in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
🌙 இரவு சிந்தனை 🌙
🍃உன்னை யாரோடும்
ஒப்பிடாமல் இரு
தன்னம்பிக்கை வரும்🍃
🍃எப்படி வேண்டுமானாலும்
வாழலாம் என்று
வாழ்பவர்களுக்கு மத்தியில்🍃
🍃எப்படியாவது வாழ்ந்திட வேண்டும்
என்று போராடுபவர்களும்
இருக்க தான் செய்கிறார்கள்🍃
🍃வாழ்வதே தவம் நம் வாழ்க்கை நம் கையில்🍃
🍃நம்மைத் தவிர வேறு எவரும்
அதை வாழ இயலாது🍃
🍃விழுவோம் எழுவோம் போராடுவோம்🍃
🍃பின் நோக்கி செல்லாமல் தன்னம்பிக்கை துணை கொண்டு முன் நோக்கி சென்றால்
வெற்றி நிச்சயம்👍
1 - 2
உருக்கப்படும் தங்கம் தான் உரு மாறி நகையாகிறது!
அறுக்கப்படும் மரம் தான் அழகான ஜன்னலாகிறது!
இடிக்கப்படும் நெல் தான் உமி நீங்கி அரிசியாகிறது!
துவைக்கப்படும் துணி தான் தூய்மை பெற்று வெண்மையாகிறது!
ஏற்றப்படும் விளக்கு தான் இருள் நீக்கி ஒளி தருகிறது!
தட்டப்படும் தந்தி தான் தம்புராவில் இசை தருகிறது!
செதுக்கப்படும் பளிங்கு தான் செம்மை பெற்றுச் சிலையாகிறது!
பதப்படுத்தப்படும் தோல் தான் பயனுள்ள காலணியாகிறது!
மிதிக்கப்படும் மண் தான் மிருதுவான பானையாகிறது!
புதைக்கப்படும் விதை தான் மண்ணை விட்டு மரமாக எழுகிறது!
தோற்றுப்போகும் மனிதன் தான் துணிவு பெற்று வீரனாகிறான்!
தொடர்ந்து முயலும் வீரன் தான் சரித்திரம் படைத்தது வாழ்கிறான்!
2 - 1
உயரத்தை பார்க்காதே..
சிகரங்களையும் பார்க்காதே..
தோல்வியை பற்றியும்
கவலைப்படாதே.. வாழ்க்கையில்
நீ சாதிக்க விரும்பினால்
அடியெடுத்து வை உறுதியாக.!
இனிய காலை
வணக்கம் 🙏🙏🙏
2 - 2
🌙 இரவு சிந்தனை 🌙
🌺வெற்றிக்கு சில துணைவர்கள் உண்டு. தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் தான் அந்த நண்பர்கள்🌺
🌺அதேபோல வெற்றிக்கு இரண்டு எதிரிகள் உண்டு. அது தயக்கமும், முயற்சியின்மையும் தான்🌺
🌺துணிச்சலை தோழனாக்கிக் கொண்டால் தயக்கம் எனும் எதிரியை விரட்டியடித்து தன்னம்பிக்கையை வளர்க்க முடியும்🌺
🌺தயக்கத்தை விட்டொழித்தாலே வெற்றி விரைந்தோடி வரும்🌺
🌺 தயக்கத்தைத் தவிர்க்கவும், துணிச்சலை வளர்க்கவும்🌺
🌺நீங்கள் உங்களைப் பூனையாக நினைத்துக் கொண்டால் பூனை தான். சிங்கமாக எண்ணிக் கொண்டால் சிங்கம் தான்🌺
🌺 அதாவது மனம் எவ்வளவு துணிச்சலைக் கொண்டு உள்ளதோ அந்த அளவில் உங்கள் வெற்றி உறுதி👍👍👍👍
1 - 0
நாம் வேகமாக சுற்றிவிட்டு நின்றால் நம்மை சுற்றி உள்ள பொருட்கள் அனைத்தும் சுற்றிக் கொண்டிருப்பது போலவே தோன்றும் சிறிது நேரம் கழித்து நிதானமாக பார்த்தால் தான் அது உண்மை இல்லை என்பது புரியும் அதுபோலதான் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பல பிரச்சினைகளும்....!!
இனிய காலை
வணக்கத்துடன்
உங்கள் தோழி
2 - 2
அனைத்து உயிரினங்களும் உயிர்வாழ தண்ணீர் அவசியம். இது இயற்கை வளங்களில் ஒன்று.
பளபளப்பாகவும் தெளிவாகவும்,
எல்லாவற்றிற்கும் வாழ்க்கையின் விலைமதிப்பற்ற ஆதாரம்,
நீர், எங்களுக்கு நீங்கள் தேவை.
மார்ச் 22 உலக தண்ணீர் தினம்.
2 - 1
All in one