நல்லவர்கள் நிறைந்தது இவ்வுலகம் என்ற நம்பிக்கையை குழந்தைகள் மனதில் விதைக்கும் ஒரு முயற்சி. கதைகள் வழியே சிந்திக்கும் ஆற்றல் தூண்டப்படும் குழந்தைகள் மன வளர்ச்சியில் சிறந்து, ஆற்றல் பெருகி, உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதில் தேர்ந்து, பிரச்சினைகளையும் அதற்கான தீர்வுகளையும் ஆய்ந்தறிந்து, செயல்திறனில் சிறந்து விளங்கி, மிகுந்த நம்பிக்கையுடன் வாழ்வை எதிர்கொள்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நமது பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் அழித்தொழிக்கும் திரைப்படங்கள், மற்றும் டிவி தொடர்களால் ஏற்படும் மனச் சிதைவுகளில் இருந்து நமது இளைய தலைமுறையை மீட்டெடுக்கும் ஒரு சிறு முயற்சியாக, நமது முன்னோர்கள் நமக்கு சொன்ன, நாம் அறிந்த நன்னெறிக் கதைகளை அடுத்த தலைமுறைக்கு பகிரும் ஒரு முயற்சியே இந்த சேனல். நல்லன கேட்டு, நல்லன பகிர்ந்து, ஒரு நல்ல வருங்கால இளைய சமுதாயத்தை கட்டமைப்போம் என்ற நம்பிக்கையுடன் சேர்ந்து பயணிப்போம், வாருங்கள்.
Disclaimer: This Channel is for ALL. Request Parents to listen to these stories and tell it to your kids in your own style, with suitable Additions / Deletions / Modifications.