Channel Avatar

History Trails.. @UC58NRYWC8pgPfzs__Z818Nw@youtube.com

6.3K subscribers - no pronouns :c

வரலாறு என்ற ஒற்றைச்சொல்லில் அடங்கியிருப்பது கடந்து போன காலம்


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

History Trails..
Posted 7 months ago

0 - 0

History Trails..
Posted 7 months ago

0 - 0

History Trails..
Posted 11 months ago

5 - 0

History Trails..
Posted 11 months ago

0 - 0

History Trails..
Posted 1 year ago

1 - 0

History Trails..
Posted 1 year ago

4 - 0

History Trails..
Posted 1 year ago

3 - 0

History Trails..
Posted 2 years ago

ஒரு கோவில் என்பது அது அமைந்திருக்கும் ஊரின் மக்கள் தொகைக்கு ஏற்ப ஒன்று முதல் ஏழு (பிரகாரங்கள்) சுற்று வீதிகளை கொண்டிருக்கும் .இரண்டு அல்லது மூன்று நன்னீர் கிணறுகள் இருக்கும்.வெளியே ஒரு குளம் இருக்கும் .திருச்சுற்று மாளிகை என ஓரடுக்காகவோ ஈரடுக்காகவோ அமைந்திருக்கும்.சமூகத்தில் நடக்கும் எல்லாவித நிகழ்வுகளுக்கும் தண்டனையோ அல்லது உள்ள அமைதிக்கோ விளக்கு ஏற்றும் பணியே நிவந்தம் என்ற பெயரில் விடப்பட்டிருக்கும்.கோவிலில் ஆயிரம் பேர் வந்தாலும் சமைக்கும் அளவுக்கு பாத்திரங்கள் இருக்கும் .இன்றும் சில கோவில்களில் உள்ளன.கோவிலின் பிரதான வாயிலின் கதவு பெரும்பாலும் மிக வலிமையாக இலுப்பை மரத்தால் செய்யப்பட்டிருக்கும் .இயற்கை பேரிடரோ ,போரோ ,தண்ணீரோ , தாக்குதலோ உள்ளே நுழைவது சுலபமில்லை.
கோவிலுக்கு அரசாங்கம் அல்லது தனிமனிதர்களால் நிவந்தமாக அளிக்கப்படும் நிலங்களை குத்தகையாக பெறும் ஊரார் கோவிலுக்கு என்று நெல் அளப்பது வழக்கம்.அந்த நெல் சேமிக்க பெரும் பத்தாயங்கள்,குதிர்கள் ,பெரும் நெற்களஞ்சியம் என எல்லாவித வசதிகளும் இருக்கும். கோவிலுக்கான நந்தவனமும் தொடர்ச்சியான பராமரிப்பில் இருக்கும்.
கோவிலின் கோபுரமோ விமானமோ குறைந்தது முப்பதடி முதல் அறுபதடி வரை இருக்கும் மிக உயரமாக 216 அடி விமானமும் 217 அடி கோபுரமும் உண்டு.கோபுரத்தில் அமைக்கப்படும் கலசங்களில் நவ தானியங்கள் நிரப்பப்படுவது வழக்கம்.
கோவிலுக்கான தவில் வாசிப்போர் ,நாதஸ்வரம் வாசிப்போர் ,ஓதுவார் ,பரிசாரகர் .பூ கட்டுவோர், தனி சிப்பந்திகள் என அருமையான அமைப்பு .அந்த ஊரில் நடக்கும் எல்லா சுப அல்லது மற்ற நிகழ்வுகளுக்கும் அந்த ஊர் கோவிலின் கலைஞர்கள் மட்டுமே அழைக்கப்படவேண்டும் என்பது மரபு . இன்றும் அவை நடைமுறையில் உள்ள ஊர் பல இருக்கின்றன.
ஒரு பெருமழையின் போதோ, புயலின் போதோ, மக்கள் பாதிக்கப்படும்போது கோவிலின் உள்ளே தங்க வைக்கப்பட்டு ஏற்கனவே சேமித்த நெல்லை கொண்டு மூன்று வேளை வயிறார உணவு வழங்கப்பட்டது.ஆடு ,மாடுகளுக்கும் கோவில் கோசாலையிலும் ,நந்தவனத்திலும் இடம் வழங்கப்பட்டது.மருத்துவம் பார்க்க வைத்தியர்களும் ஆதுர சாலைகளும் கோவில்களின் உள்ளேயே செயல்பட்டன.குளிர் தணியும் பொருட்டு தொடர்ச்சியாக சூடு பரவுவதற்காக விளக்கெரிக்கப்பட்டன.விமானத்திலோ ,கோபுரத்திலோ பொருத்தப்பட்ட கலசம் இடி தாங்கியாக செயல்பட்டது.முற்றிலும் வேளாண்மைக்கான விதைகள் அழிவுற்ற போது எந்த பன்னாட்டு நிறுவனமும் விதைகளை கொண்டு தரவில்லை கோபுர கலசங்களில் இருந்து எடுக்கப்பட்ட நவ தானியங்கள் விதைக்கப்பட்டன.
கோவில் என்பது சமூகக்கூடம்,ஆவணக்காப்பகம் ,கலைக்கூடம் ,கல்விக்கூடம் ,வழக்குரை மன்றம் ,ஆதுரசாலை ,பேரிடர்களில் நம்மை காப்பாற்றும் அரண்.அன்று மற்றுமல்ல ! இன்றும் . . . .
நாம் நமது வேர்களின் மீது நம்பிக்கை கொண்டிருந்தால் . . . .

https://www.youtube.com/watch?v=USHjz...

30 - 0

History Trails..
Posted 2 years ago

15 - 0

History Trails..
Posted 2 years ago

எப்போதுமே பிரம்மாண்டம் ஈர்க்கும் .பின் திகைக்க வைக்கும் .பேச நா எழாது .ஆனால் அந்த அனுபவம் கடந்த பின், வாழ்வின் சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் அதைப்பற்றி சிலாகித்தலும் ,உணர்வு பொங்க பகிர்வதுமாக தொடர்ந்து கொண்டே இருக்கும் .சில விஷயம் வயது கடந்தவை .ஒருவரிடம் எத்தனை முறை சொன்னோம் .இவரிடம் முன்பே கூறிவிட்டோமே, மீண்டும் கூறுகிறோமே என்று பேச்சின் இடையே தோன்றினாலும் பேச்சை நிறுத்த மனம் வராது .தமிழகத்தில் மகேந்திரவர்மர் குடைவரைக்கோவில்களின் பிதாமகர் .மண்டகப்பட்டில் முதல் குடைவரையோடு அந்த விசித்திரசித்தரின் குடைவரை தாகம் தணியவில்லை .தொடர்ந்து முயன்று கொண்டே இருக்கிறார் .அவை பெரும் பட்டியல்.

மாமல்லபுரம் தவிர்த்து குடைவரைகள் அமைந்திருக்கும் பகுதிகள் ஏகாந்தமானவை .ஒவ்வொரு பகுதியும் உங்களுக்குள் ஒரு புதிய அனுபவத்தை விதைக்கும் .அது போன்ற சிறிய குடைவரை திண்டிவனம் அருகே கீழ்மாவிலங்கை என்ற ஊரில் இருக்கிறது .அந்த பகுதியில் பெரும் குன்றோ மலையோ அதனை சுற்றி இல்லை .அவ்வளவு சிறிய பாறையில் எப்படி அந்த விஷ்ணுவை வடித்திருக்க முடியும் என்ற கேள்வி உங்களுள் எழாமல் இருக்காது .விஷ்ணு என்றாலே விஸ்வரூபம் தானே அவரை சிறிய வடிவுக்குள் சிற்பமாக்கியது விசித்திரசித்தரின் விந்தையல்லவா !

காட்சிகளாக காண..
https://www.youtube.com/watch?v=vyQER...

#கீழ்மாவிலங்கை #மகேந்திரவர்மர் #பல்லவர்கள்

22 - 1