in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
OFFICIAL YOUTUBE CHANNEL OF "Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
கு. ஞானசம்பந்தன் - தமிழ்த் துறைப் பேராசிரியர், நகைச்சுவைப் பேச்சாளர், எழுத்தாளர், நடிகர் என்று பல துறைகளில் புகழ் பெற்றவர். இருப்பினும் இவர் தமிழ்நாட்டு மக்களுக்கு பட்டிமன்ற நடுவராகவே அதிகம் தெரிந்தவராக இருக்கிறார்.
மதுரையிலுள்ள தியாகராசர் கல்லூரியில் தமிழ்த்துறையில் இணைப்பேராசிரியராகப் பணியாற்றி தற்போது அக்கல்லூரியின் தகைசால் பேராசிரியாக உள்ளார்.
நகைச்சுவையில் ஈடுபாடுடைய இவர், 25 ஆண்டுகாலமாக இயங்கிவருகின்ற மதுரை நகைச்சுவை மன்றத்தின் தலைவராக உள்ளார். மேலும் சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், நாகர்கோவில், திண்டுக்கல், திருநெல்வேலி, சிவகங்கை உட்பட 17 மாவட்டங்களில் நகைச்சுவை மன்றங்களை நிறுவி அதன் நிறுவனராக இருந்து வருகிறார்.
தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா வழங்கிய 2005 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது.
1995ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி வழங்கிய “தமிழ் இயக்கத்தின் சிற்றரசு” பட்டம்.