in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
கொடுமையான வறுமையால் தன்னையும் தன் மக்களையும் பறிகொடுத்து தெய்வமாக இருக்கும் நல்லதங்காள் வரலாற்றை பற்றி இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
கதை சுருக்கம்: நல்லதங்காள் வறுமையின் காரணமாகவும் தனது அண்ணியின் சுடுசொல் தாளாமலும் தான் பெற்ற பிள்ளைகளைக் கிணற்றில் வீசிக் கொன்று விட்டு, பின் தானும் அக்கிணற்றில் விழுந்து இறந்ததாக அவளது கதை சொல்லப்படுகிறது. அவளது மரணத்தைத் தாளாத அவளது அண்ணன் நல்லதம்பியும் அதே கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டான்.
அண்ணன் தங்கை பாசத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு இந்த நல்லதங்காள் கதை.
3 - 0
தன்னுடைய பக்தர்களுக்காக பச்சை பட்டினியாக விரதம் இருக்கும் அம்மன் யார்னு தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்க!
31 - 0
லட்சுமி தேவியின் அருளை பெற... பெண் குழந்தைகளுக்கு இந்தப் பொருளை தானம் செய்யுங்கள்...!!
👉 லட்சுமி தாயாரை வீட்டிற்குள் அழைத்து நம் வீட்டில் நிரந்தரமாக தங்க வைப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. ஒரு வீட்டில் லட்சுமி கடாட்சத்தை நிலைக்க வைப்பதற்கு நாம் பெரிய அளவில் கஷ்டப்பட வேண்டும்.
👉 வீட்டில் பூஜை செய்வதற்கு கூட எனக்கு நேரமில்லை... வாரத்தில் 6 நாட்களும் வேலை வேலை... விடுமுறை என்றால் வீட்டு வேலை. இவ்வாறு இருக்க தினமும் விளக்கேற்றி மகாலட்சுமியை எப்படி வீட்டிற்கு வரவழைப்பது என்று கவலைப்பட்டு கொண்டிருந்தால் அந்த கவலையை இப்போதே விட்டுவிடுங்கள்...
👧 எந்த வீட்டில் பெண் குழந்தைகளை போற்றிப் புகழ்ந்து ஆரவாரத்துடன் தலையில் தூக்கிக்கொண்டு வைத்துக் கொண்டாடுகிறார்களோ, அந்த வீட்டில் மகாலட்சுமி தாயார் கூப்பிடாமலேயே, வீட்டிற்குள் நுழைந்து விடுவாள்.
👉 பெண் குழந்தைகளுக்கு இந்த பொருளை தானமாகக் கொடுத்தால்... உங்கள் வீட்டில் மகாலட்சுமி நீங்கள் கூப்பிடாமலேயே உள்ளே வருவாள். அது என்ன பொருள்? என்று தானே யோசிக்கிறீர்கள்.
👉 வெள்ளிக்கிழமை ஒரு பெண் குழந்தைக்கு உங்களால் முடிந்த 📿 கண்ணாடி வளையல், 👗 புதிய ஆடை, அழகான வாசனை நிறைந்த 🌹 பூக்கள் இந்த எல்லாப் பொருட்களையும் வெள்ளிக்கிழமை மகாலட்சுமியை நினைத்து தானம் செய்யுங்கள்.
📿 நீங்கள் வாங்கிக் கொடுத்த கண்ணாடி வளையல் சத்தம் அந்த குழந்தையின் கைகளில் ஒலிக்கும்போது, அந்த குழந்தையுடைய மனது சந்தோஷப்படும்போது, உங்கள் வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்ய வந்துவிடுவாள்.
👗 நீங்கள் வாங்கிக் கொடுத்த புத்தாடையை அந்த குழந்தை போட்டு மனமகிழ்ச்சியை அடையும்போது உங்கள் குடும்பத்திற்கு மகாலட்சுமியின் ஆசீர்வாதம் கிடைத்துவிடும்.
🌹 அந்த சிறிய குழந்தையின் தலையில் வாசனை நிறைந்த பூ வை வைத்து அழகு பார்க்கும்போது, உங்களுடைய வீட்டில் மங்களகரமான காரியங்கள் அழகாக நடக்கத் தொடங்கிவிடும்.
👉 6 மாதத்திற்கு ஒரு முறையோ, வருடத்திற்கு ஒரு முறையோ ஒரு ஏழை குழந்தைக்கு இந்த பொருட்களை வாங்கிக் கொடுத்தாலே போதுமானது.
👉 கண்ணாடி வளையல் வாங்குவதற்கு நமக்கு பெரியதாக எந்த செலவும் ஆகப்போவதில்லை. இரண்டிலிருந்து மூன்று டசன் சிறிய குழந்தைகள் அணிவது போல கண்ணாடி வளையலை வாங்கி வைத்துக்கொண்டு, வெள்ளிக்கிழமைதோறும் கோவிலுக்கு சென்று அங்கு வரக்கூடிய சிறிய பெண் குழந்தைகளுக்கு இந்த கண்ணாடி வளையலை தானமாக கொடுத்தால் நன்மை தரும்.
👉 அப்படி இல்லை என்றால் உங்கள் வீட்டின் அக்கம்-பக்கத்தில் இருக்கும் ஏழைப் பெண் குழந்தைகளுக்கு இந்த தானத்தை கொடுங்கள்.
👉 திருமணமாகி குழந்தை பாக்கியம் தள்ளி போகும் தம்பதியர்கள் இந்த பரிகாரத்தை செய்தால் சீக்கிரமே குழந்தை பாக்கியம் கிடைக்கும். இந்த சிறிய தானத்தை செய்து, பெரிய அளவிலான பலனை அடையுங்கள்.✍🏼🌹
458 - 3
"ஐந்து லட்சம் வசனங்களைக் கொண்ட மகாபாரதத்தின் சாராம்சம்"
நாம் இந்துவாக இருந்தாலும் அல்லது வேறு எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி, ஏழையாக இருந்தாலும் சரி, பணக்காரராக இருந்தாலும் சரி, நாம் நம் தாய் நாட்டில் வசித்தாலும் சரி, வெளிநாட்டில் வசித்தாலும் சரி,
சுருக்கமாக, நாம் ஒரு மனிதராக இருக்கும் பட்சத்தில் கீழே குறிப்பிட்டுள்ள விஷயங்கள் நமக்குக் கட்டாயம் பொருந்தும்.
நம் குழந்தைகளின் நியாயமற்ற கோரிக்கைகள் மற்றும் ஆசைகளை நாம் சரியான நேரத்தில் கட்டுப்படுத்தவில்லை என்றால், நாம் பிற்காலத்தில் ஆதரவற்றவர்களாகி விடுவோம் - உதாரணம் 'கௌரவர்கள்'.
நாம் எவ்வளவு பலசாலியாக இருந்தாலும், அநீதியை ஆதரித்தால் நம் பலம், ஆயுதங்கள், திறமைகள், ஆசிகள் அனைத்தும் பயனற்றதாகிவிடும். உதாரணம் 'கர்ணன்'
நம் பிள்ளைகள் தங்கள் அறிவை தவறாகப் பயன்படுத்தி அழிவு செயல்களில் ஈடுபடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தோமானால், நாமும் நம் பிள்ளைகளும் நிச்சயமாக நாசமாகி விடுவோம். உதாரணம் 'துரோணர் மற்றும் அஸ்வத்தாமா'.
“அறமற்ற அநியாயக்காரர்களிடம் பணிந்தால் நிம்மதியான மரணம் ஏற்படாது. மேலும் கண்மூடித்தனமாகக் கொடுக்கும் வாக்குறுதிகளைக் காப்பாற்ற முயன்றால் நம்மையும் நம்மை சார்ந்தவர்களுக்கும் பேரழிவு ஏற்படும். உதாரணம் 'பிதாமஹர் பீஷ்மர்'
செல்வம், பதவி, அதிகாரம் மற்றும் தவறு செய்பவர்களின் ஆதரவு ஆகியவற்றின் துஷ்பிரயோகம் இறுதியில் மொத்த அழிவுக்கு வழிவகுக்கிறது. உதாரணம் 'துரியோதனன்'
ஒரு குருடனிடம் அதிகாரக் கடிவாளத்தை ஒருபோதும் ஒப்படைக்காதீர்கள்.. அதாவது சுயநலம், செல்வம், தற்பெருமை, அறிவு, மற்றும் முறையற்ற காமத்தால் குருடனாக இருப்பவர், அது நம் வம்சத்தையே அழித்து விடும். உதாரணம் 'திரிதராஷ்டிரன்'
அறிவுடன் ஞானமும் இறைவன் துணையும் இருந்தால் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். உதாரணம் 'அர்ஜுனன்'
வஞ்சகம் நம்மை எல்லா நேரங்களிலும் எல்லா விஷயங்களிலும் வெற்றிக்கு அழைத்துச் செல்லாது. உதாரணம் 'சகுனி'
நாம் நல்ல நெறிமுறைகள், நீதி மற்றும் கடமையை வெற்றிகரமாக நிலை நிறுத்தினால், உலகில் எந்தச் சக்தியும் நமக்குத் தீங்கு செய்ய முடியாது. உதாரணம் 'யுதிஷ்டிரர்'
"சர்வே பவந்து சுகினா - ஸர்வே சந்து நிராமயஹ்."
334 - 1
கடவுளின் அருள்யாருக்கு?
ஒரு குருவும் அவரது சீடர்களும் யாத்திரை சென்று கொண்டிருந்தனர். வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்ததால் ஒரு மரத்தின் நிழலில் ஒதுங்கி இளைப்பாறினர்.
அப்போது சீடர் ஒருவர் குருவிடம், ""குருவே, தினமும் கோயிலுக்கு பூஜை செய்கிறவர், கோயில் பக்கம் எட்டி கூட பார்க்காதவர், இருவரில் யாருக்கு கடவுளின் அருள் அதிகமாக கிடைக்கும்? என்று கேட்டான்.
அதற்கு குரு,""இப்போது நீ இளைப்பாறிக் கொண்டிருக்கும் இந்த மரத்திற்கு எப்போதாவது தண்ணீர் ஊற்றியிருக்கிறாயா? ""இல்லை குருவே
""பின் எப்படி உனக்கு இந்த நிழல் கிடைத்தது?
""நிழல் தருவது மரத்தின் இயல்பு தானே குருவே..
""ஆம். அது போலத்தான் கடவுளும்
""தன்னை வணங்குபவர் யார்?
வணங்காதவர் யார்? என்றெல்லாம் கடவுள் பார்க்க மாட்டார்.
யார் யாருக்கு என்ன என்ன கொடுக்க வேண்டுமோ அதைக் கொடுப்பார். அதற்கு இந்த மரமே சாட்சி. நிழல் கொடுப்பதற்கு வேண்டியவர், வேண்டாதவர் என்றெல்லாம் இது ஒருபோதும் பார்ப்பதி ல்லை என்றார்.
125 - 1
அன்பான வார்த்தைகள் நம்முடைய வாழ்வின் அனைத்து சுமைகளையும் வலிகளையும் விடுவிக்கும். அன்பை வெளிப்படுத்தும் அனைத்துமே இறை. ஆறுதல் தரும் அன்பான வார்த்தைகள் அனைத்துமே ஆண்டவனின் வார்த்தைகள்.🙏 சிவாய நம🙏
நமது சேனலில் தெய்வ பக்தி பாடல்கள், புராண கதைகள், கோவில்கள் மற்றும் தெய்வங்களின் வரலாறுகளும் பதிவு செய்யப்படும்.
ஆதரவு அளித்தமைக்கு நன்றிகள் பல. மேலும் உங்கள் கனிவான ஆதரவினை வேண்டுகின்றோம்.
Kindly support us🙏
Subscribe our channel🔔, like👍, share ↪️and comment 📢
Kindly follow us on Instagram👇🙏
instagram.com/bhakthipathivugal?igshid=OGQ5ZDc2ODk…