Channel Avatar

Alex @UC6g6FBfMvcWURM8_EOK8sRQ@youtube.com

434 subscribers - no pronouns :c

More from this channel (soon)


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

Alex
Posted 14 hours ago

பல வண்ண முகம் காட்டி ... பஞ்சவர்ண இதழ் விரித்து .🌹🌺.. பஞ்சமின்றி சிரிக்கிறாய் 🌹🌹 .. என் நெஞ்சை இனி தாக்கி கொள்ளை கொள்கிறாய் 😍

காற்று வந்து உன் முகம் வருட .🌹. சற்று நாணம் கொண்டாயோ 🌹
அங்கும் இங்கும் அசைந்தாடி அழகு நடனம் புரிகிறாய் 🌹

பார்த்து ரசிக்கும் அழகு 😍 ..உன்னை பறித்து ரசிப்பது முறையா ?? 😳
காலையில் மலர்ந்த உன் அழகு முகாம் மாலையில் மங்குதல் ஏனோ 🌹🌹

சிரிக்கிற மலரே 🌹இதழ் விதிக்கிற அழககே 🌺🌸🌷அசைகின்ற அமுதே 😘இசைக் கலைஞர்களை கூட்டுகிறாய் 🌹(( வண்டுகள் )) 🌸 🌺

பட்டாம்பூச்சியை வரவேற்க. ,, சிட்டாக சிறகை விரித்தாயோ 🌸🌹 🌺
அமுதென்னும் தேன் தந்து விருந்தளித்தாயோ 🌹

சிறிய பூவாய் இருந்தாலும் மழலை சிரிப்பாய் சிரிக்கிறாய் அழகாக 🌹

காதலுக்கு தூதுவனாக மாற துடிக்கிறாய் 🌹 காதலர் தின நாளில் உன் பங்கு அதிகம் 🌹
என் காதலி கூந்தலில் முதலிடம் பிடிக்கிறாய் 🌹🌺🌹🌸

வண்ணத்துப் பூச்சியையும் வசியம் செய்கிறாய் 🌹🌺🌷
வண்ணத்துப்பூச்சி வண்டுகளுக்கு உன் உயிர் தேனை கொடுத்து மதி மயங்க செய்கிறாய் 🌹🌸
பெண்களை வசியம் செய்வதில் உன்னை போல் யாரும் கிடையாது 🌹
உன்னை கண்ட எனக்கு பொறாமை தான் 😳🌷🌺🌷

பூத்துக் கொட்டும் சோலையிலும் நீ 🌹
தொடுத்து வைத்த மாலையிலும் நீ 🌹
சேர்த்துக் கட்டிய. கட்டாத கூந்தலிலும் நீ 🌹🌺
காத்து வரும் கடவுளிடமும் நீ 🌹🌺
கரைந்து போன உயிரில்லா உடலிலும் நீ 🌹

மனித இறப்பிலும் மாலையாக மாறி அவர்களோடு கடைசி வரை இருப்பது, , உன் கூட்டம் தானே 🌹🌷💐🌻🌸🌺

பூத்தால் மலரும் உதிரும் 🌹🌷
என் நெஞ்சில் ஒருத்தி பூத்தாள் உதிரவில்லை 😍💚💛💘💜💗

நினைவுக்குள் நிறைந்து தாலாட்டுகிறாய் 🌹🌺🌷🌸 உணர்வுக்குள் குடியிருந்து என் மனதை உருவேற்றுகிறாய் 🌹🌸🌷🌺💐

3 - 2

Alex
Posted 4 days ago

வண்ணம் இல்லா வெறும் வானம் நான் 💨
என்னை வளைத்துக் கொண்ட வானவில் நீயடீ 🌈

நிழல் தராத தனி மரம் நான் 🌵
என்னைப் போர்த்தி நின்ற வெண்மேகம் நீயடி ⛄

அடங்க மறுத்த காட்டாறு நான் 🌊
என்னை வருடி கொடுத்த குளிர் நீர் ஓடை நீயடி 🌀

அனல் அணையா சூரியன் நான் 🌅
என்னை குளிரூட்டிய அந்தி நிலவு நீயடி🌙

பலம் இழந்த புயல் காற்று நான் ☁
என்னை இழுத்துச் சென்ற தென்றல் நீயடி 💨

பாரம் கூடிய கனமழை நான் 💦
என்னை இளகச் செய்த தூரல் நீயடி ⛄

கைவிரல் தீண்டா பனித்துளி நான் 🍚
என்னைத் தாங்கிக் கொண்ட புல் நுனி நீயடி 🎍🎄

துருப்பிடித்த தகரம் நான் 🎱
என்னோடு ஒட்டிக் கொண்ட காந்தம் நீயடி 💑

முதல் முத்தம் பதியா குழந்தை நான்👦
என்னை வாரிக் கொண்ட தாயடி நீ 😍

9 - 21

Alex
Posted 1 week ago

காதல் என்ற மூன்றெழுத்து 😘

ஆதவனுக்கு மலைமுகட்டின் மீது காதல் 🌄

பக்தனுக்கு கடவுள் மீது காதல் 😘

தென்றலுக்கு பூக்கள் மீது காதல் 🌹🌷

பனிதுளிக்கு புல்வெளிகள் மீது காதல் ⛄

முழுமதிக்கு இருள் மீது காதல் 🌕

வண்ணத்துப்பூச்சிக்கு பூக்கள் மீது காதல் 🌺🌸

பறவையின் சிறகுக்கு காற்றின் மீது காதல் 🌊

மழைத்துளிக்கு மண் மீது காதல் 🌏

வேருக்கு நீரின் மீது காதல் 💦

தீக்குச்சிக்கு நெருப்பின் மீது காதல் 🔥

கடல் அலைகளுக்கு கரை மீது காதல் 🌀

துடுப்புக்கு படகின் மீது காதல் 🚢

பேனாவிற்கு காகிதத்தின் மீது காதல் 👡

கவிஞனுக்கு வரிகள் மீது காதல் 😹

வரிகளுக்கு கவிதை மீது காதல் 😻

நோக்கூ என் மீது காதல் 😘

நேக்கூ உன் மீது காதல் 😍

இன்னும் காதல் என்ற மூன்றெழுத்துக்கு உருவங்கள் பல கோடி உலகில் 😇

காதல் என்ற மூன்றெழுத்து இல்லாட்டி 😘
மூச்சு என்ற மூன்றெழுத்து இல்லாம 😊
வெற்றிடமாக இந்த பூமி .....🌚🌚🌚

9 - 25

Alex
Posted 1 week ago

பூக்களை பறித்து உன்னை மகிழ்விக்க நினைத்தபோது ....
அதைக் கண்ட பூக்கள் அதிகமாக மகிழ்ச்சி கொள்கிறது 😘

பொன் நகை ஏன் அணிவதில்லை என்று நினைத்தபோது ,,,,,,
"புன்"னகை இம்புட்டு அழகாக இருக்கும் போது தேவையில்லை 😍

தொலைந்த ஆட்டை மேய்ப்பன் கண்ட போது வரும் ஆனந்தம் போல் ....
நேக்கூ உன்னை கண்டவுடன் 😇

அம்பின்றி வேட்டையாட பிடிக்கும் உன்னை 😘
காதலெனும் விழியம்பு கொண்டு 💘

தேடவில்லை உன்னை .. தொலைவது நான் என்பதால் உன்னில் 😇

கொங்கு தமிழில் கொஞ்சி பேசினாலும் கோபித்தாலும் ..
உன்னை ரசிக்கவே தோன்றும் இந்த மதுரைக்காரனுக்கு 😅

பார்க்கிறேன் என்பதற்காக வெட்கப் படுகிறாள் 🙈
🙈 ரசிக்கவே பார்க்க தோன்றுகிறது 😹

விழியோடு தோன்றும் கனவும் நீதான் 😍
உயிரோடு கலந்த உறவும் நீதான் 😘

என் விழியை விட்டு மறையாத கனவும் நீதான் 😘
என் மனதை விட்டு போகாத நினைவும் நீதான் 😍

மின்னலாய் நீ வர 😍மழைச்சாரல் மனதுக்குள் 😘

காதலில் விழுந்தேன் 💓💙💛
கவிஞனாய் எழுந்தேன் ✌🙌

10 - 18

Alex
Posted 1 week ago

மழைக்கண்டு மகிழாத மடையர்களை என்ன செய்ய. 😡👿👺

சிலு சிலுவென பொழிகிறாய் 💦
சிறு சிறு துளியாய் விழுகிறாய் 💦
சிறகடிக்கும் பறவை போல 🐦🐦

கொலுசு பாதங்களால் ;;கொஞ்சி அவள் வருகிறாள் 💦
புஞ்சை நஞ்சை எல்லாம் புத்தாய் புன்னகைக்க 😻

பிஞ்சு பூக்கள் எல்லாம் பூவாய் பூத்திருக்க 🍂🎍🌹
பச்சைப் பாய் விரித்து இயற்கையை தாலாட்ட 😊
வான் மகளின் மழைமகளாய் 😇
வஞ்சியவள் வருகிறாள் 😇

மண்வாசம் மணக்கிறதே ;; மனதெல்லாம் குளிர்கிறதே ;; இலை சிதறும் சிறு துளிகள் ;; தூறல் இதழ் சிந்தும் மணிமுத்தோ😘

ஆகாய கங்கையாய் ஆடிபாடி வருகிறாள்
பூமகள் பொன் தேகம் தொட்டு ;; நீராட்ட வருகிறாள் 😍

கண்ணாடி பூக்களாய் ;; மண் மீது உடைகிறாய் 😊
கண்மூடி திறக்கும் முன்னே ;; காணாமல் மறைகிறாய் 😳

கருமேகம் கூந்தல் விரித்து 💨💨
.கண்ணகியாய் வருகிறாய் 😊
சில நேரம் பெருக்கெடுத்து சினம் கொண்டு பொழிகிறாய் 😔

கூன் விழுந்த விவசாயி கூவி உன்னை அழைத்தாலும் ;; வான் கடவுள் அனுமதித்தால் மட்டுமே ;; வரமாய் பொழிகிறாய் 😇

💦💦 யே நீ வா, ,,, என் அழகே நீ வா, ,,சிறுசுகள் உன்னோடு கொஞ்சி விளையாட சாரலாய் நீ வா 😇

சில்லென்ற மழைத்துளியாய் ;; சிதறி விழும் மணிகளாய் ;; மெல்லென்று என் மேனி தொட. ;; செல்லமே விரைந்தோடி நீ வா 😇

தனிமையில் நான் கவி பாட தமிழாய் நீ வா 😘 தரணி செழித்திட தங்கமே நீ வா 😇 தளிரின் அழகே 😘 தருவின் உயிரே 😊
வருக வருக ;; வளம் பெருக்க வருக ✌

11 - 31

Alex
Posted 2 weeks ago

என் கற்பனையில் நான் பார்ப்பவை 😇

உன் விழிகளில் 30 நாளும் பௌர்ணமி பார்க்கிறேன் ⭐

.உன் உளரலில் 300 மொழிகளில் கானங்கள் கேட்கிறேன் 😅

உன் கன்னக்குழிகளில் குதிக்க கடல்கள் வரிசையில் நிற்க பார்க்கிறேன்🌀🌀

உன் கார்குழல் அழகை பார்த்து :மயில்கள் பொறாமை கொள்வதை பார்க்கிறேன் 😳

உன் பிஞ்சு கை விரல்களை உரச தென்றல் கப்பம் 💰💰கட்டுவதை பார்க்கிறேன்

உன்னை பூவென்று நினைத்து வண்டுகள் பறப்பதை பார்க்கிறேன் 😱

உன் பாத அழகை ரசித்த நதிகள் ;; வியர்த்து ஓடுவதைப் பார்க்கிறேன் 🌊

உன் தங்க மேல் அழகை வடித்தது யார் என்று ;; பிரமிடுகள் அதுங்களா பேசிக்கொள்வதை பார்க்கிறேன் 😊

உன் புன்னகையில் மயங்கி எரிமலைகள் 🔥பூக்கள் நீக்குவதை பார்க்கிறேன் 😇

உனக்கு குளிர் காய்ச்சல் என நினைத்த பனி மலைகள் கசாயம் காய்ச்சுவதை பார்க்கிறேன் 😮

உன் கைக்குட்டையில் ஒளிந்து கொள்ள வானம் அடம்பிடித்து சத்தம் போடுவதை பார்க்கிறேன் ⚡⚡

உன் மணிக்கொலுசை முத்தமிட ;;மழை இறைவனிடம் வேண்டுவதை பார்க்கிறேன் 😊

நீ ஜன்னல் வழியாக எட்டிப் பார்ப்பதை கண்ட நிலவு 🌙இந்த அழகு தேவதை 😻தம் பிரதி பிம்பமோ என குழம்புவதை பார்க்கிறேன் 😉

நீ குளத்தில் இறங்க ;; ஆண் மீன்களின் கண்களை பெண் மீன்கள் பொத்துவதை பார்க்கிறேன் 😛🐟🐬

உன்னை யார் நனைப்பது என்று மேகங்களுக்குள் கலவரம் நடப்பதை பார்க்கிறேன் 😨☁⚡☁⚡

உன்னை எப்படி மணப்பது என்று எனக்குள் நானே சுயவரம் நடத்திப் பார்க்கிறேன் 😍

இன்னும் என்ன சொல்ல உன்னைப்பற்றி கவி எழுத பேனாக்கள் வரிசையில் நிற்பதை பார்க்கிறேன் 🙌

9 - 21

Alex
Posted 3 weeks ago

என் தேவதையை 😍 முதலில் பார்த்த நினைவுகள்😇

தெருவெங்கும் பூ வாசம் 🌹🌺
என் இதயத்தில் நிலநடுக்கம் 😨
அவா என்னை பார்க்கிறாள் 😊

தெருவிளக்கின் மங்கலான ஒளியிலும்
அவா பிரகாசமாக ஜொலிக்கிறா 🔥

ஆங்காங்கே அலையும் அவா விழிகளில் தேவதை லட்சணம் தெரிகிறது 😇

நேர்த்தியான நெற்றி நடுவே சிறு பொட்டொன்று இதயத்தை வளைக்கிறது 😘

பட்டும் படாமலும் அவ வைத்திருக்கும் கண்மைக்குள் என்னுயிர் கரைகிறது 😊

நவீன உடைக்குள் புதைந்திருக்கும் அழகு தமிழ் தங்கமங்கை 😍

எத்தனை ஆண்களின் இதயத்தை இவ ஏங்க வைத்திருப்பா 😨

இவா பார்வைக்குள் அப்படி என்னதான் உள்ளது 😳
அவா புன்னகைக்கும் நேரம் என் விழிகள் மோட்சம் பெறுகிறது 😊

தேவதையின் அழகு முகம் அவா 😇
பூக்களின் வாசமும் அவளே 🌹

அவா அருகே சென்று பேச துணிகிறேன்
அவா பெயரையேனும் தெரிந்துகொள்ள துடிக்கிறேன் 😎

ஆனால் அவா என்னை கடந்து செல்கிறாள் 😯
ஒரு மின்காந்த விழி பார்வையில் 😹
என்னை சுக்கு நூறாக உடைத்து போகிறாள் 😨

காத்திருக்கிறேன் நாளை அவா தரிசனம் தருவாள் என்று 😉
கனவு காண்கிறேன் இரண்டு வருடமாக 😴
என் கன்னம் தீண்டி ஒரு முத்தம் தருவா என்று 😻 ,,,,,,,,,,,,,,,,,,💚💛💙💘💜💓

14 - 28

Alex
Posted 3 weeks ago

கனவு கவிதை 😍

அருகம்புல்லின் மடியில் 🍃ஆலமரம் இளைப்பாற கண்டேன் 🎄

ஆயிரம் நிலவுகளை ஏந்தி மின்மினி கூட்டம் ஊர்வலம் செல்லக் கண்டேன் ✨

நட்சத்திர கனிகள் பறிக்க 🌟வானம் தொடும் ஏணி கண்டேன் ✨

மழையில் நனையும் ஒட்டகங்கள் கண்டேன் 🐫🐫 மணலில் நீந்தும் மீன்கள் கண்டேன் 🐳🐬🐟🐳🐬

நதி ஒன்று சேர ஆழியொன்று தவழ்ந்து வர கண்டேன் 🌊🌊

சாலையைக் கடக்கும் மரங்கள் கண்டேன் 🎄🌵🌴சிலை போல் நிற்கும் அருவி கண்டேன் ⛄

வானத்தில் மிதக்கும் மலைகள் கண்டேன் 🌀 வெள்ளை வண்ணத்தில் காடுகள் கண்டேன் 💨💨

தகதகக்கும் தங்க ஆறுகள் ஓட கண்டேன் 🔥மேகத்தில் கட்டப்பட்ட மாளிகை கண்டேன் ☁☁

மினுமினுக்கும் மின்னல் தூண்கள் கண்டேன் ⚡⚡கண் பார்க்கும் திசையெல்லாம் வாசல்கள் கண்டேன் 🏥🏦

யாரோ அழைப்பது போல் தோற்றம் கண்டேன் 😳 உலகமே குலுங்குவது போல் நிலநடுக்கம் கொண்டேன் 😱😨

கனவு முடிந்ததென்று இமையை திறந்தேன் 👀 கையில் தேனீரோடு ☕கண்முன்னே அம்மா நிற்பது போல கண்டேன் 😭😭

9 - 33

Alex
Posted 1 month ago

கடற்கரையை ஓயாது தழுவும் அலைகளைப் போல. ;; உன்னை தழுவி கொள்ள ஆசை 😍

புல்லாங்குழலை தீண்டும் தென்றலைப் போல ;;உன்னை தீண்ட ஆசை 😘

உன்னோடு பேச முடியாத இரவுகளில் ;; இரவு முழுவதும் உன்னை கவிதைகளால் வர்ணிக்க ஆசை 😻

காதல் வார்த்தை தீரு கையில் ;; உன் கண்கள் மெளன மொழி பேசிட ஆசை 😇

நிலவு இல்லா இரவில் ;; நீயே முழு வெண்ணிலவா வர ஆசை 😍

மழையில் நான் நனையும் பொழுதெல்லாம் ;; உன் கூந்தலால் துவட்டிக் கொள்ள ஆசை 😍

வாடாத பூவாய் உன் கூந்தலில் வாழ்ந்து உதிர ஆசை 😇

அழியாத பொட்டாய் உன் அழகு நெற்றியில் ஒட்டிக்கொள்ள ஆசை 😘

கண்ணில் மையாகி உன் விழிகளை உரசிக்கொள்ள ஆசை 😻

கண்ணாடி வளையலாகி ;; உன் பிஞ்சு கைகளில் இருந்து உடைந்து போக ஆசை 😊

பெண்மையின் ரகசியமெல்லாம் ;; உன் மூலமே உணர ஆசை 😍

வாழ்க்கையில் சந்தோஷமெல்லாம் ;; உன்னிடமே கிடைக்க ஆசை 💚💛💜💘💙💓

8 - 26

Alex
Posted 1 month ago

நீல வானம் அது நீண்ட வானம் ☁
கடலால் 🌀வான் காற்றால் 💨கருமை கொண்டதே 🌑

கூட்டை தேடி பறவை கூட்டங்கள் கூச்சல் போடுதே 🐦🐦

தித்திக்கும் குளிரும் ⛄ தென்றல் காற்றின் ஈரமும்💨 என்னை உரசி செல்லுதே 😻

மழைத்துளி மண்ணின் மேனியில் படர 💦மண்ணும் மனமாய் மாறியதே🔥

மழைக்கு ஒதுங்கும் ஜனங்கள் நடுவே 👫என் மனம் மயிலாய் இங்கே ஆடி பாடநினைக்கிறதே💃💅💃

முத்துக்களாய் இலையின் நுனியில் இருக்கும் நீர்த்துளிகளை தீண்டுதே என் விரல்கள் ✌

மழை மீது நான் கொண்ட காதலை கண்டு பொறாமை கொண்ட மின்னலும் ⚡அதிகமா சத்தம் போட்டு என்னை மிரட்டுதே 😳😱

மழை நீரும் ஊற்றாய் ஓட என் எண்ணமெல்லாம் சிறுவயதில் விட்ட காகிதை கப்பலை நினைக்குதே😍

துளித்துளியாய் கொட்டும் அருவி மழையே 💦💦உன் பேரழகை வர்ணிக்க 🌈தமிழ் எழுத்துக்களும் வெட்கப்படுதே 🙈

கலப்படமில்லா அன்பாய் கொட்டும் மழைத்துளியே 💦நீயே எங்கள் உயிர் துளி 😍

கோபம் கொண்டால் வெள்ளமாகி 👺கர்வம் கொண்ட மானிடனை😟 கொஞ்சம் கெஞ்சவும் வைக்கிறாய் 😩

பெரும் வெள்ளத்திலும் மனிதன் மறந்த மனித நேயத்தை நினைவூட்டி செல்கிறாய் 😇

என்றும் நன்றிகளோடு 😍உன் அருமை புரிந்த சில கோடி 👫மக்களில் நானும் ஒருவனாய் 👲உன்னைப் போற்றி வணங்குகிறேன் மழைத்துளியே 💦😍🌹🙏🌷🙏

7 - 19