in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
🚨#amazon_free_download
#indhunovels_free_books 📯⏳🔥 @ThenisaiTamilNovels
#anti_hero 😈 #psycho_love 💘 #action🔫 #comedy 😂 #family 👩👩👦 #romance 💋 #army_love 🪖 #village_love 🛖
(1.3.2025) இன்று மதியம் 1.30⏰ மணி முதல் (2.3.2025) நாளை மதியம் 1.30⏰ மணி வரை கீழ் கண்ட எனது மூன்று மின் புத்தகங்களையும் இலவச தரவிறக்கம் செய்து கொள்ளலாம் 😍
1. 👿 *"ராட்சசனின் சுடரொளியே!"*🔥(சைக்கோ லவ்)
amzn.in/d/5VM0tzB
காதலனை நம்பி தன்னை பிறப்பிலிருந்தே வெறுத்து ஒதுக்கும் பெற்றோரை விட்டும் வீட்டை விட்டும் வெளியே வருகிறாள் யமுனா. காதலன் திலீப் வீட்டில் அடுத்தடுத்து நடக்கும் அசம்பாவிதத்தால் அவனது குடும்பத்திற்கு வேண்டிய பண உதவிக்காக பிரபல ரெசார்ட் ஒன்றில் பணிபுரிய சென்ற இடத்தில், முகம் அறியா கொடூரனிடம் தனது கற்பை இழந்து வாழ்க்கையே நரகமாய் மாறவிருப்பதை அறிவாளா அவள்?
எந்த ஒரு இக்கட்டான நிலையிலும் தனக்கு அரணாய் முன்நின்று பாதுகாப்பான் என்று முழுமையாக நம்பி வந்த காதலன், அவளை கடைசிவரை கலங்காமல் காப்பானா? அல்லது குப்பையாக தூக்கி எறிந்து செல்வானா?
யமுனாவின் கற்பை சூறையாடிய ராட்சசன் மீண்டும் வருவானா? அப்படி வந்தால் யமுனாவின் நிலை என்ன? "ராட்சசனின் சுடரொளியே!" கதையை முழுமையாக படித்து அறிந்துகொள்ளுங்கள்.
🍀🍀🍀🍀🍀🍀🍀
2. 🔥*"அக்னிக் கண்ணனின் மிட்டாய் குயில்"* 🐦 (ஆன்ட்டி ஹீரோ & போலீஸ் லவ்)
amzn.in/d/hrRfPcX
தமையன் மீது பேரன்பு கொண்ட மாமி, அவனது பணிமாற்றத்தினால் குடும்பத்துடன் ஆந்திரா வருகிறாள். வந்த இடத்தில் ஊரையே நடுங்க வைக்கும் அரக்கனின் விபரீதப் பார்வை மாமியின் மீது படிந்து, அவளுக்கு நடக்கவிருக்கும் திருமணத்தை நிறுத்தி கடத்திச் சென்று அவன் வீட்டில் சிறை வைக்கிறான்.
ஏற்கனவே அவனது சுயரூபம் அறிந்து அவனை கண்டால் அஞ்சி நடுங்கும் மாமி, அவன் செய்யும் தவறுகளை மன்னித்து காதலை உணர்ந்து வாழ்வாளா? அல்லது வார்த்தை எனும் கொடிய விஷத்தால் வாழ்க்கையை தொலைப்பாளா?
இது ரவுடிக்கும் மாமிக்கும் நடக்கப் போகும் லவ் வார்.
கிராமத்தில் இருந்து தனது போலீஸ் மச்சானை தேடி ஆந்திரா வருகிறாள் அப்பாவிப் மங்கை. அவள் மீது காதல் இருக்கிறதா இல்லையா என்ற குழப்பத்திலும், குடும்பத்தின் சூழ்நிலையாலும் அவளை ஏற்க முடியாமல் கடுமையாக எட்டி நிறுத்தும் காவலன், தனது காதலை உணர்ந்து மீண்டும் தன்னவளை தேடி செல்லுகையில், அவனுக்கான காதல் அப்படியே அவளிடத்தில் இருக்குமா? அல்லது மரிந்து போய் இருக்குமா?
இது போலீஸ் மச்சானுக்கும் கிராமத்து பெண்ணிற்கும் நடுவே ஆன உணர்வுப்பூர்வமான காதல்களம்.
இரண்டு ஜோடிகளோட அட்டகாசமான காதலை அறிய, படியுங்கள் "அக்னிக் கண்ணனின் மிட்டாய் குயில்" கதையினை.
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
3. 💘*"முள் மஞ்சமோ! மலர் தஞ்சமோ!"*
(லவ் & வில்லேஜ் ரொமான்ஸ் 💋)
amzn.eu/d/6GiGc4K
அன்பு பாசம் நேசம் அக்கறை என்று சிறுவதில் இருந்தே கிடைக்கப் படாதவள்.. பணத்தின் மேல் மோகம் கொண்ட தனது இரண்டாம் மனைவியின் பேச்சைக் கேட்டு பெற்ற மகளை, குடிகாரன், முரடன், பெண்பித்தன் என்று தெரிந்தும் நெஞ்சில் ஈரமின்றி வீராக்கு திருமணம் செய்து வைக்கிறார் சுப்ரமணி..
பிடிக்காத திருமணம் முடிந்து புகுந்த வீட்டிக்கு செல்லும் அப்பாவி மதுவை கண்ணீரில் மூழ்கடிப்பானா? அல்லது அவன் முரட்டுக் காதலில் உருக வைத்து திக்குமுக்காட வைப்பானா வீர்? என்பதை அறிந்துக் கொள்ள முள் மஞ்சம் கதையை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள். முழுக்க முழுக்க ரொமான்ஸ் கலந்த கணவன் மனைவியின் காதல் கதை தான்.
🍀🍀🍀🍀🍀🍀
@ThenisaiTamilNovels
46 - 3
*"அக்னிக் கண்ணனின் மிட்டாய் குயில்"*
அதிரடியான ஆன்ட்டி ஹீரோ கதைக்களம் விரைவில் உங்களது செவிகளை நிறைக்க வருகிறது🤩🎧🎶🎼
டீசர் கேட்டுட்டு எப்டி இருக்குனு சொல்லுங்க ஹனிஸ் ☺️
டேட் விரைவில் சொல்றேன். டைமிங் அதே 7.45 தான் 😅
youtube.com/shorts/d7swGVxgDy...
55 - 5
இனிய காலை வணக்கம் நண்பர்களே!🙏🏻
காலையிலேயே குட் நியூஸ் சொல்ல ஓடி வந்தாச்சு. அடுத்த ஆடியோ நாவல், *அக்னிக் கண்ணனின் மிட்டாய் குயில்* சூப்பரான Rj குரலில் விரைவில் வரவிருக்கு, டீசரும் வெளியாகும் 🥳
*முரண் மஞ்சத்தில் திமிராடும் மன்னவனே!*
முள் மஞ்சமோ!மலர் தஞ்சமோ! கதையின் இரண்டாம் பாகம் எழுத தொடங்கியாச்சு நண்பர்களே.
எழுத்து வடிவில் வாசிக்க விரும்புவோர் indhunovels.com தளத்தில் வாசிங்க. ஒவ்வொரு அத்தியாயத்தின் இணைப்பையும் தவறாமல் பெற, எனது முகநூல் குழு அல்லது டெலெக்ராம் குழு அல்லது வாட்சப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.
Facebook group
www.facebook.com/groups/970604894355155/?ref=share…
Telegram group
t.me/indhunovel
Watsup group
chat.whatsapp.com/GOuHAKoG7r54MdGIaKoJHr
134 - 16
🔥💖அமேசான் நியூ ரிலீஸ் 💃🏻🕺🏻
வதைக்கும் அகிம்சையே!: Vathaikum agimsaiye! (Tamil Edition)
amzn.in/d/ccNvAdO
அமேசான் id : indhu novels
மனைவி இருந்தும் அவள் உணர்வுகளை வதைத்து, அலட்சியம் செய்யும் ஒருவன்.
கல்யாணமே வேணாம் வப்பாட்டி போதும்னு இன்னொருவன்.
ஊருகெல்லாம் நல்லதை செஞ்சிட்டு, வீட்ல இருக்க அழகு சிலைய கலங்கடிச்சி, சாதி சனங்க முன்னாடி அவ தன் குடும்ப கௌரவத்த குலைச்சிடாளேன்ற கோவத்துல, கதறி துடிச்ச மனைவி, என்ன சொல்ல வர்றான்னு கூட கேக்காம, கட்டினவள வீட்ட விட்டே அடிச்சி துரத்துறான் அமரதேவன்.
இந்த பக்கம், வீட்டு வேலைக்கு வந்த கோதைய மிரட்டி, தனக்கு அடிபணிய வச்சவன் ஆனந்தபாலன்.
அவனை பாத்தாலே பயந்து நடுங்கி, நீ வேணாம் போடான்னு விலகி போறவள, தன் முரட்டுத்தனத்தால வதைப்பானா? இல்ல அவ மனச ஜெயிப்பானா?
ஆணும் வதைப்பான்!
பெண்ணும் வதைப்பாள்!
ஒவ்வொருவரின் வதைப்பும் அகிம்சையாய் தொடரும்.
ஒத்த ஆன்ட்டி ஹீரோக்கே கதிகலங்கி போகும். இங்க ரெண்டு பேர் இருக்கானுங்க. ஒவொன்னும் ஒவ்வொரு ரகமா. கிராமத்து பாஷை தித்திக்க தொடர்ந்து படியுங்கள்
"வதைக்கும் அகிம்சையே!"
⚡Available only on Amazon kindle⚡
படிச்சிட்டு கண்டிப்பா ரேட்டிங் + ரிவ்யூ கொடுங்க drs 🥰
136 - 20
https://youtu.be/tUBgxtthvOc?si=rjVIk...
எழுத்து வடிவில் 10 லட்சம் வாசகர்களை கடந்த கதையான "முள் மஞ்சமோ! மலர் தஞ்சமோ", ஆடியோ வடிவில் நம்ம சேனல்ல 1 லட்சம் வியூஸ் தாண்டின முதல் கதையாக உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி.
புதிய கதையின் அப்டேட் விரைவில் தர்றேன் drs, ஈர விழிகள் பார்ட் 2 நிறைய பேர் கேட்டு msg செஞ்சி இருக்கீங்க, ஞான் என்ன செய்யும் இன்னும் பிள்ளையார் சுழி கூட பார்ட் 2 க்கு ஸ்டார்ட் செய்யல 🥹
இப்போ எழுதிக்கிட்டு இருக்க கதையான "வதைக்கும் அகிம்சையே!" ஒரு மூன்று நாட்களில் முடிச்சிடுவேன்னு நினைக்கிறேன்🫣. அது முடிஞ்சதும் முள் மஞ்சம் பார்ட் 2 ஸ்டார்ட் செய்யணும். அதன்பிறகு தான் ஈர விழிகள் பார்ட் 2 தொடங்கணும். ஒட்டுமொத்தமா போனா மூளை குழம்பி போய்டுவேன் 😵💫
ஒவ்வொண்ணா முடிச்சிட்டு வர்றேன் வெயிட் பண்ணுங்க 🥹🥰❤️
ஏதாவது டவுட்னா கேளுங்க சொல்றேன் 😊👍🏻
74 - 15
@ThenisaiTamilNovels
"ராட்சனின் சுடரொளியே!" டாக்சிக் & சைக்கோ திரில்லர் கதையின் முழுதொகுப்பை ஆடியோ நாவலாக கேட்டு மகிழுங்கள்.
https://youtu.be/qdrhTW6uyAs?si=ajLYS...
12 - 1
இன்று மாலை ஆறு மணியளவில் "ராட்சசனின் சுடரொளியே" முழுதொகுப்பு வெளியாக இருக்கு drs. முழுகதைக்கு வெயிட் பண்ணவங்க கேட்டுட்டு மறக்காம லைக் கமெண்ட் பண்ணிடுங்க 😊
புதிய கதை விரைவில் அறிவிக்கிறேன். மறக்காம நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணி வச்சிக்கோங்க 💞
162 - 5
"ராட்சசனின் சுடரொளியே!" புத்தம் புதிய சைக்கோ திரில்லர் கதைக்களத்தை முழுமையாக கேட்டு மகிழுங்க drs. மறக்காம நம்ம சேனலையும் சப்ஸ்கிரைப் பண்ணி வச்சிக்கோங்க 😊
youtube.com/playlist?list=PLO...
கதையில் இருந்து சில துளிகள் 💃🏻👇🏻
Episode 7
அரசு மருத்துவமனையின் பிரசவ வார்டில் இருந்து பெரும் அலறல் சத்தம் தொடர்ந்து வந்து கொண்டே இருக்க, மருத்துவர்கள் சிலர் உள்ளே போவதும் வருவதுமாக பரபரப்பாக இருந்தது அவ்விடமே!
"நல்லா புஷ் பண்ணுமா.. முயற்சி பண்ணு கண்ண மூடாத. ம்ம்.. அப்படித்தான்.. நல்லா மூச்ச தம்கட்டி வயித்த புஷ் பண்ணு" மருத்துவரின் வழிகாட்டுதலின்படி என்ன முயற்சித்தாலும் அதற்கு மேலும் முடியாது கால்கள் துடித்து கண்கள் சொருக, "எ.என்னால முடியல டா.க்.ட.ர்ர்.." என மயங்கியவளை பதட்டமாக கன்னம் தட்டி முழிக்க வைக்க முயல, அனைத்தும் தோல்வி.
"டாக்டர் இந்த பொண்ணு கூட அவ புருஷனும் இல்லை வேற யாரும் இல்ல, சரியா குழந்தை வெளிய வர நேரத்துல மயங்கியும் போச்சி இப்ப என்ன பண்றது" இன்னொரு மருத்துவர் ஆயாசமாக கேட்டிட, "இப்படி நாளுக்கு ஒரு கேச பாக்கணும்னு நம்ம விதி. யாரும் இல்லனா எதுக்கு குழந்தை பெத்துக்க ஆசை படுதுங்க இதுங்க எல்லாம். உயிருக்கு ஏதாவது ஆபத்தானா நம்ம தலை தான் இங்க உருளும்" இன்னொரு மருத்துவர் அலுத்துக் கொண்டார்.
"வேற வழி இல்ல வழக்கம் போல, உடனடியா ஆப்ரேசன் பண்ணனும் இல்லாட்டி ரெண்டு உயிருக்குமே சிக்கல் தான்" என்னதான் அவர் வாய்க்கு வந்ததை திட்டித்தீர்த்தாலும் தன் கடமையில் சரியாக இருந்தவர், அடுத்தடுத்த வேலைகளில் தீவிரமானர்.
நீண்ட நேரப் போராட்டத்திற்கு பிறகு சிசரிங் செய்து ஒரு அழகிய ஆண் குழந்தையை வெளியே எடுத்த மருத்துவர்கள் அக்குழந்தையின் தோற்றம் கண்டு ஒருவர் முகத்தை மற்றொருவர் யோசனையாக பார்த்துக் கொண்டவர்களாக, சுத்தம் செய்து தையலிட்டனர்.
பிறந்ததும் குழந்தை அழுததோடு சரி அதன் பிறகு எந்த சத்தமுன்றி மயக்கத்தில் இருந்த அன்னையை தொல்லை செய்யாமல் வெள்ளைக்கார குழந்தை தன் குட்டி இமைகளை பிரிக்காமல் குட்டி பொம்மை போல் துயில் கொள்ளும் அழகினை திகட்டாமல் ரசிக்கலாம்.
முழுதாக பன்னிரண்டு மணிநேரம் கழித்து மயக்கம் தெளிந்து வலியில் முணுகியபடியே கண் திறந்தவளின் கை வளைவில் கை காலை உதைத்துக் கொண்டு கொழுகொழு அமுல்பேபியாக படுத்து இருப்பதை பார்த்ததும் வியப்பில் ஆழ்ந்தவள், சட்டென எழப் போக வயிற்றில் தையலிட்ட இடத்தை சுற்றிலும் வலி உயிர் கொன்றது.
ஸ்ஸ்ஸ்..ம்மாஆஆ... என்ற சத்தம் கேட்டதுமே அங்கிருந்து தாதி ஓடி வந்து "வயித்துல தையல் போட்டு இருக்கு உடனே எல்லாம் அவசரமா இப்படி எந்திரிக்கக் கூடாது" என கடிந்துகொண்டே நன்றாக அவளை படுக்க வைத்தாள்.
"இதுதா உன் குழந்தை நல்லா பாத்துக்கோ, கண்ண கூட முழுசா திறக்கல ஆனா இப்பவே உன் குழந்தை ரொம்ப அடம் தெரியுமா, ஐயோ பாவம் பிள்ளைக்கு தொண்டை காஞ்சி போகுமேனு மத்த மதர்ஸ் மில்க் வாங்கி கொடுத்தா பசிஇருந்தும் பிடிவாதமா வாய திறக்கல. எவ்ளோ முயற்சிக்கு பிறகு சரி போகட்டும்னு மயக்கத்துல இருந்த உன்கிட்ட தான் பால் குடிக்க வச்சேன்" அவள் மகனின் சேட்டையை செவிலியர் சிலாக்கித்து கூறுவதை ஏதோ புரியாத மொழியை புதிதாக கேட்பது போல் கண்களை உருட்டி கேட்டாள் யமுனா.
******
அவ்வப்போது அந்த குட்டிக் கண்களை பாதியாக திறந்து மீண்டும் படக்கென மூடிக்கொண்டதை பார்த்து வேறு உள்ளுக்குள் பூகம்பம் உண்டாகி வெடித்து சிதறிய உணர்வு.
"ஐயோ கடவுளே என்ன ஒரு சோதனை. இத்தனை நாளும் என் வயித்துல உள்ள பிள்ளை நம்ம இந்திய நாட்டை சேர்ந்த ஒருத்தனோட குழந்தைனு நினைச்சிட்டு இருந்தா, இதென்ன வெள்ளைக்காரனுக்கு பிறந்த குழந்தை போலவே இருக்கு அதுவும் இந்த கண்கள் நீல நிறத்துல ரொம்பவே அழகா இருந்தாலும் சட்டுனு பாக்க உடம்பெல்லாம் நடுங்குது"
மனதில் கலக்கமாக நினைத்திருக்க, தாயின் கவனத்தை தன் புறம் திருப்ப குட்டிக்காலை லேசாக தூக்கி உதைத்துக் காட்டியதும், மனதில் ஆயிரம் கவலைகள் இருந்தும் தன்னையும் அறியாமல் குழந்தையின் அழகிய குரும்பினை ரசிக்கத் துவங்கினாள்.
"என்னமா அயல்நாட்டு ஆள லவ் பண்ணி கட்டிக்கிட்டியா, குழந்தை அப்படியே வெள்ளைக்கார பிள்ளையாட்டாமே இருக்கானே!" அங்கிருந்த சில புதிய தாய்மார்கள் சிலரும் ஆச்சரியமாக கேட்டதில், முகம் சுருங்கிய யமுனா வேறு வழியின்றி பொய்யாக தலையாட்டிக் கொண்டாள்.
அரசு மருத்துவமனை என்பதால் வேளாவேளைக்கு பத்திய உணவு, பால் பழம் அனைத்தும் வந்து விடும். ஆனால் அறுவைசிகிச்சை செய்த பச்சை உடம்புக்காரியை பாத்ரூம் அழைத்து செல்ல, உடை மாற்றி விட, தலை சீவ, அழும் குழந்தையை தூக்கி வைத்து கொஞ்ச என்று உடன் இருந்து கவனித்துக்கொள்ள யாரும் இல்லாமல் குழந்தையை தனியாக வைத்துக் கொண்டு மிகவும் சிரமப்பட்டுவிட்டாள்.
"என்னமா காதலிச்சி கல்யாணம் பண்ணிக்கிட்ட அதனால உன் வீட்ல இருந்து யாரும் உன்னையும் குழந்தையும் பாக்க வரல சரி ஆனா குழந்தையோட அப்பா கூடவா வந்து எட்டிப் பாக்க கூடாது?"
"அதானே.. நம்ம ஊரு ஆம்பளைங்க பலருமே ஆச அறுபது நாளு மோகம் முப்பது நாளுனு துண்டக்காணோம் துணியக் காணோம்னு ஓடிப் போற காலத்துல, இந்த புள்ள கட்டிக்கிட்டதோ அயல்நாட்டுக்காரன அவன் எப்படி இருப்பான் சொல்லு, இந்நேரம் வேற ஏதாவது வெள்ளைக்கார குட்டிகூட கூத்தடிச்சிட்டு இருக்க கூட வாய்ப்பிருக்கு"
அவள் காது படவே தங்களுக்குள்ளே ஒவ்வொரு கதையாக திரித்துப் பேசிக் கொண்டே அவளுக்காக உதவி செய்தவர்களை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது அவளால்.
******
Episode 10
குழந்தை வீரிட்டு கத்த கத்த இங்கோ யுகனின் மனமெல்லாம் ஒரே படபடப்பு உண்டான உணர்வு. காரணமே இன்றி இதுவரை தோன்றாத புதியதோர் உணர்வாக எந்த வேலையிலும் நாட்டம் இல்லாமல் கடமைக்கே என அவன் பல கனவுகளோடு உருவாக்கிய புதிய வங்கிக் கட்டடங்களை எல்லாம் மேற்பார்வை இட்டபடி இருந்த யுகனின் மாற்றத்தை ஸ்டீஃபன் தாமதமாகவே கவனித்தான்.
"சார் எனி ப்ராப்லம். வர்க்ஸ் எதாவது குறையா?" பவ்வியமாக கேட்டிட, "ம்ஹும்.. நத்திங் நான் கொஞ்சம் வெளிய போறேன் நீ மத்த பிராஞ்சஸ்க்கு விசிட் போய்ட்டு வா" ஒரே வரியில் முடித்துக் கொண்டு விருவிருவென அங்கிருந்து சென்றதும், "ஐயோ தெரியாத ஊர்ல தனியா போறாரே" அவனை தடுக்க முடியாமல் புலம்பிய ஸ்டீஃபன், அவசரமாக காட்ஸை யுகனுக்கு துணையாக அவன் பின்னால் அனுப்பி விட்டு யாருக்கோ குறுஞ்செய்தி அனுப்பினான்.
டேபை எடுத்து ஏற்கனவே வரைந்து வைத்த ஓவியப்பெண்ணின் முகத்தினை ஆழ்ந்து பார்த்து மூச்சை வெளியிட்டவன், "வேர் ஆர் யூ பேபி. உனக்கு ஏதாவது ப்ராப்ளமா? இங்க வந்ததுல இருந்தே உன்னை பாக்கணும் போல மனசு உந்தி தள்ளுது, சீக்கிரம் நீ எங்க இருந்தாலும் தேடி வருவேன். என்னோட தூக்கிட்டு போக"
ஓவியத்தை பார்த்து தானாக பேசியபடி இலக்கின்றி காரை ஓட்டிய யுகன், யாருமற்ற மலை பகுதியில் அருவி கொட்டும் சலசலப்பை கேட்டதும் அவ்விடத்தில் காரை நிறுத்தி சிகரெட்டை எடுத்து பற்ற வைத்து ஆழப் புகைத்து கண்மூடி சீட்டில் சாய்ந்தான்.
"சரித் எதுக்கும் குழந்தைய ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய்ட்டு வரலாமா, ஏன்னே தெரியாம நிறுத்தாம அழறானே பயமா இருக்கு" குழந்தையின் காரணமற்ற அழுகையில் தாயுள்ளம் தவித்து போனது.
"நானும் அதைத்தான் நினச்சேன் இதழ். ஆனா உன்னால சரியா நடக்கக்கூட முடியலயே எப்படி வருவ" குழந்தை பிறந்து பதினைந்து நாட்கள் மட்டுமே ஆகிய நிலையில் இருவரையும் எப்படி அழைத்து செல்வது என்ற கவலை அவளுக்கு.
"பரவால்ல சரித், என் குழந்தைக்காக தானே நான் மேனேஜ் பண்ணிக்கிறேன், இவன் இப்படியே அழுதுட்டு இருந்தா என்னால நிம்மதியா இருக்க முடியல டி" என்றதும் இருவருமாக கிளம்பி ஒரு டாக்சி பிடித்து மெதுவாக அதில் பயணிக்கத் துவங்கியதில் குழந்தையின் அழுகை சத்தம் அப்படியே நின்றதும் இருவருக்கும் ஆச்சரியம்.
(பயபுள்ள இப்பவே ஊரை சுத்திப்பாக்க ஆசை படுது போல)
******
Episode 12
"இதழ் இப்ப நீ எங்க ஸ்டே பண்ணிருக்க, உன்னை பாக்க நீ ஏற்கனவே வேலை பார்த்த ரெசார்ட்க்கு போனேன் வேலைய விட்டு நின்னுட்டதா சொன்னாங்க, உன்னை காணாம சோர்ந்து போய் திரும்ப ஊருக்கே போக வந்துட்டு இருந்தேன், கடைசில போற வழில உன்னை நேர்லயே பாத்துட்டேன்" என்றவனின் பார்வை எல்லாம் அந்த பச்சிளம் குழந்தை மீது தான் இருந்தது.
"சரித் டாக்ஸி கூப்பிடு என்னால முடியல" திலீப் என்ற ஒருவன் இருப்பதையோ அவன் பேசுவதையோ கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் முகத்தை தீண்டிய சூரிய வெளிச்சத்தை கரம் கொண்டு மறைத்தாள் யமுனா.
"வா இதழ் நானே கார்ல ட்ராப் பண்றேன், சரித்ரா நீங்களும் குழந்தைய தூக்கிட்டு வாங்க" அவன் கார் நிப்பாட்டி இருக்கும் திசையை கைக்காட்டி ஆர்வமாக அழைக்க, சலிப்பாக திரும்பிக் கொண்டனர்.
அவர்களை போக விடாமல் தடுத்து நிறுத்தி எதையோ சொல்ல வந்த திலீப்பை இரு பெண்களும் மாறி மாறி திட்டித்தீர்த்தபடி அவனை தாண்டி செல்ல முயல, யாரும் எதிர்ப்பாராத நேரத்தில் புயல் வேகத்தில் காற்றாய் நுழைந்த அந்த ராட்சச உருவம் யமுனாவின் பின்னங்கழுத்தினை அழுத்தமாகப் பற்றி அவளின் செவ்விதழ்களை கவ்வி சுவைத்துக் கொண்டிருப்பதை பார்த்து மூளை செயலிழந்த நிலையில் அனைவருமே அதிர்ந்து போயினர்.
எழுத்து வடிவில் தொடர்ந்து படிக்க 👇🏻
பிரதிலிபி link 👇🏻
"ராட்சசனின் சுடரொளியே (முடிந்தது)", - பிரதிலிபியில் படிக்க :,
pratilipi.page.link/M7ypB2EDuTeTWQX29
அமேசான் link 👇🏻
ராட்சசனின் சுடரொளியே!: Ratchasanin sudaroliiye! (நாவல்) (Tamil Edition)
amzn.in/d/5VM0tzB
159 - 0
நலமும் வளமும் பெருகும் தித்திக்கும் தை பொங்கல் வாழ்த்துக்கள்.
ராட்சசன்க்கு எதிர்பார்த்ததை போலவே நல்ல வரவேற்பு வருது drs, ஆனா சப்ஸ்கிரைப் பண்ண மாட்றீங்களே. மேலும் சில பகுதிகள் மட்டுமே இருக்கு கொஞ்சம் சப்ஸ்கிரைப் பண்ணிட்டு கதை கேளுங்க பட்டூஸ்
104 - 9
#free promotion post
ஹாய் ப்ரெண்ட்ஸ்
" எனை ஏனடி வதம் செய்கிறாய் " ( ஆண்டவன் கட்டளை ) ஆடியோ நாவலாக நமது சேனலில் வெளி வந்துள்ளது அனைவரும் கேட்டு மகிழுங்கள் வேறு எங்கும் கிளைகள் கிடையாது...
Love 😍+ romance👩❤️👨 + comedy 😂
டீசர் கீழ இருக்கு 👇🏻👇🏻👇🏻டீசர் பிடிச்சா முழு story லிங்க் முன்னாடி கேட்டு பாருங்க
Link📌📌
எனை ஏனடி வதம் செய்கிறாய் : ஆண்டவன் கட்டளை
https://youtu.be/wJXUzSbuIQ8?si=Nv49d...
teaser1️⃣ 🎬🎬
அப்போது அவள் முன் அமர்ந்தவன் " அம்மா எனக்கு குழந்தை இல்ல எப்போ பொறக்கும்னு சொன்னா வசதியா இருக்கும் " என்று கேட்க " பொறக்கும் டா கண்டிப்பா பொறக்கும்... கூடிய சீக்கிரமே நல்ல சேதி வரும்டா " என்று சாமி ஆடியவாரு சொல்ல அப்போது எதிரில் இருந்தவன் போன் ஒலிக்க எடுத்து பேசினான்.
அந்த பக்கம் என்ன சொல்ல பட்டதோ " ஆஆ சரி " என்று வைத்தவன் அவள் முன் விழுந்து வணங்கி " ஆத்தா உன் மகிமையே மகிமை... நீ சொன்ன வாய் முக்கூர்த்தம் என் பொண்டாட்டிக்கு உடனே குழந்தை பிறந்துருச்சாம் " என்று கத்த " எதே " என்று அதிர்ச்சியாகி நின்றாள்.
அவளுடன் இருந்த அனைவரும் அதிர்ச்சியாக அவனை பார்க்க ஸ்ருஷ்டி அதிர்ச்சியில் இருந்து மீண்டு " என்ன அதுக்குள்ள பொறந்துருச்சா.. ஏற்கனவே உன் மனைவி மாசமா இருந்தாங்களா " என்று கேட்க " இல்ல அம்மா " என்று பவ்யமாக பதில் சொன்னான்.
ஸ்ருஷ்டி தன்னை மீறி " எப்புட்றா " என்று கேட்டு விட்டாள்.
Teaser 2️⃣ 🎥🎬
டீசர் 📌📌🖇️🖇️
ஹாஸ்பிட்டல் அட்டையில் பெயர் எழுதி கொண்டிருந்த நர்ஸ் " உங்க பேர் என்னமா? " என்று கேட்க " ஸ்ரு " என்று ஸ்ருஷ்டி ஆரம்பிக்க அருகில் இருந்த வித்யூத் வேகமாக " விஷாகா " என்று சொல்ல ஸ்ருஸ்டிக்கும் வித்யூத்திற்கும் இடையில் இருந்த பிரம்மரிஷி அவனை முறைத்து பார்த்தான்.
அவள் பெயரை எழுதிய செவிலியர் " குழந்தையோட அப்பா பெயர் " என்று ஆரம்பித்தவரிடம் இன்னொரு செவிலியர் " அக்கா ஸ்கேன் டோக்கன் மேம் வாங்கிட்டு வர சொன்னாங்க " என்று கேட்க அதனை எடுத்து கொடுத்தவர் ஸ்ருஸ்டியிடம் " உன் புருஷன் பேர் சொல்லுமா " என்று சொல்ல ஸ்ருஷ்டி வித்யூத், பிரம்மரிஷி இருவரையும் பார்த்து உதட்டில் கை வைத்து யோசித்தாள்.
" என்னம்மா குழந்தையோட அப்பா பேர் சொல்லு " என்று மீண்டும் கேட்க " உங்களுக்கு குழந்தையோட அப்பா பேர் சொல்லனுமா என் புருஷன் பேர் சொல்லனுமா " என்று கேட்க ' என்ன இது இப்படி கேக்குது ' என்று நர்ஸ் பார்க்க ஆண்கள் இருவருமே அவளை முறைத்து கொண்டு நின்றார்கள்.
" என்னமா கேக்குற " என்று நர்ஸ் மீண்டும் கேட்க ஸ்ருஷ்டி நர்ஸிடம் பிரம்மரிஷி வித்யூத் இருவரையும் காண்பித்து " மாப்பிள்ளை இவர் தான் ஆனா சட்ட அவருது " என்று சொல்ல ஆண்கள் இருவரும் அவளை கொலை வெறியில் பார்க்க அப்போதும் நர்ஸ் முழுதாக விளங்காமல் " என்ன " என்று கேட்க " அதாவது " என்று அவள் விளக்கம் கொடுக்கும் முன் அவள் வாயை பொத்திய பிரம்மரிஷி " ப்ரக்னன்சி சிம்டம்ஸ் அதான் உலறா " என்று சொல்ல வித்யூத் வேகமாக " பேபி அப்பா பேர் வித்யூத் " என்று சொன்னான்.
அவனுக்கு விஷாகா பேர் பக்கத்தில் கூட ரிஷியின் பேர் வருவது பிடிக்கவில்லை பாவம் அவனுக்கும் அவ்வாறு தான் இருக்கும் என்பதை வசதியாக மறந்துவிட்டான்.
101 - 1
Hello friends! Welcome to Indhu's Love Audio books 💕
I am Tamil novel writer.
Indhu 💘
Enjoy reading and listening to my heart-melting love stories 🤗
Each story is unique, with multiple twists and turns, and is sure to blow your mind
Love & romance, action, village love, sentiment, family drama, thriller, fantasy, rain drama, anti-hero, love drama, crime stories, comedy ect..
Don't forget to subscribe our channel. Then like, comment and share each story.
All my stories are available in book form on Amazon and pratilipi.
But the audio is only on our channel 🎧💃🏻
To contact me,
You can follow and join in my Instagram, facebook group, watsup chennal and telegram channel.
🖇️📌 Links are on my YouTube home page
⚠️ Warning
All my stories are copyrighted. No one should copy my stories or change the name and make them into other stories, take pdf, convert to audio and publish on other channels. I clearly state that it is an offense under the law.