Channel Avatar

Swami Vidyananda Tamil @UCPA9g_rd2V8S5Vp7wvKlJVg@youtube.com

41K subscribers - no pronouns :c

சுவாமி விவேகானந்தர்,ஸ்ரீராமகிருஷ்ணர்,அன்னை சாரதாதேவியின் சிந


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

Swami Vidyananda Tamil
Posted 2 years ago

வணக்கம்
..
இந்துமதத்தின் கருத்துக்களை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டியது நமது கடமை.
உலகியல் சிந்தனைகளில் மூழ்கி மக்கள் திணறிவருகிறார்கள்.
தர்மம் பற்றி தெரியாதவர்களாகவும்,அதர்மத்தை துணிந்து செய்பவர்களாகவும் மாறிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆன்மீகக் கருத்துக்களை மக்களிடம் பரப்புவது மிகப்பெரிய புண்ணிய செயல்.
இதனால் தர்மம் நிலைநாட்டப்படும்.
இதை எந்த அளவுக்கு விரைவாகவும் அதிகமாகவும் செய்கிறோமோ அந்த அளவுக்கு நமக்கும்,நாட்டிற்கும் நல்லது.
..
நாம் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் தினமும் 2 லட்சம் நபர்களுக்கு ஆன்மீகக் கருத்துக்களை பரப்பிக்கொண்டிருக்கிறோம்.
இந்த பணி மிகச்சிறியதுதான்.
மிகப்பெரிய அளவில் நாம் சாதிக்கவேண்டியுள்ளது.
உலகம் முழுவதையும் இந்துமத சிந்தனைகளால் நிறைக்க வேண்டும் என்பதே நமது முன்னோர்களான ரிஷிகள் நமக்கு இட்டுள்ள கட்டளை.
கடந்த சில ஆண்டுகளாக நமது பணிகளுக்கு தொடர்ந்து பலர் உதவிவருகிறார்கள்.
இந்த நல்லநாளில் அவர்களை நினைவுகூர்கிறேன்.
அவர்களது பங்களிப்பை பாராட்டுகிறேன்.
அவர்களுக்கு இறைவன் மேலும்மேலும் நன்மையைச் செய்ய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
..
சுவாமி வித்யானந்தர்.
..
குறிப்பு..நமது ஆன்மீக பதிவுகள் அனைத்தும் கூகுள் டிரைவில்,டெலிகிராமில் தினமும் பதியப்படுகிறது. இதற்கான லிங்க் எங்கும் இந்துமதம் தினசரி பத்திரிக்கையின் கடைசியில் உள்ளது.. புதியவர்களை இணைப்பதற்கான லிங்க்ம் அதில் உள்ளது.
எப்படி பயன்படுத்துவது என்று தெரியாதவர்கள் தெரிந்தவர்களின் உதவியை நாடவும்.
கடந்த சில நாட்களாக வாட்ஸ்-அப் சர்வரில் சில கோளாறுகள் உள்ளதால், தினமும் நாம் அனுப்பும் மெசேஜ்கள் உரிய நேரத்தில் சென்று சேர்வதில்லை.
ஒருவேளை வாட்ஸ்அப் பலநாட்கள்கூட முடங்கலாம்
எனவே கூகுள் டிரைவ்-யை பயன்படுத்துவதை பழகிக்கொள்ளுங்கள்.
...

63 - 7

Swami Vidyananda Tamil
Posted 3 years ago

New post

17 - 0

Swami Vidyananda Tamil
Posted 3 years ago

வணக்கம்
-
நாம் வளரவேண்டுமானால் இந்தியா வளர்ச்சியடையவேண்டும். இந்தியா வளர்ச்சியடைவேண்டுமானால் இந்துமதம் வளர்ச்சியடைய வேண்டும். இந்துமதம் வளர்ச்சியடைய வேண்டுமானால் ஆன்மீகக் கருத்துக்கள் பலரிடம் சென்று சேரவேண்டும்.
ஆன்மீகம் இல்லாத பொருளாதார வளர்ச்சி மனிதனை இயந்திரநிலைக்கு கொண்டுசென்றுவிடும். மனிதர்கள் சுகபோகங்களில் மூழ்கி மிருகநிலைக்கு சென்றுவிடுவார்கள். அதன்பிறகு சமுதாயம் மிகவிரைவாக அழிவை நோக்கி சென்றுவிடும்.
சமுதாயம் வீழ்ச்சியடைய தொடங்கினால் நாடும் அழிவடைய ஆரம்பிக்கும்.
ஆன்மீகமே இந்தியாவின் உயிர்நாடி. இந்தியா வாழவேண்டுமானால் ஆன்மீகக் கருத்துக்கள் மக்களிடம் பரப்பட்ட வேண்டும். சுகபோகங்களிலிருந்து விலகி மக்கள் ஆன்மீகத்தை நோக்கி வரவேண்டும்.
-
ஆன்மீகத்திற்கும் மதத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன?
மதம் என்றால் நம்பிக்கை அல்லது கொள்கை என்று அர்த்தம்.
இறைவன்,ஆன்மா,மறுபிறப்பு,முக்தி,விதி,சொர்க்கம்,நரகம் இன்னும் பல விஷயங்களை மனிதன் நம்புகிறான் இவைகள் அனைத்தும் மதம் என்பதற்குள் அடங்குகிறது.
பல்வேறு மதங்கள் இருக்கின்றன.
ஆன்மீகம் என்பது நம்பிக்கை அல்ல. அது நேரடி அனுபவம். ஆன்மாவை அல்லது கடவுளைக் கண்டவன் ஆன்மீகவாதி.
ஆன்மீகம் என்பது மதத்தைக் கடந்தது. பல மதங்கள் இருக்கலாம் ஆனால் ஆன்மீகம் என்பது ஒன்றுதான் இருக்க முடியும்.
கோடியில் ஒரு சிலரே ஆன்மீகவாதியாக இருப்பார்கள். மற்ற அனைவரும் மதவாதிகளே.
-
இந்துமதம் என்று நாம் குறிப்பிடும்போது அது இந்தியாவில் தோன்றிய அனைத்து மதங்களையும் குறிக்கும் ஒரு பொதுப்பெயராகும்.
பல தேசங்களை இணைத்து இந்தியா என்ற பொதுப்பெயர் கொடுக்கப்பட்டிருப்பதுபோல,
பல மதங்களை இணைத்து இந்துமதம் என்ற பொதுப்பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா முன்னேற வேண்டுமானால் இந்தியாவில் பிறந்த அனைத்து மதங்களும் முன்னேற வேண்டும். அதாவது அனைத்து மதங்களின் கருத்துக்களும் மக்களிடம் பரப்பப்படவேண்டும்.
முற்காலங்களில் சைவர்களும், வைணவர்களும் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டதுபோல அல்லாமல் ஒன்றுமையாக செயல்பட்டு தங்கள் கருத்துக்களை பரப்ப வேண்டும்.

66 - 5