in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
கத்தோலிக்கத் திருச்சபைகளின் தலைவர், உலகெங்கும் வாழும் கிறித்துவப் பெருமக்களின் பேரன்பிற்கும், பெருமதிப்பிற்குமுரிய இறைநேசர் ‘போப் ஆண்டவர் பிரான்சிஸ்’ அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
"ஆறுகள் தங்கள் தண்ணீரைத் தாங்களே குடிப்பதில்லை; மரங்கள் தங்கள் பழங்களைத் தாங்களே உண்பதில்லை; சூரியன் தனக்காகப் பிரகாசிப்பதில்லை; பூக்கள் தங்களுக்காக மட்டுமே மணம் பரப்புவதில்லை; மற்றவர்களுக்காக வாழ்வது என்பது இயற்கையின் விதி!" என்ற உலகப் பேரன்புக் கோட்பாட்டினை மொழிந்து, நாம் வாழும் பூமியையும் நம்முடன் வாழும் உயிர்களையும் நேசித்து அவற்றின் மீது அன்பும், பரிவும் கொண்டு வாழ்வதே உண்மையான இறைபக்தி என்பதை தம் புனித பெருவாழ்வினால் உலகிற்கு உணர்த்திய பெருமகன்!
இந்த உலகத்தை நம் மூதாதைகளிடமிருந்து பரம்பரைச் சொத்தாகப் பெற்றோம்; அதே நேரம், நமக்குப் பின்வரும் தலைமுறையினரிடமிருந்து கடனாகவும் பெற்றுள்ளோம்! ஆகவே, அதை நாம் பாதுகாப்பாக அவர்களுக்குக் கையளிக்க வேண்டும். ஆனால் அந்தக் கடமையை நாம் முற்றிலும் மறந்து, இயற்கையை அளவுக்கதிகமாகச் சுரண்டிவிட்டோமே என மனம் வருந்திய போப் அவர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த தாம் செல்லும் இடங்களில் எல்லாம் பேசியும், எழுதியும் நாம் வாழும் பூமியைப் பாதுகாக்க அரும்பணி ஆற்றிய பெருந்தகை!
போப் ஆண்டவர் பிரான்சிஸ் அவர்களின் மறைவால் துயருற்றுள்ள கிறித்துவப் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.
மதம் கடந்து மண்ணையும் மக்களையும் நேசித்த மாமனிதர்,
இயற்கையைப் பாதுகாக்க முனைந்த இறைதொண்டர்,
போற்றுதலுக்குரிய போப் பிரான்சிஸ் அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன்!
x.com/Seeman4TN/status/1914290803976888369?t=ixkeK…
- செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி
#popefrancis | #pope
423 - 17
'வலியோர் சிலர் எளியோர் தமை
வதையே புரிகுவதா?
மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?
உலகாள உனது தாய்மிக
உயிர்வாதை யடைகிறாள்
உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!'
'நறுக்குவோம் பகையின்வேர் சிறுத்தைப் பெருங்கூட்டம்!
நாம் தமிழர் நாம் தமிழர் என்று முரசறைவாய் குறுக்கில் முளைத்திட்ட அயலார் ஆட்சி கூண்டோடு போயிற்றுக் கொட்டடா முரசம்!'
"செந்தமிழைச் செந்தமிழ் நாட்டைச் சிறைமீட்க நந்தமிழர் உள்ளத்தில் வையம் நடுநடுங்கும் வெந்தணல் ஒன்று விரைந்து வளர்ந்ததென்று
குந்திக் குரலெடுத்துக் கூவாய் கருங்குயிலே'
‘சிங்கக் குகையினில் நரிக்கிடம் தந்தோம்;
செந்தமிழ் நாட்டின் உரிமை இழந்தோம்
பொங்கும் உணர்வால் எழும்தமி ழரசு;
போர்தொடங் கிற்றுக் கொட்டடா முரசு!'
என்று பாடி, உணர்வற்று உறங்கி கிடந்த தமிழ்ச் சமூகத்தை உணர்ச்சிமிக்கப் பாக்களால் உசுப்பிய தமிழ்ப்பெரும் பாவலன் எங்களுடைய தாத்தா பாவேந்தர் பாரதிதாசன் அவர்களுடைய நினைவு நாள் இன்று.
தமிழ்த்தேசிய உரிமைக்கும், விடுதலைக்கும் போராடி வருகிற இந்தத் தலைமுறை பிள்ளைகள் நாங்கள், எங்கள் தாத்தா பாரதிதாசனின் பாக்களைத் தாய்ப்பாலுக்கு இணையாகப் பருகி, உணர்வு பெற்று, பெருமிதத்தோடும் திமிரோடும் அவருக்குப் புகழ் வணக்கத்தைச் செலுத்துவதில் மகிழ்வடைகிறோம். அவர் கண்ட கனவை எந்தச் சமரசமுமின்றி நிறைவேற்றுகிற வகையில் தொடர்ந்து போராடுவோம் என்ற உறுதிமொழியை இந்நாளில் ஏற்கிறோம்.
தமிழ்ப்பேரினத்தின் பெருமைமிகு அடையாளம் நமது தாத்தா புரட்சிக் கவிஞர் பாவேந்தர் #பாரதிதாசன் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
#நாம்தமிழர்!
- செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி
#Bharathidasan
1.3K - 13
டெல்லி ஜங்புராவில் தமிழர்கள் குடியிருப்புகளை இடித்து மக்களை வெளியேற்றும் முடிவை பாஜக அரசு கைவிட வேண்டும்!
@CMOTamilnadu | @mkstalin
டெல்லி ஜங்புரா மதராஸி கேம் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகளை இடித்து, மூன்று தலைமுறைகளாக அங்கு வாழ்ந்து வரும் தமிழர்களை வெளியேற்ற டெல்லி மாநில பாஜக அரசு முயற்சிப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. தங்கள் வாழ்விடங்களைக் காக்கப் போராடும் தமிழ் மக்களை டெல்லி மாநில பாஜக அரசு காவல்துறை மூலம் அடக்கி ஒடுக்குவது சிறிதும் மனச்சான்றற்ற கொடுங்கோன்மையாகும்.
ஜங்புராவில் அரசால் இடிக்கப்படும் வீடுகளுக்கு மாற்றாக 50 கி.மீ. தொலைவிலுள்ள நரேலாவில் வெறும் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் மாற்று வீடுகள் ஒதுக்கப்படும் என டெல்லி மாநில அரசு தெரிவித்துள்ளது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. டெல்லி மதராஸி கேம்ப் பகுதி அரசால் அங்கீகரிக்கப்பட்ட குடியிருப்புப் பகுதி எனும்போது மக்களின் விருப்பத்திற்கு மாறாக வீடுகளை இடித்து வாழ்விடங்களை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றுவது என்பது எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும். பாஜக ஆளும் வட மாநிலங்களில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி மக்களின் குடியிருப்புகள் தொடர்ச்சியாக இடிக்கப்படும் கொடுங்கோன்மையை உச்சநீதிமன்றமே கடுமையாகக் கண்டித்து, எச்சரித்துள்ளதோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆகவே, டெல்லி ஜங்புரா மதராஸி கேம் பகுதியில் வாழ்ந்து வரும் தமிழர்கள் அனைவருக்கும் அவர்களின் வசிப்பிடங்களிலேயே மாற்றுக் குடியிருப்புகள் வழங்குவதை உறுதிசெய்ய வேண்டுமென டெல்லி மாநில பாஜக அரசை வலியுறுத்துகிறேன். தமிழர் குடியிருப்புகளை அழித்து வாழ்வாதார உரிமையைப் பறிக்க முயலும் டெல்லி அரசின் முயற்சியைத் தடுத்து நிறுத்தி, தமிழர்களின் வாழ்விடத்தைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
- செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி
952 - 44
இறைமகன் இயேசு உயிர்த்தெழும் பெருநாள்!
கிறித்துவப் பெருமக்களின் திருநாள்!
“அநீதிக்கு எதிராக இந்த மண்ணுலகில் புரட்சித் தீமூட்ட வந்தேன்; அது எப்பொழுதும் பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்” என்று தம்முடைய அருள் நிறைந்த அறவாழ்வால் வழிகாட்டிய இறைமகன் இயேசு பிரான் உலகம் உய்ய உயிர்த்தெழுந்த திருநாளான ‘உயிர்ப்பு ஞாயிறு’ பெருவிழாவினைக் கொண்டாடும் கிறித்துவப் பெருமக்கள் அனைவரது வாழ்விலும்,
அறியாமை இருள் அகன்று,
கொடிய வறுமை நீங்கி,
இறவாத இன்பம் நிறைந்து
இறையருள் பெருகட்டும்!
இறைமகன் இயேசுவின்
அன்பும் - அருளும்
இப்பூவுலகில் எல்லா உயிர்களுக்கும் கிடைக்கட்டும்!
x.com/Seeman4TN/status/1913799675167351197
- செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி
#Easter | #HappyEaster | #EasterSunday
1.6K - 24
‘அச்சு ஊடகங்களின் அரசர்’ பெருந்தமிழர் ஐயா பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 12ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, 19-04-2025 அன்று, சென்னை போயஸ் தோட்டத்தில் அமைந்துள்ள அவரது நினைவில்லத்தில், #நாம்தமிழர்கட்சி சார்பாக மலர்வணக்கம் செலுத்தினேன்.
https://youtu.be/eqyw4v9K86c?si=6WA93...
1.1K - 13
12 ஆண்டுகளாக மாற்றப்படாமல் உள்ள கட்டண உயர்வு உள்ளிட்ட தானி ஓட்டுநர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்!
தமிழ்நாடு முழுவதுமுள்ள தானி (ஆட்டோ) வாகன ஓட்டுநர்கள் எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுப் போதிய வருமானமின்றித் தவித்து வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. மாநகரங்களில் முன்பதிவு செயலி மூலம் தானி ஓட்டுநர்களின் உழைப்பினைச் சுரண்டும் தனியார் பெருநிறுவனங்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தாது வேடிக்கை பார்க்கும் தமிழ்நாடு அரசின் மெத்தனப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.
தமிழ்நாடு அரசு கடந்த 2013-ம் ஆண்டு தானி வாகனங்களுக்கான பயணக் கட்டணத்தை 1.8கி.மீ தூரத்திற்கு ரூ.25, அடுத்துவரும் ஒவ்வொரு கி.மீக்கும் தலா ரூ.12, காத்திருப்புக் கட்டணம் 5 நிமிடத்துக்கு ரூ.3.50 எனவும் நிர்ணயித்து உத்தரவு பிறப்பித்தது. அன்றைய காலகட்டத்தில் எரிபொருள் விலையானது பெட்ரோல் ரூ.60, டீசல் ரூ.45 என்ற அளவில் இருந்தது. ஆனால் கடந்த 12 ஆண்டுகளில் எரிபொருட்களின் விலை இருமடங்கு அளவிற்கு உயர்ந்து தற்போது ரூபாய் 100ஐ கடந்துள்ளது. அதுமட்டுமின்றி, காற்று மாசினைக் கட்டுப்படுத்தும் வகையில், 75 விழுக்காட்டிற்கும் அதிகமான தானிகள் எரிகாற்றில் இயங்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில், எரிகாற்று விலையும் வாங்க முடியாத அளவிற்குப் பன்மடங்கு அதிகரித்துள்ளது. மேலும், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. ஆனால் தானி வாகனங்களுக்கான கட்டணம் மட்டும் 12 ஆண்டுகளாக எவ்வித மாறுதலும் இல்லாமல் பழைய கட்டண அளவிலேயே உள்ள காரணத்தினால் தானி ஓட்டுநர்கள் போதிய வருமானம் கிடைக்காமல் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதோடு, அவர்களது குடும்பங்கள் வறுமையில் வாடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
தானிகளுக்கான தரச்சான்றிதழ் மற்றும் காப்பீடு தொகையையும் கட்டுக்குள் வைத்திருக்க தமிழ்நாடு அரசு தவறிவிட்டது. மேலும், ‘தானிகளுக்கான பயணக் கட்டணத்தை எரிபொருள் விலைக்கேற்ப நிர்ணயிக்க வேண்டும்’ என்ற உயர் நீதிமன்ற அறிவுறுத்தலையும் தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்பது தானி ஓட்டுநர்களின் வயிற்றில் அடிக்கும் கொடுஞ்செயலாகும்.
மேலும், தானி வாகன சேவையை முழுமையாக ஆக்கிரமித்து, தானி ஓட்டுநர்களின் உழைப்பினைச் சுரண்டி கொழுக்கும் தனியார் பெருநிறுவனங்களின் ஆதிக்கத்தை தமிழ்நாடு அரசு கட்டுப்படுத்த தவறியதால், சுயமாகத் தொழில் புரியும் தானி ஓட்டுநர்கள், தானி ஓட்டும் தொழிலை விட்டே அகல வேண்டிய அவலமான சூழல் நிலவுகிறது. ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளாகியும் கட்டண உயர்வு உள்ளிட்ட தானி ஓட்டுநர்களின் நியாயமான கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்ற மறுப்பது கொடுங்கோன்மையாகும்.
ஆகவே, தமிழ்நாடு அரசு 12 ஆண்டுகளாக மாற்றப்படாமல் உள்ள தானி கட்டண உயர்வினை மாற்றி அமைக்க வேண்டும், இணைய வழி அபராதங்களைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட தானி ஓட்டுநர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டுமெனக் கோருகிறேன். மேலும், தானி சேவையில் தனியார் பெருநிறுவனங்களின் மேலாதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், கேரள மாநில அரசு செய்துள்ளதுபோலக் குறைந்த பிடித்த தொகையில் ‘தானி சேவைக்கான முன்பதிவு செயலியை’ அரசு சார்பில் உருவாக்கி தானி ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
x.com/Seeman4TN/status/1913144537817759924?t=qMzTU…
- செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி
1.6K - 43
புனித வெள்ளி நல்வாழ்த்துகள்!
உலகில் மனிதகுலம் நல்வழி எய்த, குன்றின்மேல் ஏறி நின்று, கொடைக் கைகளை விரித்து நீட்டி, அருள்நெறி பொழிந்த இறைமகன் இயேசு பிரான், முள்கிரீடம் தாங்கி சிலுவை சுமந்த புனித வெள்ளி ஈகைத் திருநாளில் இறைமகனை நினைவுகூர்ந்து போற்றி வணங்கும் கிறித்துவப் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பும், வாழ்த்துகளும்!
'உன்னைப்போல் உன் அயலானையும் நேசி' என்று கற்பித்து, உலக நன்மைக்காக தம்மையே ஈகம் செய்த இறைமகனின் எல்லையற்ற கருணையும், ஈடில்லா பேரன்பும் உங்கள் அனைவருடைய உள்ளங்களிலும் நிறைந்து, நிலைக்க விழைகின்றேன்!
x.com/Seeman4TN/status/1913079260656570718
- செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி
#புனித_வெள்ளி | #GoodFriday
2.8K - 66
எட்டாம் வகுப்பு மாணவர் மீது கொலைவெறித் தாக்குதல்; தீய திராவிட மாடல் திமுக ஆட்சியை அகற்றுவது ஒன்றே தீர்வாகும்!
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர் சக மாணவரால் அரிவாளால் வெட்டப்பட்டு கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதோடு, தடுக்க வந்த ஆசிரியரும் தாக்குதலுக்கு ஆளாகியுள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. மாணவர்கள் புத்தகப் பையில் அரிவாள், கத்தி போன்ற கொடூர ஆயுதங்களுடன் பள்ளிக்கு வரும் அளவிற்கு திராவிட மாடல் ஆட்சியில் சட்டமும், சமூகமும் சீர்கெட்டுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது.
பள்ளி சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான புகார்களும், பள்ளி மாணவ-மாணவியர் மது அருந்தும் காணொளிகளும், மாணவர்களுக்கு இடையே சாதிய மோதல் செய்திகளும் வராத நாட்களே இல்லை என்ற அளவிற்கு மிக மோசமான நிலைக்கு தமிழ்நாடு தள்ளப்பட்டுள்ளது. அறிவைச் செறிவாக்கி, நற்பண்புகளையும், நல்லொழுக்கத்தையும் கற்பித்து நல்லதொரு தலைமுறையை வளர்த்தெடுத்து நாட்டிற்கு அளிக்கும் பெரும்பணி புரியும் பள்ளிக்கூடங்கள், திமுக ஆட்சியில் மது போதை விற்பனையகங்களாகவும் சாதிய மோதல்களும், கொலைவெறித் தாக்குதல்களும், பாலியல் வன்கொடுமைகளும் நடைபெறும் கூடாரமாகவும் மாறி நிற்பதுதான் ஏற்கவே முடியாத காலக்கொடுமையாகும்.
சட்டம்-ஒழுங்கைக் கட்டி காக்க திறனற்ற திமுக ஆட்சியில் ஒட்டுமொத்த சமூகமும் குற்றச்சமூகமாகச் சீர்கெட்டு நிற்பதன் சமகாலச் சான்றுகளில் ஒன்றுதான் தற்போது பாளையங்கோட்டை தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர் மற்றும் ஆசிரியர் மீது நடைபெற்றுள்ள கொலைவெறித் தாக்குதலாகும்.
தீய திராவிட மாடல் ஆட்சியை அகற்றுவது ஒன்றே நாட்டில் நாள்தோறும் நடைபெறும் கொடுமைகள் அனைத்தையும் தடுப்பதற்கான சரியான தீர்வாகும்!
x.com/Seeman4TN/status/1912422059973427302
- செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி
1.8K - 93
ஈழ விடுதலைப்போராட்டத்தை இழிவுப்படுத்தும் 'ஜாட்' திரைப்படத்தைத் தடை செய்க!
இந்தி மொழியில் வெளியாகியுள்ள ஜாட் திரைப்படம், தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி, தாயக விடுதலைக்காகப் போராடிய விடுதலைப் போராளிகளை பயங்கரவாதிகளாக சித்தரிப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
வட இந்தியாவில் அயோத்தி அருகே நடக்கும் கதைக்களத்தில், கதைக்கு சிறிதும் தொடர்பின்றி யாழ்ப்பாணப் புலிப்படை என்று உள்நோக்கத்துடன் பெயர்வைத்து தமிழீழ விடுதலைப்போராட்டம் தவறானது போலவும், அதன் தளபதிகள் கொடூர வில்லன்கள் போலவும் கட்டமைப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
முழுக்க முழுக்க தமிழர்கள் மீதான இனவெறுப்பினாலேயே இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதை எளிதில் உணர முடிகிறது. தாயகக்கனவுடன் சாவினைத் தழுவி, உலகத்தமிழர்களின் உள்ளத்தில் வைத்து வணங்கப்பெறுகின்ற எம்மாவீரத் தெய்வங்களை அவமதிப்பதை இனியும் வேடிக்கை பார்க்க முடியாது.
ஆகவே, ஜாட் திரைப்படக் குழு, ஈழ விடுதலைப்போராட்டத்தைத் தவறாகச் சித்தரிக்கும் சர்ச்சைக்குரிய காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
தமிழ்நாடு அரசு கடந்த காலங்களைப்போல மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து ஜாட் திரைப்படத்தை உடனடியாக தமிழ்நாட்டில் தடை செய்ய வேண்டுமெனவும், தவறும் பட்சத்தில் பெரும் மக்கள் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுத்து திரையரங்குகளை முற்றுகையிட்டு தடுத்து நிறுத்தும் எனவும் அறிவிக்கிறேன்.
- செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி
#jaatmovie | #TamilEelam | #TamilEelamStruggle | #NTK | #Seeman
--------------------------------------------
Ban the 'Jaat' Hindi Movie that Denigrates the Tamil Eelam Liberation Struggle!
The Hindi movie 'Jaat' is highly condemnable for denigrating the Tamil Eelam liberation struggle and portraying the freedom fighters who fought for their motherland as terrorists.
In the storyline that takes place near Ayodhya in North India, it can never be allowed to set a narration as if the Tamil Eelam liberation struggle was wrong and its commanders were cruel villains by naming the militant group as ‘Jaffna Tiger Force (JTF)’ with no relation to the plot. It is evident that this film has been created solely out of racial hatred towards Tamils.
We can no longer afford to insult our heroic martyrs, who embrace death and are revered in the hearts of #Tamils all over the world.
Therefore, I urge the #Jaat movie crew to immediately remove the controversial scenes that misrepresent the Eelam liberation struggle.
I declare that the Tamil Nadu government should respect the sentiments of the people and ban the movie titled Jaat immediately in Tamil Nadu, failing which the #NaamTamilarKatchi will launch a massive people's protest and blockade the theaters.
- #Seeman | Chief Coordinator | #NTK
#TamilEelamLiberationStruggle | #BanJaatMovie | #BoycottJaatMovie
1.9K - 56
பொன் ஏர் பூட்டும் திருநாள்!
#சித்திரைத்திருநாள் நல்வாழ்த்துகள்!
- செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி
4.5K - 77
செந்தமிழன் சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி, தமிழ்நாடு!
Senthamizhan Seeman is a Thamizh Politician, Tamil Nationalist Ideologue, and the Chief-Coordinator of the Political Party Naam Tamilar Katchi in Tamil Nadu. Prior to his involvement in politics, Seeman's profession and passion were filmmaking, writing, and acting.
Seeman Latest Speech 2022 | Seeman Official | Naam Tamilar Katchi
---
நாம் தமிழர் கட்சி - இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க: thuli.naamtamilar.org |
donate.naamtamilar.org/
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
join.naamtamilar.org/
twitter.com/SeemanOfficial/
Telegram Channel - t.me/seemanofficial
#Seeman4TN #NTK4TamilNadu #NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeemanSpeech #SeemanSpeech2022 #VellaporanVivasayi #SenthamizhSeeman #Seemanism #TamilNationalism #TamilNaduPoliticsLatest