'வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு வாழும் மனிதருக் கெல்லாம்;
பயிற்றிப் பலகல்வி தந்து - இந்தப் பாரை உயர்த்திட வேண்டும்'- பாரதியார்
நம் ஒவ்வொருவருக்குள்ளும் எவ்வளவோ ஆற்றல்கள் புதைந்து கிடக்கின்றன. அவை பாலுக்குள் தயிரைப்போல, தயிருக்குள் வெண்ணெயைப் போல, வெண்ணெய்க்குள் நெய்யைப் போல நம் கண்களுக்குப் புலப்படாமல் மறைந்திருக்கிறது.நாம் எப்படிப் பாலை மத்தால் கடைந்து நெய்யை வெளியில் கொண்டுவருகிறோமோ அதேபோல, நமக்குள் புதைந்திருக்கும் ஆற்றல் என்ற பாலை அறிவு,முயற்சி என்ற மத்தைக்கொண்டு கடைந்து வெற்றி என்ற நெய்யை வெளி உலகத்திற்குக் காட்ட வேண்டும். ஆனால் இதை எப்படிச் செய்வது என்பதில் பலருக்கும் பலவிதமான குழப்பங்கள் இருக்கின்றன. இன்றைக்கு மருத்துவம், விளையாட்டு, அரசியல், கேளிக்கை, திரைப்படம் போன்றவற்றிற்கு பிரத்தியேகமாக பத்திரிக்கைகள் இருக்கின்றன. ஆனால் படிப்பு,சுயமுன்னேற்றத்திற்குப் பிரத்தியேகமான பத்திரிக்கைகள் அவ்வளவாக இல்லை.எனவே எமது இந்த முயற்சி. இந்தப் பகுதியில் படிப்பு மற்றும் சுயமுன்னேற்றம் சம்பந்தமான பல காணொளிகளை நாங்கள் பதிவேற்றம் செய்யப் போகிறோம்.
திருவள்ளூர் என்.சி.ஸ்ரீதரன் ராதா ஸ்ரீதரன்