in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
மூன்று முக்கிய கதைகள்:
1. நோக்கியா ஆண்ட்ராய்டை வாங்க மறுத்தது
2. யாஹூ கூகுளை நிராகரித்தது
3. கோடாக் டிஜிட்டல் கேமராக்களை தயாரிக்க மறுத்தது
பாடங்கள்:
1. வாய்ப்புகளை ஏற்க தயாராக இருங்கள். தவறவிடாதீர்கள்.
2. மாற்றத்தை தழுவி ஏற்றுக்கொள்ளுங்கள்
3. காலத்திற்கு தக்கவாறு நீங்கள் மாற மறுத்தால், நீங்கள் காணாமல் போய் விடுவீர்கள்.
மேலும் இரண்டு கதைகள்:
1. பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராமைக் கைப்பற்றுகிறது
2. தென்கிழக்கு ஆசியாவில் உபெர் நிறுவனத்தை கிராப் கைப்பற்றுகிறது
பாடங்கள்:
1. உங்கள் போட்டியாளர்கள் உங்கள் கூட்டாளிகளாக மாறும் அளவுக்கு சக்தி வாய்ந்தவர்களாக மாறுங்கள்.
2. வெற்றியின் உச்சத்திற்கு சென்று போட்டியை விரட்டுங்கள்.
3. புதுமையான முயற்சிகளை தொடருங்கள்.
மேலும் இரண்டு கதைகள்:
1. கர்னல் சாண்டர்ஸ் 65 வயதில் KFC நிறுவனத்தை நிறுவினார்.
2. கேஎஃப்சியில் வேலை கிடைக்காத ஜாக் மா, அலிபாபாவை நிறுவி கோடீஸ்வரர் ஆனார்.
பாடங்கள்:
1. வயது என்பது வெறும் எண் மட்டுமே.
2. தோல்வியில் சோர்ந்து போகாமல் வெறியுடன், தொடர்ந்து முயற்சி செய்பவர்களே வெற்றி பெறுவார்கள்.
இறுதியாக:
ஃபெராரி நிறுவனர் என்சோ ஃபெராரியால் அவமதிக்கப்பட்ட டிராக்டர் உற்பத்தியாளரின் பழிவாங்கும் எண்ணம்தான் லம்போர்கினி உருவாக காரணமாக அமைந்தது.
பாடங்கள்:
யாரையும், எப்போதும் குறைத்து மதிப்பிடாதீர்கள்!
✔️ கடினமாக உழைத்துக்கொண்டே இருங்கள்.
✔️ உங்கள் நேரத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள்.
✔️ தோல்விக்கு பயப்பட வேண்டாம்.
வாழ்த்துக்கள் நண்பர்களே..
#ajaykumarperiyasamy
--அஜய்குமார் பெரியசாமி அவர்களின் பதிவில் இருந்து பகிர்ந்தவை
நன்றி
0 - 0
ஒரு ஊரில் தன் மனைவியின் முதல் பிரசவத்திற்காக அவள் தாய் வீட்டிற்கு அழைத்து செல்கிறான் ஒரு ஏழை விவசாயி....
வாகன வசதி இல்லாத காலம் அது. கடும் வெயிலின் காரணமாக கர்ப்பமான மனைவிக்கு தண்ணீர் தாகம் எடுக்கிறது.
ஆளில்லா நடைபாதையில் என் கணவர் தண்ணீருக்கு எங்கு செல்வார் என்று அதை கணவனிடம் சொல்லாமலே வருகிறாள். மனைவிக்கு தாகம் எடுக்கிறது என்று அவன் புரிந்துகொண்டான்.
"இதற்கு பெயர் தான் கணவன் மனைவி உறவு"
தூரத்தில் ஒரு முதியவர் இளநீர் வியாபாரம் செய்வதை பார்த்து அவள் கையை பிடித்துகொண்டு வேகமாக சென்ற பிறகுதான் தெரிகிறது. அவனிடம் ஒரு இளநீர் வாங்குவதற்கு மட்டுமே காசு இருக்கிறது என்று சரி ஒரு இளநீர் தாருங்கள் என்கிறான்.
இளநீரை வாங்கியவன் தன் மனைவியிடம் கொடுத்து எனக்கு வேண்டாம் நீ குடிமா! என்கிறான். எனக்கு மட்டும் என்றால் வேண்டாம் நீங்கள் குடித்துவிட்டு தாருங்கள் என்றாள் அவள்.
இறுதியில் மனைவியை குடிக்க வைத்தான். ஆனால் அவளோ என் கணவர் எனக்காக காடு மலையெல்லாம் வேலை செய்பவர் அவர் குடிக்கட்டும் என்று குடிப்பது போல் நடித்துக்கொண்டிருக்கிறாள்.
இளநீர் கணவன் கைக்கு வந்தது. அவனும் மனைவியை போலவே இவள் என்னை நம்பி வாழவந்தவள். அதோடு என் குழந்தையை சுமக்கிறாள். இன்னும் கொஞ்சம் இவள் குடித்தால் என்ன..! என்று இவனும் குடிப்பது போல் நடிக்கிறான்.
இவர்களின் காதலையும் விட்டுக்கொடுக்கும் குணத்தையும் பார்த்த முதியவர் அந்த பெண்ணிடம் நீ என் பொண்ணு போல இருக்கிறாய் இந்த இளநீரை நீ குடிமா என்று வேறொரு இளநீரை வெட்டி தருகிறார். கணவனின் அனுமதியோடு தாகம் தீர குடித்துவிட்டு அவன் மார்பில் மெதுவாக சாய்ந்துக்கொண்டு என் மேல் இவ்வளவு பாசமா என்பது போல் அவள் பார்க்கிறாள்.
நீ என் மனைவி,
என் உயிரின் பாதி என்ற அர்த்தத்துடன் கண் சிமிட்டுகிறான் அந்த காதல் கொண்ட கணவன்.
இப்படி அன்பு என்ற ஒன்றும் விட்டுக்கொடுக்கும் குணமும் இருந்ததால் ஒரு இளநீர் வாங்க இருந்த காசுக்கு இரண்டு இளநீர் கிடைத்தது.
இவ்வுலகில் எல்லா உயிரும் அன்பிற்காக மட்டும் தான் இங்கு ஏங்குகிறது....!
என்ன பிரச்சனை என்றாலும்
கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்தலும் ஒருவர் குறையை மற்றொருவர் மறைத்து வாழும் வாழ்கைக்கு சொர்க்கமே ஈடாகாது...!
🌹🌹❤️🌹🌹
0 - 0
உங்கள் வார்த்தைகளில் கவனமாக இருங்கள்🫢🤫🤔 பிரபஞ்சம் உங்களை செவிமடுத்துக் கொண்டிருக்கிறது #positivevibes
0 - 0
பள்ளிக் காலங்களில் ஒரு பெண் டீச்சரைப் பார்த்து ’ பால்பண்ணை’ என்று சகமாணவர்கள் கூப்பிடுவார்கள்.
அவருடைய மார்பு பெரிதாக இருப்பதுதான் அதற்குக் காரணம். பெரிய மார்பில் நிறைய பாலிருக்கும். ’நிறைய பால்’ பண்ணையில்தான் இருக்கும். அத்தகைய பெரிய மார்பகங்களை கொண்டுள்ளதால் அவரைப் ’பால்பண்ணை’ என்று அழைப்பார்கள்.
அப்பெயரை நான் உச்சரிக்கவில்லையே தவிர பையன்கள் அப்படிச் சொல்லும் போது கலகலவெனச் சிரித்திருக்கிறேன்.
அதற்கும் முன் சிறுவயதில் ’சம்சாரம் அது மின்சாரம்’ திரைப்படத்தில் லட்சுமி நடித்திருக்கும் கேரக்டருக்கு பால்கட்டி கொண்டது என்று துன்பப்படுவதாக ஒரு காட்சி வரும்.
ஒரு விநாடி இப்படின்னா என்ன? என்று தோன்றி பின் மறந்த காட்சி அது.
பொதுவாக பெண்ணின் மார்பு என்பது ஆணுக்கு உச்சமான இன்பத்தைக் கொடுக்கும் விசயம். பார்க்கும் பெண்களின் மார்புகளில் தன் விழிகளை பதிக்காமல் பாதையை கடப்பாது கடினம்,
ஆனால் அதன் பின்னால் பெண்கள் அடையும் துன்பத்தைப் பற்றி எந்த அளவுக்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
மாதவிலக்கு, மென்ஸஸ் போன்ற விஷ்யங்கள் பற்றி கூட கொஞ்சம் விழிப்புணர்ச்சி வந்தாற்போல இருக்கிறது. ஆனால் இந்த மார்பினால் வரும் துன்பத்தைப் பற்றி மிகக் குறைந்த விழிப்பே இருக்கிறது.
சமீபத்தில் அமரந்தா எழுதிய ’பால்கட்டு’ என்றொரு கதையைப் படித்த பிறகுதான் எனக்கு இதன் வலி புரிந்தது. கதை👇
நடுத்தர குடும்ப பெண்ணுக்கு, வேலைக்கு போயே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் பெண்ணுக்கு ‘பால்கட்டுதல்’ என்றப் பிரச்சனை இருக்கிறது.
மார்பகங்களில் பால் அதிகமாகக் கட்டிக்கொண்டு வலியைக் கொடுப்பதுதான் இதன் அம்சம்.
மிக அதிகமாக கட்டிக்கொள்ள டாக்டரிடம் போகிறாள், நர்ஸ் பம்ப் வைத்து பாலை எடுக்க முயற்சி செய்கிறார், வலியால் துடிக்கிறாள்,
இவள் வலியால் துடிப்பதைப் பார்த்த நர்ஸ் ‘யார்கிட்டயும் சொல்லாதம்மா” என்று தன் வாயால் மார்பில் வாயைவைத்து பாலை உறிஞ்சி துப்புகிறார்.
பின் பெண்ணின் மார்பை ஆராய்ந்து, அதில் புண் இருப்பதாகவும், அதனால் பால் சரிவர வெளிவராமல் கட்டிக் கொள்வதாகவும் சொல்லி, அதற்கு ஒரு க்ரீம் கொடுக்கிறார்.
அந்த க்ரீமைத் தடவ வேண்டும். பின் குழந்தைக்குப் பால் கொடுக்கும் முன் அதை சுத்தம் செய்ய வேண்டும். பின் மறுபடியும் தடவ வேண்டும் என்று நரக வாழ்க்கையை வாழ வேண்டியதாயிருக்கிறது.
காலை அலுவலகத்துக்கு வந்துவிட்டு மதியம் குழந்தைக்கு பால் கொடுக்கச் செல்வதற்குள் அது மார்பில் கட்டிக் கொண்டு கெட்டுப் போய் விடுகின்றது.
இவளுக்கு குழந்தை பால் குடித்தால் பாரம் குறையும் என்றிருக்கும் போது, குழந்தையோ கெட்டுப் போன பாலைக் குடிக்காமல் அழுகிறது.
மறுநாளில் இருந்து அலுவலகத்தின் பாத்ரூம் சென்று அவ்வப்போது மார்பை பிதுக்கி அவ்வப்போது பாலை எடுக்கிறாள்.
இப்படியாக பால்கட்டுதலால் அவள் படும் கஷ்டத்தை ஆசிரியர் கதை நெடுகச் சொல்கிறார்.
ஒருநாள் மாலை வீடு செல்லும் போது கதவு திறந்திருக்கிறது. வழக்கமாக இரவு லேட்டாக வரும் கணவன் அன்று சிக்கிரமே வந்திருக்கிறான். அதைப் பார்த்து மகிழ்ச்சி.அவனிடம் காப்பிக் குடிக்க வேண்டும் என்று கேட்க நினைக்கிறாள்.
ஆனால் மார்பு பாரம் தாங்க முடியாமல் குழந்தையை எடுத்து வராண்டாவிலேயே பால் கொடுக்கிறாள். குழந்தைக் குடிக்க ஆசுவாசப்படுகிறாள்.
ஆனால் கணவனோ உள்ளே போ உள்ளேப் போ போ என்று விரட்டுகிறான். இவள் வேறு வழியில்லாமல் உள்ளே வருகிறாள்.
“வாசல்ல இருந்துதான் இதெல்லாம் செய்வியோ’ என்று கணவன் அவள் முகத்துக்கு நேரே கையை நீட்டி கடுத்து வருகிறான்.
அவள் தலை கிறுகிறுத்துப் போகிறது.
இப்படியாகக் கதை முடிகிறது.
இதைப் படித்த பிறகுதான் பால்கட்டுதல் என்பதில் இவ்வளவு பிரச்சனையா என்று எனக்குத் தெரிந்தது.
அம்மாவுக்கு போன் போட்டுக் கேட்டேன்.
அம்மா இந்தக் கதையை ஆமோதித்து, பால் கட்டுதல் என்பது சில பெண்களுக்கு கொடுமையான விசயம் என்று விளக்கினார்.
நான் அம்மாவிடம் கேட்டேன் “ஏம்மா இத்தன வருஷம் உங்க கிட்ட ஃப்ரெண்டா பேசியிருக்கேன். இந்த விஷயத்த எனக்கு சொல்லவே இல்லை” என்றேன்.
யாருமே எங்கேயுமே இதுமாதிரியெல்லாம் பிரச்சனை இருக்கிறது என்று சொல்லாமல் இருந்தால் ஆணுக்கு எப்படித் தெரியும்.
அப்படி ஆணுக்குப் பெண்ணின் வலிதெரிவது இப்போதைய வன்புணர்வு கலாச்சாரத்தில் முக்கிய தேவையாகும்.
என்னைக் கேட்டால் பிளஸ் டூ தமிழ் சிறுகதைகளில் ஒன்றாக அமரந்தாவில் “பால் கட்டு” சிறுகதையை வைக்க வேண்டும் என்பேன்.
ஒருவேளை இக்கதையைப் படித்தால்
“பால் பண்ணை, இளநீ, காய், முலை, முயல் குட்டி” என்றெல்லாம் மார்பகங்களை பேசுவதை கொஞ்சம் ஆண்களாவது தவிர்ப்பார்கள்.
அந்த கொஞ்ச ஆண்கள் பிற்காலத்தில் நிறைய ஆண்களாக ஆகலாம்.
பண்பட்ட சமூகத்தை அடைவதுதான் நம் நோக்கம் என்றால் இது போன்ற சிறுகதைகள் நிறைய வரவேண்டும். விவாதிக்கப்பட வேண்டும்.
பகிர்வு பதிவு
#யானை
2 - 0
தண்ணீர் என்றால் பத்து நாளில் புழு வைக்க வேண்டும்!
பழங்கள் என்றால் குறிப்பிட்ட நாட்களில் அழுகி நாற்றமெடுக்க வேண்டும்!
காய் கறிகள் என்றால் சில நாட்களில் சொத்தையாகி புழு வைக்க வேண்டும்.!
நவ தானியங்கள் என்றால் கொஞ்ச நாளில் வண்டு வர வேண்டும்...!
எது கெட்டுப்போகிறதோ!
புழு வண்டு வைக்கிறதோ!
எது அழுகி நாற்றமெடுக்கிறதோ!
எது ஊசிப் போய் வீணாகிறதோ!
அவைகள் மட்டுமே இயற்கையின் விதிப்படி நல்ல தரமான தீங்கில்லாத
உணவுப் பொருள்கள்.
3 மாதம் ஆனாலும் புழு வைக்காமல் இருக்கும் கேன் வாட்டர் எப்படி நல்ல தண்ணீர் ஆகும்??
பழமுதிர் சோலைகளிலும் ரிலயண்ஸ் பிரஸ் களிலும் மெகா சூப்பர் மார்கெட்டிலும் பூச்சி மருந்து தெளித்து இரண்டு வாரமானாலும் கெடாமல் அழுகாமல் இளமை மங்காது பள பளப்பாக விற்கப்படும்
பழங்கள் காய்கறிகள்
நல்ல தரமான பொருட்களா??
*நம்மாழ்வார்*
0 - 0
உலகத்துக்கு தமிழனையும் தமிழ் மொழியையும் அறிமுகம் செய்த தலைவன் - வைரமுத்து !
https://youtu.be/VEfMc96t37c
0 - 0
குழந்தை பிரசவித்து சிறிது நேரத்தில் உயிர் பிரிந்த ஓர் தாயின் 😪 #sadstory #ammaspecials #ammastatuatamil
https://youtu.be/IpCmgHfc7cI
0 - 0
🔴இன்று மாலை ஆவலுடன் எதிர் பாருங்கள்!
எமது சனலுக்கு புதியவர் என்றால் subscribe பண்ணிவிட்டு காத்திருங்கள்!
1 - 0
1M Subscribers
motivational video Tamil #motivationalvideotamil
Motivation videos and Tamil motivational videos
#Motivation #TamilPride #tamilmotivation #tamilmotivational #tamilmotivationalspeech #tamilmotivationwhatsappstatus #tamilmotivationalvideos #tamilmotivational_whatsapp_status