வரலாறு என்ற ஒற்றைச்சொல்லில் அடங்கியிருப்பது கடந்து போன காலம் மட்டுமல்ல .நாம் இன்றைக்கு இருக்கும் வளர்ச்சிக்கான அஸ்திவாரமும் அடிப்படையும் அங்கிருந்தே உருவாகிறது.
மொழியின் தொன்மை ஈராயிரம் ஆண்டுகள் எனில் அது எங்கிருந்து ஆரம்பமாகிறது ? ஓவியம்,சிற்பம்,கோவில் கட்டிடக்கலை,ஆயுதம் ,போர்,சமூக ஒழுக்கம்,நீர் மேலாண்மை,என அனைத்தும் வரலாற்றுத்தொடர்ச்சியே,
நாம் எவ்வளவு நவீனமடைந்தாலும்,பொறி இயந்திரங்கள் என வளர்ச்சியுற்றாலும் மீண்டும் அதே நேர்த்தியுடன்,எழிலுடன் கட்டமுடியாதவை என பல அற்புத கோயில்களும்,கோட்டைகளும் வரலாற்றின் வழியாகவே நம்மிடம் இருக்கின்றன.
வரலாற்றின் அடிச்சுவட்டில் பயணிப்பது. .? வரலாறு எனில் என்ன ? ஒரு கோயில் எப்போது கட்டப்பட்டது என புனைகதைகளை கடந்து கல்வெட்டு சான்றுகளின் படி எவ்வளவு தொன்மையானது,ஒரு ஓவியம் எத்தனை வருடங்கள் கடந்தது.ஒரு சிற்பம் எதைக்குறித்தது,என்ன சிற்பம் என்பனவற்றை அறிவதற்கான பயணமே இவை குறித்து ஆர்வம் இருப்போர் இங்கு இணையலாம்
Information about the historical places.Forts, Rock paintings, Cave temples ,Pallava architecture ,Monuments -Which explore the Glory of Past .