.
சீனாவின் பெரிய செல்வந்தர் ஜாக் மா வின் கூற்றின்படி
குரங்கிற்கு முன்பாக பணத்தையும் வாழைப்பழத்தையும்
வைத்தால் அது வாழைப்பழத்தையே தெரிவு செய்யும்.
.
ஏன் என்றால் அதற்கு பணத்தைக் கொண்டு
அதிக வாழைப்பழங்களை வாங்கலாம் என்று தெரியாது.
.
அதே போல் மக்களுக்கு முன் வேலையையும் வியாபாரத்தையும் வைத்தால் பெரும்பாலானோர் வேலையையே தெரிவு செய்வார்கள். ஏன் எனில் அவர்களுக்கு வேலையை விட வியாபாரத்தில் அதிக பணம் ஈட்டலாம் என்பது தெரியாது.
.
ஏழைகள் ஏழைகளாகவே இருப்பதற்குரிய காரணங்களில் ஒன்றாக அவர்கள் சுய தொழில் வாய்ப்புகளை அடையாளம் காணக்கூடிய பயிற்சியை பெற்றுக்கொள்ளாமை காணப்படுகிறது.
.
அவர்கள் பாடசாலைகளில் கூடுதலான நேரத்தை செலவு செய்து கற்றுக்கொள்வது யாதெனில் தமக்காக வேலை செய்யாது மாதாந்த ஊதியத்துக்கான வேலைகளை செய்வதற்கே.
.
இலாபம் சம்பளத்தை விட சிறந்தது. ஏனெனில் சம்பளம் உங்களுக்கு உதவலாம். ஆனால் இலாபம் உங்களுக்கு உயர்ந்த அதிர்ஷ்டம் நல்கும்.
.