Channel Avatar

AR Digital Avani @UCHZFG7DJ4arwGd8dF-YR_oQ@youtube.com

6.7K subscribers - no pronouns :c

Business Experts and Media


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

AR Digital Avani
Posted 3 hours ago

80s & 90s கிட்ஸ் சோதனைகள்....

டேட்டா எண்டரி பண்ற வேலை, மொதல் மாசம் 1000 ரூபா கட்டி டேட்டா வாங்கிட்டா போதும், அப்பறம் லட்ச லட்சமா கொட்டும்....

MLM,.ஆம்வே ஃபர்ஸ்ட் நீங்க சேரனும், உங்களுக்கு கீழ 5 பேர சேர்க்கனும், அவங்க அப்படியே சேத்திகிட்டு வந்தா 6 மாசத்துல நீங்க கோடீஸ்வரன்....

அனுபவ் பிளான்டேஷன், நீங்க பணம் குடுத்தா தேக்கு மரமா வரவு வைப்போம், அதுல கொட்டும் பாருங்க கோடிகள்....

சீட்டு கம்பெனிகள், நீங்க டெபாசிட் பண்ற பணத்துக்கு 40% வட்டி தருவோம், நீங்க சேர்த்து விடற ஒவ்வொருவருக்கும் உங்களுக்கு கமிசன் உண்டு, வட்டி வாங்கியே சில பல கோடிகள் பார்க்கலாம்....

குலுக்கல்ல உங்களுக்கு பரிசு விழுந்து இருக்கு, வந்து வாங்கிட்டு போங்கன்னு, குடும்பத்தோட கூப்பிட்டு உக்கார வச்சு, எங்க ரிசார்ட் கிளப்ல சேர வருஷம் 2 லட்சம் மட்டும்தான், சேந்தா வருசத்துல 5 நாள் ஃப்ரீயா தங்கலாம்ன்னு உருட்டுன உருட்டுல...

ஈமு கோழி, 10,000 பணம் கட்டிணா உடனே ஒரு ஈமு கோழி குடுப்போம், நீங்க வளத்தி எங்க கிட்டயே குடுத்தா கிலோ 1000 ரூபாய்க்கு வாங்கிக்குவோம், முட்டை ஒவ்வொண்ணும் 500 ரூபா... சீக்கிரம் கோடீஸ்வரன் ஆக, ஈமு கோழிப்பண்ணை.

ஹெர்பா லைஃப், இது வெறும் 2000 ரூபாதான், வாங்கி குடிச்சா ஒரு மாசத்துல 200 கிலோ குறையும், நீங்க யாரையாவது கூட்டிட்டு வந்து சேர்த்து விட்டா உங்களுக்கு டிஸ்கவுன்ட்....

டப்பர்வேர் வித்த குரூப், ஆம்வே பேஸ்ட் வித்த குரூப், ஓரிபிளேம் பொருள் வித்தவன், கோல்ட் குவிஸ்ட்ல தங்கம் வாங்கின குரூப், சஹாரால இடம் வாங்கினவன், சீட்டு போட்டவன், கலைமகள் சபால இடம் வாங்க காசு குடுத்தவன், டேபிள் மேட் வித்தவன்னு எத்தனை பேர், எத்தனை கண்ணிவெடி, எத்தனை ப்ராடுக....

இத்தனை பேரையும் தாண்டி வந்தவனுகதான் 80s & 90s கிட்ஸ், என்னமோ ஒரு V3 Ads க்கே இப்படி ஆடி போய் உக்காந்து இருக்கீங்க.

போங்க தம்பி, இது எல்லாம் எங்க வீர வாழ்க்கை முன்னாடி ஒண்ணுமே இல்லை.

0 - 0

AR Digital Avani
Posted 8 hours ago

சொத்துக்களை சேர்க்காது விட்டாலும்

பரவாயில்லை

பாவத்தைச் சேர்க்காமல்

வாழ்ந்து மறையுங்கள் ஏனென்றால்🙏🏽🙏🏽

" சுமக்கப்போவது உங்கள் சந்ததிகள் தான்! "

4 - 0

AR Digital Avani
Posted 14 hours ago

உனக்கு வலிப்பது போன்றே
மற்றவர்களுக்கும் வலிக்கும்
என்ற சிறு_எண்ணம் மனதில்
இருந்தால் போதும்..

துரோகமும் பழிவாங்கும் எண்ணமும்
எப்பவுமே நமக்குதோன்றாது..

12 - 0

AR Digital Avani
Posted 17 hours ago

இரண்டு கொய்யாக்களும் ஒரே மரத்தின் ஒரே கிளையில் ஒன்றாகத் தொங்குகின்றன. அவற்றில் ஒன்று ஏற்கனவே பழுத்துவிட்டது, மற்றொன்று பழுக்க அதிக நேரம் தேவைப்படலாம். இந்த கொய்யாப்பழங்கள் மூலம் இயற்கை ஒரு முக்கியமான பாடத்தை சொல்கிறது.

நம்மைச் சுற்றியிருக்கும் மற்றவர்கள் வெற்றியை அடைந்த போது, ​​நாம் வெற்றி பெறாமல் இருப்பதைக் கவனிக்கும்போது, ​​நாம் வெற்றிபெறவில்லை என்று அர்த்தமில்லை. நமக்கான சரியான நேரம் இன்னும் வரவில்லை என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது.

எனவே, நாம் பொறுமையாக இருக்க வேண்டும், விரக்திக்கு அடிபணியாமல் இருக்க வேண்டும். நாம் நமது சொந்த பழுத்த நிலையை அடைய இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும்.

நினைவில் கொள்ளுங்கள், நம்முடைய நேரமும் வரும், ஆனால் அதற்கு பொறுமையும் விடாமுயற்சியும் தேவை.

5 - 0

AR Digital Avani
Posted 1 day ago

ஏமாறினாலும்
நான் யாரையும் ஏமாற்றவில்லை என்று நிம்மதி கொள்ளுங்கள்.

4 - 0

AR Digital Avani
Posted 1 day ago

உங்களுக்கு உண்மையாக இருப்பவர்களிடம் முகமூடி அணியாதீர்கள்.....
பிறகு கழட்ட முடியாமல்
போய்விடும்.

2 - 0

AR Digital Avani
Posted 3 days ago

#சிவன் இல்லை எனில் நக்கீரனும் பொய்.
முத்தமிழ் சங்கங்களும் பொய்யே...

பிள்ளையார், முருகன் கடவுள் இல்லை எனில் ஔவையும் பொய். அவரின் தமிழ்க் கவியும் பொய்யே...

கண்ணகி இந்து கடவுள் இல்லை எனில் ஐம்பெரும் தமிழ்க் காப்பியங்களும் பொய்யே...

பெருமாள் கடவுள் இல்லை எனில் ஆழ்வார்களும் பொய். அவர்களின் தமிழ் திவ்வியப் பிரபந்தங்களும் பொய்யே...

இந்து கடவுள் இராமர் இல்லை எனில் கம்பனும் பொய். அவனின் தமிழ்க் காவியமும் பொய்யே...

இந்து மதம் பொய் எனில் திருவள்ளுவரும் பொய். அவரின் திருக்குறளும் பொய்யே...

இந்து கடவுள்கள் பொய் எனில் திருமுறைகளும் பொய். திருமத்திரமும் பொய். தமிழும் பொய். தமிழ் வரலாறும் பொய்யே.

மொத்தத்தில் இந்து சமயமும், இந்துக் கடவுள்களும், இந்து சமய வழிபாடுகளும் இரண்டறக் கலந்ததே தமிழ் என்பது இப்போது புரிகிறதா?

உடனே..........
இந்து என்பது அண்மையில் வந்தது.
இந்து என்பது தமிழனுக்குரியதல்ல.
இந்து என்பது வடநாட்டுக்குரியது என்று சொல்ல வருவீர்களே!

இந்து என்பது எமது எல்லா தெய்வ வழிபாடுகளுக்கும் வழங்கப்பட்ட பொதுவான பெயர்.

இதில் தமிழரின்..
சூரிய வழிபாடு..
நடுகல் வழிபாடு..
சந்திரன் வழிபாடு..
மர வழிபாடு..
மலை வழிபாடு..
பஞ்ச பூத வழிபாடு..
பேய் வழிபாடு..
குலதெய்வ வழிபாடு..
நாக வழிபாடு..
காளை வழிபாடு..
யக்ஷ வழிபாடு...
சிவ வழிபாடு..
முருக வழிபாடு..
மாயோன் வழிபாடு..
அம்மன் வழிபாடு..
இந்திரன் வழிபாடு..
வருணன் வழிபாடு..
விநாயகர் வழிபாடு..
ஆகிய வழிபாடுகள் அனைத்தும் உள்ளடங்கியுள்ளது.

மேலே குறிப்பிட்டது போல இதையெல்லாம் தனித்தனியாக சொல்லிக் கொண்டிருக்க முடியாது.

எனவேதான் #இந்து என்ற பொதுவான சொல்லைப் பயன்படுத்துகிறோம்.

இந்த உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள் தமிழர்களே!

18 - 0

AR Digital Avani
Posted 6 days ago

நீங்கள் ஒரு கப் காபியைக் கையில் வைத்திருக்கிறீர்கள்.

அந்த நேரத்தில் அங்கு வரும் ஒருவர் உங்கள் மீது மோதி, உங்கள் கைகளைத் தட்டி விடுகிறார். காபி வெளியே சிதறி விடுகிறது.

நீங்கள் ஏன் காபியைச் சிந்தினீர்கள்?

“ஒருவர் தட்டிவிட்டதால் காபி சிந்திவிட்டது” என்பது உங்கள் பதிலாக இருக்கலாம்.

ஆனால் அந்தப் பதில் ஒருவகையில் தவறானது. அப்படியென்றால் என்ன காரணம்?

உங்கள் கப்பில் காபி இருந்தது. அதனால் காபி சிதறிவிட்டது. ஒருவேளை அந்தக் கப்பில் தேநீர் இருந்திருக்குமானால் தேநீர்தான் சிதறியிருக்கும்.
கப்பின் உள்ளே என்ன இருக்கிறதோ அதுதானே சிதறும்.

இதை வாழ்க்கையில் பொருத்திப் பார்ப்போம்.

வெளியிலிருந்து ஏதேனும் நம்மை அசைத்துப் பார்க்கும்போது, நம் உள்ளே என்ன இருக்கிறதோ அதுவே வெளியே சிந்திச் சிதறும்.
இதைச் சொல்வது எளிது, கடைப்பிடிப்பது கடினம்தான்.
ஆனாலும் நம்மால் முடிந்தவரை முயற்சித்துப் பார்க்கலாம்.

வாழ்க்கையின் கடின நிகழ்வுகள் நம்மை அசைத்துப் பார்க்கும்போது, நம்மிடமிருந்து வெளியே சிந்திச் சிதறவேண்டியது என்னென்ன?

கோபம், மோசமான வார்த்தைகள், கசப்புணர்ச்சி, பயம் இவைகளா? நிச்சயம் இல்லை.

வாழ்க்கை நமக்கான கோப்பையை நம்மிடம் தந்திருக்கிறது. அதில் நன்றி, மன்னிப்பு, மகிழ்ச்சி, கருணை, அன்பு, இங்கிதமான வார்த்தைகள்…
இவற்றை நிரப்பி வைத்திருந்தால், எந்த கடின சூழல் நம்மை அசைத்துப் பார்க்கும்போதும் நம்மிடமிருந்து வெளியே சிந்திச் சிதறுவது எல்லாம் நல்லவையாகத்தானே இருக்கும்!

*நல்லவற்றை நமக்குள் நிரப்பி வைப்போம்!

5 - 0

AR Digital Avani
Posted 1 week ago

🌹உங்களை தவறாக புரிந்து கொண்டவர்கள் ஒருபோதும் உங்களுக்கானவர்களாக
இருக்க வாய்ப்பே இல்லை.காரணம் புரிதல் இல்லாத நட்பும் உறவும் விழலுக்கு இரைத்த நீர் போன்றது.

எப்போதும் பிறரை குறைகூறி பெருமை தேடும் எவருமே அவரது சொந்த வாழ்வில் மனநிறைவை பெறுவதில்லை."கர்மா"

4 - 0

AR Digital Avani
Posted 1 week ago

உங்கள் வீட்டில் குட்டி கண்ணனை 👶
வரவேற்க ஆசையா இல்லையா? 😍
உங்கள் வாழ்க்கையில் வரப்போகும் அனைத்து ✨
மாற்றங்களையும் இப்போவே தெரிந்து கொள்ளுங்கள்.
Book Your Appointment on WhatsApp +91 90353 00354
Consultation Charges: ₹ 450

0 - 0