உலகம் அளந்த பெருமைகள்
எனக்கேதும் இல்லை.
இமயத்தின் உச்சி மிதித்த
சரிதமும் இல்லை.
ஆனால்…
என் மனதின் சரிபாதிக்கு,
என் மொத்த ஆயுளையும்
தாலி கட்டிய திமிர் ஒன்று
நெஞ்சுக்குள் உண்டு.
அந்தத் திமிரின் திருநாள் இன்று!
என் வார்த்தைகளுக்கு
அவள் தந்தாள் உயிர்.
என் மௌனங்களுக்கு
அவள் தந்தாள் அர்த்தம்.
Deep Talks Tamil என்பது
என் குரல் அல்ல;
எனக்குள் அவள் விதைத்த
நம்பிக்கையின் வேர்கள்
ஆண்டுகள் ஆறு
அரை நொடியில் கரைந்தனவோ?
காலதேவன் என் காதலுக்குப் பயந்து
கடிகாரத்தை வேகமாய் சுற்றினானோ?
ஆம்… இந்த ஆறு வருடப் பயணம்
ஒரு பேருந்தின் ஜன்னலோரப்
பயணம் போலத்தான்.
ஆனால், ஒவ்வொரு நிமிடத்திலும்
ஒரு யுகத்தைக் கடந்து வந்தேன்.
அவள் பார்வையில் மூழ்கி
நான் மூச்சுத் திணறிய நொடிகள்,
என் ஆயுளின் ஆகச்சிறந்த வரிகள்.
என் திருமண நாள்,
நான் ஆணவமாய்க் கொண்டாடும்
ஒரே அகிம்சைத் திருநாள்!
#6thyearweddinganniversary #DK
799 - 98
70 கொண்டை ஊசி வளைவுகளுக்கு அப்பால் மறைந்திருக்கும் ஒரு மர்ம உலகம்! கொல்லிமலை என்பது வெறும் ஒரு சுற்றுலாத் தலம் அல்ல; அது சங்ககால மன்னன் வல்வில் ஓரியின் வீரம், கொல்லிப்பாவையின் பேரழகு, சித்தர்களின் ஞானம் என காலத்தின் பல அடுக்குகளைத் தன்னுள் புதைத்து வைத்திருக்கும் ஒரு புதிரின் வரைபடம். இந்த வீடியோவில், கொல்லிமலையின் ஆழமான ரகசியங்களை நீங்கள் தெரிந்துக்கொள்ள போகிறீர்கள்!
Link: https://youtu.be/JbZUmeijb4k
584 - 5
இந்த வீடியோவில், மனிதனை அவனது ஆற்றலின் உச்சத்திற்குக் கொண்டு செல்லக்கூடிய இந்த 64 திறன்களின் தொகுப்பைப் பற்றி விரிவாகப் பேசப் போகிறோம்.! watch video on watch page
101 - 0
மூச்சை வைத்து மரணத்தை வெல்ல முடியுமா? திருமூலர் சொன்ன Shocking உண்மை! watch video on watch page
25 - 0
மூச்சை வைத்து மரணத்தை வெல்ல முடியுமா? திருமூலர் சொன்ன Shocking உண்மை! 🫨 இன்றைய வேகமான உலகில் மன அழுத்தம், பதட்டம், கவனச் சிதறல் போன்றவற்றால் சிரமப்படுகிறீர்களா? உங்கள் எல்லாப் கேள்விகளுக்கும், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருமூலர் என்ற மகா சித்தர் பதிலளித்துள்ளார். அதுதான் "அட்டாங்க யோகம்" - தன்னை அறியும் ஒரு முழுமையான விஞ்ஞானம். வெள்ளிக்கிழமை (15.08.2025) இரவு 7 மணிக்கு....
289 - 8
திருமூலர்... 3000 வருஷங்களுக்கு முன்னாடி வாழ்ந்த ஒரு மர்மமான சித்தர். அவர் வெறும் யோகி மட்டும் இல்ல, காலத்தை வென்ற ஒரு விஞ்ஞானி! மரணமில்லா பெருவாழ்வு, யோக ரகசியங்கள், பிரபஞ்சத்தோட உண்மைகள்னு அவர் சொன்ன விஷயங்கள் இன்னைக்கும் நம்மள ஆச்சரியப்படுத்துது. https://youtu.be/1dr5BqM-VRI
574 - 3
சித்தருக்கெல்லாம் சித்தர், அறிவியல், ஆன்மீகம், மருத்துவம் அதையெல்லாம் தாண்டி பல்வேறு விஷயங்களை நமக்குத் தந்து விட்டு சென்ற “திருமூலர்” வரலாறு - இன்று இரவு 7 மணிக்கு.. மறக்காமல் பாருங்கள்! மெய்மறந்து போவீர்கள்…!
1.1K - 6
இந்த ஐந்து வருடப் பயணம் என்பது வெறும் காலண்டரில் நகர்ந்த நாட்கள் அல்ல. இது அறிவைத் தேடிய பயணம், உறவுகளைப் புதுப்பித்த பயணம், கதைகளைக் கொண்டாடிய பயணம். இந்தப் பயணத்தில் எங்களோடு கரம் கோர்த்துப் பயணித்த உங்களுக்கும், எங்களின் ஒவ்வொரு படைப்பையும் வாசித்து, பகிர்ந்து, விமர்சித்து, எங்களை மென்மேலும் மெருகேற்றிக்கொள்ள உதவிய ஒவ்வொரு வாசகருக்கும் எங்கள் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். இது எங்களின் வெற்றி மட்டுமல்ல, இது நம் அனைவரின் வெற்றி!
www.deeptalks.in/special-article/deeptalks-5th-ann…
745 - 56
தமிழின் வரலாறும், தமிழினத்தின் வரலாறும் இந்த உலகம் அறியவும், துவண்டு போனவர்களுக்கு ஒரு புது தைரியத்தையும், தன்னம்பிக்கையும் தருவது தான் இந்த #DeepTalksTamil.