Channel Avatar

Mishkath Research Institute @UCWWzYNgq1E1-OcM7hwXz1iw@youtube.com

3.1K subscribers - no pronouns :c

Our channel is your source for Quran Tafsir, the latest Isla


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

Mishkath Research Institute
Posted 11 months ago

Sura Najm Tamil Thafseer

2 - 0

Mishkath Research Institute
Posted 1 year ago

நூல் அறிமுகம்


ஷெய்க் அப்பான் அப்துல் ஹலீம்

இஸ்லாத்தின் பொருளாதாரக் கட்டமைப்பின் மிக முக்கிய அடிப்படைகளுள் ஒன்றான ஸகாத் பற்றிய எளிமையானதும் செறிவானதுமான ஒரு தொகுப்பாக மிஷ்காத் ஆய்வு நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள



"ஸகாத் ஒரு நடைமுறை வழிகாட்டி" என்ற நூல் அமைந்திருக்கின்றது.

ஸகாத் சம்பந்தமான இஸ்லாத்தின் அடிப்படைகள் யாவும் எவரும் விளங்கிக் கொள்ளும் வகையில் தெளிவுபடுத்தப்பட்டிருக்கும் அதேவேளை.



நவீன பொருளாதார முறைமைகள் ஏற்படுத்தியிருக்கும் சிக்கலான பொருளியல் வாழ்வொழுங்குக்குள் ஸகாத் எனும் கடமையின் அடிப்படைகள் மீறப்படாமல் அதனை நிறைவேற்றுவதற்குரிய நடைமுறை வழி காட்டல்களை இத்தொகுப்பு உள்ளடக்கியிருக்கின்றது.

ஸகாத் தொடர்பான இஸ்லாமிய மற்றும்
ஆன்மீக அறிமுகம்



ஸகாத் செலுத்தப்படத் தகுதி பெறும் செல்வம் மற்றும் அதன் நிபந்தனைகள்

ஸகாத் பகிர்ந்தளிக்கப்படுகையில் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய நிபந்தனைகள் என

அனைத்தும் பகுதிகளையும் நடைமுறை உதாரணங்களோடு இப்புத்தகம் உள்ளடக்கியிருக்கின்றது.



இத்தொகுப்பின் சிறப்பம்சங்களாகப் பின்வருவன வற்றைக் குறிப்பிடலாம்:



1. நூற்றுக்கும் குறைவான பக்கங்களுக்குள் இஸ்லாத்தின் ஐம்பெரும் தூண்களுள் ஒன்றான ஸகாத் பற்றிய பல்பரிமாண வழிகாட்டல்களை தொகுத்தி ருத்தல்.

ஸகாத் என்பது பொதுவாகவே மிகவும் நீளமான விளக்கங்களை வேண்டி நிற்கும் தலைப்பாகவே கருதப்பட்டுவந்திருக்கின்றது.



இது தொடர்பில் எழுதப்பட்டுள்ள பல்வேறு புத்தகங்களும் அந்த அமைப்பிலேயே எழுதப்பட்டும் இருக்கின்றன.



இந்தப் புத்தகமானது நாட்பட்ட அந்தப் புரிதலைத் தகர்த்திருப்பது மட்டுமல்ல.

ஸகாத் பற்றிய தெளிவுபடுத்தல்களில் எவ்வித சமரசத்தையும் மேற்கொள்ளாமல் அதனைச் சுருக்கமாக முன் வைத்திருப்பதானது உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய ஒரு முயற்சியாகும்.



2. ஸகாத் கடமையானவர்கள், ஸகாத்தை நிறுவனரீதியாக நிறைவேற்றும் பொறுப்பில் உள்ளவர்கள், ஸகாத் பற்றிக் கற்பவர்கள், ஸகாத் பற்றிய கேள்விகளுடன் உள்ளவர்கள்.

என சகலரும் ஸகாத் பற்றித் தமக்குத் தேவையான அறிவைப் பெற்றுக்கொள்ளும் வகையில் இப்புத்தகம் வடிமைக்கப்பட்டிருத்தல்,



ஸகாத் தொடர்பான அறிவை மேற்படி எந்த நோக்கத்துக்காக வாசித்தாலும் வாசிப்பவரின் நோக்கம் நிறை வேறக்கூடிய வகையில் இப்புத்தகம் வடிவமைக்கப்பட்டிருக்கிறதென உறுதியாகக் கூறலாம்,



பொதுவாக இவ்வாறான புத்தகங்கள் இவ்வாறான பல்வேறு நோக்கங்களை ஒரே அட்டைக்குள் அடைந்துகொள்ளும் வகையிலோ அல்லது வாசகர்களின் வித்தியாசமான தேவைகளை ஒரே சந்தர்ப்பத்தில் பூர்த்தி செய்யும் வகையிலோ அமைந்திருப்பதில்லை.



அந்த வகையில், மிகவும் வெற்றிகரமான ஒரு மாற்று முயற்சியாக இப்புத்தகம் அமைந்திருக்கிறதென்பதில் சந்தேகமில்லை.



3. தலைப்பை சிக்கலாக்காமலும் வாசிப்பில் களைப்பு ஏற்படாத வகையிலும் மிகவும் கவர்ச்சியாகவும் தரவுகள் மற்றும் உதாரணங்களை உள்ளடக்கிய வகையிலும் பக்க வடிவமைப்பை மேற்கொண்டிருத்தல்,



இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டம் மற்றும் ஸகாத் ஆகிய தலைப்புக்கள் பெரும்பாலும் மக்கள் மத்தியில் எளிய புரிதலை விட்டும் மிகவும் தூரத்திலேயே இருந்து வருகின்றன.

அதில் ஸகாத் எனும் தலைப்பைச் சூழ இருக்கின்ற பல்வேறு புரிதல் சார்ந்த முடிச்சுக்களை அவிழ்த்து, சிக்கலற்ற ஒரு புரிதலை முன்வைக்கும் முயற்சியில் இப்புத்தகம் வெற்றி பெற்றிருக்கிறது.



புத்தகம் கறுப்பு-வெள்ளையில் இல்லாமல் கவர்ச்சியான நிறக்கலவைகளோடு அச்சாகியிருப்பதும்

அடர்த்தியான பக்கவடிவமைப்பு தவிர்க்கப்பட்டு கண்ணுக்கு இலகுவான வகையில் அமைக்கப்பட்டிருப்பதும்

பட விளக்கங்கள், அட்டவணைகள் பொருத்தமானதும் நடைமுறைரீதியானதுமான உதாரணங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதும்

புத்தகத்தின் நோக்கத்தை நிறை வேற்றுவதில் பெரும் பங்காற்றுகின்றன.



4. கருத்து வேறுபாடுகள் மற்றும் இலங்கைச் சூழலின் தேவைக்கு அவசியமற்றவை என்பவற்றைத் தவிர்த்து, தெளிவானதும் சுருக்கமானதுமான வழிகாட்டல்களைக் கொண்டிருத்தல்,

இஸ்லாமிய ஃபிக்ஹ் ரீதியான கலந்துரையாடல்கள் மக்கள் மன்றத்துக்கு வரும்போது தவிர்க்கப்பட வேண்டிய இரு அம்சங்களும் தவிர்க்கப்பட்டிருப்பதானது இப்புத்தகத்தின் தனிப்பெரும் சிறப்பம்சம் என்லாம்,

தலைப்பு சார்ந்த கருத்துவேறுபாடுகள் மற்றும் இலங்கைச் சூழலுக்கு அவசியமற்றவை என்பன புத்தகத்தில் தவிர்க்கப்பட்டிருக்கின்றன.

இதனூடாக “நடைமுறை வழிகாட்டல்" என்ற தலைப்புக்கு நீதி செலுத்தும் வகையில் புத்தகத்தின் உள்ளடக்கம் அமையப் பெற்றிருப்பதை அவதானிக்கலாம்.



5. ஸகாத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்களையும்

ஸகாத்தை வழங்குவதற்கான வழிகாட்டல்களை ஒரே அட்டவணையில் தொகுத்துத் தந்திருத்தல்,

பிக்ஹ் சார்ந்து அதிகம் கேள்வி கேட்கப்படும் ஒரு தலைப்பாக ஸகாத் இருக்கின்றது. அந்தவகையில் அத்தகைய முக்கியமான கேள்விகளுக்கான நடைமுறைரீதியான பதில்கள் உள்ளடக்கப்பபட்டிருப்பதும்



ஸகாத்தை வழங்குபவர்கள் மற்றும் அதனை நிர்வகிப்பவர்களது வேலையை இலகுபடுத்தும் வகையில் அது தொடர்பான நடைமுறை வழிகாட்டல்களை ஒரே அட்டவணையில் தொகுத்துத் தந்திருப்பதும் ஈண்டு குறிப்பிடத்தக்கவையாகும்.



பொருளாதார சிக்கல்கள் மிகவும் குறைவாக இருந்த ஒரு காலத்தில் ஸகாத்தை நடைமுறைப்படுத்தும்போது தேவைப்பட்ட வழிகாட்டல்களை விட மிகவுமே சிக்கல்கள் நிறைந்த ஒரு பொருளாதார ஒழுங்குக்குள்



ஸகாத்தை நடைமுறைப்படுத்தும்போது தேவைப்படும் வழிகாட்டல்கள் அதிகமானவை. இஸ்லாத்தின் அடிப்படையான கடமைகளில் நடைமுறை சார்ந்த இஜ்திஹாத்கள் அதிகம் தேவைப்படும்
ஒரு கடமையாகவும் ஸகாத்தே இருக்கின்றது.



அந்தவகையில் சிக்கலான பொருளாதார ஒழுங்கொன்றுக்குள் ஸகாத்தின் தூய்மை கெடாமல் அதனை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான வழிகாட் டல்களைத் தொகுத்து வழங்குவதற்கென மேற்கொள்பட்டிருக்கும் இந்த ஆய்வானது (இஜ்திஹாத்) கட்டாயம் விதந்துரைக்கப்பட வேண்டியதாகவே இருக்கிறது. என்பதில் சந்தேகமில்லை.



இதில் ஈடுபட்ட அனைவருக் கும் அல்லாஹுத் தஆலா அருள்பாலிப்பானாக!



எல்லா நூலகங்களிலும் எல்லா வீடுகளிலும் இருக்க வேண்டிய எல்லோராலும் கட்டாயம் வாசிக்கப்பட வேண்டிய ஒரு புத்தகமாக இதனைப் பரிந்துரை செய்யலாம்.



நீங்கள் ஸகாத்தைப் பற்றி எந்தப் பின்னணியில் அறிந்துகொள்ள வேண்டி வாசித்தாலும் இப்புத்தகம் குறிப்பிடத்தக்களவு தூரத்துக்கு உங்கள் நோக்கத்தை நிச்சயம் பூர்த்தி செய்யும்.

தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் அச்சிடப்பட்டிருப்பதன் மூலம் பெரும் வாசகர் வட்டமொன்றைச் சென்றடையும் வாய்ப்பை இப்புத்தகம் உருவாக்கியுள்ளது.

இலங்கைக்கு வெளியிலும் அறிமுகப்படுத்தப்படுமானால் ஒரு சர்வதேசப் பங்களிப்பாக இப்புத்தகம் அமையும் என்பதில் சந்தேகமில்லை.



நன்றி
விழுமியம்
நூல் அறிமுகம்

Sheikh Affan Abdul Haleem

ஸகாத் பற்றி இந்நூலை உங்கள் வீடுகளுக்கே இலகுவாக பெற்றுகொள்ள
வட்ஸப் மூலம் தொடர்புகொள்ளுங்கள்
wa.me/94777891344
077 789 1344


.

3 - 0

Mishkath Research Institute
Posted 1 year ago

General conditions of Zakatable wealth

1 - 0

Mishkath Research Institute
Posted 2 years ago

-நபியவர்களின் எளிமையான வாழ்க்கை-

மனிதநேயத் தூதர் முஹம்மத் (ஸல்)
https://youtu.be/m-e1v7eLNhE

2 - 0