Subscribe this channel🙏
youtube.com/channel/UCfmo9k2b...
Wanna songs are uploaded this channel only
watch video on watch page
17 - 0
பைத்தியக்காரனால் கிடைத்த வெற்றி
ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு தன் நிறுவனத்தில் சில தவறுகளால் 50 கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. மிகவும் சோர்ந்து போய் அருகில் இருந்த பூங்காவிற்கு சென்று அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தார்.
அப்போது சற்று பெரிய மனிதர் போல தோற்றம் உடைய ஒருவர் இவருக்கு அருகில் வந்து அமர்ந்தார். இவர் சோகமாக அமர்ந்திருப்பதை கண்டு
ஏன் சோகமாக இருக்கிறீர்கள் என்று கேட்டார்.
அதற்கு இவர் எனது தொழில் நஷ்டம் அடைந்து விட்டேன். மிகவும் மனது உடைந்து போய்விட்டேன் என்றார்.
எவ்வளவு ரூபாய் நஷ்டம்? என்றால் அவர்.
50 கோடி ரூபாய் என்றார் இவர்.
அப்படியா, நான் யார் தெரியுமா? என்று கேட்டு அந்த ஊரின் பிரபல செல்வேந்தரின் பெயரை சொன்னார். அசந்து போனார் இவர்...
சரி 50 கோடி பணம் இருந்தால் நீ சரியாகி விடுவாயா? என்று கேட்டார் அவர்.
உடனே முகமலர்ச்சியுடன் இவர் ஆமாம் எல்லாம் சரியாகி விடும் என்றார்.
பின் அந்த செல்வேந்தர் ஒரு செக் புத்தகத்தை எடுத்து கையெழுத்திட்டு இவரிடம் நீட்டி இந்தா இதில் 500 கோடிக்கு செக், நீ கேட்டதைவிட 10 மடங்கு அதிகமாக கொடுத்திருக்கிறேன். எல்லாவற்றையும் சமாளி. ஆனால் ஒருவருடம் கழித்து இந்த பணத்தை எனக்கு திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். அடுத்த வருடம் இதே நாளில் இங்கே நான் காத்திருப்பேன் என்று சொல்லிவிட்டு செக்கை இவர் கைகளில் தினித்து விட்டு சென்றார் அவர்.
பின் அந்த நிறுவனத்தின் தலைவர் வேகமாக அலுவலகத்திற்கு சென்றார். தன் அறைக்குள் சென்று அந்த செக்கை தனது பீரோவில் வைத்து பத்திரமாக பூட்டினார். பின் தனது உதவியாரை அழைத்து அனைத்து ஊழியர்களை நிர்வாக கூட்டத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்ய சொன்னார். ஊழியர்கள் அனைவரும் கூட்டத்தில் அமர்ந்திருந்தனர்.
இந்த நிறுவனத்தின் தலைவர் பேச ஆரம்பித்தார். நண்பர்களே, நமது நிறுவனத்தில் 50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இப்போது என்னிடம் 500 கோடி ரூபாய் உள்ளது, ஆனால் அந்த பணத்தை தொடமாட்டேன். இந்த நஷ்டம் எப்படி ஏற்பட்டது? எதனால் ஏதற்காக ஏற்பட்டது? என்று ஆராய்ந்து அதை களைந்து நமது நிறுவனத்தை வெற்றிகரமாக செயல்படுத்த நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
பின்னர் வேளைகள் வேகமாக நடந்தன. தவறுகள் கண்டுப் பிடிக்கபட்டு களையப்பட்டன. மிக சரியாக அனைத்து ஊழியர்களையும் ஓத்துழைக்க வைத்தார். அவருடைய பேச்சு மூச்சு செயல் சிந்தனை தூக்கம் அனைத்தும் அவருடைய தொழிலை பற்றியே இருந்தது.
மிக சரியா ஒரு வருடம் கழிந்தது. கணக்குகள் அலசப்பட்டன. மிக சரியா 550 கோடி ரூபாய்கள் லாபம் ஈட்டி இருந்தது இவருடைய நிறுவனம். அடுத்த நாள் விடிய காலை அந்த செல்வேந்த கொடுத்த 500 கோடிக்கான செக்கை எடுத்துக் கொண்டு அந்த பூங்காவிற்கு விரைந்தார். சென்ற வருடம் அமர்ந்த அதே பெஞ்சில் அமர்ந்தார். காலை நெரம் ஆதலால் பனி மூட்டத்துடன் காணப்பட்டது. சற்று நேரம் கழித்து தூரத்தில் அந்த செல்வேந்தரும் அவருக்கு அருகில் அவரை கைகளால் பிடித்துக் கொண்டு ஒரு பெண்மணியும் வந்தது பனி மூட்டத்தின் ஊடே தெரிந்தது. சில விநாடிகள் கழித்து பார்த்தால் அந்த பெண்மணி மட்டும் வருகிறார் அந்த செல்வேந்தரை காணவில்லை.
இவர் சென்று அந்த பெண்மணியிடம் எங்கே அம்மா உங்கள் கூட வந்தவர்? என்றார்
அதற்கு அந்த பெண்மணி பதட்டத்துடன் உங்களுக்கு அவர் ஏதாவது தொந்தரவு கொடுத்து விட்டாரா? என்றார்
இவர் இல்லை அம்மா, ஏன் கேட்கிறீர்கள்? என்றார்.
அந்த பெண்மணி இல்லை அய்யா அவர் ஒரு பைத்தியம் அதாவது மனநிலை சரி இல்லாதவர், செக்கு தருகிறேன் என்று சொல்லி இங்கு இருப்பவர்களிடம் தனது பழைய செக்கை கிழித்து கையேழுத்திட்டு கொடுத்து விடுவார் என்றார்.
ஒரு நிமிடம் அந்த நிறுவன தலைவருக்கு பேசமுடியவில்லை. அப்போ நம்மால் முடியும் என்று நினைத்தால் நிச்சயம் முடியும். அதுவே நம்மை காப்பாற்றி இருக்கிறது என்று நினைத்தார்.
Just for awar & entertainment its not our own
Give your rating
45 - 3
நமது சேனலில் போடக்கூடிய பாடல்கள் அனைத்தும் இனி வேறு சேனலில் பதிவிடப்படும் என அன்புடன் தெரிவித்து கொள்கிறேன்🙏.
👇சேனல் link கீழே கொடுக்கப்பட்டுள்ளது.👇
youtube.com/channel/UCfmo9k2b...
♥️😍மறக்காமல் subscribe செய்து கொள்ளுங்கள்😇♥️
New பாடல் link 👇 கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கேட்டு enjoy பண்ணுங்கள்😍🤗
https://youtu.be/vmw8qMmPSsg
🙏🤗Keep support guys. We will rocking😘😍
8 - 0
தன்னம்பிக்கையை தூண்டும் ஒரு கதை
அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான்.
ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக் காசின் நடுவில் துளை இருந்தது. துளையிட்ட காசு கிடைப்பது அதிஷ்டம் என்று ஒரு நம்பிக்கை. அதனால், அதிஷ்டம் என்னைத் தேடி வரும், பணக்காரனாகிவிடுவேன் என்று நினைத்தான். அந்தக் காசைத் தன் கோட்டுப் பையில் போட்டுக் கொண்டான்.
அன்று, அவனுக்கு மற்ற நாளைவிட அதிக வருமானம் கிடைத்தது. எல்லாம் காசு கிடைத்த நேரம் என நினைத்தான். அன்றிலிருந்து அவன் தினமும் கோட்டுப் பையில் இருக்கும் காசைத் தொட்டுப் பார்த்துக்கொள்வான். வெளியே எடுக்கமாட்டான்.
சில ஆண்டுகளில் பணம், பதவி அனைத்தும் வந்து சேர்ந்தன. பல வருடங்களுக்குப் பின், ஒரு நாள் தன் மனைவியிடம், அந்தக் காசைப் பார்க்கவேண்டும் போல் உள்ளது என்றவாறு கோட்டுப் பையில் இருந்து எடுத்தவனுக்கு அதிர்ச்சி!
அந்தக் காசில் துளையே இல்லை. என்ன ஆயிற்று? என்று குழப்பத்துடன் பார்த்தான்.
அவன் மனைவி சொன்னாள், என்னை மன்னியுங்கள். உங்கள் கோட்டு தூசியாக இருக்கிறதே என்று வெளியே உதறினேன். காசு தெருவில் விழுந்துவிட்டது. எவ்வளவோ தேடியும் கிடைக்கவில்லை. நான்தான் வேறு காசைப் போட்டு வைத்தேன் என்றாள்.
இது எப்போது நடந்தது? என்று கேட்டான்.
அந்தக் காசு கிடைத்த மறுநாளே என்றாள்.
அவன் அமைதியாக சிந்தித்தான். உண்மையில் அதிஷ்டத்தைக் கொடுத்தது அந்த நாணயம் இல்லை. என்னுடைய நம்பிக்கைதான் என நினைத்தான். முன்பைவிட உற்சாகத்துடன் தனது பணியைத் தொடர்ந்தான்... !
72 - 3
பிறரின் உதவியை ஒரு போதும் சோதனை செய்து பார்க்காதீர்கள்.
ஆமை ஒன்று ஆற்றைக் கடப்பதற்காக ஆற்றில் இறங்கியது . அப்போது ஒரு தேள் ஓடிவந்து , ஆமை அண்ணா .. ! நான் அவசரமா அக்கரைக்குப் போக வேண்டி இருக்குது . உன் முதுகில் ஒரு ஓரமா இடம் கொடுத்தீன்னா நான் பாட்டுக்கு அமைதியா அக்கரை போய் சேர்ந்துடுவேன் என்றது . ஆமைக்குப் பாவமாக இருந்தது . இருந்தாலும் ஒரு எச்சரிக்கைக்காக ஒன்னப் பாத்தா எனக்கும் பாவமா தான் இருக்குது . முதுகுல ஏத்திக்கிட்டுப் போறேன் . ஆனா வழியில எதாச்சும் சேட்டை கீட்டை பண்ணினேன்னு வச்சுக்கோ , உரிச்சுப் புடுவேன் . சரியா ? முதுகில் ஏற்றிக்கொண்டது . தேளும் சந்தோஷமாய் ஏறிக்கொண்டது . சிறிது தூரம் போனதும் தேளுக்கு ஒரு சந்தேகம் , பாறை மாதிரி இருக்குதே இந்த ஓடு ! இதுல கொட்டினா வலிக்குமா ? சரி . லேசா கொட்டித்தான் பாப்போமே மெல்ல ஒரு கொட்டு கொட்டியது . ஆமை கேட்டது ' ஏய் என்ன பண்ற ? . இல்லண்ணே . தெரியாம கொடுக்கு பட்டுடிச்சு . மன்னிச்சுடுங்க ஆமை அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை . கரையை அடைய இன்னும் பாதி தூரம் இருந்தது . தேளுக்கு மீண்டும் ஒரு எண்ணம் , ' லேசாகக் கொட்டியதால்தான் ஓடு கொஞ்சம் கூட அசையவில்லையோ ! கொஞ்சம் அழுத்தமாகக் கொட்டினால் ? சற்று அழுத்தமாகவே கொட்டியது . ஆனாலும் ஓடு கொஞ்சம் கூட அசையவில்லை . என்னடா தம்பி , புத்தியக்காட்டுறியா ? என்றது ஆமை . " அட இல்லண்ணே . கொஞ்சம் வழுக்குற மாதிரி இருந்தது . கொஞ்சம் கொடுக்கால அழுத்திப் பிடிச்சிக்கிட்டேன் . அதுக்குப் போயி பெருசா பேசுறியே ! ' என்றது தேள் . ஆமை தலையை அசைத்துக் கொண்டே ஏதோ முணுமுணுத்துக் கொண்டே நீந்தியது . கொஞ்சம் நேரம் சென்றது . இப்போது கரைக்கு இன்னும் சில அடி தூரம்தான் . இப்போது தேளுக்கு தைரியத்துடன் கொஞ்சம் அகங்காரமும் வந்துவிட்டது . ' நான் கொட்டுனா எவ்வளவு பெரிய யானையெல்லாம் அலறி ஓடும் . சின்ன மிருகமா இருந்தா வாயில் நுரை தள்ளி செத்தே போகும் . இந்த தம்மாத்தூண்டு ஆமைப்பயல் அசையக்கூட மாட்டுறானே . இதோ கரையும் நெருங்கிடுச்சு . கடைசியாக ஒரு தடவை கொட்டிப் பாக்கலாம் ' என பலத்தையெல்லாம் திரட்டி அழுத்தமாக ஒரு போடு போட்டது . ஆமைக்கு இப்போது கோபம் வந்தது . நீ சரியா வரமாட்டே போலிருக்கே ' என்றது . தேளுக்கு கரையை நெருங்கிவிட்ட தைரியம் . பிறந்த நாள் முதலாவே கொட்டிக் கொட்டிப் பழகிட்டேன் . இந்தப் பத்து நிமிஷம் பயணத்துக்காகல்லாம் பழக்கத்தை மாத்திக்க முடியாது . இது பழக்கதோஷம் நீதாம்ப்பா கொஞ்சம் அனுசரிச்சிப் போகணும் ' என்றது . ஆமை சிரித்தபடியே சொன்னது ' உனக்கு இருக்கும் பழக்கதோஷம் மாதிரியே எனக்கும் ஒன்னு உண்டு . அது இது தான் என்றபடியே நீருக்குள் மூழ்கி எழுந்தது . எழுந்து பார்த்தால் முதுகில் தேள் இல்லை . அது செத்து நீரின் மேல் மிதந்து போனதை கண்டது . பிறரின் உதவியை ஒரு போதும் சோதனை செய்து பார்க்காதீர்கள் .
46 - 4
Popcorn Time.
.
.
.
ஒரு பெரியவரிடம் ஐயா ! நான் துன்பச் சிறையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறேன் " என்றான் ஒருவன் . என்ன காரணம் ? " என்று கேட்டார் ஒரு பெரியவர் . மற்றவர்கள் எனக்குத் துன்பம் கொடுக்கிறார்கள் ' என்றான் " உனக்குத் துன்பம் கொடுப்பது உன்னுடைய மனம் தான் " என்றார் பெரியவர் . அப்படியா சொல்கிறீர்கள் ? ' ஆமாம் ! " அப்படியானால் துன்பத்திலிருந்து விடுபட என்ன வழி ? " " மனதைப் புரிந்து கொள் ... அது போதும் . " " எப்படிப் புரிந்து கொள்வது ? " என்றான் அவன் . ' இந்தக் கதையைக் கேள் " என்று அவர் சொன்னார் " ஆசையாக ஒரு பூனையை வளர்த்தார் ஒருவர் . அந்தப் பூனை ஒரு நாள் எலியைப் பிடித்து கவ்விக் கொண்டு வந்தது , அவருக்கு அது மகிழ்ச்சியாக இருந்தது . மறுநாள் அந்தப் பூனை , அவர் ஆசையாக வளர்த்த ஒரு கிளியைக் கவ்கிக் கொண்டு வந்தது , அவருக்கு அது அதிர்ச்சியாக இருந்தது , இன்னொரு நாள் அந்தப் பூனை எங்கேயோ சென்று காட்டிலிருந்து ஒரு குருவியைப் பிடித்துக் கவ்விக் கொண்டு வந்தது . இப்போது அவர் மகிழவும் இல்லை ; வருந்தமும் இல்லை . எதையாவது பிடிப்பது பூனையின் சுபாவம் என்பதைப் புரிந்து கொள்ள அவருக்குக் கொஞ்ச காலம் ஆயிற்று . தனக்குப் பிடிக்காத எலியைப் பிடிக்கிறபோது இன்பம் . தனக்குப் பிடித்தமான கிளியைப் பிடிக்கிற போது துன்பம் , தனக்குச் சம்பந்தமே இல்லாத குருவியைப் பிடிக்கிறபோது இன்பமுமில்லை ... துன்பமுமில்லை ... " என்று அவர் கதையை முடித்தார் , இவன் சிந்திக்கத் தொடங்கினான் . துன்பச் சிறையின் கதவுகள் திறக்கப்படுகிற ஓசை அவன் செவிகளில் விழுந்தது . " மனதைப் புரிந்து கொள்கிறவர்களே மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் !! ..
( பிறர் பதிவுகளில் இருந்து எட்டுக்கப்பட்ட கதை தான் இது பொழுதுபோக்கிற்காக பதிவிடப்படுகிறது )
இது போன்ற கதைகள் , செய்திகள் , தகவல்கள் உங்களுக்கு வேண்டுமென்றால் கீழுள்ள பட்டன்(YES) ஐ அழுத்தவும்.
20 - 0
❤️🙏Thank you for all supporters🙏❤