Channel Avatar

BaraniTV Live @UCZva4a_el1WqNTaJATihKjQ@youtube.com

345K subscribers - no pronouns :c

உங்கள் பரணிடிவி , திருநெல்வேலி ,தூத்துக்குடி, தென்காசி, கன்ன


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

BaraniTV Live
Posted 3 months ago

நெல்லையில் அதிகன மழைக்கு வாய்ப்பு இருப்பதால் தயார் நிலையில் மீட்பு குழு

News link.....
baranitv.in/story/Mitpu_kulu

2 - 0

BaraniTV Live
Posted 6 months ago

ஹரி நாடாருக்கு ஜாமீன் கிடைத்தது !

*பெங்களூர் பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் கடந்த ஆயிரம் (1000) நாட்களுக்கும் மேலாக, விசாரணை சிறைவாசியாக இருந்து வரும் தமிழகத்தைச் சார்ந்த ஹரி நாடாருக்கு பெங்களூரு CCH-1 (CITY CIVIL COURT HALL-1) சிட்டி சிவில் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (22.02.2024) ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.*

கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் 4ஆம் தேதி, கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கோவளம் கடற்கரை அருகிலுள்ள ( Beach house) நட்சத்திர சொகுசு விடுதியில் தங்கியிருந்த ஹரி நாடார், பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் பண மோசடி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டார்.போலீஸ் விசாரணைக்கு பின் நீதிமன்ற உத்தரவுப்படி பெங்களூர் பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்ட ஹரி நாடாரை, பல மாதங்களுக்குப் பிறகு நடிகை விஜயலட்சுமியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் திருவான்மியூர் போலீசார் கைது செய்தனர் .அதேபோல் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பண மோசடி புகாரில் ஹரி நாடாரை கைது செய்தனர் .மேலும் திருநெல்வேலி மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் பண மோசடி புகார் ஒன்றில் ஹரிநாடாரை கைது செய்திருந்தனர்.ராக்கெட் ராஜாவிற்கு ஆதரவாக அரசு பேருந்தை எரித்த ஒரு வழக்கில் திருநெல்வேலி மாவட்டம், தாழையுத்து காவல் நிலையத்தில் போடப்பட்ட வழக்கிலும் போலீசார் ஹரிநாடாரை கைது செய்தனர் . தமிழக போலீசார் ஹரி நாடார் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளிலும் ஹரிநாடார் அப்போதே சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் உடனடியாக ஜாமீன் பெற்று விட்டார் .

ஏற்கனவே, பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஹரி நாடார் மீது போடப்பட்ட வழக்கை விசாரித்து வரும் பெங்களூரு CCH-1 சிட்டி சிவில் நீதிமன்றத்தில் இதற்கு முன்பாக மூன்று முறை ஹரி நாடார் தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது .அவரது மூன்று ஜாமீன் மனுக்களும் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன .பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் இதற்கு முன்பு இரண்டு முறை ஹரி நாடார் தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது .அந்த இரண்டு ஜாமீன் மனுக்களும் பெங்களூர் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன .
கடைசியாக தற்போது ஹரி நாடாரின் வழக்கை விசாரணை செய்து வரும் நீதிமன்றமான CCH-1 சிட்டி சிவில் நீதிமன்றத்தில் ஹரி நாடார் தரப்பில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது .இந்த ஜாமீன் மனுவை விசாரித்த *மாண்புமிகு நீதி அரசர் ஸ்ரீ.முருளிதர பாய் அவர்கள் இன்று வியாழக்கிழமை, (22.02.2024) ஹரி நாடாருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்* .

*நீதிமன்ற உத்தரவுப்படி உரிய ஜாமீன்தாரர்களை நீதிமன்றத்தில் ஹரி நாடார் தரப்பில் காட்டிய பின்பு, சட்டப்படி இன்னும் ஓரிரு தினங்களில் பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் இருந்து ஹரி நாடார் விடுதலை ஆகி வெளிவர இருக்கிறார்.*

ஹரி நாடார் சிறைக்கு சென்ற பின்பு ஹரி நாடாரை சார்ந்து இருந்த அவரது நண்பர்கள் பலரும்,அவரது கட்சியினர்களும் அவரை கை விட்டு விட்டனர் .இந்நிலையில் ஹரி நாடார் சிறை சென்ற நாள் முதல், இன்று வரை ஹரி நாடார் சிறையிலிருந்து வெளிவர வேண்டி அனைத்து சட்ட நடவடிக்கைகளையும், அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ,மலேசியாவைச் சார்ந்த ஹரி நாடாரின் காதல் மனைவி மஞ்சு என்பவர் கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

50 - 0

BaraniTV Live
Posted 10 months ago

உலகப் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா 11ம் நாள் அம்மன் வீதி உலா நிறைவாக அம்மனுக்கு காப்பு களையப்பட்டது.
தசரா திருவிழா நிறைவு..

137 - 2

BaraniTV Live
Posted 11 months ago

நெல்லை எம்பி தொகுதியில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள்

பாஜக சார்பில் தமிழிசை

திமுக சார்பில் பூங்கோதை

என தகவல்கள் வலம் வருகிறது.

அரசியல் கள நிலவரம் என்ன ?

12 - 2

BaraniTV Live
Posted 1 year ago

நாம் தமிழர் கட்சி சாட்டை துரைமுருகன் பேச்சு ஒரு கூலித்தொழிலாளி பேருந்தில்செல்லும் பொழுது தனது கைபேசியில் சுவாரசியமாக கேட்டுக் கொண்டிருக்கும் காட்சி

62 - 6

BaraniTV Live
Posted 1 year ago

நமது TV-க்கு App உருவாக்க வேண்டும்
நமது சப்ஸ்கிரைபர்கள் யாராவது ஆப் டெவலப்பர் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள் - 8220116565

11 - 2

BaraniTV Live
Posted 1 year ago

இந்த ஆண்டு தொடக்கம் கொடைக்கானலில் இருந்து

50 - 3

BaraniTV Live
Posted 2 years ago

Happy new year

78 - 2

BaraniTV Live
Posted 2 years ago

நான்குவழிச் சாலையில் விபத்து 2 மாணவிகள் பலி
நெல்லை மாநகரம் ரெட்டியாா்பட்டி 4 வழிச்சாலையில் விபத்து. 2 பெண்கள் பலி. இருசக்கர வாகனம... மேலும் படிக்க.
Here You Can Download This Application from PlayStore play.google.com/store/apps/details?id=com.baranitv…

24 - 0

BaraniTV Live
Posted 2 years ago

04.12.2021 தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு விடுமுறை
தொடர் மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் இன்று (... மேலும் படிக்க.
Here You Can Download This Application from PlayStore play.google.com/store/apps/details?id=com.baranitv…

29 - 1