும் வேலைகள் அனைத்தும் கடமைக்காக செய்வது போல் உள்ளது பல நேரங்களில் நானும் கவனித்துள்ளேன்... நீ போனும் கையுமாகவே இருக்கின்றாய் இது நல்லதல்ல என்பது என் கருத்து ஆனாலும் அதை சொன்னால் நம் இருவருக்குள்ளும் சண்டைதான் மிஞ்சும்...
இன்று பல வீடுகளில் கணவன்கள் வெளியில் சென்றவுடன் ஆண்ட்ராய்டு போன்களில் முகநூல் இன்ஸ்டாகிராம் ட்விட்டர் telegram என பல வலைதளங்கள் உள்ளது... அவைகள் அனைத்தையும் நீங்கள் பயன்படுத்துகின்றீர்கள் தவறில்லை பெண்கள் எப்பொழுதும் அடிமையாக இருக்க வேண்டும் என்பது என் எண்ணமல்ல...
ஆனால் நீங்கள் பயன்படுத்தும் வலைதளங்களில் உங்கள் நட்பு வட்டாரங்களில் உள்ள அனைவரும் நல்லவர்கள் என்று நீங்கள் நினைப்பது தவறு... 40 வயதிற்கு மேல் ஆனால் ஆண்களின் முழு கவனமும் தொழிலின் மேலும் அடுத்த வளர்ச்சியின் மேலும் சென்று விடுகிறது ...
வீட்டிற்கு வந்தால் சலிப்புடன் குளித்து உணவருந்தி விட்டு உறங்கச் சென்று விடுகிறோம்... ஆனால் நீங்கள் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு உங்கள் மொபைலில் மூழ்கி இருக்கின்றீர்கள் ... நீங்கள் பயன்படுத்தும் ஆப்புகளில் உள்ள அனைவரும் நல்லவர்கள் அல்ல..
அவர்கள் தங்கள் தேவைகளுக்காகவும் பொழுதுபோக்குகாக மட்டுமே இங்கு வருகின்றார்கள்... வலைத்தளங்களில் 40 வயதிற்கு மேல் இருக்கும் பெண்களை வலை வீசி பிடிப்பதே இங்கு பலரது வேலை... நமது பெண்கள் எவ்வளவு பட்டாலும் திருந்துவதில்லை முகம் தெரிய முகநூலில் எந்நேரமும் சேட் வீடியோ கால் என வாழ்கின்றீர்கள்...
உங்களது கஷ்ட நஷ்டங்களை பகிர்ந்து கொள்ள உங்கள் பிள்ளைகள் உறவுகள் அம்மா அப்பா கணவன் என இத்தனை பேர் இருந்தாலும் யார் என்றே தெரியாத சில கயவர்களிடம் உங்களை நீங்கள் இழக்கின்றீர்கள்... இதனால் நீங்கள் மட்டும் அசிங்கப்படவில்லை நமது குடும்பமும் கலாச்சாரமும் கெட்டுப் போகின்றது...
ஒரு நாள் ஒருவரிடம் மனவிட்டுப் பேசுவதாலோ வீடியோ கால் பண்ணுவதாலோ நேரில் சந்திப்பதாலோ சில மணித்துணிகள் அவர்களுடன் தனிமையில் இருப்பதாலோ நமக்கு கிடைக்கப் போவது எதுவும் இல்லை... நீங்கள் நல்லவர் என்றும் நம்பும் அந்தக் கயவர்கள் உங்களது பதிவுகளை பத்திரப்படுத்தி வீடியோ கால்களை ரெக்கார்ட் பண்ணி உங்களை பிளாக்மெயில் செய்ய ஆரம்பித்து விடுவார்கள்....
கணவர்கள் ஆகிய எங்களுக்கு எப்பொழுதும் எங்களைப் பற்றி எந்த சுயநலமான எண்ணமும் இல்லை ... எங்கள் எண்ணங்களில் நீங்களும் நமது குழந்தைகளை மட்டுமே உள்ளனர் ஆனால் நீங்கள் அதைப் புரிந்து கொள்ளாமல் கணவர் அன்பாக இல்லை அரவணைக்கவில்லை என்பதால் தவறான வழிகளில் செல்கின்றீர்கள் ...
இது மிகவும் தவறு உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள் கணவர் வெளியில் சென்றவுடன் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு சின்ன சின்ன கைவேலைகளை செய்யுங்கள் துணி தைங்கள் பொடி தயாரிங்கள் சோப்பு தயாரிங்கள் வீட்டில் இருந்து கொண்டே நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்....
பெண்களால் முடியாதது எதுவுமில்லை... சாதிக்க வேண்டும் என்று நினைத்தால் சாதனை பெண்ணாக மாறலாம்... ஆனால் முகநூலில் முகம் தெரிய ஆன இடம் அன்பை தேடி உங்களது வாழ்க்கை வீணடித்துக் கொள்ளாதீர்கள் .... இதனால் பாதிக்கப்படுவது எங்களது மனமும் கவுரவமும் குடும்பமும் தான் இதை கவனத்தில் கொள்ளுங்கள் ...
இன்று 90 சதவீதம் வீட்டில் ஆணோ பெண்ணோ அமர்ந்து பேசிக்கொள்ள நேரமில்லை ... அதனால் நாங்கள் உங்கள் மீது அன்பாக இல்லை என்று அர்த்தம் இல்லை எங்கள் உயிர் எப்பொழுதும் உங்களுடன் தான் இருக்கும் தயவு செய்து முகம் தெரிய மனிதர்களுடன் பழகும் பொழுது உங்களது சுய விவரங்களை கொடுக்காதீர்கள் ...
தனிமையில் சந்திக்காதீர்கள் இந்தக் காலத்தில் வயது வித்தியாசமே இல்லாமல் ஆண் பெண் பழகிக் கொண்டுள்ளார்கள் .... நாகரீகம் என்ற போர்வையில் குடும்ப பந்த பாசத்திற்கு ஒதுக்கும் நேரத்தை விட முகநூலில் முகம் தெரிய ஆணுக்கு ஒதுக்கும் நேரம் அதிகம்...
இனி மேலும் இது போல தவறு செய்யாதீர்கள் எல்லா பெண்களையும் நான் கூறவில்லை... தவறான வழியில் செல்லும் பெண்களுக்கான பதிவு இது உங்களது அனைத்து செயல்பாடுகளும் உங்களுக்குத் தெரியாமலேயே நீங்கள் மிகவும் நம்பும் நபர் சேமித்துக் கொண்டிருப்பார் ....
அது ஒரு நாள் விஸ்வரூபமாக வெளியில் வரும் பொழுது நமக்கு அவமானம் மட்டும்தான் மிஞ்சும் ... அப்பொழுது நாம் செய்ய வேண்டியது இறந்து போவது மட்டும் தானே தவிர வேறு எதுவும் இல்லை .... தயவு செய்து தவறான எண்ணங்களிலோ வழிகளிலோ செல்லாமல் நல்ல வழிகளில் மிகவும் சந்தோசமாக கணவர்களுடன் வாழுங்கள்...
ஒரு விஷயம் யோசித்துப் பாருங்கள் இன்று பல குடும்பங்களில் கட்டிய கணவனை விட்டுச் செல்லும்போது எவனே தெரியாத ஒருவன் உங்களை கால முழுவதும் பார்த்துக் கொள்வான் என்று நீங்கள் நினைப்பது எவ்வளவு முட்டாள்தனம் .... இன்னைக்கு நீங்க நாளைக்கு வேற ஒருத்தங்க நாளானைக்கு ஒரு தங்க இதுதான் பல ஆண்களுடைய,மற்றும் பெண்களுடைய சாதனைகள்.... இது தொடர்ந்து கொண்டே இருக்குமே தவிர நிற்காதது...
ஆண்களையே மிஞ்சும் வகையில் பெண்களும் முகநூலில் ஆண்களை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.... அதனால் தயவுசெய்து முகநூலை பயன்படுத்தும் பொழுது மிகவும் பாதுகாப்பாகவும் கண்ணியமான முறையிலையும் பயன்படுத்துங்கள்... இந்த வாழ்க்கை ஒருமுறைதான் வாழப் போகிறோம் அதை மிகவும் சந்தோசமாக நமது குடும்பத்துடனும் நம் குழந்தைகளுடனும் வாழ வேண்டும்...
நாகரீகம் என்ற போர்வையில் நாம் எந்தத் தவறும் செய்து விடக்கூடாது நமக்காக காத்திருப்பது நம் உறவுகள் மட்டுமே முகநூல் உறவுகள் கானல் நீரை போன்றது... நீங்கள் எவ்வளவுதான் அவர்களிடம் பிரியமாக பழகினாலும் அவர்களை உங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்ல முடியாது அறிமுகப்படுத்த முடியாது...
இவர்கள் யார் எப்படி தெரியும் என்ன தெரியும் இவர்களைப் பற்றி என்ற கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்ல திணற வேண்டி இருக்கும். நான் என்ன சொல்ல வர்றேன்னா கட்டின புருஷன் கிட்ட பொண்டாட்டி கிட்ட கிடைக்காத அன்பு எவனே தெரியாத ஒருத்தன் ஒருத்தி கிட்ட கிடைக்கும்னு தேடுறீங்களே இதெல்லாம் வந்து எங்க போய் முடியும் தெரியுமா..
பண்பாடு என்றால் என்ன கணவனுக்காக மட்டுமே மனைவி வாழ்வது மனைவிக்காக மட்டுமே கணவன் வாழ்வது இவர்கள் இருவருமே சரியில்லை என்றால் அவர்கள் வளர்க்கும் குழந்தைகளின் வளர்ப்பு எப்படி இருக்கும் யோசித்துப் பாருங்கள்.
நகை நட்டு பணமோ புகழோ நம் வாழ்க்கையை சந்தோசமாக வைத்திருக்காது ... கட்டின கணவன் மட்டுமே மனைவி மட்டுமே நினைத்தால் தான் உங்கள் குடும்பம் சந்தோஷமாக இருக்கும் இந்த முகநூலில் ஆடம்பரத்திற்காகவும் அன்புக்காகவும் ஆட்களை தேடாதீர்கள்...
அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் உங்களை விட பெஸ்டாக வேறொருவர் கிடைத்தால் கண்டிப்பாக சென்று விடுவார்கள்... நீங்கள் எத்தனை கண்ணீர் விட்டு கதறினாலும் திரும்ப வரமாட்டார்கள் அதனால் நீங்கள் உங்கள் குடும்பம் குழந்தைகள் உறவுகள் சொந்தங்கள் பந்தங்கள் என அன்பினில் வாழுங்கள்...
இன்று கிடைக்காவிட்டால் நாளை கிடைக்கும் நம் உறவுகளை நம்புங்கள்... ஆனால் முகநூல் அன்பு பழகும் வரை மட்டுமே பழகிய பின்பு அவர்களது தேவைகள் நிறைவேறும் வரை மட்டுமே.. அதனால் இவைகளை தூக்கிப் போட்டுவிட்டு உங்கள் குழந்தைகளுக்காகவும் கணவருக்காகவும் காத்திருந்து பணிவிடை செய்யுங்கள்...
அதேபோல மனைவிகளும் உங்கள் கணவருக்காகவும் குழந்தைகளுக்காகவும் உங்களை மாற்றிக் கொள்ளுங்கள் முகநூலில் வாழும் ஜீவன்களுக்காக நமது ஆசாபாசங்களை கொட்டாதீர்கள்... நமது வீக்னஸ் தெரிந்து கொண்டால் நம்மை பயன்படுத்தாமல் விட மாட்டார்கள் ...
அதற்கு அன்பு என்று ஒரு பெயர் வைத்து அடிமையாக்கி அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டு உங்களை யார் என்றே தெரியாது என தூக்கி எறிந்து விட்டு சென்று விடுவார்கள்... ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி பெண்களோ ஆண்களோ இருவருக்கும் நான் சொல்லுவது உங்கள் குடும்பத்தாருடன் மட்டும் உங்களது நேரங்களை செலவிடுங்கள்...
முகநூல் பொழுதுபோக்கு தளம் வந்தமா பதிவு போட்டமா நாலு கமெண்ட் போட்டமா போயிட்டே இருக்கணும். அத விட்டு சாட் பண்ணிக்கிட்டு நம்பர் குடுத்துட்டு யாருனே தெரியாதவன் கிட்ட சிக்கிக்கிட்டு சீரழியாதீங்க நான் ஒரு கணவனாக என் மனதில் தோன்றியதை எழுதுகிறேன்.
இதில் ஆண் பெண் இரண்டு பேருக்குமே எழுதியுள்ளேன்... யாரும் யாருடைய குடும்பத்தையும் கெடுக்க வேண்டாம்... வாழும் வரை சந்தோசங்களை மட்டுமே கொடுங்கள்... நல்லது செய்யாவிட்டால் கூட பரவாயில்லை தயவு செய்து கெடுதல்கள் யாருக்கும் செய்யாதீர்கள்...
தயவு செய்து இந்த பதிவு புடிச்சிருந்தா படிங்க புடிக்காட்டி கடந்து போங்க ரொம்ப புடிச்சிருந்தா ஷேர் பண்ணுங்க உண்மைய சொன்னா யாருக்குமே பிடிக்கிறது இல்லை.. எதார்த்தமாக வாழும் வாழ்க்கையே இறைவன் கொடுத்த வாழ்க்கை.. அதை நல்ல முறையில் வாழுங்கள் ஒருமுறை பெயர் கெட்டுவிட்டால் காலத்திற்கும் அழியாது கெட்ட பெயர்... வாழ்வது ஒரு முறை நல்லவர்களாக வாழ்வோம் நல்லதையே செய்வோம்... நன்றிகள் வாழ்க வளமுடன்!
படித்ததில் பிடித்தது
3 - 4
யானை கட்டப்பட்டிருந்த கொட்டகையில் தீ பற்றியது! யானையை காக்க யாருமில்லை! யானையின் உடல் தீக்காயங்களால் சுடப்பட்டது! யானை கடுமையாக போராடி சங்கிலிகளை அவிழ்த்து தப்பியது! எனினும் ஏற்பட்ட கடுமையான தீக்காயங்களால் இறந்தும் போனது!
இதற்காக எந்த அதிகாரிக்கும் தண்டனை வழங்கப்படாது! இது குறித்து பேசுவாரும் இல்லை! கோவில்களின் நடைபெறும் அவலங்கள் ஏராளம்... பக்தி என்பது ஞானத்தால் வருவது அதனை டிகிரி முடித்த அதிகாரிகளை வைத்து நிர்வகிக்க இயலாது!
கோவில் யானை கொலைகளுக்கெல்லாம் பரிகாரங்கள் இல்லை!
எழுதி வையுங்கள்... இதன் ப்ரதிபலன்கள் கொடுமையாக இருக்கும்! அன்று கதறுவீர்கள் !
5 - 3
God is great