Official Channel for ALP Astrology
அட்சய லக்கின பத்ததி (ALP)- லக்கினத்தை நகர்த்திப் பலன் பார்க்கும் ஓர் எளிய ஜோதிட முறை. ஜோதிடத்தில் மற்ற முறைகளில் சந்திரனின் நகர்வை (தசா பத்தி) வைத்து மட்டுமே பலன்கள் சொல்லபப்டுகிறது. ஆனால் அதன் மூலம் அனைவராலும் துல்லிய பலனை கூறமுடிவதில்லை. அது ஏன் என்ற கேள்விக்கான விடையே ALP. லக்னமும் நகரும். நகரும் லக்கினத்தை கணக்கில் கொண்டு சந்திரனின் நகர்வையும் இணைத்து பலன் கூறினால் 100% துல்லியமாக பலன் கூற முடியும் என்று ஆய்வு செய்து அதற்கான கணித முறையை உருவாக்கியவர் திரு.சி.பொதுவுடைமூர்த்தி அவர்கள். இந்த சேனல் வழியாக ALP கணித முறை பற்றியும், வாழ்வை சிறப்பாக கையாள்வதற்கு வேண்டிய வழிமுறைளையும் உங்களுக்கு கொண்டு வந்து சேர்ப்பதே நோக்கம்.
"தாம் இன்புறுவது உலகு இன்புறுவது கண்டு
காமுறுவர் கற்று அறிந்தார்"
என்பதற்கேற்ப,இந்த ஜோதிடமுறையைஅனைவரும் கற்றறிந்து அவரவர் வாழ்வை செம்மையாக்கிக்கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கத்தை மட்டுமே லட்சியமாக கொண்டு மாதந்தோறும் வகுப்புகள் நடத்தப்படுகின்றது. விவரங்களுக்கு +91 9786556156 - 7094154239.
உங்கள் வாழ்க்கை மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.