in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
Attendance Rules are a Crime
யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல.
Wake Up To Reality.
Attendance Rules நேர்மையான rules இல்லை. #சூழ்ச்சி
கல்வி என்பது உலக அளவில் வியாபாரம் நோக்கம் ஆக மாறிவிட்டது.
Attendance Rules மாணவர்களுடைய நலனுக்கு என்று பொய் சொல்கிறார்கள்.
இது Rules என்னும் பெயரில் நடக்கும் Rowdyism ஆகும். பேராசிரியர்களே Rowdy ஆக மாறும் தருணம்.
Leave போடுவது மாணவர்களுடைய உரிமை. Attendance Percentage குறைவாக உள்ள மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் Hall Ticket தர மறுத்ததினால் பல மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இதை பற்றிய News ஐ Google ல் காணமுடியும்.
Attendance Rules என்னும் பெயரில் அதிக அநியாயம் நடக்கிறது. Attendance குறைவாக உள்ள நபர்களை குறிவைத்து fine என்னும் பெயரில் 5000 ரூபாய் முதல் 10000 ரூபாய் வரை வசூல் செய்கிறார்கள் சில கல்லூரி நிர்வாகிகள். பணம் தரவில்லை என்றால் 1 வருடம் வீணாகி விடும்.
வருகை விதிகள் நேர்மை அற்றது ஆகும்.
இது முழுக்க முழுக்க மாணவர்கள் சீராக கல்லூரிகளுக்கு வருகை தருவதற்காக நடத்தப்படும் சூழ்ச்சி ஆகும்.
இது பொதுநல எண்ணம் கொண்டு உருவாக்கப்பட்டது அல்ல, முழுக்க முழுக்க கல்லூரிகளின் வியாபார யுக்திகாக உருவாக்கப்பட்ட சதி செயல் ஆகும். இதில் கல்லூரிகளின் சுய நலம் அடங்கியுள்ளது.
Attendance Rules யார் இறந்தாலும் இவர்களுக்கு கவலையில்லை தனக்கு வியாபாரம் சரியாக நடக்கிறதா என்றே இருக்கின்றனர் சில கல்லூரி நிர்வாகிகள். இதற்கு அரசாங்கம் உடந்தையாக செயல் படுகின்றது.
சில அரசாங்க அதிகாரிகளோ பாவம், இதெல்லாம் மாணவர்களுடைய நலனுக்காக செயல் படுகின்றது என்று தன்னை தானே ஏமாற்றிக் கொள்கின்றனர். இதனால் பெரும் அநீதி மாணவர்களுக்கு நிகழ்கிறது.
Attendance Percentage குறைவாக உள்ள மாணவர்களை தேர்வு எழுத விடாமல் செய்வது அநியாயம் ஆகும். ஏனெனில் அந்த மாணவன் ஒரு நுகர்வோர். அந்த மாணவன் பணம் கொடுத்து படிப்பவன். கொடுத்த பணத்திற்கு நீங்கள் Hall Ticket கொடுத்து தான் ஆக வேண்டும்.
அவர்களுக்கு என்ன தெரிகிறதோ அதை எழுதட்டும், சரியாக இருந்தால் Pass ஆகட்டும், இல்லை என்றால் Arrear வைக்கட்டும். மெதுவாக அதனை Clear பண்ணட்டும். இதனால் உங்களுக்கு என்ன பிரட்சனை படித்த முட்டாள்களே. Attendance Percentage குறைவாக உள்ளது என்ற காரணத்தினால் ஒரு மாணவனை தேர்வு எழுத விடாமல் செய்வது மாபெரும் குற்றம்.
இது மாணவனின் தற்கொலை எண்ணத்தை தூண்டும். இதனால் சில மாணவர்கள் நம் நாட்டிலேயே தற்கொலை செய்துள்ளனர்.ஒரு மாணவனின் வருகைக்கும், அவனது திறமைக்கும் சம்மந்தமில்லை. தயவு செய்து இந்த Attendance Percentage Rules ஐ நீக்குமாறு நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
அனைத்து மாணவர்களையும் சமாக காண்பவரே ஒரு உண்மையான ஆசிரியர். தேர்வு எழுத அந்த மாணவனுக்கு முழு உரிமை உண்டு. மாணவர்களின் உரிமையை மாணவர்களுக்கு தாருங்கள். அந்த காலத்தில் எது நியாயம் எது அநியாயம் என்று சொல்லித் தந்ததே கல்விதான் இன்று அதுவே அநியாயம் செய்கின்றது. இதை நான் எங்கு போய் சொல்வது.
எல்லாமே #Business ஆக மாறிவிட்டது. #Rowdy School & College System. இது ஒரு தந்திரமான Rowdy System. #சூழ்ச்சி. சூழ்ச்சி செய்து மாணவர்களை ஏமாற்றும் வேலையாகும் இது. இவர்கள் அநியாயத்தையே Rules ஆக மாற்றியுள்ளார்களே பெரும் புத்திசாலிகள், ஆனால் அநியாக்காரர்கள்.
ஒரு மாணவன் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு Attendance Percentage காக வரக் கூடாது, அறிவை வளர்த்துக் கொள்வதற்காக வர வேண்டும். மாணவர்கள் சரியாக வரவில்லை எனில் நீங்கள் அவர்களுக்கு ஆசிரியர் ஸ்தானத்தில் அறிவுரை தான் வழங்க வேண்டும்.
அவர்ககளை ஒழுங்காக பள்ளி மற்றும் கல்லூரிளுக்கு அனுப்புவது, அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவளரது கடமை ஆகும். வருகை நாட்கள் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை, நீ முயற்சி செய் 7 பாடங்களில் 2 அல்லது 3 பாடங்களிலாவது உன்னால் தேர்ச்சி பெற முடியும் என்று Motivate பண்ணி அனுப்ப வேண்டிய ஆசிரியர்கள், இன்று, வருகை நாட்கள் குறைவாக உள்ளதால் உனக்கு தேர்வு எழுத தகுதி இல்லை என்று சொல்லி, சூழ்ச்சி செய்து, ஒரு மாணவனை தேர்வு எழுத விடாமல் செய்கிறீர்கள்.
அவ்வாறு Rules என்னும் பெயரில் அநியாயம் செய்யும் உங்களுக்கு ஆசிரியராக இருப்பதற்கே தகுதி இல்லை. எல்லாம் மாணவர்களின் நலனுக்காக என்று பொய் சொல்லி ஊரை ஏமாற்றுகிறீர்கள், வெட்கமாக இல்லை. எல்லாம் அதிகாரத் திமிரு.
அது மாணவர்களின் நலனுக்காக அல்ல மாணவர்களின் நலனை அழிப்பதற்காக, Schools & Colleges Business ஐ சீராக நடத்துவதற்காக, ஆசிரியர்கள் சொகுசாக உற்காந்து வேலை பார்ப்பதற்காக. உங்களுக்கு நேர்மையாக நிர்வாகத்தை நடத்த தெரியவில்லை எனில் அதை விட்டுவிடுங்கள்.
அதிகாரம் கொடுப்பதற்கு காரணம் மாணவர்களுக்கு எது நல்லதோ அதை செய்வதற்காக,
அவர்களின் வாழ்க்கையை அழிப்பதற்காக அல்ல. பத்து பேர் சொகுசாக வாழ ஒரு
நேர்மையான, பலவீனமான மாணவனின் வாழ்க்கையை நீங்கள் அழிக்கிறீர்கள் .
#சூழ்ச்சி. நான் இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்
நேர்மையான கல்வியைக் கொடுங்கள்.
இப்படிக்கு,
நேர்மை.
7 - 10
💞 ʙᴇʟɪᴇᴠᴇ ɪɴ ʏᴏᴜʀꜱᴇʟꜰ 💞