✨கடவுள் கைவிட மாட்டார்
'கடமையை செய் ; பலனை எதிர்பாராதே'
நம்புங்கள் , செபியுங்கள் , நல்லதே நடக்கும்
கடவுள் தர நினைப்பதை யாரும் எப்போதும் தடுத்து நிறுத்த முடியாது
நமக்கு என்று எழுதப்பட்டது என்றேனும் நம்மை வந்து சேரும். எனவே மனம் தளராதே, சோர்ந்து போகாதே. கர்த்தர் கைவிட மாட்டார்.
தொடர்ந்து பயணம் செய் ; வெற்றி நிச்சயம்✨
💐நினை சக்தி பிறக்கும் ; செய் வெற்றி கிடைக்கும்💐
Jesus❤️Mary❤️Joseph
மரியாயின் பாடல்🙏
💙ஆண்டவரை எனது உள்ளம் போற்றி பெருமைப் படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகைக் கொள்கின்றது. ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ் நிலையை கண்ணோக்கினார். இது முதல் எல்லா தலை முறையினரும் என்னைப் பேருடையாள் என்பர். ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அறும் பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர். அவருக்கு அஞ்சி நடப்போருக்கு தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். அவர் தம் தோள் வலிமையை காட்டியுள்ளார். உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரை சிதறடித்து வருகிறார். வலியோரை அறியணையிலிருந்து தூக்கி எறிந்துள்ளார். தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.💙