ஹிஜ்ரி கமிட்டி ஓர் அறிமுகம்
...........................................................
குர்ஆன், சுன்னா வலியுறுத்தும் சந்திரக் கணக்கீட்டின் அடிப்படையில் இஸ்லாமிய நாட்காட்டி முறைகளை மக்களிடம் பிரச்சாரம் செய்வதே இக்கமிட்டியின் தலையாய நோக்கமாகும். நம் மார்க்கத்தின் பிற விஷயங்களை எடுத்துச் சொல்வதற்கு பல அமைப்புகளும், ஜமாஅத்துகளும் இயங்குகின்றன.
ஹிஜ்ரி கமிட்டியினராகிய நாம் இஸ்லாமிய சந்திர மாதக் கணக்கீடு நிலைப்பாட்டை முன்னிருத்தி பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து பிரச்சாரம் செய்வதில்லை. குர்ஆன் கூறும் சந்திர நாட்காட்டியை, பிறைக் கணக்கீட்டு முறையை முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ள நாம், அல்லாஹ்வின் உதவியால் நம்முடைய சொந்த பொருளாதாரத்தை செலவு செய்தே பிரச்சாரம் செய்து வருகிறோம்.
நம்முடைய ஹிஜ்ரி கமிட்டி, தலைவர், செயலாளர், பொருளாளர் என்ற பெயரில் பதவிகளை நியமித்தோ, தேர்தல் நடத்தியோ செயல்படவில்லை. அப்படி செயல்படவும் மாட்டோம். காரணம் ஹிஜ்ரி கமிட்டி என்பது அரசியல், இயக்கம், அமைப்பு, கட்சி போன்ற சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டது. குர்ஆன், சுன்னா அடிப்படையில் பிறைகளை ஆய்வு செய்யும் ஒரு குழு தான் இது.