வணக்கம்! இது ஹரிபிரசாத் அன்பழகன், ‘ஹரி ஆர்ட் புக்’ க்கு உங்களை வரவேற்கிறேன்.
நான் 20 வருடங்கள் அனுபவம் கொண்ட ஒரு பென்சில் ஆர்டிஸ்ட். கிராஃபைட் பென்ஸில், கலர் பென்ஸில், மினிமல் ரியலிஸம் மற்றும் ஹைபர் ரியலிஸம் போன்ற ஓவிய முறைகளை வரைவதில் கைதேர்ந்த ஓவியன். என்னை போலவே ஓவிய ஆர்வம் கொண்டவர்களுக்கு, நான் தானாக கற்றறிந்த ஒவிய முறைகளையும், நுணுக்கங்களையும் கற்பிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். அதற்காகவே இந்த சேனலை தொடங்கி இருக்கேன். தமிழ் ஓவியர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஓவியர்கள் அல்லாதவற்களுக்கும், இந்த சேனலில் வரும் வீடியோக்களை பார்ப்பதால் மனதிருப்த்தியும், ஆர்வமும் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
நிறைய ஓவியங்களும், பரிசுகளும், ஆச்சரியமூட்டும் தகவல்களும் உங்களுக்காக காத்துக்கொண்டு இருக்கின்றன.
வாங்க வரையலாம்! 😊✏️