in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
ஒரு நாள் கடந்து அடுத்த நாள் பிறக்கையில் புது வருடம் என்கிறோம். எதிலும் பெரிய மாற்றங்கள் இருக்கப் போவதில்லை. அதே நாம், அதே நாளாந்த வாழ்வின் ஓட்டம், அதே பிரச்சனைகள் என்று எல்லாம் அதேதான். அது தெரிந்தாலும் கூட ஏதாவது ஒன்று சிறப்பாக அமைந்துவிடாதா, அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துவிட மாட்டோமா, பிறந்திருக்கும் வருடம் மாற்றங்களைத் தந்துவிடாதா என்று ஒரு மெல்லிய எதிர்பார்ப்பு உருவாகிவிடுவதைத் தவிர்த்துவிட முடிவதில்லை. அப்படித்தான் எனக்கும் இருந்தது. அப்படி இருக்கையில்தான் புது வருடத்தின் தித்திப்பாய் இந்தப் பேட்டி.
எங்கு இருந்தாலும், எதைச் செய்தாலும் நாம் பிறந்து வளர்ந்த நம் தாய் மண் நம் திறமையை இனம் கண்டு, தோள் தட்டித் தருகையில் கிடைக்கும் நிறைவுக்கும் நெகிழ்வுக்கும் அளவேது?
அப்படியானதொரு தருணம்தான் இது.
அன்புச் சகோதரி சர்மிலா வினோதினி அவர்கள் அவள் ஆரணி நாவலை வாசித்து, பொருள் பொதிந்த கேள்விகளை எழுப்பி இருந்தார். அதுவே என்னை மனம் திறந்து பேச வைத்திருந்தது. இப்படி ஒரு நிகழ்வை நிகழ்த்தித் தந்திருப்பது என் எழுத்து என்கையில் அதன் மீது நான் செலுத்தவேண்டிய கவனமும் எனக்கான பொறுப்பும் இன்னுமே அதிகரித்திருப்பதை உணர்கிறேன்.
IBC தொலைக்காட்சிக்கும், சகோதரி சர்மிலா வினோதினிக்கும் இதயம் நிறைந்த நன்றி!
என் பேட்டி கீழே இருக்கிறது. கேட்டுப் பாருங்கள்
https://youtu.be/Sq_setNV2OA?si=ntlJx...
10 - 0
புத்தம் புது வருடத்தில் முதல் மகிழ்ச்சியான அறிவிப்பு!
சென்னை புத்தகத் திருவிழா 2024க்கு ‘வெளிச்சக்கீற்று’ என்கிற என் அடுத்த நாவல் புத்தகமாக வெளியாகியிருக்கிறது!
மிக மிகப் பிடித்து எழுதினேன். உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.
அருண் பதிப்பகத்தில் என்னுடைய நாவல்கள் அனைத்தையும் பெற்றுக்கொள்ளலாம்.
அருண் பதிப்பகம்
Stall No: 538 & 539
8th Row
நட்புடன் நிதனிபிரபு
88 - 15
வணக்கம்,
எல்லோரும் நலம் தானே? அடுத்த முழு நாவல் தயாராகிக்கொண்டு இருக்கிறது. அதுவரையில், ஏற்கனவே முழுமையாகப் பதிவேற்றப்பட்டிருக்கும் காதல் காயங்களே நாவலை ஒவ்வொரு அத்தியாயமாகப் பதிவேற்றம் செய்யவா? யாருக்காவது ஒவ்வொரு அத்தியாயமாகக் கேட்பது பிடிக்கும் என்றால் சொல்லுங்கள்.
நன்றி!
நட்புடன் நிதா.
காதல் காயங்களே முழுநாவல் லிங்க்: https://youtu.be/9Wa3PVs-fJ8
12 - 2
ஒலிப்புத்தக வாசக நெஞ்சங்கள் அனைவருக்கும் இனிய வணக்கம்,
நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் நாவல் நல்லபடியாக நிறைவு பெற்றுவிட்டது. எந்தவிதமான எதிர்மறை எண்ணங்களும் இல்லாமல், மனதுக்கு இனிமை சேர்க்கும் வகையில் எழுதிய நாவல்களில், இதுவும் ஒன்று. இதை எழுதியபோது மிகுந்த ஆதரவு கிடைத்தது மாத்திரமல்லாமல், என் வாசகர் வட்டத்தின் அளவும் ஒரு சுற்றுப் பெருத்திருந்தது. அதேபோல்தான், ஒலிப்புத்தகமாக இங்கே பதிவேற்றியபோதும், உங்கள் ஒவ்வொருவரின் கருத்துக்களிலும் இருந்தும், இந்த நாவலை எந்தளவு தூரத்துக்கு ரசித்து உள்வாங்கி இருக்கிறீர்கள் என்பதை உணர்ந்துகொண்டேன். மனதுக்கு நிறைவாகவும் சந்தோசமாகவும் இருந்தது. உங்கள் எல்லோருக்கும் மிகுந்த நன்றி.
யாராவது கேட்காதவர்கள் இருந்தால் கேட்பதற்கு வசதியாக, நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் நாவலின் பிளே லிஸ்ட் லிங்கை, கீழே இணைத்துவிடுகிறேன். அதேபோல், முழுமையாகக் கேட்க விரும்புகிறவர்களுக்காக விரைவில் முழு நாவலாகவும் பதிவேற்றம் செய்துவிடுகிறேன்.
விரைவில் உயிரைத் திருடும் அழகியே முழு நாவலோடு சந்திக்கலாம். அதற்காகச் சற்று நீங்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும். உங்கள் எல்லோருக்கும் யாதவியின் குரலில் மாத்திரமே என் நாவல்களைக் கேட்கப் பிடித்திருப்பதால் வேறு யாரைக் கொண்டும் என் நாவல்களை பதிவேற்றம் செய்ய முடியாத, அன்புக்குக் கட்டுப்பட்ட நிலையில் இருக்கிறேன். அதனால் தான் ஒவ்வொரு நாவலுக்கு இடையிலும் சற்று இடைவெளி விழப்பார்க்கிறது.
வேறு என்ன? மீண்டும் சந்திக்கலாம்.
நட்புடன் நிதனிபிரபு
நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் நாவல் லிங்க்: https://www.youtube.com/watch?v=F85Cz...
23 - 5
வணக்கம் நண்பர்களே,
நிதனிபிரபு ஆகிய நான் 2013ல் இருந்து எழுத ஆரம்பித்து இதுவரைக்கும் 21 நாவல்கள் எழுதியிருக்கிறேன். 17 நாவல்கள் புத்தகமாக வெளிவந்து இருக்கிறது. அவற்றையே என் குரலிலும் என் நண்பர்களின் குரல்களின் வாயிலாகவும் ஆடியோ நாவலாக இங்கே பதிவேற்றிக்கொண்டிருக்கிறேன்.
கூடவே, என்னுடைய தொடர் நாவல்களை nithaniprabunovels.com என்கிற என்னுடைய வலைத்தளத்தில் எழுதுகிறேன்.
Website: https: nithaniprabunovels.com
Facebook Page: NithaniPrabu Novels
Mail : nithaprabu@gmail.com
நன்றி.
நட்புடன்
நிதனிபிரபு