எங்கும் பரவி இருப்பது சக்தி...!
எல்லாவற்றிற்குள்ளும் இருப்பது சக்தி..!
எல்லாமே சக்தி...!
சக்தியேஅலைகளாய்...
அலைகளால் கட்டப்பட்டது - அண்டம் ...
அண்டத்தின்அனைத்தும் -
ஒன்றுக்குள் ஒன்று...!
எல்லாவற்றிற்கும் எல்லாம் கிடக்கிறது, கடக்கிறது ...!
கிடக்கும், கடக்கும் எல்லாம் கடவுள்...!
நீயும்கட..வுள்...!
அகம் செல்...!
புறம் வெல்...!
எண்ணமே எல்லாம்...!
எண்ணச் செய்வது...
தன்னை தொடும் அலைகள் ..!
அலைகள் தருவது -
ஆதியோடலையும்கோள்கள்.!
கோள்களின் அலைகளே - உயிர்களை அசைக்கிறது...!