Channel Avatar

OMGod @UCVbunSOcWhh5OaFWFfeqH2w@youtube.com

95K subscribers - no pronouns :c

ஆன்மீகத்தின் துவக்க நிலை கோவிலுக்குச் செல்லுதல். ஆன்மீகத்தின


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

OMGod
Posted 3 years ago

தவிர்க்க முடியாத காரணத்தால், 2021 ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி விடைபெற இருந்த நான், கொஞ்சம் முன்னமே கிளம்புகிறேன்.
2021 ஆகஸ்ட் 8ஆம் தேதி என்னுடைய துறவற பயணத்தை ஆரம்பம் செய்கிறேன்.
உங்களுக்கு இன்னும் சில வீடியோக்கள் வந்துகொண்டே இருக்கும். அவை அனைத்தையும் ஏற்கனவே அப் லோட் செய்து SCHEDULE செய்து வைத்து விட்டேன்.
அனைவருக்கும் வணக்கம். நான் விடைபெறுகிறேன். நன்றி.

1.5K - 0

OMGod
Posted 3 years ago

தங்கைகள் ஒரு வரப்பிரசாதம்.
உலகியலில், அம்மாவுக்கு அடுத்தபடியாக தங்கை தான்.

அண்ணனுக்கு ஒரு வலி என்றால் விம்மி விம்மி அழுகிற கண்கள் தங்கைக்கு மட்டுமே உண்டு.

எனக்கு அமைந்த இரு தங்கைகளும் நான் பல பிறவிகளில் செய்த கடும் புண்ணியத்தில் கிடைத்தவை.

ஆனால், மனம் திறந்து சொல்கிறேன்:
எனக்கு எதற்கு இப்படிப் பட்ட தங்கைகள்?
ஒரு துறவிக்கு எதற்கு உயிரை உருவி அழும் ஒரு தங்கை?

நான் நினைத்துப் பார்க்கிறேன்:
என்னுடைய தங்கை ஒரு ரௌடி பயலுக்கு தங்கையாக பிறந்து இருக்கலாமே.
அந்தப் பையன் எப்படி திருந்தி இருப்பான்?
தன் தங்கைக்கு வாழ்நாள் முழுவதும் பாசத்தைக் கொட்டுவானே.

ஆனால், நான் இப்படி அவளை அழ விட்டு ஓடுகிறேனே.

கடந்த மூன்று நாட்களாக, கண்களை மூடிக் கொண்டு, "தங்கையின் அழு முகம் ஒரு மாயை, அதை மறந்து விடு, மறந்து விடு", என்று எவ்வளவோ எனக்குள் சொன்னாலும், அவளுடைய பாசத்தில் உடைந்து போனேன் என்பதை ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும்.

ஒரு துறவி இப்படி சொல்லக் கூடாது என்றெல்லாம் நான் யோசிக்கவில்லை. உண்மையை வெளியே சொல்கிறேன்.

ஆனாலும், இதைக் கடந்து செல்ல, இதோ இந்த அற்புதமான விடியலிலே, முடிவு செய்து இருக்கிறேன்.

இறைவா..! எல்லோருக்கும் மன அமைதி தருவாயாக... கெஞ்சிக் கேட்கிறேன்...
🙏🙏🙏
ஓம் நமசிவாய நமக.

746 - 0

OMGod
Posted 3 years ago

சந்நியாசம் செல்ல உன் குடும்பத்தாரே உனக்கு எதிரி என்பதற்கு என் வாழ்க்கை ஒரு சான்று. எவ்வளவு எடுத்து சொன்னாலும் புரிந்து கொள்ள மறுக்கும் பிடிவாதம் கொண்டவர்கள் எப்படி என் இரத்தமாக, என் சதையாக இருக்க முடியும்? கடந்த ஒரு மாதமாக நான் கொண்டிருந்த பேரின்பத்தை ஒரே சந்திப்பில் உடைத்துச் செல்லும் உறவு எப்படி unconditional love கொண்ட உறவாக இருக்க முடியும்?

கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். இந்த உலகத்திலேயே என் தங்கை மீது மட்டுமே அதிக பாசம் என் மனதில் இருந்தது. இன்னும் 2 வாரத்தில் நான் கிளம்ப இருக்கிற இந்த நேரத்தில் அவள் திடீர் விசிட் கொடுத்து அழுது அடம் பிடித்து "தங்கை மீதிருந்த அந்த அளவு கடந்த பந்தத்தை" ஒரே நொடியில் கசந்து போகச் செய்யும் திருவிளையாடல் அந்த ஈசனைத் தவிர வேறு யாரால் செய்ய முடியும்?
உனக்கு நன்றி கடவுளே.

இப்படித் தான் ஒவ்வொரு உறவாக தாமாக முன் வந்து தம்மை என் மனதில் கசக்க செய்து விட்டு செல்கிறார்கள். இறைவா! எவ்வளவு அற்புதமாய் நாடகம் செய்கிறாய்!

நீ இதுவரை என் வாழ்வில் செய்து இருக்கிற அனைத்தும் நல்லவையே என்கிற கணக்கிலே இது மட்டும் வேறாகி போகுமோ!

எனக்கு அடுத்த பிறவி என்று இருந்தால், இறைவா, என்னை அனாதையாய் படைத்து விடு. எனக்கு சொந்தங்கள் வேண்டாம். அப்போது தான் துறவு நிலைக்கு நிம்மதியாக அடி எடுத்து வைக்க முடியும்.

நானும் என்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு துன்பம் தருகிறேன். ஆனால், யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து தானே ஆக வேண்டும்? சரி, நான் சந்நியாசம் போகவில்லை. கடைசி காலம் வரை உங்களுக்கு அருகில் இருந்து அப்படியே வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன் என்று நான் சொன்னால் குடும்பத்தாருக்கு மகிழ்ச்சி. ஒன்று இப்படி நான் தியாகம் செய்ய வேண்டும். அல்லது நீங்கள் தியாகம் செய்ய வேண்டும்: போய்ட்டு வா டா, நல்ல படியா சந்நியாசம் பண்ணு, என்று சொல்லும் பக்குவம் இவ்வுலகில் இந்நொடி வரை ஒரு குடும்பமும் கொள்ளவில்லை.

மறுபடியும் சொல்லி முடிக்கிறேன்:
சந்நியாசம் செல்ல உன் குடும்பத்தாரே உனக்கு எதிரி என்பதற்கு என் வாழ்க்கை ஒரு சான்று.
கடைசி நேர பேரின்பத்தை உடைத்து போட்ட தங்கைக்கு நன்றி. 🙏🙏🙏

600 - 0

OMGod
Posted 3 years ago

இல்லறத்தான் அன்பு கொண்டு இருக்க வேண்டும். துறவி அருள் கொண்டு இருக்க வேண்டும். அன்புக்கும் அருளுக்கும் என்ன வித்தியாசம்? தொடர்புடைய மக்களுக்கு செய்வது அன்பு. தொடர்பு இல்லாத உயிர்களுக்கு செய்வது அருள். உங்கள் அன்பு எப்போது அருளாக மாறுகிறதோ, அப்போது நீங்கள் துறவி ஆகி கொண்டு இருக்கிறீர்கள்.

418 - 0

OMGod
Posted 3 years ago

கற்கும் கல்வி, ஞானமாக மாறாவிட்டால், அக்கல்வியும் உன் ஆன்மாவுக்கு தடையே..

368 - 0

OMGod
Posted 3 years ago

அடிக்கடி கும்பகம் செய்து கொண்டே இருங்கள். ஒரு நாளில் எவ்வளவு செய்ய முடியுமோ அவ்வளவு செய்யுங்கள். ஒரு முறை கும்பாகத்தில், எவ்வளவு தம் கட்ட முடியுமோ அவ்வளவு கட்டுங்கள். கும்பகத்தில் தான், உடம்பில் புது செல்களை உருவாக்க முடியும். அதன் பின், உங்கள் மனம் தெளிவடையும். இது நான் கண்ட உண்மை.

519 - 0

OMGod
Posted 3 years ago

வனவாசம் செல்வதற்கு முன்பாக, முதலும் கடைசியுமாக LIVE-இல் நாம் சந்தித்து, உங்களிடம் ஒரு சில விஷயங்கள் பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றுகிறது. உங்களுக்கு கீழே உள்ள தேதி வசதியாக இருக்கிறதா? இல்லையா? என்று தயவு செய்து சொல்லவும். நன்றி. (Live Date: 15, August 2021 / Sunday / Time: 3:30 pm / Evening)

635 - 0

OMGod
Posted 3 years ago

கரிசலாங்கண்ணி பவுடர் இன்றைக்கே நாட்டு மருந்து கடைகளில் வாங்குங்கள். தினமும் காலையில் வெறும் வயிற்றில் அரை தம்ளர் தண்ணீரில் அரை ஸ்பூன் கலந்து குடியுங்கள். உங்கள் ரத்தத்தில் இருக்கும் எல்லா அசுத்தமும் வெளியேறும்.

283 - 0

OMGod
Posted 3 years ago

சம்மணமிட்டு சாப்பிடும் போது, செரிமான சக்தி அதிகரிக்கிறது... எப்படி? காலை தொங்க விட்டுக்கொண்டு சாப்பிடும் போது, அதிக ரத்தம் காலுக்கு செல்கிறது. சம்மணம் இடும் போது, கால்களில் உள்ள ரத்தம் பீச்சி அடிக்கப் பட்டு வயிற்று பகுதிக்கு தள்ளப்படுகிறது. அந்த ரத்தமெல்லாம் வயிறு நன்கு இயங்க உதவுகிறது. வயிற்றுக்கு முக்கியத்துவம் தரப்படுகிற ஆசனம் சம்மணம் தான்.

269 - 0

OMGod
Posted 3 years ago

குளித்து விட்டு தான் விபூதி அணிய வேண்டும் என்பது "ஒரு தாழ்த்தப் பட்ட மனிதன் என்னைத் தொட்டு விடக் கூடாது", என்று எண்ணுகிற எண்ணத்திற்கு சமமானது. ஆன்மீகத்தில் நிறைய தீண்டாமைச் சட்டங்கள் உள்ளன. களை எடுக்கப் பட வேண்டும்.

316 - 0