எனது இந்த றீ ( ச் ) ஷா பண்ணையின் இயற்கை எழில்மிகு தோற்றங்களையும் , சூழலையும் அதனோடிணைந்த பண்ணையின் செயற்பாடுகளையும் அனுபவித்திட உங்களை அழைத்து நிற்பதோடு . சிறுவர்கள் எங்கள் பண்ணையிலுள்ள பன்றிகளை கிட்டவே கண்டுகளிக்கவும் கூடவே குதிரையையும் முயலையும் தொட்டுப்பார்க்கவும் , கோழிக்குஞ்சுகளை துரத்திப்பிடிக்கவும் , தென்னை கன்றுகளினூடாக ஓடி , சந்தனமரச் சோலையில் தனித்திருக்கவும் , இயற்கை விளையாட்டு வெளியில் விளையாடி மகிழ்ந்திருக்கவும் உங்களை அழைத்து நிற்கின்றோம் . வாகன தரிப்பிடம் : பண்ணையின் பிரதான வாயிலினூடாக சென்று அலுவலகத்திற்கு முன் வாகனங்களை தரித்துவிட இலவச மற்றும் பாதுகாப்பான தரிப்பிடம் உங்கள் அமைக்கப்பட்டுள்ளது .
பண்ணையின் உள்ளக பாதைகள் உட்பட அனைத்து இடங்களும் சக்கர நாற்காலி பயன்படுத்துவோருக்கான பொது அணுகும் வசதி செய்யப்பட்டுள்ளது .
எமது பண்ணையின் தொழிலாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் நலன் கருதி கொவிட் 19 தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கான சமூக இடைவெளி , சுகாதாரம் மற்றும் தொடர்பாடல் போன்ற அனைத்து அறிவுறுத்தல்களையும் பண்ணை முகாமைத்துவம் பின்பற்றுகிறது .