Channel Avatar

Ungal Amma @UCWDviecU2lys74ZFubqKTVQ@youtube.com

187K subscribers - no pronouns :c

🔱ஆன்மீகம் என்பது ஒரு ஆழ் கடல் போன்றது. அதில் இருக்கும் தத்த


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

Ungal Amma
Posted 3 days ago

தாய்மையின்றி தலைமுறை ஏது ? பெண்களின்றி பிரபஞ்சம் ஏது ? மகளிர் தின வாழ்த்துக்கள்மக்கா 👍💞

329 - 6

Ungal Amma
Posted 3 weeks ago

‪@ungalamma‬
இன்று 17.02.2025
தேய்பிறை பஞ்சமி..

இன்று வாழ்வை வசந்தமாக்கி , ஐஸ்வர்யம் நிலைக்கச் செய்யும் பஞ்சமி வாராஹி வழிபாடு!

இன்று பஞ்சமி திதி நாளில், வராஹிதேவி யை வழிபடுங்கள். எதிர்ப்பு களையெல்லாம் தவிடு பொடியாக்கி, காரியங்களில் வீரியத்தை கொடுப்பாள். வெற்றியைத் தந்தருள்வாள்.

இந்த பஞ்சமி திதியில் வாராஹியை வழிபட்டு வந்தால் எதிரிகளிடம் இருந்து நம்மை காத்து அருள்வாள் வாராஹி .

அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் இன்னல் கள், இடர்ப்பாடுகள், எதிர்ப்புகள் அனைத்தையும் வெற்றி கொள்ள வைக்கும் வழிபாடு தான் வாராஹி வழிபாடு.

நம்மை துன்பங்களிலிருந்து விடுபடச் செய்யவும் , எதிரிகளிடமிருந்து நம்மை காக்கவும் வாராஹி வழிபாடு சாலச் சிறந்தது.

12K - 79

Ungal Amma
Posted 3 weeks ago

பார்வைக்கு புலப்படாத சக்தி ஒன்று உங்களைச் சுற்றிலும் வியாபித்திருக்கிறது...

அந்த சக்தியை நீங்கள் கடவுள் என்றாலும் சரி இயற்கை என்றாலும் சரி ஆனால் மனிதனை மீறிய ஏதோ ஒன்று இருப்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை .

379 - 7

Ungal Amma
Posted 4 weeks ago

வீழ்ந்தோரும் வாழ்ந்தோரும் ..

"பேரரசன் ஒருவனிடம், வலிமை மிக்க யானை ஒன்று இருந்தது. போர்க்களம் செல்லும் போதெல்லாம் அதன் உடல் முழுவதும், வாட்கள் நிறைந்த கவசங்களால் மூடப்பட்டிருக்கும்..
அதன் வாலிலும் இரும்புக் குண்டு ஒன்று இணைக்கப் பட்டிருக்கும்..போர் சமயங்களில், அந்த யானையின் துதிக்கையில் அம்பு படாமல் இருக்க, துதிக்கையை நன்றாகச் சுற்றி வைத்துக் கொள்வதற்குப் பழக்கி இருந்தான் பாகன்..

ஒரு நாள் போர்க்களத்தில் அரச யானை புகுந்து எதிரிப் படைக்குப் பேரழிவைத் தந்தது..
அதன் அங்கங்களில் பொருத்தப்பட்டு இருந்த ஆயுதங்களில் ஒன்று கீழே விழுந்ததும், அதை எடுக்க, அதுவரை வளைத்து வைத்து இருந்த துதிக்கையை நீட்டியது யானை..

இதைக் கண்ட பாகன், துதிக்கையின் மீது எதிரிகள் ஈட்டியை எறிவதற்குள் விரைவாகக் களத்தில் இருந்து அந்த யானையை வெளியேற்றிக் கொண்டு வந்தான்..

அரண்மனையில் அரசனைச் சந்தித்த பாகன்,
அரசே, நேற்றைய போரில் நமது யானை, போர்க்களத்தில் சுருட்டி வைத்து இருந்த தனது துதிக்கையை வெளியே நீட்டி விட்டது. இனி அது போருக்குப் பயன்படாது' என்றான்..
அரசனும், அந்த யானையை இனி போரில் பயன்படுத்த வேண்டாம்' என்று சொல்லி விட்டார்..

மனிதர்கள் தங்கள் நாவை அடக்கும் வரையில் தான் நன்மை அடைவார்கள். துதிக்கையைச் சுருட்டி வைக்கும் வரை தான் யானைக்குப் பாதுகாப்பு இருக்கும்..

தேவையில்லாத இடங்களில் துதிக்கையை சுருட்டி வைத்துக் கொள்ளும் யானையைப் போல, அவசியம் இல்லாத இடங்களில், தங்களது நாவைக் கட்டுப்படுத்த வேண்டும்..

நாக்கின் நீளம் மூன்று அங்குலம் தான்., ஆனால் அது ஆறடி மனிதனையும் கொன்று விடும்"..

வெறுப்பிலும் கோபத்திலும் மகிழ்ச்சியில் கூட வார்த்தைகளை அளந்து பேசுங்கள்..

அது நமக்குத் திரும்பி வரும் போது எல்லாமே மாறி விடும்..

ஒரு உறுப்பை வைத்து ஒருவரின் பண்பை எடை போட முடியுமென்றால் அது நாக்கு தான்..

நாவின் வன்மையால் இவ்வையத்தில் வாழ்ந்தோரும் உண்டு. வீழ்ந்தோரும் உண்டு..

எனவே நாக்கை நமது கட்டுப்பாட்டுக்குள் எப்பொழுதும் வைத்திருக்க வேண்டியது மிக அவசியமாகும்..

தேவையற்ற பேச்சை எப்போதும், யாரிடமும் பேசாமல் இருப்பது நல்லது.. பேசும் போது நன்றாக சிந்தனை செய்து பேசினால் நன்மையே விளையும்..

யாரிடமும், அவர் மனம் புண்படும்படி பேசக்கூடாது. அவ்வாறு பேசினால், அதற்கான துன்பம் வந்து சேரும்..

நாக்கை அடக்கி ஆளக் கற்றுக் கொண்டால், உடலுக்கும் மனதுக்கும் நல்லது.

10K - 66

Ungal Amma
Posted 4 weeks ago

நமது வாழ்க்கையை வாராஹியிடம் ஒப்படைத்தபிறகு நாளை வாழ்வில் என்ன நடக்கும் என்று யோசித்து பயந்து கொண்டே இருந்தால் உன் பக்தி என்பது வெறும் வாயால் வருவது மட்டுமே...

மனதார பக்தி செய்பவர்கள் யாரும் நாளைய வாழ்வை நினைத்து கவலைபட மாட்டார்கள் ... ஏன் என்றால் அனைத்தையும் வாராஹியிடம் ஒப்படைத்தவர்களுக்கு பயமென்பதே இருக்காது ...

கருணை தாய் வாராஹி‌ நம்முடன் இருக்க எந்த குறையுமில்லை.

வஜ்ரகோஷம் 🙏

10K - 78

Ungal Amma
Posted 4 weeks ago

உயிரில் உரைத்த உண்மை🙏
பட்டினத்தார் சொன்னது...
உணவை தான் சாப்பிட்டேன் எப்படி மலம் ஆனது? உயிரோடு தானே இருந்தேன் எப்படி இறந்து போனேன்? மலம் தான் உணவாக இருந்ததா? மரணம் தான் வாழ்வாய் இருந்ததா? இந்த சுருங்கி போன உடம்புதான் இதுவரை இளமையை அனுபவித்ததா? இந்த சுருங்கும் மார்புகளுக்கா இத்தனைக் கண்கள் வட்டமிட்டது? பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும் என்று பாடியது இந்த நிலையற்ற பொய் வாழ்வைத்தானா?
இன்னும் இழுத்து கொண்டு இருக்கிறான். செத்து தொலையவில்லையே என்று மனைவியும் சுற்றமும் பேசிய போது, என்னை நூறாண்டு வாழ்க! என வாழ்த்தியது நினைவுக்கு வந்தது. இதுவரை எனது கோடாரியால் நான் எனது வேரையல்லவா வெட்டியிருக்கிறேன். நான் விரும்பியவை எல்லாம் என்னை வெறுத்து கொண்டிருக்கின்றன. இளமையாய் இருக்கும்போதே முதுமையை பழகி இருக்கவேண்டும். அறுசுவை உணவை தேடி தேடி உண்ணும் போதே அது மலமாகும் என்று உணர்ந்திருந்தால், அடுத்தவர் உணவை நான் பறித்திருக்கமாட்டேன்.
அனைவருக்கும் பயன்படவேண்டிய பொன் பொருளை ஒரு திருடனைப்போல் பதுக்கி இருக்கமாட்டேன். காலம் கடந்த ஞானம். பாயும், நோயும் தவிர யார் துணை வரப்போகிறார்கள். இறந்தாலும் எனக்காக யார் அழப்போகிறார்கள்? பிணமானப்பின் இந்த மாளிகையும் பணமும் எனதென்று நான் சொந்தம் கொண்டாடவா முடியும் சந்தனத்தால் மணந்த உடல் என்றாலும் இறந்தால் மணக்கவாப் போகிறது? கண்ணே மணியே என்று கொஞ்சிய தாயும், என் உயிரே என்று சொன்ன மனைவியும் பிணமானபின் உடன் வரப் போகிறார்களா?
பிரியமாட்டேன் என்று சொன்னவர்கள் பிணம் என்று வீசி சென்றப் பிறகு , மண் என்னைப்பார்த்து, "மகனே! நானிருக்கிறேன். என் மடியில் வந்து உறங்கு" என்று என்னை மார்போடு தழுவிக்கொண்டது. அருந்தின மலமாம் பொருந்தின அழுக்காம் வெறுப்பன உவப்பாம் உவப்பன வெறுப்பாம் உலகே பொய் வாழ்க்கை. நீ நீயாக இரு... உங்கள் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் நீங்கள் உயிருடன் இருக்கும் அத்தனை நாளும் பயன்படுத்தவே படைக்கப்பட்டிருக்கிறது. வயதானால் அந்த நோய் வரும், இந்த நோய் வரும் என்று சொன்னால் தயவு செய்து நம்பாதீர்கள்.
உங்கள் கூடவே வாழும் மிருகங்களைப் பாருங்கள். மரணம் வரும் வரை தன் வேலைகளைத் தானே செய்து கொள்கிறது. எந்தப்பறவைகளும் தனக்கு வயதாகிவிட்டது என்று தன் குஞ்சிடம் உணவு கேட்பதில்லை. எந்த மாடும் படுத்து கொண்டு தன் கன்றிடம் தண்ணீரோ, உணவோ கேட்பதில்லை. எந்தப் பூனையோ, நாயோ படுக்கையில் இருந்து கொண்டு மலம் கழிப்பதில்லை. மரணம் அடையும் நாள் வரை ஆரோக்கியமாக சுயமாக தன் வேலைகள் அனைத்தையும் செய்து கொள்கின்றன. மனிதர்கள் மட்டும் தான் வயதானால் நோய்வரும், இயலாமை வரும் என்று நம்பி அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ ஆரம்பிக்கிறார்கள்.
நன்கு ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். முதுமை என்று எதுவும் இல்லை. நோய் என்று எதுவும் இல்லை. இயலாமை என்று எதுவுமில்லை. எல்லாம் உங்கள் மனதிலும், அதன் நம்பிக்கையிலும் தான் இருக்கிறது. சிந்தனையை மாற்றுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள். நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதுவாகவே ஆகிப் போகிறீர்கள்.
நான்... நான்... நான்...
நான் சம்பாதித்தேன்,
நான் காப்பாற்றினேன்,
நான் வீடு கட்டினேன்.
நான் உதவி செய்தேன்,
நான் உதவி செய்யலனா?
அவர் என்ன ஆகுறது!நான் பெரியவன்,
நான் தான் வேலை வாங்கி கொடுத்தேன்.
நான்.. நான்.. நான்.. என்று மார்தட்டி கொள்ளும் மனிதர்களே!!!
நான் தான் என் இதயத்தை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா? நான் தான் என் மூளையை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா? நான் தான் என் இரண்டு கிட்னியையும் இயக்குகிறேன் என்று சொல்ல முடியுமா? நான் தான் என் வயிற்றில் சாப்பிட்ட உணவில் இருந்து சத்துக்களை தனியாக பிரித்து இரத்தத்தில் சேர்க்கிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா? நான் தான் பூக்களை மலர வைக்கிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா ?
இவைகள் அனைத்தையும் எவன் செய்கிறானோ, இயக்குகிறானோ அவன் ஒருவனுக்கே "நான்" என்று சொல்வதற்கு முழு அதிகாரமும், உரிமையும் உண்டு. ஆகையால் நான் என்ற அகந்தையை விட்டு அனைவரிடமும் அன்பாக இருங்கள். உனக்கு மேலே உள்ளவனைப் பார்த்து ஏங்காதே, தாழ்வு மனப்பான்மை வரும். உனக்கு கீழே உள்ளவனை ஏளனமாய் பார்க்காதே, தலைக்கனம் வரும்.
உன்னை யாரோடும் ஒப்பிடாமல் நீ நீயாக இரு. தன்னம்பிகை தானாய் வரும்...
நான் என்பது அகந்தை
நாம் என்பது உணர்வு...⁉️

10K - 63

Ungal Amma
Posted 4 weeks ago

இது உங்களுக்கான நேரம்...நாளை மாலை 5 மணிக்கு உங்கள் அம்மாவோடு வேண்டுதல் கடிதம் நேரலை...

439 - 6

Ungal Amma
Posted 4 weeks ago

513 - 10

Ungal Amma
Posted 4 weeks ago

தை அமாவாசை 29.01.2025-ன் சிறப்புக்கள்.

பித்ரு காரகனாகிய சூரியனும் மாத்ரு காரகனாகிய சந்திரனும் கர்ம காரகனாகிய சனியின் வீடான மகரத்தில் கூடும் நன்னாள் தை மாதத்தில் நிகழும்.

அந்த காலமே தை அமாவாசை ஆகும்.

எனவே அன்றைய தினத்தில் நம் முன்னோர்களுக்கு செய்யும் தர்ப்பணம் கட்டாயம் நல்ல பலன்களை கொடுத்து வாழ்வில் சுபிட்சங்களை வாரி வழங்கும்.

நமது வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தால் மகிழ்ச்சியடைகிறோம்.

நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களே பித்ருக்கள் அவர்கள் தங்களது சந்ததியினர் நலமுடன் வாழ் வாழ்வில் முன்னேற, தடைகள் அகல, பல தோஷங்கள் நிவர்த்தியாக வருடத்தில் சில குறிப்பிட்ட தினங்களுக்கு பூலோகம் வந்து ஆசி வழங்குவதாக ஐதீகம்.

அதில் அமாவாசை நாள் மிகவும் சக்தி பொருந்திய நாளாகும்.

அந்த நாளில் நாம் மிகவும் மனம் மகிழ்ச்சியுடன் முன்னோர்களை வரவேற்று தர்ப்பணம் அளிக்கவேண்டும்.

தட்சிணாயாண புண்ணிய காலமான ஆடி அமாவாசை நாளில் பூவுலகத்திற்கு வந்து புரட்டாசி மாதத்தில் மகாளாய பட்ச காலத்தில் நம்முடனே இருந்து உத்தராயாண புண்ணிய காலமான தை மாதத்தில் வரும் அமாவாசை நாளில் நம்மை ஆசிர்வதித்து மீண்டும் பிதுர் லோகத்திற்கு திரும்பி செல்வதாக ஐதீகம்.

அமாவாசை தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்து உணவு படையலிட்டு அவர்களின் ஆசி பெறும் போது, நமது பாக்ய ஸ்தானம் வலிமை பெறும்.

இதன் மூலம் திருமணத்தடை, குழந்தை பிறப்பு தாமதம், வறுமை, நீடித்த நோய், கடன் தொல்லை போன்ற பிரச்சினைகளை நீக்கி கர்மவினைகளுக்குப் பரிகாரம் தேடிக் கொள்ளலாம்.

வருகிற தை அமாவாசை அன்று மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால், அவர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும்.

தை அமாவாசை வழிபாடு

தை அமாவாசையில் முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபட்டு விட்டு, அவற்றை ஏழை எளியவர்களுக்கு தானமாக வழங்கினால் நன்மைகள் பல வந்து சேரும். இல்லத்தில் தடைபட்ட சுபகாரியங்கள் நடைபெறும்.

நீண்டநாளாக வருத்தி வந்த நோய் அகலும்.

மனக்கலக்கம் விலகும், மனதில் மகிழ்ச்சி பொங்கும்.

திருப்புல்லாணி, ராமேஸ்வரம், கோடியக்கரை, பூம்புகார், திருவெண்காடு, திருச்சி அம்மா மண்டபம், திருச்செந்தூர், முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி, பவானி கூடுதுறை போன்ற தலங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்கலாம்...

அமாவாசை அன்று முன்னோர்கள் ஆத்ம சாந்திக்காக செய்யப்படும் திதி, தர்ப்பண பூஜையானது, நம்முடைய வம்சாவழியினருக்கு பெரிதும் நலம் தரும்.

தர்ப்பணம் என்பது எள்ளும், நீரும் கொண்டு தரப்படுவதாகும்.

இந்த தர்ப்பண நீரின் சக்தியானது, பூமியின் ஆகர்ஷன சக்தியை மீறி, மேல்நோக்கி எழும்பிச் சென்று, பல கோடி மைல்களுக்கு தொலைவில் உள்ள பித்ரு லோகத்தை அடையும்.

தை அமாவாசையன்று, இந்த சக்தியானது மிகவும் அபரிமிதமாக பெருகுகிறது.

முன்னோர்களுக்கு மூன்று கை தண்ணீர் என்று சொல்வார்கள்.

அவர்களுக்கு செய்யும் தர்ப்பண பலன்களை நம்மிடம் இருந்து பெற்று பிதுர் தேவதைகளிடம் சூரியன் வழங்குகிறார்.

அந்த தேவதைகள் மறைந்த முன்னோரிடம் பலன்களை சேர்க்கின்றன என்பது ஐதீகம்.

அமாவாசை நாட்களில் தீர்த்தக்கரைகளில் நீராடும் போது, பிதுர்காரகராகிய சூரியனுக்கு இரு கைகளாலும் நீர் விடும் அர்க்கியம் செய்வது மிகுந்த நன்மை தரும்.

கடல் அல்லது புண்ணிய நதிகளில் நீராடியவுடன் முழங்கால் அளவு நீரில் நின்றுகொண்டு, சூரியனை நோக்கி மூன்று முறை அர்க்கியம் செய்வதன் மூலம் சூரியனின் அருளையும் பூரணமாக பெறலாம்.

மோட்ச தீபம்

பித்ருக்களுக்கு முறையாக திதி, தர்ப்பணம் செய்யாதவர்கள் தை அமாவாசையன்று, திருவாரூர் கமலாலய தீர்த்தத்திலுள்ள பிதுர் கட்டத்திலும், அங்குள்ள அக்னி தீர்த்தத்திலும் நீராடி விட்டு, சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்து, மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.

அதனால் முன்னோர்கள் மகிழ்ச்சியடைந்து, தலைமுறை சிறக்க ஆசீர்வதிப்பதாக ஐதீகம்.

திலஹோமம்

இயற்கையாக இறந்தவர்களின் ஆன்மாவிற்கு எளிதில் முக்தி கிடைத்துவிடும்.

மன வேதனை அடைந்து துர்மரணம் அடைந்தாலோ, கொடூரமான நோய் தாக்கத்தால் இறந்தாலோ அவர்களின் ஆன்மா எளிதில் முக்தி அடைவதில்லை. இயற்கையாக மரணித்து, முக்தி அடைந்தவரின் வீட்டில் சுப நிகழ்வு நடந்து கொண்டே இருக்கும்.

அகால மரணமடைந்த ஆத்மா முக்தி அடையும் வரை நல்ல காரியங்கள் நடைபெறுவதில் தடைகள் ஏற்படும். இதற்கு காரணம் ஆத்ம சாந்திக்கான கடமைகளை செய்யாமல் விடுவதுதான். முன்னோர்களின் ஆன்மாக்களை யாரும் பார்க்க முடியாது, ஒவ்வொருவரையும் தனித்தனியாக வணங்கவும் முடியாது.

எனவே பஞ்ச பூதங்களையும், நவக்கிரகங்களையும் முன் நிறுத்தி உரிய மந்திரங்களோடு செய்யப்படும் தில ஹோமம், எத்தகைய துர்மரணமடைந்த ஆத்மாவையும் சாந்தியடைய செய்துவிடும்.

ஹோமம் செய்ய முடியாதவர்களுக்கு அமாவாசை வழிபாடு நல்ல பலன் தரும்.

13K - 69

Ungal Amma
Posted 4 weeks ago

வாரம் ஒரு முறை கஷாயம் வைத்துக்குடித்து வந்தால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

ஞாயிற்றுக்கிழமை:

சுக்கு மல்லி காபி குடிக்கலாம்.

திங்கட்கிழமை ✍️

வெற்றிலை – 4, மிளகுத்தூள் ¼ தேக்கரண்டி, கொதிக்க வைதுக்குடித்தல் நாக்கு சுத்தமாகும், கபம் சேராது.

செவ்வாய்க்கிழமை✍️

கடுக்காய் பொடி மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் உடல் உஷ்ணம் சீராக இருக்கும்.

புதன்கிழமை✍️

தூதுவளை, கற்பூரவல்லி, துளசி இம்மூன்றையும் சமஅளவு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் சளி சேராது, இருந்தாலும் மலத்துடன் வெளியேறிவிடும்.

வியாழக்கிழமை✍️

சுக்கு, மிளகு, சீரகம், ஓமம் சேர்த்து வறுத்து பொடிசெய்து வைத்துக்கொண்டால், ஒரு தேக்கரண்டி போட்டு பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் ஜீரணம் நன்றாக ஆகும், வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள் தீரும்.

வெள்ளிக்கிழமை✍️

வெந்தயம், தனியா சமஅளவு சேர்த்து வறுத்து பொடிசெய்து வைத்துக்கொண்டால், ஒரு தேக்கரண்டி போட்டு பனங்கற்கண்டு, சிறிது உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் பித்தநீர் வெளியேறிவிடும்.

சனிக்கிழமை✍️

முருங்கைக்கீரை, வெங்காயம், தக்காளி, பூண்டு, மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால், உடலுக்கு இரும்பு சத்து கிடைக்கும்.

இப்படி பழகிக்கொண்டால் எந்த வியாதியும் வராது, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

8.4K - 47