"பெயல்" அரையாண்டு ஆய்விதழ் தமிழியல் ஆய்வுக்களத்தில் இளம் ஆய்வாளர்களை இனங்கண்டு ஊக்குவித்தல், தனித்துவமான ஆய்வுச் செழுமைக்குத் துணைநிற்றல், ஆய்வுத் தரத்தைப் பேணுதல், புதிய போக்குகளுக்கு வழிகாணுதல் என்ற கொள்கைப் பிடிப்புடன் 2014ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. கட்டுரைக்குப் பணம் பெறாமல், பக்கவரையறை என்ற சிமிழுக்குள் அடக்காமல் மெய்யான ஆய்வு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு இயங்கிவருகிறது பெயல். UGC CARE இதழ்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள இவ்விதழோடு மெய்யான ஆய்வில் நாட்டம் உள்ள இளம் ஆய்வாளர்கள் பயணிக்க வாருங்கள்.